• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நெஞ்சில் நிறைந்தவள் - 27

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 27

நேரம் இரவு 7:00 மணியை அடைந்து இருக்க தனது கணினியை அணைத்து விட்டு வீட்டுக்கு கிளம்பினான் குமரன். அன்று நாள் முழுக்க தேவயானி அலுவலகம் வந்திருக்கவில்லை, ஆதலால் அவளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவனது மனதில் மேலோங்கி கொண்டே வந்தது,

நேற்றைய எதிர்பாரா நிகழ்வுகள் இன்று அவளை எதிர்பார்க்க வைத்திருந்தது ஒருவேளை எப்போதும் போல காலையிலேயே அவளை பார்த்து இருந்தால் கூட அந்த நினைவுகள் அங்கேயே நின்றிருக்கும் போல, ஆனால் அப்படி நடக்காமல இன்றைய நாள் முழுக்க அவளை பார்க்காமல் பேசாமல் கழிந்திருக்க அவளை பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்கிற எண்ணத்தை குமரனின் மனதில் ஆழமாய் வேரூண்ட செய்தது.

அவளுக்கு அழைப்பை விடுத்து ஒன்று இரண்டு வார்த்தைகளாவது பேசி விடு என்று மனம் அடம் பிடித்தது ஆனால் அவளது பயணம் தொழில் முறை பயணமாக இருந்ததால் அவனால் அவளுக்கு அழைப்பை விடுக்க முடியவில்லை அடம் பிடித்த மனதை அதட்டி அடக்கி நிதர்சனம் புரிய வைக்க முயற்சி செய்தான். எப்போதும் அடங்கி விடும் மனம் ஏனோ இன்று இந்த விஷயத்தில் அடங்க மறுத்து அடம் பிடித்தது. இதற்கு மேலும் இங்கே அமர்ந்து இருந்தால் சரி வராது என்று எண்ணியவன் மெல்ல அலுவலகம் கடந்து வெளியே வந்தான், அவனது நல்ல நேரம் காத்திருக்க விடாமல் பேருந்து வந்தது, அதிலேறி அமர்ந்து ஜன்னலோர இருக்கையை பிடித்தான் பேருந்தும் நகர ஆரம்பித்தது.

எப்போதும் சந்தை கடை போல சல சலத்து கொண்டிருக்கும் பேருந்து ஏனோ இன்று கூட்டம் குறைவாக இருந்தது, அமைதியான பேருந்து அழகான காற்றோடு பயணிக்க மனம் மீண்டும் நேற்றைய நிகழ்வை நோக்கி நகர்ந்தது....

நித்தமும் கடக்கும் பாதையை நேற்றைய அனுபவம் வேறு விதமாக மாற்றி இருந்தது ஜன்னல் வழியாக தலையை வெளியே நீட்டியவன் நேற்று உணவு உண்ட அந்த சாலையோர உணவகத்தையும் கண்டான். மனதில் ஏதோ ஒரு அழுத்தம், இன்னதென்று இனம் கண்டு கொள்ள முடியவில்லை. தனது இலையில் சற்றும் யோசிக்காமல் அவள் கை வைத்து எடுத்து உண்டு முடித்த காட்சி மீண்டும் மன கண்ணில்...

" அய்யோ இறைவா என்ன அவஸ்தை இது,
என்ன நடக்குது என் மண்டைக்குள்ள?
மண்டைக்குள்ளயா? இல்ல மனசுக்குள்ளயா? அல்லது இரண்டிலும் இதே தானா? " கேள்வி கேட்டவனுக்கு விடை தெரியவில்லை. விடை அறியும் வழியும் தெரியவில்லை.

கண்களை மூடினான் பேருந்து இருக்கையில் உடலை சாயித்த படியே படுத்தான்,

சிரித்த முகமாய் அவள் காற்றில் ஆடும் கேசத்தை கையால் ஒதுக்கி கொண்டே அவனை பார்த்தாள், அழகாய் சிரித்தாள்,

" என்ன குமரன் ஏன் இந்த தடுமாற்றம்? "

" தெரியல தேவா, நெஞ்செல்லாம் ஏதோ செய்யுது "

" நெஞ்செல்லாம்மா? "

" ம்ம்ம் ஆமா "

" என்ன செய்து குமரன்? "

" ஒரு மாதிரியான அழுத்தம், நெஞ்சு நெஞ்சு அடைச்சு, ஏதோ சொல்ல நினைக்குற விஷயத்தை நெஞ்சுக்குள்ள போட்டு அழுத்தி அத சரியா எப்படி சொல்ல தெரியல தேவா ஆனா ஒரு அழுத்தம் மனசு முழுக்க நிறையுது.
அந்த அழுத்தம்..... " அவனுக்கு விளக்கி சொல்ல தெரியவில்லை திணறினான் அவனது திணறலை தாங்க முடியாதவளாய் அவனை இறுக்கி அணைத்து கட்டிக்கொண்டாள். திணறியவன் மூச்சு திக்கென்று நின்றது போல ஆனது, சில நொடிகள் கழித்து அவளை போல அவனும் அவளை அணைக்க அவளது உருவம் காற்றில் கரைந்து போன போது தான் உணர்ந்தான் அத்தனையும் நினைவுகள் நிஜமல்ல என்று...

நிதர்சனம் விளங்கி விழிகள் கலங்கிய தருணம் அந்த பேருந்து நடத்துனர் பயண சீட்டு கொடுக்க அவனின் அருகில் வந்து நின்றார். தனது இறங்குமிடத்தை சொல்லி பயண சீட்டை கேட்கவும் அவ்விடம் வரவும் சரியாக தான் இருந்தது, பயண சீட்டை கொடுத்தவர் இறங்கி கொள்ளவும் சொல்ல அப்போது தான் தனது நிறுத்தம் வந்து விட்டதையும் அவன் அறிந்தான். அமைதியாய் கீழே இறங்கினான், வீட்டிற்கு செல்லவும் மனம் வரவில்லை அப்படியே நின்றான்.

நேற்று அவள் இறக்கி விட்டு விட்டு கையை காட்டி மறைந்த தருணம் மீண்டும் ஒரு முறை காட்சியாய் கற்பனையில் விரிய அவனது மனம் குமிறியது தேவா தேவா என்று.....

குமரனின் மனம் குமிறி கொண்டிருந்த நேரம் தலையை கையில் பிடித்து கொண்டு அமர்ந்து இருந்தாள் தேவயானி.

" தேவயானி என்ன டா இப்படி உட்கார்ந்து இருக்க? "

" கிருஷ்ணா என்கிட்ட பேசாத அங்குட்டு போயிரு நானே கோபத்துல இருக்கேன் பாத்துக்கோ "

" ஏன் டா இம்புட்டு கோபம் " மகள் எரிந்து விழுந்தாலும் கூட தந்தைக்கு கோபம் வருவது இல்லையே,

" காலையிலயே வர்த்தகம் பேச கூட்டிட்டு வந்துட்டு இப்போ வரைக்கும் எதுவுமே பேசாம அலைபேசியவும் அணைச்சு வைக்க சொல்லிட்ட, அங்க அலுவலக வேலை எல்லாம் அப்படி அப்படியே கிடக்கும், என் வேலைய மாற்றி பாக்க கூட யார்கிட்டவும் சொல்லல " சலித்து கொண்டாள்

" வர்த்தகம் பேசலன்னு யார் டா சொன்னா அதெல்லாம் பேச்சு வார்த்தை கிட்ட தட்ட சுமுகமா முடிஞ்சது "

" என்ன ப்பா சொல்லுறீங்க, எங்க எப்போ நடந்தது? " அதிர்ச்சி காட்டி கேட்டாள்

" இப்போ உள்ள அதுக்கான கொண்டாட்டம் தான் டா போய்ட்டு இருக்கு "

" இல்ல எனக்கு புரியல ப்பா நீங்க என்ன சொல்லுறீங்க? "

" அந்த குத்தகை அதிகாரி இருக்கார்ல டா அவர் இப்போ நம்ம சட்டை பையில, " சாதித்து விட்ட மகிழ்ச்சி கிருஷ்ணன் முகத்தில்

" ஓ ராஜதந்திரமா ப்பா? "

" அதே தான் டா, என் மகளாச்சே சரியா சொல்லிட்ட " ஹா ஹாஹாஹா.... பலமான சிரிப்பு அவரிடம்.

தேவயானி எதுவும் பேசவில்லை அமைதியாக எழுந்தாள்,

" சரி ப்பா நீங்க இருந்து முடிச்சிட்டு வாங்க நா கிளம்புறேன் "

" என்ன டா அப்பா எவ்ளோ சந்தோசமான விஷயத்தை சொல்லிட்டு இருக்கேன் " அவர் பேசும் போதே தேவயானி அங்கிருந்து கிளம்பி விட்டாள்

நெஞ்சில் நிறைவாள்......
 
Top Bottom