• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நெஞ்சில் நிறைந்தவள் - 26

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 26

எப்பொழுதும் போல் மறுநாள் பொழுது இனிமையாய் விடிந்திருக்க தனது வழமை மாறாமல் அலுவலக நேரத்திற்கு முன்பாக வந்திருந்தான் குமரன்.
அவனுக்கு முன்பாக வந்து வணக்கம் வைக்கும் தேவயானி இன்று இன்னும் வந்திருக்கவில்லை.
வழக்கமாக வரும் வணக்கம் இன்று வரவில்லையே ஒருவேளை நாம வந்ததை கவனிக்கலையோ என்ற யோசனையோடு நாம வணக்கம் வைத்து விடுவோம் என்ற எண்ணத்தோடு அந்த பக்கம் தலையை திருப்பியவனுக்கு தேவயானி இல்லாத இருக்கை மட்டுமே காட்சிக்கு கிடைத்தது.
அதை கண்டவன் சிறு யோசனையோடு தனது இருக்கையில் போய் அமர்ந்தான்.

இருக்கையில் அமர்ந்தவன் நேரத்தை விரையம் செய்யாமல் அடுத்தடுத்த அலுவல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.,
நேரம் காலை 11 மணியை கடந்து விட்டிருந்தது. அப்போது அருகில் அமர்ந்து இருந்தவர்கள் ஒரு ஒருவராக எழுந்து நகர்வது கண்ணில் பட தேநீர் இடைவேளைக்கான நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்து நேரத்தை பார்த்தவன்,

" சரி நாமலும் போய் ஒரு தேநீர அருந்திட்டு வரலாம் என்ற எண்ணத்தோடு கிளம்பியவனின் பார்வை மீண்டும் தேவயானி இருக்கையில் படிந்தது. அப்போதும் அவள் இல்லாத அந்த வெற்று இருக்கையே கண்ணில் பட இந்த முறை தனது அலைபேசியை எடுத்து அவளுக்கு அழைப்பை சொடுக்கி அலைபேசியை காதில் சொருகினான், அது கீங்.... கீங்..... என்ற தடைபட்ட முனங்களோடு அடங்கி அழைப்பும் தானாகவே துண்டிக்கப்பட்டது.

" என்னாச்சு தேவாக்கு எப்பவும் நமக்கு முன்னாடியே அலுவலகத்துக்கு வந்துருவாங்களே இன்னைக்கு என்ன இம்புட்டு நேரமாகியும் ஆள காணோம், சரி ஆள தான் காணோம் இவ்வளவு நேரம் ஆகியும் ஒரு தகவலும் இல்லையே, நாம வேலைக்கு வந்த பின்னாடி ஒருநாளும் இப்படி நடந்த நினைவு நமக்கு இல்லையே " என்ற யோசனையோடு தேநீரை கொஞ்சம் கொஞ்சமாக கழுத்து பகுதியில் இறக்கி கொண்டே அலைபேசி திரையை தடவி கொண்டிருந்தான்.

அப்போது பார்வையில் விழுந்தாள் மாதுரி.
அவளைக் கண்டதும் குமரன் அவளுக்கும் ஒரு வணக்கத்தை மரியாதை நிமித்தமாக வைத்துவிட்டு அழைத்தான்.

" மாதுரி "

" என்ன குமரன்? "

" மாதுரி தேவா எங்க போனாங்க ஏன் இன்னைக்கு இன்னும் வரல? "

அவள் வரவை அறிந்து கொள்ளும் நோக்கோடு அவன் கேட்க,

" தெரியல குமரன், என்கிட்ட எதுவும் தகவல் சொல்லல, "

" அப்படியா, சரி மாதுரி நன்றி "

" ஏன் கேட்டீங்க குமரன்? "

" ஒன்னும் இல்ல மாதுரி சும்மா தான் அவங்க இன்னைக்கு இன்னும் வரலையேன்னு தான் கேட்டேன் "

" குமரன் நா ஒன்னு சொன்னா தவறா நினைக்க மாட்டிங்களே? "

" என்ன மாதுரி சொல்லுங்க "

" யானி பத்தி என்கிட்ட கேட்ட மாதிரி யார்கிட்டவும் கேட்க வேண்டாம் சரியா?, ஏன்னா சில விஷயங்கள்ல ரகசியமா இருக்கிறது உண்டு அது வியாபார போட்டி விஷயமா கூட இருக்கலாம், அந்த மாதிரி விஷயங்கள் ரகசியமா இருக்குறது தான் நிர்வாக நலனுக்கு நல்லது. சொல்லுறது உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறன் "

" புரிஞ்சது மாதுரி, யார்கிட்டவும் கேட்கல "

" நல்லது அப்போ நா வரேன் "

" சரி மாதுரி வாங்க " லேசாக இதழ் விரித்து சொன்னான்

அவள் அங்கிருந்து கிளம்பி விட குமரன் சிந்தனை வசம் மீண்டும் விழுந்தான்.

அவன் சிந்தையில்,
" எல்லார் கூடவும் ரொம்ப சாதாரணமா பழக கூடிய தேவா கூட, தொழில்ன்னு வரவும் அதுல ரகசியம் காக்குறாங்க இல்ல, அவங்க கூடவே இருக்குற மாதுரிக்கு கூட விஷயம் தெரியல, அதே நேரம் அவங்க செயல் சரின்னு சொல்லுற அளவுக்கு தன்னோட இருக்குறவங்கள மனசளவுல தயாரா வச்சிருக்காங்க, நிஜமாவே இது ரொம்ப ஆரோக்கியமான விஷயம் தான் இல்ல... " என்று யோசிக்கும் போது தான் தன்னுடைய முந்தைய காலங்களில் தான் செய்த தவறு அவனுக்கு புரிந்தது.

தொழில் ரகசியம் என்பது பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அந்த நிமிடங்களில் தான் குமரன் புரிந்து கொண்டான். அந்த புரிதல் அவனை அமைதியாக அவனது இருக்கையில் அமர வைத்தது. இப்படி தெளிவாக இல்லாமல் தொழிலில் கோட்டை விட்டு விட்ட எண்ணம் அவனது மனதை மெல்ல வருடியது,

என்ன தான் நம் இழப்பை மறந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வந்து விட்டாலும் கூட நாம் செய்த தவறை நாம் புரிந்து கொள்ளும் தருணம் நம் மனம் நோகும் உணர்வை தவிர்க்க முடிவதில்லை. அந்த மனநிலையில் தான் குமரன் தவித்து கொண்டிருந்தான். சில நிமிடங்கள் கடந்து இருக்க தன் மனதில் தோன்றிய உணர்வை மீண்டும் எழுத்தாக உரு கொடுத்தான்.

#தொழில் ரகசியம்

தொழில் பார்க்கும் தோழர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் இதுதான்,

தொழில் ரகசியம்.

இந்த ரகசியத்தை மட்டும் மறந்தும் கூட நம் நிழலிடமும் சொல்லிவிடக்கூடாது,

ஏன் சொல்ல கூடாது என்ற கேள்வி மனதில் எழலாம்,
ஒருவேளை சொல்லிவிட்டால் அதன் விளைவு ஒரு பாடத்தை சொல்லிக் கொடுக்கும்.
அதிலிருந்து மீண்டவர் எண்ணிக்கை மிக சொற்பமே......
புரிந்து பொழைத்து கொள்ளுங்கள்....


அன்புடன்,
ஆன்மன்.....

நெஞ்சில் நிறைவாள்........
 
Top Bottom