அத்தியாயம் 34
தேவயானியை பற்றி குமரன் கூறிய விஷயங்கள் தண்டாயுதபாணியை யோசனையில் தள்ளி தேவயானியை நெகிழ்ச்சியின் பக்கம் தள்ளி அதை வார்த்தையாய் வர வைத்தது,
" அச்சோ குமரன் ஏன் இப்படி " லேசான குழைவு அவளது பேச்சில் அதை பார்க்க பார்க்க தண்டாயுதபாணியின் மனம் வேறு ஒரு கணக்கை போட்டது, அதை பேச நினைத்த போது மந்திரியின் உதவியாளர் பாண்டி அவரை அழைக்க வந்தான், அவனை பார்த்ததும் குமரன்,
" பாண்டி அண்ணா " என்று முகத்தில் மகிழ்ச்சி காட்டி அழைக்க
பாண்டியோ அத்தனை மகிழ்ச்சி காட்டவில்லை என்றாலும் கூட பெயருக்கு ஒரு சிரிப்பை உதிர்த்து,
" தம்பி, என்ன டா எப்படி இருக்க? என்ன இங்க? " என்று கேட்டவன் அவனோடு நின்ற தண்டாயுதபாணியின் முகத்தை பார்க்க சற்றே குழம்பி போனான். அவனது குழப்பத்தை தெளிய வைக்க எண்ணியது போல தண்டம் பேச ஆரம்பித்தார்
" தம்பி உனக்கு கும்ரனை தெரியுமா? "
" ம்ம் நல்லா தெரியுமே அய்யா, தம்பியும் நானும் சேர்ந்து சில காலம் தொழில் செஞ்சோம், அது நாங்க நினைச்ச அளவுக்கு சரியா போகலை அதனால அப்படியே அத நிறுத்திட்டு வேற வேற திசையில போய்ட்டோம் " சுருக்கமாக சொல்லி முடித்தான். அவன் முடிக்கும் முன்பே தேவயானி அறிந்து கொண்டாள் குமரனின் தொழிலில் திருட்டு வேலை செய்த கயவன் இவன் தான் என்று. ஆனால் தண்டம் வேறு விதமாக கேட்டு கொண்டிருந்தார்
" அப்படியா "
" ஆமாங்க அய்யா அதெல்லாம் பழைய கதை விடுங்க இன்னைக்கு நாம ஆக வேண்டிய விஷயத்தை பாப்போம் " என்று சொன்னவன்,
" அய்யா குமரன் உங்க கூட எப்படி? " உண்மையை அறியும் எண்ணத்தோடு கேட்கவும் செய்தான்.
" இந்த குமரன் தான் இப்போ எங்க நிறுவனத்தில் ஏற்றுமதி பிரிவு மேலாளர். "
" ஓஹோ அப்படியா விஷயம்...
ஹ்ம்ம், தம்பி குமரன் நல்ல பையன் தான் ஆனா கொஞ்சம் பொறுப்பு கம்மியே.,
அவனுக்கு போய் நீங்க இவ்வளவு பெரிய பொறுப்பு கொடுத்து இருக்கீங்க? " வினையமாய் பேச ஆரம்பித்தான் பாண்டி.
" என்ன தம்பி சொல்றீங்க குமரன் தான் இப்போ அலுவலகத்தில் நல்ல பொறுப்பா இருக்கக்கூடிய பையன்னு என்னோட மருமக சொல்றா ஆனா நீ இப்படி சொல்லுற? "
" ஐயா நான் ஒன்னும் பொய் சொல்லல அப்படி சொன்னா குமரனே அத மறுப்பான் தான? " கேள்வியோடு நிறுத்தியவன் மேலும் தொடர்ந்தான்,
" ஐயா கொஞ்ச காலம் நானும் அவன் கூட சேர்ந்து தொழில் செஞ்சி இருக்கேன், அந்த அனுபவத்துல தான் சொல்லுறேன்.
கொஞ்ச காலம் நல்லா இருந்தான் வேலையும் சிறப்பா போச்சு ஆனா அதுக்கு அப்புறம் தான் அவன் வேலையை காட்ட ஆரம்பிச்சான். அதுக்கு பின்ன நிலைமை தலைகீழா போய்ட்டு. அதுக்கு காரணம் முகப்புத்தகம் " என்று சொன்ன போது "" முகப்புத்தகமா? " என்ற கேள்வி தண்டத்தை முந்தி வந்தது தேவயானியிடமிருந்து.
" ம்ம் ஆமா அவனுக்கு முகப்புத்தகம் தான் உலகம் அதுல அவனுக்கு என்ன தோணுதோ அதை கிறுக்குத்தனமா கிறுக்கிக்கிட்டு இருப்பான். அந்த கிறுக்கல ஆரம்பிச்சிட்டான்னா வேற எந்த வேலையும் பாக்க மாட்டான், இப்படி இருக்காத டா மாத்திக்கோன்னு எத்தனையோ முறை சொல்லி சத்தம் போட்டுட்டேன் ஆனா அவன் கேட்கிற மாதிரியே இல்ல அவனோட அலட்சியம் என்னையும் சேர்த்து நஷ்டத்துல கொண்டு போய் விட்டுருச்சு. அதனாலதான் நானே அந்த நிறுவனத்தை விட்டுட்டு வெளியே வந்தன் என்னைக்கு அந்த நிறுவனத்தை விட்டும் என் தம்பி குமரன விட்டும் வெளியே வந்தேனோ அன்னையில இருந்து என்னோட நிலைமை மேல மேல போய்க்கிட்டே இருக்கு அதுக்கு ஆதரமா தான் இன்னைக்கு டெல்லியில அமைச்சருக்கு உதவியாளரா இருக்கேன். " என்று சிறிது இடைவெளி விட்டவன் மீண்டும் தொடர்ந்தான்,
" இதெல்லாம் எப்படி சாத்தியம் ஆச்சுன்னு நினைக்கிறீங்க முழுக்க முழுக்க என்னோட உழைப்பு. அது இல்லாம இந்த அளவுக்கு வர முடியுமா? அப்போ என்னோட உழைப்பு எந்த அளவுக்கு இருந்திருக்கும் அப்படி இருந்தும் அந்த நிறுவன நஷ்டத்தில் போயிருக்குன்னா தம்பி குமரனோட அலட்சியம் எந்த அளவுக்கு இருந்திருக்கும்ன்னு நீங்களே யோசிச்சு பாருங்க " என்று மொத்தமாக குமரனின் மேல் பழியை இறக்கினான் பாண்டி.
அவனது இத்தனை குற்றசாட்டுக்கும் குமரன் பதில் ஏதும் சொல்லவில்லை அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டேன் நின்றான் கூடவே இதழில் சிறு சிரிப்பும்.
அவன் பார்க்கும் பார்வையை தான் தேவையானியும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
குமரனின் பார்வையில் எந்த சலனமும் வருத்தமும் தெரியவில்லை எனக்கு நீ செய்திட்டு போன துரோகத்தை விடவா இப்போ நீ பேசுற பேச்சு பெருசு அப்போ கூட இருந்து கெடுத்த இப்போ எதிரில் நின்னு கெடுக்கிற என்ற எண்ணம் குமரனின் மனதில் ஓடியது அவனது முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அதை தேவயானி சரியாகத்தான் கவனித்து கணித்துக் கொண்டிருந்தாள் அந்த அமைச்சரின் உதவியாளன் தனது பேச்சை மேலும் நீட்டிக்க போக அவனது குரலை இடைவெட்டினாள் தேவயானி.
" கொஞ்சம் உங்க பேச்சை நிறுத்துறீங்களா " சற்று உஷ்ணம் கூடி வந்த குரலால் அமைதியாகி அவளை பார்த்தான் பாண்டி.
" இப்போ என்ன நடக்கணுமோ அந்த வேலையை பார்ப்போமா என்னோட நிர்வாகத்துல இருக்கக்கூடிய சக ஊழியர நீங்க இப்படி பேசுறத நான் ஒரு காலமும் அனுமதிக்க முடியாது. என்னோட நிர்வாகிகளை பேசறதும் என்னைய பேசுறதும் ஒன்னு தான் அதனால நீங்க உங்களோட பேச்சை இதோட நிறுத்திக்கிட்டா நல்லது " உஷ்ணம் எச்சரிக்கையாக மாறியிருக்க தண்டாயுதபாணியும் அதை பார்த்துக் கொண்டே பேச முன்வந்தார்,
" தேவயானி அவசரப்படாதே டா இந்த பையன பத்தி நமக்கு பெரிய அளவுல ஒன்னும் தெரியாது தானே இப்போ இந்த தம்பி இவ்வளவு விஷயம் சொல்றானே அதுக்கு கொஞ்சமாவது குமரன் மறுத்து பேசினானா பாத்தியா? ஏன்னா இந்த தம்பி பேசுனதுல உண்மை இருக்கு போல தான் எனக்கு தோணுது " தனது கருத்தை கூற
" மாமா வந்த வேலையை பாப்போம் அவர் பார்த்த அதே வேலையை ( அதாவது குமரனை குறை கூறும் வேலையை ) நீங்களும் பார்க்க வேண்டாம். இந்த வேலை சம்பந்தமா உங்களோட உதவி எனக்கு தேவைப்பட்டுச்சு அதனால உங்களோட உதவிய கேட்டேன் இதை செஞ்சு கொடுக்க முடியும்னா செய்ங்க இல்ல முடியாதுன்னு சொன்னா விட்டுடுங்க என்னால என்ன செய்ய முடியுமோ அதை நான் பாத்துக்கிறேன். " என்று அவரிடமும் சீறியவள்,
" மறுபடியும் சொல்றேன் குமரன பேசுறது என்ன பேசுறதுக்கு சமம் அதனால குமரன் பேசுறத நான் அனுமதிக்க மாட்டேன் இதுக்கு மேலயும் நீங்க பேசிட்டு இருந்தா இப்பவே நான் இங்க இருந்து கிளம்புறேன் " தேவயானி மொத்தமாக இருவரையும் மிரள விட்டு விட,
" என்னடா உனக்காகத்தானே மாமா இவ்வளவு தூரம் பேசி செஞ்சி எல்லாம் தயார் செஞ்சிருக்கேன் அப்படி இருக்கும்போது நீ பாட்டுக்கு இப்படி பேசினா என்ன அர்த்தம்? "
" நீங்க ரெண்டு பேரும் பேசுற பேச்சுல அர்த்தம் இல்லைன்னு அர்த்தம் மாமா அர்த்தமில்லாத பேச்சுக்களை எப்பவும் நான் பேச விரும்பறதும் இல்ல கேட்க விரும்பறதும் இல்லை அது உங்களுக்கே நல்லா தெரியும் அது தெரிஞ்சி இருந்தும் நீங்க இப்படி பேசிட்டு இருக்கறதுல எந்த அர்த்தமும் இல்லை " இதற்கு மேல் இருவரும் பேசவே கூடாது என்பதை போல் பேசி முடித்தாள் தேவயானி.
" தேவயானி யானைக்கும் அடி சறுக்கும் அதை புரிஞ்சுக்கோ நீ எடுத்த முடிவு எல்லா நேரமும் சரியா இருக்கணும்னு அவசியம் இல்ல அதே நேரம் இவனுக்காக நீ இவ்வளவு பேச வேண்டிய அவசியமும் இல்லை என்னவோ மாமாவுக்கு தெரிந்ததா சொல்லிட்டேன் அதுக்கு மேல உன்னோட விருப்பம் சரி வாங்க உள்ள போய் அமைச்சர் பாப்போம் " தண்டாயுதபாணியும் தனது பேச்சை முடித்துக் கொண்டார்.
அங்கு நடந்த அத்தனை பேச்சுகளையும் கேட்டுக் கொண்டிருந்த குமரனின் முகம் எவ்வித உணர்வையும் வெளிப்படுத்தாது அமைதியாக இருந்தது அதை சரி செய்வதற்காக குமரனின் கையை பற்றி தனது உள்ளங்கைக்குள் வைத்து ஒரு அழுத்தம் கொடுத்து,
" குமரா வாங்க போவோம் " என்று முகம் மலர்ந்து சொல்ல அவளது அந்த அழுத்தமும் அந்த சிரிப்பும் அங்கிருந்த அந்த சூழலை கொஞ்சமாக மாற்றி குமரன் அமைச்சரை பார்க்கும் எண்ணத்திற்கு கொண்டு வந்தது.....
நெஞ்சில் நிறைவாள்.....

Author: Vishakini
Article Title: நெஞ்சில் நிறைந்தவள் - 34
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.