அத்தியாயம் 43
தேவயானியின் நிறுவனத்திலிருந்து குமரனை நிறுத்திவிட்டதால் அவன் மீண்டும் தனது சான்றிதழ்களை எடுத்து கொண்டு வேலை தேடி கிளம்பினான்.
வீட்டை தாண்டி பேருந்து நிலையம் நோக்கி நடக்கும் நேரத்தில் தேவயானிக்கு அழைப்பை சொடுக்கினான்.
அவளோ நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தாள், அழைப்பு மணி சத்தம் கேட்டு விழித்தவள்,
" குமரா " என்றால் கொட்டாவி விட்டுக் கொண்டே,
" என்ன தேவா இன்னுமா தூங்குற? "
" ஏன் குமரா நேரம் என்ன ஆகுது? "
" 9மணி ஆகிட்டே "
" ஆகட்டுமே குமரா இப்போ எழுந்து என்ன செய்ய போறேன்? "
" அது சரி "
" ம்ம்ம் ஆமா அய்யா என்ன செய்யுறீங்க? "
" அய்யா காலையிலேயே வேலை தேடி கிளம்பியாச்சு "
" வேலை தேடியா? "
" என்ன தேவா வேலை தேடியான்னு கேட்குற? அதான் நமக்கு தான் இனிமேல் நம்ம அலுவலகத்தில வேலை இல்லையே "
" அப்படின்னு யார் சொன்னாங்க? "
" இன்னும் யார் சொல்லணும் தேவா? "
" யாரும் சொல்ல வேண்டாம் குமரா அத நாம தான் முடிவு பண்ணனும்? "
" அது எப்படி முடியும் தேவா நம்மள தான் முடிச்சு விட்டு அனுப்பிட்டாங்களே "
" நம்மள அவ்வளவு சாதாரணமா முடிச்சு விட முடியாது குமரா, நீ எப்படி உன்னோட நெஞ்சில் நிறைந்தவளை தனி அடையாளத்தோட சாதனையாளரா பாக்க நினைச்சு எல்லாம் செஞ்சியோ அது நடந்தே தீரும், அதுவும் நீ கூடவே இருந்து. "
" எனக்கு புரியல தேவா "
" உனக்கு எல்லாமே புரியும் தேவா அதுவும் ரொம்ப சீக்கிரமா, என் கணிப்பு சரியா இருந்தா இன்னைக்கே ஒரு பூகம்பம் வெடிக்கும் " என்று அவள் சிரித்து கொண்டே சொல்ல
" ஏன் தேவா நம்மள போன்னு சொன்ன பின்னாடி அங்க போய் நிக்கவா? "
" போன்னு சொல்லிட்டா நம்ம அடையாளத்தை விட்டுட்டு போக முடியாது குமரா. இதுவரைக்கும் அந்த நிறுவனம் இருந்த இடம் வேற இனிமேல் இருக்க போற இடமே வேற, அதை சாதிச்சு காட்டுனது என்னோட குமரன். என் குமரன் உழைப்பை வீணாக்கவோ, அதுல அடுத்தவங்க பேர் வரவோ நா சம்மதிக்க மாட்டேன் "
" என்ன தேவா என்ன என்னமோ சொல்லுற? "
" காத்திருங்க காதலா எல்லாம் காலம் கூடி வரும் நேரம் தெரியும், இப்போ நீங்க உங்க காதலிய கூட்டிட்டு எங்கையாவது வெளிய போங்க " அவள் வெட்கம் சிந்தி சொல்ல,
" போலாம் தேவா ஆனா பணம் கம்மியா தான் இருக்கு "
" ஒரு காதலி கிட்ட இப்படி சொல்லலாமா குமரா அது உனக்கு கௌரவ குறைச்சல் ஆகிடாதா? "
" உன்கிட்ட எனக்கு என்ன தேவா கௌரவம். உன்கிட்ட உண்மையா நா இருக்க முடியலைன்னா யார் கிட்ட உண்மையா இருக்க முடியும்? " அர்த்தம் நிறைந்த கேள்வியை அழகாய் அவன் கேட்க நெகிழ்ந்து போனாள் தேவயானி.
திக்கற்ற மகிழ்ச்சியில் அவள் பேச்சிழந்து இருக்க,
" தேவா கிளம்பி இரு நம்ம வண்டியை எடுத்துட்டு வரேன் " என்று சொல்லிவிட்டு அழைப்பை அவன் துண்டித்த நேரம் கிருஷ்ணனும் தண்டமும் பேசிக் கொண்டிருந்தனர்,
" டேய் தண்டம் "
" மச்சான் கோப படாத நிதானமா யோசிச்சு பாரு உனக்கே என்ன செய்யணும்ன்னு புரியும். "
" இன்னும் என்ன டா புரிய வெளிய அனுப்புன நானே மறுபடியும் வான்னு எந்த மூஞ்சிய வச்சிட்டு கூப்பிட சொல்லுற? "
" உன் மவளை தான மச்சான் போக சொல்லிருக்க, மறுபடியும் வான்னு சொன்னா வந்துட்டு போக போறா "
" டேய் முட்டாள், உன் மருமகளை பத்தி தெரிஞ்சுமா டா இப்படி பேசுற? அவளோட பிடிவாதம் உனக்கு தெரியாதா? இப்போ அவ கிட்ட போய் பேசுனா அவ என்ன பேசுவா எப்படி பேசுவான்னு தெரியாதே டா "
" அய்யோ மச்சான் பேசுனா கூட பேசிட்டு போறா ஊர்காரியா பேசுறா நம்ம பிள்ளை தான பேசிட்டு போறா. அவன் அவன் காரியத்தை சாதிக்க என்ன என்னமோ பண்ணுறான் நாம நம்ம பிள்ளை கிட்ட பேச என்ன செய்து? "
" டேய் என்ன டா? "
" மச்சான் யோசிக்காத நீ உருவாக்கி வச்சுருக்குறது சாதாரண நிறுவனம் இல்ல மிக பெரிய சாம்ராஜ்யம் பிள்ளை கிட்ட பேச யோசிச்சு இத விட்டுராத " என்று தண்டம் போராடிக் கொண்டிருந்தான்.
அவனது இடைவிடாத போராட்டம் ஓரளவு வெற்றி பெறவும் செய்திருந்தது, ஆதலால் அரைமனதாக தேவயானியிடம் பேச சம்மதித்து இருந்தார் கிருஷ்ணன்.
" சரி டா அவளை அலுவலகத்துக்கு வர சொல்லு "
" இப்போ எங்க இருக்கா வீட்ல தான? "
" ம்ம் ஆமா டா வீட்ல தான் "
" சரி " என்று சொல்லிவிட்டு அழைப்பை சொடுக்க அவள் ஏற்கவில்லை,
மீண்டும் ஒருமுறை, இப்போதும் அழைப்பு ஏற்கப்படவில்லை.
மறுபடியும் ஒருமுறை, அப்போதும் ஏற்கப்படவில்லை.
" என்ன டா எடுக்கலையா? "
" ம்ம்ம் ஆமா மச்சான் " என்று சொல்லிக்கொண்டே மீண்டும் இன்னொரு முறை முயற்சி செய்தான்.
" அகம் பிடிச்ச கழுதை, திமிரு கொஞ்சம் நஞ்சம் கிடையாது " என்று கிருஷ்ணன் சொன்ன நேரம் அழைப்பை ஏற்று அதை கேட்டு கொண்டிருந்தாள் தேவயானி.
" விதை ஒன்னு போட்டா சுரை ஒன்னா மச்சான் முளைக்கும். உன் மக உனக்கு இருக்குற குணம் தான அவகிட்டவும் இருக்கும் " என்று தண்டம் சொன்ன போது,
" ம்ம்ம் சரியா சொன்ன மாமா " என்று இணைப்பில் இருந்து கொண்டே அவள் சொல்ல அப்போது தான் அழைப்பு ஏற்கப்பட்ட விஷயம் அவர்கள் இருவருக்கும் தெரிந்தது.
நெஞ்சில் நிறைவாள்.....

Author: Vishakini
Article Title: நெஞ்சில் நிறைந்தவள் - 43
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.