நெஞ்சில் நிறைந்தவள் - 37

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
அத்தியாயம் 37

குமரனின் ஒற்றை பதிவு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற கூற்றை தேவயானிக்கு நினைவுபடுத்தியது. அவன் மனதில் இருந்து வாய் வழி உதிர்ந்த வார்த்தைகள் அணைத்தும் கை வழி சித்திரமாக முன்னமே வந்துருக்கிறது என்றால் நிச்சயமாய் இவன் எண்ணம் தான் எழுத்தாகுகிறது என்பதை தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.
பின் குமரனை வீட்டில் இறக்கி விட்ட அடுத்த கணம் தனது அலைபேசியை எடுத்து தண்டாயுதபாணிக்கு அழைப்பை செலுத்தினாள், மறுமுனையில் அழைப்பு எடுக்கப்பட்டவுடன்,

" மாமா ஒரு நிமிஷம் கூட யோசிக்காத தட்டி விட்டுரு " என்று சற்று அதிகாரமாகவே வந்தது தேவயானியின் குரல்.

" தேவயானி... "

" மாமா நீ எதுவுமே சொல்ல வேண்டாம் சொன்னதை செஞ்சு விடு "

அடுத்த நொடி தண்டாயுதபாணியை சுற்றி அமர்ந்து இருந்த ஐந்தாறு தடியர்கள் எழுந்து வந்தார்கள் வந்தவர்கள் நொடி பொழுதும் கூட தாமதிக்காமல் பாண்டியை மடக்கி குண்டுக்கட்டாக தூக்கிச் செல்வதைப் போல் அங்கிருந்து தனி அறை ஒன்றிற்கு தூக்கிச் சென்றார்கள்.
அந்த அறையில் உள்ளே விட்டு பாண்டியை எவ்வளவு தூரம் சிறப்பாக கவனிக்க முடியுமோ அவ்வளவு தூரம் ரத்தம் வராமல் கவனித்தார்கள். பாண்டிக்கு அங்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை ஆனால் அடி மட்டும் நன்றாக உரைத்தது முதலில் காரணம் புரியவில்லை என்றாலும் கூட அடுத்த சில நொடிகளில் பாண்டிக்கு காரணம் விளங்க ஆரம்பித்தது குமரனை பற்றி தான் பேசியதற்காகத்தான் இல்லை குமரனை பற்றி வன்மத்தை கக்கியதற்காகத்தான் இந்த பரிசு தனக்கு கிடைக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட போது கைகூப்பி மண்டியிட்டு இனிமேல் இதுபோல் செய்ய மாட்டேன் என்று மன்றாடினான் அவனது மன்றாடல் இன்னும் சில நிமிடங்கள் நீடிக்க வேண்டும் என்று விரும்பிய தண்டம் அமைதி காக்க
அந்த தடியர்கள் சற்றும் தங்களது தாக்குதலை குறைக்காமல் வெளுத்து எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு கட்டத்திற்கு மேல் வலி தாங்க முடியாது குப்புற விழுந்து தண்டாயுதபாணியின் காலை பிடித்து மன்றாடினான்.

" அய்யா விட்டுருங்க ய்யா சத்தியமா என் வாழ்க்கையில இப்போ இருந்த மாதிரி இனிவரும் ஒருநாளும் இப்படி இருக்க மாட்டேன் இந்த ஒருமுறை பெரிய மனசு பண்ணுங்கய்யா "

" டேய் பாண்டி உன்னோட வஞ்சகமான வன்முறை எல்லாம் இத்தோட கடைசியா இருக்கணும் இனிமேல் உன் கூட இருக்கிற யாருக்காவது இந்த மாதிரி துரோகத்தை நீ செய்ய நினைச்ச " நாக்கை கடித்து கையை நீட்டி எச்சரிக்கை குறி காட்டி விட்டு அதற்கு மேல் தண்டாயுதபாணி எதுவும் பேசவில்லை அறையை விட்டு விறு விறுவென வெளியே நடக்க அவரின் பின்னாலேயே அந்த தடியர்களும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தார்கள் ஆனால் வாங்கிய அடியில் எழுந்திருக்க முடியாமல் அப்படியே குப்புற கிடந்தான் பாண்டி.

மருமகள் சொல்லியதை செய்து விட்ட மாமனுக்கு அவளின் செயல் பலத்த யோசனையை கொடுத்தது. பாண்டி சொன்ன அதே வார்த்தை மீண்டும் அவரது காதில் ஒலித்தது.

" வேலைக்காரன் தான அவன், அவனுக்காக இவ ஏன் இவ்ளோ செய்யுறா இதோட முடிவு என்னவா இருக்கும்? " அவரிடம் கேள்விகள் மலை போல குவிந்து கொண்டிருக்க, அவளோ அவனின் பதிவில் தனது பதிலை பதித்து கொண்டிருந்தாள்.

" வெற்றியே துரோகத்தை கருவருத்து விடும் என்பது எந்த அளவுக்கு நிதர்சனம் என்பதை நான் அறியவில்லை ஆன்மனே.
இங்கு நிஜமான வெற்றி எது?
துரோகத்தின் வடு மறைய நாம் அடையும் வெற்றியா? அல்லது அந்த துரோகியை அடியோடு அகம் மாற்றம் செய்வதா?
காலமும் சூழலும் கை கோர்க்கும் வரை காத்திருந்து துரோக எண்ணத்தை செய்தவன் மனதிலிருந்து அதை வேரோடு பிடுங்கி எறிவது தானே துரோகத்தை கருவறுப்பு செய்வதாகும்? ஆகவே தீமைக்கும் நன்மை செய்ய நினைக்கும் உங்கள் குணத்தை பாராட்டி துரோகத்தை கருவறுக்கும் எண்ணத்தில் தெளிவு கொள்ள வலியுறுத்துகிறேன் ஆன்மனே.... " என்று அவளது பதிலை பதிப்பித்த நேரம் அவளது இல்லமும் வந்து விட்டது.

அங்கு தேவயானியின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தார் கிருஷ்ணன்.

" தேவயானி எல்லாம் நல்லபடியா முடிந்ததா டா "

" ரொம்ப சிறப்பாக முடிந்தது கிருஷ்ணா "
" அப்போ நம்மளோட அடுத்த கட்ட நடவடிக்கை என்னடா? "

" நம்மளோட அடுத்த கட்ட நடவடிக்கை என்னங்கறது இப்போ நாம ஒன்னும் சொல்ல முடியாது கிருஷ்ணா. ஏன்னா நாம அனுப்பிருக்குற வரைவுகளை ஷாங்காய் துறைமுக நிர்வாக இயக்குநர் பாத்துட்டு ஒப்புதல் தரணும். இப்போ சமீப காலமா இந்திய சீனா உறவு சுமுகமா இருக்குறதாலையும், இந்தியாவில இருக்க கூடிய பல நிறுவனங்கள்ல முதல் நிறுவனமா முதல் முறையா சீனாவுல தொழில் செய்ய அனுமதி கேட்டதால நம்ம அரசாங்கம் இந்த விடயத்துல நமக்கு துணையா முழு வீச்சுல இருக்கு அதனால ஒப்புதல் கிடைக்குறதுல நமக்கு அதிக வாய்ப்பு இருக்கு அந்த ஒப்புதல் வந்த பின்னாடி தான் நம்மளோட செயல்பாடுகள் இருக்கும். "

" அப்போ இந்த ஒப்பந்தம் நமக்குன்னு உறுதி செய்யலாம் இல்லையா டா? "

" நிச்சயமா கிருஷ். எதிர்காலத்தில இப்போ நாம தயார் பண்ணிக்கிட்டு இருக்கிற அளவைவிட கூடுதலா நம்மளோட உற்பத்தியை செய்யணும், அதற்கான ஆட்கள் எண்ணிக்கைய அதிகப்படுத்தனும், நமக்கு இன்னும் அதிக அளவுல ஆட்கள் தேவைப்படுறாங்க, அந்த தேவையை பூர்த்தி விளம்பரத்தை தயார் செஞ்சுகிட்டு இருக்கோம் கிருஷ் " என்று தேவயானி சொல்லி முடிக்க,

" இருக்கோமா? யாருடா அது உன்னோட சேர்ந்த அந்த கோம்? " கிருஷ்ணன் கேள்வியாய் நிறுத்த,

" கிருஷ்ணா நீ என்ன கேக்குற எனக்கு புரியல, ஆமா உன் பேச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கு? " நிஜமாய் அவளுக்கு புரியவில்லை என்பதோடு கிருஷ்ணன் கோம் என்று அழுத்தம் கொடுத்து சொல்லியதும் அவளுக்கு புதிதாக தோன்றியது.

" உன்னோட பேச்சு தான் டா எனக்கு ஒரு மாதிரியா தெரியுது. வழக்கமா தயார் பண்ணிக்கிட்டு இருக்கேன் இல்லன்னா தயார் பண்ணனும் ப்பான்னு வந்து என்கிட்ட சொல்லி அடுத்த கட்ட நடவடிக்கையை செய்வ, ஆனா இன்னைக்கு தயார் பண்ணிக்கிட்டு இருக்கோம்னு சொல்ற அந்த கோம்ல யார் வாரா உன்னோட சேர்ந்து? "

" குமரன் தான் ப்பா, அவரு தான இந்த வேலையோட காரியகர்த்தாவே என்கூட சேர்ந்து எல்லாமே செஞ்சுட்டு இருக்காரே " மகிழ்ச்சியாய் அவள் குரல் வர,
" யாரு அந்த வேலைக்காரனா? " என்று கிருஷ்ணன் அதிரடியாய் தாக்குதல் செய்ய தேவயானி ஸ்தம்பித்து போனாள்,

" ப்பா " என்று சொல்லும் போதே வார்த்தை தடைப்பட்டு அவள் கண்கள் கலங்கியது குமரனை வேலைக்காரன் என்று சொன்னது அவள் மனதை கூறு போட்டது, வழிய துடித்த விழி நீரை அணைகட்டி தடுத்து சற்றே திணறிய குரலில் பேசினாள்,

" ப்பா என்ன ப்பா வேலைக்காரன் அது இதுன்னு பேசுறீங்க? "

" வேலைக்காரன வேலைக்காரன்னு சொல்லாம வேற எப்படி சொல்றது டா? அவன் நம்ம வேலைக்காரன் தானே? வேலைக்காரனா தானே இப்பவும் நம்ம கிட்ட சம்பளம் வாங்கிக்கிட்டு இருக்கான் அப்புறம் அவனை வேலைக்காரன்னு சொல்லாம வேற என்ன சொல்ல முடியும்? " என்று அழுத்தமாக சொன்ன கிருஷ்ணனின் பேச்சில் குமரனை மாறி மாறி வேலைக்காரன் என்று அழுத்தமாக சொன்னது தேவயானியை மனதளவில் பயங்கரமாக ரணப்படுத்தியது.

எதையும் திறம்பட பேசும் தேவயானி இப்போது பேச்சற்று குமுறிய மனதோடு தன் தந்தையை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்....



சில நேரங்களில் நாம் சொல்லும் வார்த்தைகளை தான் பிறரும் சொல்லி இருப்பார்கள் ஆனால் அதை சொல்லும் விதம் மாறும் போது அது மனதை ரணமாக்கி விடுகிறது அறியாமல் நடக்கும் போது அதை ஏற்றுக்கூட கொள்ளலாம், அறிந்தே செய்வதை என்னவென்று சொல்வது?

நெஞ்சில் நிறைவாள்....
 

Author: Vishakini
Article Title: நெஞ்சில் நிறைந்தவள் - 37
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.