• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நெஞ்சில் நிறைந்தவள் - 25

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 25

குமரனை இறக்கி விட்டு விட்டு வந்தவள் காரை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள் அங்கு அவளின் தந்தை கிருஷ்ணன் காத்திருந்தார்.

" என்ன டா பாப்பா இப்போ தான் வரியா? "

" ஆமா ப்பா "

" ஏன் டா இன்னைக்கு இவ்ளோ தாமதம் "

" ஒன்னும் இல்ல ப்பா என் நிர்வாகி ஒருத்தர் கூட பேசிட்டு வர கொஞ்சம் தாமதம் ஆகிப்போச்சு. "

" நிர்வாகியா? யாரு டா அது? "

" இப்போ புதுசா நியமனம் பண்ணிருக்கேன் ப்பா. குமரன்னு சொல்லிட்டு, ஏற்கனவே நம்ம நிறுவனம் மாதிரி சின்னதா ஒரு நிறுவனம் வச்சி நடத்திட்டு இருந்துருக்கார் அதுல நஷ்டம் ஏற்படவும் கௌரவம் பாக்காம வேலைக்கு வந்துட்டாரு, "

" நிஜமாவே அப்படி தான் வந்துருக்காங்களா டா? "

" உங்களுக்கு வந்த மாதிரி சந்தேகம் எனக்கு வரல ப்பா, ஆனாலும் அத சோதனை பண்ணாம இருக்க முடியாதுல ப்பா, என் நிறுவனத்தோட நிர்வாக இயக்குனரா அத செய்ய வேண்டியது என் கடமையாச்சே, அத நா சரியா செஞ்சா தான ப்பா என்னோட மற்ற ஊழியர்களுக்கும் நிறைவு இருக்கும். " தந்தை என்ன கேட்க வருகிறார் அடுத்து எங்கே வருவார் என்பதை அறிந்தவளாய் பதில் சொல்லி முடித்தாள்.

" சரி டா உனக்கு நா சொல்லணும்ன்னு அவசியம் இல்ல உனக்கே எல்லாம் தெரியும் " என்று சொல்லி லேசான புன்னகை உதிர்க்க பதிலுக்கு அவளும் அதையே செய்துவிட்டு தனது அறையை நோக்கி நடக்க அவள் அம்மாவின் குரல் அவளை தடை செய்தது,

" யாணி சாப்பாடு டி "

" வெளிய சாப்டேன் ம்மா "

" ஏன் டி எத்தனை முறை சொல்லிருக்கேன் வெளிய சாப்பிட கூடாதுன்னு "

" ம்மா எல்லாரும் வீட்லயே சாப்டா கடைக்காரங்க எல்லாம் என்ன செய்வாங்க ம்மா அப்போ அப்போ அவங்களுக்கும் ஆதரவு கொடுக்கணும் காமாட்சி கண்ணு " என்று அவரது கன்னத்தை கிள்ள,

" என்ன கேட்டாலும் பதில பையிலயே வச்சிருப்பியே " பொய் கோபம் காட்ட

சட்டென அவரது சொல்லும் செய்கையும் குமரனின் நினைவை மெதுவாய் கிளறியது, சிறிது நேரத்திற்கு முன்பு அவன் சொல்லிய அதே விஷயம் தற்போது தனது அன்னையிடமும் அவனது செய்கையை போலவே வெளிப்பட, கொஞ்சமாய் அவளிடம் சொல்ல தெரியாத புதுவித உணர்வு மேல் எழும்பியது, அந்த விஷயத்தை மீண்டும் அம்மாவிடம் கேட்கலாம் என்று நினைத்த போது அவர் அங்கிருந்து நகர்ந்து விட்டார் ஆதலால் அவளது நினைவில் இன்னும் கொஞ்சம் அதிகமாய் நிலைத்தான் குமரன்.

இப்படியாக இவளின் நினைவில் அவன் இருக்க, இங்கோ அவளின் நினைவு இவனில் தாறுமாறாக ஓடி கொண்டிருந்தது,

இரவு உணவு வேண்டாம் என்று சொல்லிவிட்டு மொட்டை மாடியை அடைந்தவன் அவளை நினைத்து சிரித்து கொண்டே இருந்தான். அவளிடம் தான் பேசிய விஷயங்கள் எல்லாம் அவனுக்கு மறந்து போயிருந்தது, சிறிதும் யோசிக்காமல் தனது இலையிலிருந்த தோசையை எடுத்தது, அதை உருட்டி வாயில் போட்டது, அதை போட்ட பின் சாப்பிடுவது பற்றிய அவள் கொடுத்த விளக்கம் என்று நினைக்க நினைக்க சிரிப்பு தான் வந்தது.
மீண்டும் ஒருமுறை சொன்னான் தின்னி பயபுள்ள என்று....

புதிதாய் தெரிந்தவள் இன்று ஏனோ மனதை புரட்டி போட்டு கொண்டிருந்தாள். புரண்ட மனமும் மீண்டும் மீண்டும் அதிலியே லயித்து இருக்க விரும்பி அதையே நினைக்கவும் செய்தது. மெல்ல நொடிகள் கடக்க அந்த ஆனந்ததை நிறைவாய் அனுபவித்து கொண்டிருந்தான் குமரன். அந்த ஆனந்தத்திற்கு கீழே இருந்து கேட்ட ஒரு அலறல் சத்தம் முட்டு கட்டையாகியது.

அந்த சத்தம் கேட்டு கீழே எட்டிப் பார்த்தான் குமரன். அங்கு அவன் வீட்டின் அருகில் இருக்கும் இளம் வயது பெண்ணோருத்தி கத்திக் கொண்டிருந்தாள். சரியாக சொல்ல வேண்டுமென்றால் கத்தி அழுது கொண்டிருந்தாள்.
மேலிருந்தே குமரன் அதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்,

அவள் தனது மாமியாரை கண்டபடி திட்டியதோடு கணவனையும் இன்ன வார்த்தை என்றில்லாமல் வாயில் வந்தவற்றை எல்லாம் கூறி ஏசி கொண்டிருந்தாள். அவளது சத்தம் கேட்டு அக்கம் பக்கம் கூடியது, கூடிய ஜனங்கள் மத்தியில்,

" இந்த பிள்ளைக்கு இதே வேலை தான் பகல் முழுக்க நல்லா இருக்கு, அந்த பையன் வேலைக்கு போய்ட்டு வீட்டுக்கு வரவுமே இப்படி பேச்சை ஆரம்பிச்சுருது "
" பாவம் தான் அந்த பயலும், இவ பண்ணுறத எத்தனை நாளைக்கு தான் பொறுத்து பொறுத்து போவான்? "

" ஆமா ஆமா வர வர இந்த பிள்ளைக்கு இதே வேலையா போச்சு " என்று பல விதமான கருத்துகள் அந்த கூட்டத்தின் மத்தியில் பரவலாக வலம் வந்தது, பத்தடி உயரத்தில் நின்று இருக்கும் குமரனின் காதுக்கும் வந்தது. அது காதில் கேட்ட நொடி குமரனின் சிந்தனை அந்த பெண்ணை பற்றி சிந்திக்க ஆரம்பித்து அப்படியே சமுதாயத்தின் பக்கம் திரும்பியது.

" என்ன ஆச்சு இந்த பொண்ணுக்கு நல்லாத்தான இருந்துச்சு இப்போ திடீருனு ரோட்ல வந்து அழ வேண்டிய அவசியம் என்ன வந்தது?
ஒரு வேளை குடும்ப பிரச்சனையா இருக்குமோ?
அப்படியே குடும்ப பிரச்சனையா இருந்தாலும் அதை வீட்டுக்குள்ள வச்சு முடிக்கிறது தான எல்லாருக்கும் நல்லது. அதை செய்யாம இந்த பொண்ணு ஏன் தெருவுல வந்து கத்திக்கிட்டு இருக்கு?
இந்த காலத்துல பொண்ணுங்களுக்கு எதையுமே தாங்கி அதை தாண்டனும்ங்குற எண்ணம் வரவே மாட்டேங்குதே,
எதுக்கெடுத்தாலும் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி அத அடுத்தவங்க மத்தியில் கொண்டு வந்துரணும்னு தான நினைக்கிறாங்க.
அப்படி கொண்டு வந்தா அதனால நாலு சுவருக்குள்ள இருந்த குடும்ப விஷயம் வெளிய வந்துரும் அப்படி வெளியே வந்தா அது குடும்பத்துக்கு அவமானமா போயிருமேங்குற எண்ணம் யாருக்குமே வர மாட்டேங்குதே,
இப்படி பொறுப்பெற்ற ஒரு மனநிலைக்கு இந்த காலத்து பொண்ணுங்க மாறி போனதுக்கு காரணம் என்னவா இருக்கும்? " அவனிடம் யோசனை.

பின் அவனே ஒரு முடிவுக்கு வந்தவனாக,

" ஆளாளுக்கு பகுத்தறிவு, பெண்ணுரிமைன்னு புரிதல் இல்லாம பேசி இருக்குறவங்கள கெடுத்து வச்சுடுறாங்க. இப்படி பகுத்தறிவு பெண்ணியம் பேசுற யாருக்காவது அப்படினா என்னனு முழுசா தெரியுமா? அத தெரிஞ்சுட்டு யாராவது பொண்ணுங்க கிட்ட சொல்லிக் கொடுக்கிறாங்களான்னா இல்ல. இன்றைய அவசர உலகத்துல பொறுமைன்னு ஒரு விஷயம் இருக்கிறது யாருக்குமே தெரியாம போயிருச்சு.
முன்னாடி எல்லாம் பொண்ணுனா பொறுமையா இரு பொறுமையா இருன்னு பொறுமையோட அவசியத்தை சொல்லி சொல்லி வளர்த்தாங்க அந்த பொறுமை அந்த குடும்பத்தையும் வளர்த்து எடுத்துச்சு.
என்னைக்கு பெத்தவங்களும் பெரியவங்களும் அந்த பொறுமைங்கிற வார்த்தைய பொம்பள பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க தவறுனாங்களோ அன்னைக்கு இருந்து இது மாதிரி பிரச்சனைகள் ரொம்ப சாதாரணமா நடக்க ஆரம்பிச்சுட்டு.

எதெல்லாம் குடும்ப கவுரவம்ன்னு நினைச்சோமோ அதை எல்லாம் இன்னிக்கு ஒரே நொடியில் போட்டு உடைச்சுடுறாங்க எல்லாம் விதி " என்று தனக்குத்தானே பேசிவிட்டு தனது தலையையும் உள்பக்கமாக திருப்பிக் கொண்டான்.
ஆனால் அந்தப் பெண் மாத்திரம் இடைவிடாது கத்திக் கொண்டே இருந்தாள்.


#பொறுமை

பெண்ணின் மறு உருவம் பொறுமை அந்த பொறுமை பலவித நன்மைகளை அவளோடு அவளை சேர்ந்தவர்களுக்கும் அள்ளிக் கொடுக்கும்.
மாறாக அந்த பொறுமையை கைவிடும் பொழுது,
அது அவளது நிம்மதியை கெடுத்தது போலவே அவளை சார்ந்தவர் நிம்மதியையும் கெடுத்து விடுகிறது.....
நலமான ஒரு சமுதாயம் அமைய பெண்களே மீண்டும் கையில் எடுங்கள் பொறுமை என்ற மாபெரும் அஸ்திரத்தை......,

அன்புடன்,
ஆன்மன்....
 

Gowri Karthikeyan

Well-known member
ஒரே கருத்து ஊசியா தான் போட்டுட்டு இருக்கான் இந்த குமரன் பைய.....
 
Top Bottom