அத்தியாயம் 3
கண் கலங்கி செல்லும் காதலியை கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்த அதிவீரனின் அலைபேசி அதிர அதை எடுத்து பார்த்தான்,
குமரன் தான் அழைப்பில் வந்திருந்தார்.
அதை பார்த்த கணம் அதிவீரனின் கண்கள் கோபத்தில் சிவந்தது, அலைபேசியை அடித்து உடைத்து விடலாமா அல்லது அப்பாவை அதட்டி பேசி விடலாமா என்றெல்லாம் அவனுக்கு தோணினாலும் கூட தேவயானியின் வளர்ப்பு அதை மாற்றி இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்,
அவள் அடிக்கடி மகனிடம் சொல்லும் வார்த்தை,
" ஆணுக்கு அடிக்கடி கோபம் வரும் அப்படி வரும் நேரத்தில் மட்டும் அவசரம் காட்டாமல் நிதானமாக வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டும் தவறியும் கூட அடுத்தவர் மனதை காயப்படுத்தி விட கூடாது. அடுத்தவர்களிடமே அப்படி என்றால் அன்புக்குரியவர்களிடம்....? " என்று கேள்வியாக கேட்டு பதிலை அவனிடமிருந்து பெற்று அப்படியே அவனை பழக்கியும் விட்டு விட்டாள். அந்த பழக்கம் ஆழமாய் அவன் மனதில் பதிந்து கிடப்பதால் கோபம் வரும் முன்னே அதை தவிர்க்கும் எண்ணத்தை உருவாக்கி விடும் அவனது குணம்.
இப்போதும் அது தான் நடந்தது...
அனல் பார்வை அமைதி பார்வையாக மாறி அழைப்புக்கு அனுமதி கொடுத்து,
" ம்ம்ம் பாதர் "
" என்ன அதி குரல் ஒரு மாதிரி இருக்கு? "
" ஒன்னும் இல்ல பாதர் "
" சரி ரொம்ப பீல் பண்ணாத டா பக்கத்துல இருக்க டிகிரி காப்பி கடைக்கு வா "
" ம்ம்ம் வரேன் பாதர் "
" சீக்கிரம் வா அதி உன் ஆளு இங்க தான் இருக்கா " சிரித்து கொண்டே சொல்ல,
" பாதர்.... " கண்கள் மிளிர இதழ்கள் விரிய உடனே ஒட்டி கொண்ட மகிழ்ச்சியோடு, " வண்டேன் வண்டேன் பாதர் " காரை கூட எடுக்காமல் ஓடினான் அந்த காபி கடையை நோக்கி.....
அங்கிருந்த ஒற்றை மேஜையின் நான்கு நாற்காலியில் மூன்றில், குமரன், தேவயானி, நந்தினி அமர்ந்து இருக்க நான்காவது அவனுக்காக காத்திருந்தது. வேகமாக அதில் தன்னை பொருத்தி கொண்டவன் முதலில் பார்த்தது தாயின் முகத்தை தான்.
அமைதியாய் எந்த விதமான உணர்வையும் வெளிப்படுத்தாது, மனதில் இருக்கும் எண்ணத்தை யாரும் கண்டுபிடித்து விட முடியாத அளவில் இருந்தது தேவயானியின் முகம். அதில் சற்று ஏமாற்றம் அடைந்தவன் அருகிலிருந்த நந்தினியின் பக்கம் திரும்ப,
அவளது முகத்தில்,
பயம், பதற்றம், குழப்பம், எதிர்பார்ப்பு, கவலை என்று கலவையான பலவகை உணர்வுகள், அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ள அப்பாவை தவிர்த்து வேறு யாரிடம் கேட்க என்ற எண்ணத்தில் இறுதியாய் குமரன் முகத்தில் அதிவீரனின் பார்வை,
அவரோ கண் ஜாடை செய்து தேவயானியை காட்டி அவளிடம் பேசு என்றார்.
" ம்மா "
" ம்ம்ம் சொல்லு அதி இவ தான் அந்த பொண்ணா? "
" ஆமா ம்மா "
" என்ன பண்றா? "
" இங்க தான் மா பக்கத்துல ஒரு விடுதில தங்கி வேலைக்கு போறா "
" ம்ம்ம், உன் பேர் என்ன ம்மா? "
" நந்தினி "
" எத்தனை வருசமா ரெண்டு பேரும் விரும்புறீங்க? "
" நாலு வருஷம் "
" நாலு வருஷம்ன்னு சொல்லுற ஒருமுறை கூட நம்ம வீட்டுக்கு வந்தது இல்லையே....? " கேள்வியாய் கேட்க நந்தினி பதில் அற்று திணறினாள்,
" நீ அவன் கிட்ட கேட்டது இல்லையா நந்தினி, நம்ம வீட்டுக்கு போவோமா? இல்ல நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போன்னு எல்லாம் "
" சொல்லிருக்கேன், ஆனா அதுக்கான வாய்ப்பு அமையல "
" வாய்ப்பு அமையலைன்னு சொல்லுறது நாம முழுசா முயற்சி பண்ணலன்னு தான அர்த்தம்? அப்படி நாம நிஜமாவே நினைச்சா அப்படி ஒரு வாய்ப்பை உருவாக்கி இருக்கனும்ல, " இப்படி ஒரு கேள்வி பதிலை எதிர்பாராத நந்தினி இன்னும் திணறினாள்.
" ஏன் டா உனக்கு கூடவா கூட்டிட்டு வரணும்ன்னு தோணல " அவளின் திணறல் அறிந்து மகனிடம் வந்து விட்டார் போல,
" தோணுச்சு ம்மா, ஆனா அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரும் போதே உங்க ரெண்டு பேர் சம்மதத்தோட அவளை மருமகளாவே கூட்டிட்டு வரணும்ன்னு நினைச்சேன் ம்மா அதான்.... "
" எங்க ரெண்டு பேர் சம்மதமா? "
" ம்ம் ஆமா ம்மா? "
" ஏன் குமரா இவங்க ஒருத்தர ஒருத்தர் விரும்ப,
நம்ம சம்மதம் கேட்டா விரும்புனாங்க? "
" ம்ம்ஹும் இல்ல தேவா, என்கிட்ட எதுவும் அனுமதியோ, விருப்பமோ கேட்கல "
தாயும் தந்தையும் என்ன பேசி வருகிறார்கள் என்ற விஷயம் புரியாமல் குழம்பி போனான் அதிவீரன். அந்த குழப்பத்தை அவனது முகம் அப்படியே பிரதிபலிப்பு செய்ய,
" நீங்க ரெண்டு பேரும் உண்மையாவே காதலிக்குறீங்களா? " தேவயானியின் கேள்வி இருவருக்கும் இன்னும் குழப்பத்தை கொடுக்க பதில் சொல்லாமல் அவர்கள் இருவரும் அவளையே பார்த்தார்கள்.
" என்ன அதி உங்க அம்மா கேட்டது காதுல கேட்கலையா? "
" ஹான் கேட்குது பாதர் "
" அப்போ பதில் சொல்ல வேண்டியது தான டா "
" நா சொல்லி தான் தெரியணும்ன்னு என்ன பாதர் இருக்கு? அவளும் நானும் விரும்ப போய் தான உங்க கிட்ட வந்து நிக்கோம். "
" அப்புறம் ஏன் அதி இவ தான் நா விரும்புற பொண்ணு இவளை தான் நா கல்யாணம் பண்ணிக்க போறேன்னு தைரியமா வந்து எங்க கிட்ட சொல்ல வேண்டியது தான, அத விட்டுட்டு எங்க சம்மதம் முக்கியம்ன்னு என்ன அர்த்தத்துல பேசுற? "
" ம்மா "
" இங்க பாரு அதி, உனக்கு பிடிச்ச விஷயம் நிறைய இருக்கும் அது சரியாவும் இருக்கும், சரி இல்லாமலும் இருக்கும், ஆனா காதல் எப்பவுமே சரியா மட்டும் தான் இருக்கும். அத முழுசா நீ நம்பனும்.
காதலிக்கும் போதே இவ தான் என் வாழ்கைன்னு ஒரு பொண்ணும் பையனும் உறுதியா நம்பி ஒருத்தருக்காக இன்னோருத்தர் தங்கள அர்ப்பணிப்பு செஞ்சுக்கணும், அப்படி செய்யும் போது தான் அவங்க நமக்கு எப்படிபட்டவங்கங்குற உண்மை அடுத்தவங்களுக்கு தெரிய வரும். அத நீங்க செஞ்சா மட்டும் போதும் டா உங்களுக்கு யாரு சம்மதமும் தேவை இல்ல. அத விட்டுட்டு அடுத்தவங்க சம்மதம் வேணும்னு நினைக்குறது மகா தவறு. "
" நீங்க சொல்லுற மாதிரி செய்றது சுயநலம் இல்லையா ம்மா? "
" சுயத்தை விரும்பாதவன் ஜெயிக்க முடியாது அதி "
" அப்போ காதலுக்காக நா எத வேணும்னாலும் இழக்க தயாரா இருக்கனும்ன்னு சொல்லுறியா ம்மா? "
" யாரு டா சொன்னது காதல் இழக்க வைக்கும்ன்னு கிறுக்கா.
காதல் ஒரு அட்ஸயபாத்திரம் டா குறைவில்லாம கொடுக்க கூடியது, இத நீயா புரிஞ்சிக்கணும்ன்னு தான் உன் காதல் விவரம் எனக்கு தெரிஞ்சும் நா அதுல விருப்பம் காட்டாம தவிர்த்துட்டே வந்தேன். இத நீயா புரிஞ்சிக்கணும்ன்னு நினைச்சேன் ஆனா உனக்கு அது புரியல அதனால தான் இப்போ கூட வந்தேன் இல்லனா....
குமரா போவோமா? வா " என்று சொல்லிவிட்டு தேவயானி முன் நடக்க,
அதுவரை தன் மனம் நிறைந்த மனையாளின் தனித்துவமான தன்மையை ரசித்து கொண்டிருந்த குமரன் அவளின் பின்னால் நடந்தார் மனைவி சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை போல........
நெஞ்சில் நிறைவாள்.....

Author: Vishakini
Article Title: நெஞ்சில் நிறைந்தவள் - 3
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.