அத்தியாயம் 4
குமரனும் தேவயானியும் தாங்கள் மனதில் எண்ணிய விடயத்தை மகனுக்கு சொல்லிவிட்டு அங்கிருந்து நகர தனித்து விட பட்ட காதலர்கள் இருவரும் அந்த காப்பி கடையில் நீடித்த மௌனத்தில் அமர்ந்து இருந்தார்கள்.
அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் என்ன பேசுவது என்ற யோசனையில் அமர்ந்து இருக்க அந்த கடையில் வேலை செய்யும் பையன் வந்து அவர்கள் மௌனத்தை கலைத்தான்..
" அதிவீர அண்ணா அம்மா அப்பா வந்துட்டு போய்ட்டாங்க நீங்க இன்னும் கிளம்பலையா? "
" இதோ டா தம்பி கிளம்ப போறேன், நந்தி போலாமா? "
" ம்ம்ம் போலாம் அதி " யோசனை கலையாத மௌனம் இன்னும் முகத்தில் தெரிந்தது...
" தம்பி இந்தா டா " அந்த பையன் கையில் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை திணிக்க,
" அண்ணா அம்மா இப்போ தான் கொடுத்துட்டு போனாங்க " என்றான் அந்த பையன்
" கொடுத்துட்டு தான் போனாங்களா? சரி டா பரவா இல்ல வச்சிக்கோ. நந்தி போலாம் " இருவரும் கடையை விட்டு வெளியே வந்தார்கள்,
வெளியில் கார் இல்லை அப்போது தான் நினைவு வந்தது காரை எடுக்காமல் ஓடி வந்த நிகழ்வு,
" நந்தி நீ அம்மா அப்பா கூட இருக்கன்னு அப்பா சொல்லவும் அப்படியே ஓடி வந்துட்டேன் காரை எடுக்காம "
நந்தினி சிரித்தாள்,
" இப்படி ஓடி ஓடி காதலிக்குற நம்மள பாத்து உண்மையா காதலிக்குறோமான்னு அத்தை கேட்டுட்டாங்களே அதி " அமைதியாய் சொல்ல அதிவீரன் சிரித்து விட்டான்.
" அவங்களோட பார்வை புதுமையானது நந்தி, நாம அந்த அளவுக்கு இன்னும் வளரல போல "
" ஏன் அதி அத்தை நிறைய படம் பாப்பாங்களோ? "
" ம்ம்ம் பாப்பாங்களே நந்தி,
அழகான தமிழ் படம், அதிரடியான தெலுங்கு படம், அப்போ அப்போ மலையாள படம், அறவே புரியாத ஹிந்தி படம்ன்னு அவங்க ரசனைக்கு அளவே கிடையாதே " என்று சொல்லி கொண்டிருக்கும் போது அவளின் சிரிப்பு சத்தம் கேட்டது, அதன் பின்பு தான் அவள் கேட்ட அர்த்தம் அதிவீரனுக்கு புரிந்து அவளை பொய்யாய் முறைக்க அவள் கண் இமைத்து அழகாய் சிரித்தாள்,
" அத்தை பேசுனது எல்லாம் திரைப்பட வசனம் மாதிரி தான இருந்துச்சு அதி. " சிரிப்பை நிறுத்தி கேட்டாள்.
அப்போதும் கூட மாறாத புன்னகையோடு
" காதல் ஒரு அட்ஸயபாத்திரம்ன்னு சொன்னதா நந்தி? " இப்படி ஒரு கேள்வியை கேட்டதும் நந்தினிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை,
" ஹா ஹா.... பாத்தியா நந்தி திரைப்பட வசனத்தை மறுக்க முடியல " அவள் விழி அசைக்க மறந்து பார்க்க,
" வா நந்தி நம்ம வீட்டுக்கு போவோம் அம்மா அப்பா நமக்காக காத்திட்டு இருப்பாங்க " என்று இயல்புக்கு அதிவீரன் மாறிவிட்டாலும் ஏனோ நந்தினியால் மாற முடியவில்லை அவளது எண்ணம் மீண்டும் ஒருமுறை தேவயானியின் பேச்சை அசைப்போட ஆரம்பித்தது....
" காதலிக்கும் போதே இவ தான் என் வாழ்கைன்னு ஒரு பொண்ணும் பையனும் உறுதியா நம்பி ஒருத்தருக்காக இன்னோருத்தர் தங்கள அர்ப்பணிப்பு செஞ்சுக்கணும்.... எத்தனை உண்மை நிறைந்த வார்த்தை இது. இது தான காதல் இத புரிஞ்சிக்காம நாம ரொம்ப சாதாரணமா இருந்துட்டோமே.... " என்று நினைக்கும் போதே நந்தினிக்கு உள்ளுக்குள் சுருக்கென்று இருந்தது.
அவளது முக குறிப்பு அவளின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிப்பு செய்ய,
" அவளது கையை ஆதரவாக பற்றி,
" நந்தி இதுல நாம யோசிச்சு வருத்தபட ஒன்னும் இல்ல டி நமக்கு தெரியாத விஷயத்தை அம்மா நமக்கு சொல்லி கொடுத்து இருக்காங்க அவ்ளோ தான். தெரியாதன்னு சொல்லுறத விட நமக்கு தெரிஞ்சும் புரிஞ்சிக்க முடியாத விஷயத்தை விளக்கமா சொல்லிருக்காங்க,
அத நாம புரிஞ்சிக்கிட்டோம் " என்று சொல்லிய போதே வீட்டு வாசலை அடைந்து இருந்தது அவர்கள் சென்ற கார்.
இருவரும் காரில் இருந்து இறங்கி வீட்டிற்க்குள் வர, அவர்களை திவ்வியமாக வரவேற்றது தேவயானி வைத்து கொண்டிருந்த நெய் சாம்பார் வாசனை.
யோசனையில் வந்த நந்தினியின் யோசனையை கலைத்து சாம்பார் வாசத்தை சுவாசிக்க செய்து பசியை தூண்டி விடும் வேலையை சிறப்பாக செய்தது அந்த சாம்பார்.
கார் வந்த ஓசையை வைத்து கணித்து விட்டது போல வீட்டிற்குள் நுழைந்த மகனை அழைத்த தேவயானி நந்தினியை சமையலறைக்கு வரும்படி சொல்ல,
குரல்வந்த அடுத்த நொடி சமையலறை நோக்கி விரைந்த நந்தினி சற்றே அதிர்ச்சிக்கு உள்ளாகினாள்,
அங்கு சமையலறையில் இருந்த திண்டின் மீது ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு கேரட்டை கடித்துத் தின்று கொண்டிருந்தார் தேவயானி, அவருக்கு பக்கத்தில் அரக்க பறக்க சமையல் வேலையை செய்து கொண்டிருந்தார் குமரன்.
" என்ன நந்தினி அப்படி பாக்குற அத்தையை விட உன் மாமா தான் சமையல்ல கொஞ்சம் கில்லின்னு வச்சுக்கோயேன்,
அது மட்டும் இல்லாம இன்னைக்கு மருமக முதல்முறை நம்ம வீட்டுக்கு வர போற அதனால நானே சமைச்சுடுறேன்னு சொல்லி உன் மாமனாரே கோதாவுல இறங்கிட்டாரு " என்று சொல்லிய தேவயானியையும், சமையல் வேலையை மும்மரமாக பார்த்துக் கொண்டே இன்முக சிரிப்போடு வரவேற்ற குமரனையும் பார்த்து அதிசயத்து நின்றாள்.
நெஞ்சில் நிறைவாள்........

Author: Vishakini
Article Title: நெஞ்சில் நிறைந்தவள் - 4
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.