அத்தியாயம் 30
தேவயானியின் திணறல் கண்டு குமரன் சிரிக்க,
" ஏன் குமரன் சிரிக்கீங்க? " என்று கேட்க,
" இல்ல ஆனைக்கும் அடி சறுக்கும்ன்னு கேள்விப்பட்டுருக்கேன் இப்போ தான் பாக்குறேன் " என்றான் அவன்.
" ஏன் குமரன் அப்படி சொல்லுறீங்க? " லேசாக வாயை நெளித்து கேட்டாள்
" எப்பவுமே தெளிவா இருக்குற தேவா கிட்ட முதல் முறை சிறு திணறல் பாக்குறேனே " ஏனோ இதை சொல்லும் போது குமரனிடம் அத்தனை மகிழ்ச்சி.
" திணறல குமரன், அது அத எப்படி சொல்ல தெரியல, நா ஒருவிதமா சொல்லி நீங்க ஒருவிதமா எடுத்து சிறு புரிதல் தவறுனா கூட மனம் வருத்தம் வர வாய்ப்பு இருக்கு இல்லையா? " அவள் அவனுக்கு விளக்க நினைத்தாள் ஆனால் அவனோ அவன் வரையில் அவளது திணறலே தனக்கு மகிழ்ச்சி என்று தீர்மானம் எடுத்து கொண்டான். அதனால் அழகாய் சிரித்தான், மௌனித்தான். சில நொடிகள் மௌனம் பின் குமரனே கேட்டான்,
" ஆமா தேவா நீங்க எப்படி இங்க இறங்குனீங்க அத சொல்லவே இல்லையே.... "
" அதுவா நா பேருந்துல வரும் போது வெளியில வேடிக்கை பார்த்துட்டே வந்தேன்ல அப்போ பேருந்து இந்த நிறுத்தத்தில நின்னுச்சு பாத்தா நீங்க உட்கார்ந்துட்டு இருக்கீங்க. என்ன டா இவர் இங்க இருக்காரேன்னு நினைச்சுட்டே எழுந்தா அந்த நடத்துனர்,
" ஏம்மா இறங்க போறீங்களான்னு கேட்டாரு, எந்திரிச்சுட்டோம் என்னத்த இல்லனு சொன்னோம்னு நானு ஆமான்னு இறங்கிட்டேன். "
" சரியான ஆளு தேவா நீங்க "
" இங்க இருந்து அடுத்து பேருந்து எப்போ குமரன்? "
" இதுக்கு மேல வாரது தான் கணக்கு தேவா "
" ஓ அப்படியா அப்போ காத்திருக்க தான் செய்யணுமோ? "
" ஏன் காத்திருக்கணும் தேவா நா வேணும்னா உங்கள கூட்டிட்டு போய் விட்டுட்டு வாரேன் "
" நீங்களா எப்படி கூட்டிட்டு போவீங்க குமரன்? "
" தேவா என்கிட்ட இருசக்கர வாகனம் தான் உங்களுக்கு சரின்னா கூட்டிட்டு போறேன் "
" ஏன் குமரன் நா ஒரு ஆள் தான இருக்கேன், அதனால நீங்க என்னை தாராளமா கூட்டிட்டு போகலாம் விதி மீறல் எல்லாம் ஒன்னும் வராது " சிரித்துக் கொண்டே சொன்னாள்
" அப்போ சரி தேவா நீங்க இங்கையே நில்லுங்க நா போய் என்னோட வாகனத்தை எடுத்துட்டு வந்துடுறேன் "
" எங்க போய் எடுக்க போறீங்க குமரன்? "
" தோ பக்கத்துல தான் தேவா அந்த தெரு முனையில என்னோட நண்பன் வீடு இருக்கு அவன் கிட்ட தான் என்னோட இருசக்கர வாகனம் இருக்கு. "
" அப்படியா சரி வாங்க நானும் வாரேன் சேர்ந்தே போவோம் "
" அங்க வரைக்கும் நீங்க நடக்கணுமே "
" நீங்க நடக்கீங்களே குமரன் அப்புறம் என்ன? நா மட்டும் தனியாவா நடக்க போறேன் "
அவளும் அவனோடு நடக்க ஆரம்பித்தாள்.
போக்குவரத்து மிகக் குறைந்த ஆள் நடமாட்டம் இல்லாத அந்த சாலையின் ஓரத்தில் ஆங்காங்கே மின்னிக் கொண்டிருந்த விளக்கின் வெளிச்சத்தில் குமரனும் தேவயானியும் பேசிக்கொண்டே நடந்தார்கள் அவன் சொன்ன அந்த தெருமுனை வீடு வந்திருக்க வீட்டின் அழைப்பு மணியை ஒலிக்க செய்தான் குமரன்.
அடுத்த நிமிடத்திலேயே நண்பன் வந்தான் விபரத்தை சொல்லவும்,
" நண்பா இது உன் வண்டி டா என்கிட்ட ஏன் காரணம் சொல்லிட்டு இருக்க? "
" உன் தேவைக்காக கொடுத்து இருக்கேன் நண்பா அது முடியுற வரைக்கும் இப்படி தான்.
உன் வேலை முடிஞ்சு எப்போ கொடுக்குறயோ அப்போ நா எடுத்துக்க போறேன் " தோலை குலுக்கி சொன்னவனை பார்த்து அதிசயித்து தான் போனாள் தேவயானி.
நண்பனிடம் விடை பெற்று தனது வாகனதுக்கு உயிர் கொடுத்த குமரன் தேவயானியை பார்க்க அவளும் வந்து ஏறிகொண்டாள், மெல்ல தொடங்கியது பயணம் அமைதியாக வந்தாள் தேவயானி.
" என்ன தேவா ரொம்ப அமைதியா வாறீங்க? "
" உங்கள பத்தி தான் நினைச்சுட்டு வாரேன் குமரன் " அவள் சாதாரணமாக சொன்ன வார்த்தை அவனது இதழ்களை விரிய வைத்தது...
" என்னை பத்தியா " அதே மகிழ்ச்சி அவனது குரலிலும்
" ஆமா குமரன் "
" அப்படி என்ன யோசனை தேவா? "
" அங்க பாருங்க குமரன் அழகான ஒரு பொண்ணு உங்களை பாத்துட்டே வருது நீங்க என்னடான்னா அத கவனிக்காம கடிவாளம் கட்டுன குதிரை மாதிரி போய்ட்டு இருக்கீங்களே... " என்று சொன்ன போது தான் குமரனும் தனது பக்கவாட்டில் வந்த அந்த பெண்ணை பார்த்தான். அழகாக தான் இருந்தாள் ஆனால் அவனது மனமோ அவளிடம் சிக்கியிருந்ததால் இன்னொரு பெண்ணை பார்க்கும் எண்ணத்திற்கு செல்லவில்லை ஆதலால்,
" அட சும்மா இருங்க தேவா எதாவது வம்பு வளர்த்து விட்டுராதீங்க " என்று பார்வையை திருப்ப
" அட என்ன குமரன் நீங்க நா மட்டும் உங்கள மாதிரி பையனா இருந்து இருந்தா சாலையில போற ஒரு பொண்ண கூட விடமாட்டேன் எல்லாத்தையும்.... "
" அய்யோ தேவா " பதறினான் குமரன்
" அய்ய, ரசிச்சு இருப்பேன், ரசிக்க வச்சிருப்பேன்னு சொல்ல வந்தேன் குமரன் "
" அவ்ளோதானா ஹப்பா... " பெருமூச்சு விட,
" ஏன் நீங்க என்ன நினைச்சீங்க குமரன் " குசும்பாய் கேட்க
" அய்யயோ நா ஒன்னும் நினைக்கல தேவா... அதெல்லாம் தப்பு அமைதியா வாங்க "
" ஹ்ம்ம் " அவள் சலித்து கொள்ள வண்டி கண்ணாடியில் வெளிச்சம் வரும் போதெல்லாம் தெரியும் அவளது பிம்பத்தை பார்த்து கொண்டே வந்தான்
சில நிமிட மௌன பயணம் சென்று, பின் மெதுவாக கேட்டாள்,
" ஏன் குமரன் கண்ணாடில என்னையவா பாக்குறீங்க? " அவள் சரியாய் கணித்து கேட்க குட்டு வெளிப்பட்டு விட்ட பதற்றத்தில் பதறி வண்டியை நிறுத்தினான் குமரன்.
" ஹையோ குமரன் எதுக்கு இத்தனை பதற்றம் நா சும்மா சாதாரணமா தான் கேட்டேன். அவன் வண்டியை நிறுத்திய விதத்தில் விழுந்து விடாமல் இருக்க அவனது தோளை பற்றி இருந்த தேவயானி அப்படியே கையை வைத்திருக்க தடுமாறி பின் நிலை நிறுத்திய குமரன் அவளை அச்ச உணர்வில் பார்க்க அவள் சிரித்து விட்டாள்.
" பயப்படாம போங்க குமரன் நா சும்மா தான் கேட்டேன்... " சிரித்து கொண்டே சொல்ல குமரன் மெதுவாய் நகர்ந்தான். இருவரும் அதற்கு மேல் பேசவில்லை ஆனால் இருவருக்குள்ளும்அந்த பேசா பயணம் ஏதோ ஒரு உணர்வை மேல் எழுப்பி விட்டிருந்தது.
நெஞ்சில் நிறைவாள்.......

Author: Vishakini
Article Title: நெஞ்சில் நிறைந்தவள் - 30
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.