அத்தியாயம் 36
ஊர் திரும்பிய குமரனும் தேவயானியும் பேசிக்கொண்டே வாகனத்தில் பயணித்தனர், குமரனிடம் வாகனம் இல்லாததால் தேவயானியின் வாகனத்தில் குமரனை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு தேவயானி பின்னர் சென்று கொள்வதாக சொன்னாள். குமரன் மறுத்தும் கூட தேவயானி அதை ஏற்று கொள்ளவில்லை. விமான நிலையத்திலிருந்து அவர்களது பயணம் தொடங்கிய போது இந்த பேச்சும் தொடங்கியது. விமான பயணத்தின் போதே பேச நினைத்த தேவயானிக்கு இடம் கொடாமல் தங்களது தொழில் அடுத்த கட்ட நகர்வை நோக்கி தான் செய்து வைத்த திட்டங்களை குமரன் சொல்லிக்கொண்டே வந்ததால் அப்போது பேச முடியவில்லை ஆதலால் இப்போது அவனுக்கு முந்தி கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தேவயானி பேச ஆரம்பித்தாள்,
" ஏன் குமரன் இந்த பாண்டி தானே உங்க தொழில் முடங்கி போக முக்கிய காரணம்? "
" ஆமா தேவா "
" அப்படி இருக்கும் போது நீங்க ஏன் அவனைப் பார்த்து பேசுறீங்க சிரிச்சீங்க? "
" ஒருத்தங்க தப்பு செஞ்சாங்கன்னு அவங்களை நாம ஒதுக்கிட முடியாதுல தேவா, இன்னைக்கு இல்லனா கூட என்னைக்கோ ஒருநாள் அவங்க உபயமும் நமக்கு தேவைப்படலாம் இல்லையா "
" அவங்க செஞ்சது தப்பு கிடையாது குமரா அவங்க செஞ்சது துரோகம். துரோகிய தூரமா வச்சிக்கிறது நமக்கு ரொம்ப நல்லது இல்லையா? "
" நல்லது தான் காலத்தின் மாற்றம் துரோகியை மாற்றியிருக்கும்ன்னு நினைச்சேன் "
" சில அடிப்படை குணங்கள் எப்பவும் மாறுவதில்லை குமரா "
" அப்படித்தான் நானும் நினைக்கிறேன் தேவா "
" ஆனா அவன் இவ்வளவு பேசியும் நீங்க ஏன் கொஞ்சம் கூட மறுத்து இல்ல எதிர்த்து பேசவே இல்ல? "
" மறுத்து எதிர்த்து பேசுறதுனால என்ன ஆகப்போகுது தேவா? என்னை சுத்தி இருக்கிறவங்களுக்கும் என் கூட இருக்குறவங்களுக்கும் என்னைய பேசி பேசி நான் புரிய வச்சா அந்த புரிதல் எத்தனை நாளைக்கு நிலைத்து இருக்கும்?
பொதுவா ஒருத்தங்க நம்மள தப்பா நினைச்சாங்க அப்படின்னா அவங்களோட பார்வையில நாம தப்பா இருக்கிறோம்ன்னு தானே அர்த்தம் "
" அப்படி கிடையாது குமரா நாம தப்பா நினைச்சுகிட்டு இருக்கோமோ அப்படிங்கிறத தெளிவுபடுத்துகிறதுக்காக கூட அவங்க கேட்கலாம் இல்லையா? "
"அத நேரடியா கேட்டுட்டா பிரச்சனை இல்லை தேவா மனசுலையே நினைச்சுகிட்டு இருந்தா அது உண்மைன்னு அவங்க நம்பறதா தான அர்த்தம் அப்படி நம்புறவங்க கிட்ட நாம என்னதான் விளக்கம் சொன்னாலும் அவங்க அந்த விளக்கத்தை ஏத்துக்க போறது கிடையாது நம்மள 100 சதவீதம் நம்ப போறதும் கிடையாது அது மட்டும் இல்லாம அவன் பேசுனது அத்தனையும் பொய்ன்னு நான் சொல்ல மாட்டேன் நான் எவ்வளவு பொறுப்பில்லாமல் இருந்தேன்னு மறுபடியும் அவன் எனக்கு சொல்லிக் காட்டிருக்கிறான். நான் வேலையில் கவனமாக இல்லைன்னு சொன்னான் அது உண்மைதானே நான் வேலையில் கவனமாக இருந்திருந்தா அவனைப் பத்தின உண்மையை என்னைக்கோ நான் கண்டுபிடித்து இருப்பேன் ஆரம்பத்திலேயே அவன களை எடுத்து இருப்பேன், இந்த அளவுக்கு வளர விட்டிருக்க மாட்டேன் அவனை வளர விட்டதனால் தானே எனக்கு இந்த நிலைமை வாழ்க்கையில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பாடத்தை சொல்லிக் கொடுத்துட்டு போவாங்க எனக்கு இவன் அந்த மாதிரி நிறைய பாடங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறான் அந்த வகையில இந்த துரோகி எனக்கு மிகப்பெரிய குரு தேவா.
குருவோட பேச்ச மதிக்கணும் கேக்கணும் இல்லையா " என்று சொன்னவனிடம் லேசான புன்னகை.
" இல்ல குமரா நீங்க சொல்றது தவறு துரோகி என்னைக்குமே குரு ஆக முடியாது குருவாய் இருக்கக்கூடியவங்க பாடம் நடத்துவாங்க புரிய வைப்பாங்களே தவிர துரோகம் செய்ய மாட்டாங்க "
" ம்ம்ம் " தலையாட்டினான் குமரன். அந்த தலையாட்டுதலில் வருத்தம் நிறைந்து இருந்தது தேவயானிக்கு புரிய சூழலை புரிந்து பேச்சை மாற்றினாள்,
" ஹான் குமரா நீங்க எழுதுவீங்கன்னு அவன் சொன்னானே, அப்படி என்ன எழுதுவீங்க நா பாக்கணுமே "
" அட அது சும்மா தேவா எதாவது தோணுறத கிறுக்கி வைப்பேன் "
" ம்ம்ம் அப்படியா. எவ்ளோ பெரிய விஷயம் குமரன் எண்ணத்தை எழுதி வைப்பது, எத்தனை பேர் இங்க அத செய்யுறாங்க " அவன் சாதாரணமாக சொன்னதையே அவள் சிறப்பானதாக சொல்ல குமரன் பார்த்தான். தனது அலைபேசியை எடுத்து முகப்புத்தகத்தில் நுழைந்து குமரனின் பக்கத்தை தேடுவதற்கு ஆயத்தமானாள்,
" ம்ம்ம் சொல்லுங்க குமரன் உங்க பக்கத்தோட பெயர் என்ன? குமரன் தானா? "
" ம்ம்ஹும், ஆன்மன் "
" என்ன ஆன்மன்னா? "
" ம்ம்ம் ஆமா தேவா "
" அட பேரை வித்தியாசமாவும் சிறப்பாவும் இருக்கே குமரா " என்று சொல்லிக்கொண்டே தேடுதல் பக்கத்தில் ஆன்மன் என்று பதிவிட்டு தேடி குமரனின் பக்கத்தை திறந்து பார்த்தாள். இதுவரை பேசிய வாய் இப்போது மூடி கொண்டது மெல்ல கண்கள் அந்த திரையில் வலம் வர ஆரம்பித்து கைகள் மெதுவாக அந்த பக்கத்தை கீழிருந்து மேலாக தள்ளி ஒரு இடத்தில் நின்றது.
என் வேதம் என்று தலைப்பிடப்பட்ட அந்த பத்தியை பார்த்து கண்கள் நிலைபெற இதழ்கள் மெதுவாய் அசைப்போட்டு வார்த்தைகளை படிக்க ஆரம்பித்தது,
#என் வேதம்.....
தீமைக்கும் நன்மை செய்... துரோகத்தைக் கருவறு!”இதுவே என் வேதம்.
நமக்குத் துரோகம் செய்தவர்களை என்ன செய்ய வேண்டும்? அதே தீமையைத் திருப்பிச் செய்வதோ அல்லது அவர்களை மீண்டும் நம்புவதோ... இரண்டுமே முட்டாள்தனம்...! மீண்டும் நம்புவது பலகீனம், வன்மம் காட்டுவது நேர விரயம்.
அப்படியென்றால் ஆகச்சிறந்த பழிவாங்கல் எது?
நீங்கள் எந்த இடத்தில் வீழ்த்தப்பட்டீர்களோ, அதே இடத்தில் அவனுக்கு முன்னால் பல மடங்கு உயர்ந்து நிற்பதுதான்!
இங்கே 'நன்மை செய்' என்பது துரோகிக்கு உதவுவதல்ல. அவனது தீமையால் உங்களுள் இருக்கும் 'நல்ல குணம்' அழிந்துவிடாமல் காப்பது! அவனையும் தாண்டி உலகிற்கு நன்மை செய்துகொண்டே முன்னேறுங்கள்.
உங்களை வீழ்த்தியவன் முகத்தில் கரியைப் பூசத் தேவையில்லை. நீங்கள் அடையும் வெற்றியே அவனது துரோகத்தை வேரோடு கருவறுத்துவிடும்!
- ஆன்மன்
என்று அந்த பதிவை குமரன் முடித்து இருக்க அதை படித்த தேவயானி அமைதியாக அவனை ஏறிட்டு பார்த்தாள்.
நிமிடத்திற்கு நிமிடம் நிறம் மாறிக்கொள்ளும் மக்கள் மத்தியில் சில மாதங்களுக்கு முன் தன் மனதில் தோன்றிய எண்ணத்தை எழுத்தாக வடித்தது போல இன்றும் அப்படியே நிலைத்து நிலை மாறா தன்மையோடு இருக்கும் குமரனை பார்க்க அவளுக்கு அதிசயமாக தான் இருந்தது.
அவள் மனதின் எண்ணத்தை பார்வையில் காட்டிட குமரன் அமைதியான சிரிப்புடன் அவளை பார்த்து கொண்டிருந்தான். அந்த சிரிப்பு அவளில் ஒரு பரவச நிலையை கொடுக்க இன்னதென்று இனம் புரியவில்லை என்றாலும் கூட அந்த பரவச உணர்வு காற்றில் பறக்கும் ஒரு உணர்வை கொடுத்தது....
நெஞ்சில் நிறைவாள்.......