• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நெஞ்சில் நிறைந்தவள் - 39

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 39

கிருஷ்ணனின் வார்த்தைகள் தேவயானியை வெகுவாக காயப்படுத்தி இருந்தாலும் குமரனின் வரிகள் அவளை நன்றாகவே தேற்றி இருந்தது. மெல்ல அவனது பக்கங்களை தடவி பார்த்து கொண்டே இருந்தவள் பயண களைப்பின் காரணமாக அப்படியே கண் அயர்ந்து தூங்கியும் போனாள்.
மறுநாள் காலை விடிந்ததும் வழக்கம் போல அலுவலகம் கிளம்பிவிட அவர்களது வழக்கமான வழமை சற்று மாறியிருந்தது.

" குமரன் நெஜமாவே உங்க வரிகள் எல்லாம் ரொம்ப அற்புதமா இருக்கு ஒவ்வொரு வரிகளையும் அனுபவிச்சு அழகா செதுக்கி இருக்கீங்க இவ்வளவு அழகா எழுதுற நீங்க ஏன் ஒரு புத்தகமோ கவிதை தொகுப்போ வெளியிடக்கூடாது? உங்களுக்கு அந்த மாதிரி ஒரு எண்ணம் இருந்தா என்கிட்ட சொல்லுங்க குமரா அது ஆகக்கூடிய மொத்த செலவையும் நானே ஏத்துக்குறேன். இப்படி ஒரு எழுத்துக்கள் புத்தகமாக மாறுனா அது பலருக்கு உதவியா இருக்கும் அத அப்படி மாத்தக் கூடிய பாக்கியத்தை எனக்கு கொடுங்க குமரா " என்று மூச்சு கூட விடாமல் அவள் பேசிகொண்டிருக்க,

" தேவா ரொம்ப மிகப் படுத்தி சொல்றீங்கன்னு நினைக்கிறேன். நான் ஏதோ எனக்கு தோணுறத அப்படியே கிரிக்கீட்டு போய்கிட்டே இருக்கேன் அவ்ளோ தான், இதெல்லாம் புத்தகமா போட்டா புத்தகத்துக்கு உண்டான மரியாதை என்ன ஆகுறது " லேசாய் சிரித்து சொல்ல,

அவள் அவனை முறைப்பாய் பார்த்தால்,

" குமரா உங்க தன்னடக்கத்தை காட்ட உங்க எழுத்தோட தரத்தை குறைக்காதீங்க அது எனக்கு புடிக்கல " நேரடியாக வந்தது அவளது பதில் கூடவே கோபமும்.
அதை கண்ட குமரன் சற்றே ஸ்தம்பித்து போனான்.

" இல்ல தேவா நா அப்படி.... "

" நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம் குமரா. உங்களுக்கு அந்த எழுத்தோட அருமை தெரியல, அதனால தான் இப்படி பேசிட்டு இருக்கீங்க. எல்லாருக்கும் இப்படி எழுத வருமானு எனக்கு தெரியல, இப்படி எழுதுறது ரொம்ப சவாலான விஷயம்னு ஒரு சில எழுத்தாளர்கள் சொல்ல நா கேட்டுருக்குறேன் அப்படிப்பட்ட விஷயத்தை தான் நீங்க செஞ்சுருக்கீங்க.
அதாவது நம்மளோட சாதாரண மனநிலையில நாம எப்படி யோசிக்கிறோமோ அந்த விஷயத்தை நீங்க எழுத்துல கொண்டு வந்து இருக்கீங்க, அதோட நிக்காம அந்த எண்ணத்திற்கு தீர்வையும் உங்களுடைய எழுத்துக்கள் மூலமாக கொடுக்க முயற்சி பண்ணி இருக்கீங்க எத்தனை பேரு இப்படி ஒரு பிரச்சனைக்கு தன்னோட எழுத்து மூலம் தீர்வு கொடுக்கணும்னு நினைப்பாங்கன்னு எனக்கு தெரியல அந்த தீர்வு கொடுக்கிற விஷயத்தை அவ்வளவு அழகா சொல்லி இருக்கீங்க அதுபோக சில கவிதைகள் எல்லாம் அப்பப்பா அவ்ளோ அற்புதம்,

இத கொஞ்சம் கேளுங்களேன் நீங்க சொன்னது தான் நா என்னோட பாணியில வாசிக்குறேன் என்று சொல்லிவிட்டு வாசிக்க ஆரம்பித்தாள்,

#பயமில்லை

தோல்வி என்பது வாழ்க்கை கற்றுக் கொடுக்கும் பாடம்...
தோல்வியை தழுவும் போது நான் பெரிதாக / புதியதாக கற்றுக் கொள்கிறேன்.
இவனை கொண்டு படிப்பதாலேயே எனக்கு வெற்றிகளும் சாத்தியமாகிறது.
இவன் இல்லாமல் எனது எந்த வெற்றியும் சாத்தியமில்லை.

தோற்றுப்போவது ஒரு முடிவல்ல. அது நாம் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான ஒரு நல்வாய்ப்பு.
தோல்வி தந்த பாடங்களை சரியாக படித்து முடித்தவனுக்கு, வெற்றி எளிதான ஒன்றாக மாறிவிடும்.

தோல்வியே உன்னை எப்போதும் நான் ஆராதிக்கிறேன்.
அதனால்.......
உன்னை கண்டு எனக்கு எப்போதும் இல்லை தோல்வி எனும் பயம்...

- ஆன்மன்
என்று ஏற்ற இறக்கங்களோடு அவள் படித்து முடிக்க அப்படியே உறைந்து நின்றான்.
அவள் கூறியது நிஜம் தானோ எத்தனை அழகாய் தெரிகிறது நம் வார்த்தைகள், ஆனால் நாம் படிக்கும் போது இத்தனை அர்த்தம் நிறைந்ததாய் தெரியவில்லையே, ஒருவேளை எழுத தெரிந்த நமக்கு படிக்க தெரியவில்லையோ? அவள் எத்தனை அழகாய் படிக்கிறாள்.
நாம் எழுதிய வசனம் கூட கவிதையாகிறதே இவள் குரலில். அவள் வாசிக்க வாசிக்க இவன் மனதில் தோன்றிய உணர்வுகள் இது.

" என்ன குமரா அப்படியே உறைஞ்சு போய் பாக்குறீங்க? உங்க எழுத்தோட வீரியம் இப்போ புரியுதா? " அவள் சிரித்து கொண்டே கேட்க அவன் தலையசைத்தான்.

" உங்க எழுத்துல இருக்க கூடிய நிஜத்தை தான் குமரா நா சொல்லுறேன் எதையும் மிகைப்படுத்தல, எழுதுறத்தோட நிறுத்தாம மறுபடியும் கொஞ்சம் நாள் கழிச்சு உங்க எழுத்தை வாசிச்சு பாருங்க குமரா அதோட அழகியல் தெரியும் " அவள் சிரித்து கொண்டே சொல்ல அவனும் மெல்ல சிரித்து கொண்டான்.

" இன்னும் ரெண்டு மூணு இருக்கு கேளுங்களேன்,

#காதல்

சொல்லி புரிவதில்லை,
காதல்....
அது,
இரு உயிர்களின்
சுவாசத்தில் கலந்து,
ஓர் இதயத் துடிப்பாய்
வாழ்வது....!

" சுவாசத்தில் கலந்து இதய துடிப்பாய், அட அட என்னமா சொல்லிருக்கீங்க குமரா " அவள் ரசித்து சிரித்து சொல்லும் விதம் அவனை என்னவோ செய்தது. அந்த கவிதை எழுதிய அன்றைய தினம் அவன் எழுதி முடித்து விட்டு அவனுக்கு அவனே பாராட்டுகள் சொல்லிய அதே வரிகளை அவளும் அச்சு பிசராமல் சொல்கிறாள் என்று நினைக்கும் போதே அவனுக்குள்ளும் பேரானந்தம். அவன் நினைத்து கொண்டிருக்கும் போதே அடுத்த கவிதையின் பக்கம் போயிருந்தாள்

#பேசிவிடு

பேச நேரம் கிடைக்கவில்லையே என்று ஏங்காதே
கிடைக்கும் நேரமெல்லாம்
பேசி விடு
எதை பேசுவது
எல்லாத்தையும் பேசி விடு
ஏனென்றால் அதற்காகத் தானே ஏங்கி கொண்டிருக்கிறாய்

இதெல்லாம் எப்படிப்பட்ட யோசனை குமரா. அன்பு நிறைந்த மனங்கள் ஒரு சிறு இடைவெளி விட்டு சந்திக்கிற போதும், பேசுற போதும் வார்த்தைகள் இல்லாம தவிக்கிறது ரொம்ப இயல்பு. கிடைக்குற கொஞ்சம் நஞ்சம் நேரமும் என்ன பேசுறதுன்னு தெரியலயேன்னு சொல்லியே நேரம் கடந்து போயிரும் பேச நினைச்ச விஷயம் பேச முடியாம போயிரும், அப்படி போய்ட்டா மனசுல அந்த ஏக்கம் நீங்காம இருந்து தவிக்க வைக்கும், அதுவே இது தான் பேசணும்னு இல்லாம ஏதோ ஒன்ன பேசிட்டே இருந்தா நாம பேச நினைச்சது நினைக்காதது எல்லாத்தையும் பேசிறலாம்ல " என்று சொல்லும் போது அவளது முகத்தில் அத்தனை இன்பம் அதை பார்த்து கொண்டே மெல்லிய குரலில் கேட்டான்,

" ஏன் தேவா இது நா எழுதினதா " என்று,

அவள் அவனை வித்தியாசமாய் பார்க்க,

" இல்ல இவ்வளவு அழகா நானா எழுதிருக்கேன் " தயங்கி கொண்டே அவன் கேட்க,

" அட பாவி நீங்க எழுதினத கூடவா மறந்துடீங்க? "

" தெரியலயே தேவா அப்போ அப்போ மனசுல தோணுறத கிறுக்கி விட்டுட்டு போறேனா அதனால என்ன எழுதினேன்னுல்லாம் தெரியாது " அப்பாவியாய் அவன் சொல்ல,

" எப்படி முதல் நாள் நம்ம சந்திப்பு பத்தி எழுதின மாதிரியா? " அவள் நக்கலாய் கேட்க,

அதையும் பாத்தாச்சா என்பதை போல் அவளை பார்த்து சங்கடமாய் சிரிக்க, அவனை கேலி செய்யும் விதமாக அவனை போலவே சிரித்தாள் அவளும்.

" இல்ல அது வ... வந்து " அவன் மெல்ல குரலை இழுத்து சமாளிக்க முயற்சித்த போது இளைஞனான குமரன் குழந்தை போல மாறியிருந்தான். அந்த குட்டி குழந்தை குமரனை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டே,

" முப்பொழுதும் உன் நினைவுகள் என்னுள் சுழலும்
மாயத்தினை
கண்டுகொண்டேன்..
இரவையும் பகலையும்
ஒருசேர பெற்ற
உனதிருவிழிகளில்... " என்று அவள் கவி படிக்க,
திணறி கொண்டிருந்த குமரன் சட்டென அவளை பார்த்தான். அந்த பார்வையில் தெரிந்த மகிழ்ச்சி குரலிலும் வந்தது,

" தேவா இப்போ என்ன சொன்ன " உரிமையில் ஒருமை வந்திருக்கும் போல,

மீண்டும் அவள் அவனை பார்த்து கொண்டே தன் காந்த குரலில் கவி படிக்க, றெக்கை இல்லாமல் வானில் பறந்தான் குமரன்.

ஆனால் அந்த மகிழ்ச்சியை இரண்டு நிமிடங்கள் கூட நிலைக்க விடாமல் அவர்கள் இருந்த அறையினுள் அனுமதி ஏதும் இன்றி உள்ளே புகுந்த காவல் துறையினர் குமரனின் பின் கழுத்தை பிடித்து அழுத்தி முன்னால் இருந்த மேஜையில் பலமாக அழுத்தி கொண்டே அவனது கைகளுக்கு விலங்கு மாட்டினர்.....



நெஞ்சில் நிறைவாள்.....
 
Top Bottom