அத்தியாயம் 45
குமரனும் தேவயானியும் அலுவலகம் வந்து சேர்ந்தார்கள்.
அவர்கள் வருகையை எதிர்நோக்கி கிருஷ்ணனும் தண்டபாணியும் காத்திருந்தார்கள் ஆனாலும் அந்த இடைவெளியில் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு தான் இருந்தார்கள்,
" இருந்தாலும் நீ அவ கிட்ட அவ்வளவு தூரம் பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லடா "
" மச்சான் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லாத உனக்கும் சரி எனக்கும் சரி நம்மள தவிர்த்து இங்க இருக்க மத்தவங்களுக்கும் சரி அந்த வெளிநாட்டு திட்டத்தை பற்றி ஏதாவது தெரியுமா? "
" ம்ஹும் "
" ம்ம்ம் அதெல்லாம் பத்தி அவளுக்கும் அவனுக்கும் தான் தெரியும். அவளோட முயற்சியை கொஞ்சம் யோசிச்சு பாரு மச்சான், இங்க இருந்து மத்திய அரசாங்கம் வரைக்கும் போயி அவ திட்டத்தை சொல்லி அந்த திட்டத்துக்கு அதிகாரப்பூர்வமா அனுமதியும் வாங்கி இருக்கா இது சாதாரண விஷயமில்லை மச்சான். அப்படிப்பட்ட திட்டத்தை மட்டும் நாம செயல்படுத்தவில்லைன்னு வச்சுக்கோயேன் சர்வதேச அளவில நம்ம தேசத்துக்கு அது மிகப்பெரிய மானக்கேடா போயிடும்.
கொஞ்சம் யோசிச்சு பாரு மச்சான் நம்ம தேசத்தை இப்படி ஒரு அவமானத்துல நம்ம நிறுவனம் கொண்டு போய் நிறுத்தினா அதுக்கு அப்புறம் நம்ம நிறுவனத்தோட நிலைமை என்ன ஆகும்? "
கிருஷ்ணன் யோசிக்க,
" செங்கல் செங்கல்லா பிரிச்சு எடுத்துருவாங்க அதனால சும்மா வறட்டு கௌரவத்தை வச்சு குதிச்சு ஆகப்போறது ஒன்னும் இல்ல மச்சான். தேவயானி வந்தா உன்னோட கௌரவத்தை விட்டுட்டு அவகிட்ட மறுபடியும் பொறுப்ப ஒப்படைங்க.
யார் யார் எதை செய்யணுமோ அதை செஞ்சா தான் மச்சான் சரியா வரும் " என்று தண்டம் சொன்னதில் இருந்த நிதர்சனம் கிருஷ்ணனுக்கு புரிந்தது. அதோடு நில்லாமல் மீண்டும் ஒரு கேள்வியை கேட்டு கிருஷ்ணனின் யோசனையை மேலும் அதிகப்படுத்தினான்.
" இங்க நம்ம அலுவலகத்தில நடந்த ஒரு விஷயத்தை கவனிச்சியா இல்லையான்னு எனக்கு தெரியல மச்சான் ஆனாலும் சொல்லுறேன்,
நம்ம நிறுவனத்தில் இருக்கக்கூடிய ஊழியர்கள் பல பேர் தேவயானி இல்லாத நிறுவனத்தில நமக்கு என்ன வேலை இருக்குன்னு கேட்டு பேசிக்கிட்டதை நானே என் காதுபட கேட்டேன். இப்படி பேசுற விஷயத்தை அந்த மாதுரி பொண்ணு தேவயானி கிட்ட சொன்னா அந்த விஷயத்தை கூட அலைபேசியில் பேசி சரி செஞ்சது தேவயானி தான். " என்று சொன்ன போது கிருஷ்ணன் அதிர்ந்து போனான்.
" என்ன டா சொல்லுற? "
" உண்மை தான் மச்சான் அவ மட்டும் நெனச்சானு வச்சுக்கோயேன் நம்மளோட இந்த தொழிலை ஒரு நிமிஷத்துல இல்லாம ஆக்குற சக்தி அவகிட்ட இருக்கு ஆனா அவ அத செய்யல செய்யமாட்டா ஏன்னா அதுதான் அவளோட தனி குணம் " என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே,
தேவயானி அறை கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள் அவளின் பின்னாலேயே உள் நுழைந்தான் குமரன் அவர்கள் இருவரையும் பார்த்து இன்முகத்தோடு வரவேற்றான் தண்டாயுதபாணி.
" வாடா வாடா என்னடா பிள்ளை நீ இப்படி எங்களை தவிக்க விட்டுட்டியே, மச்சான் பிள்ளை வந்துட்டா நீ இங்குட்டு வா அவளோட இடத்தை அவகிட்டயே கொடு " என்று அவசரம் காட்ட,
" மாமா ஏன் இவ்ளோ அவசரம், நீ நினைக்குற மாதிரி அந்த இடத்தில உட்கார்ந்துக்க நா வரல " என்று தேவயானி சொல்ல விக்கித்து போனார்கள் இருவரும்.
" என்ன டா சொல்லுற "
" உண்மைய தான் மாமா சொல்லுறேன். "
" என்ன உண்மை டா எனக்கு ஒன்னும் புரியலயே "
" தேவா நீ என்ன சொல்லுற? அவங்க நினைச்ச மாதிரி வரலைன்னு சொன்னா நாம வேற எதுக்காக இங்க வந்தோம் " குமரனும் புரியாது கேட்க,
" நன்றி கடன் செய்ய குமரா " என்று தேவயானி சொல்ல அங்கிருந்த மற்ற மூவரும் புரியாது பார்த்தார்கள்
" தேவா தெளிவா சொல்லிறேன் "
" ஆமா குமரா நமக்குள்ள இருக்குற அன்பை பத்தின தெளிவு நமக்கே இல்லாத போது அந்த அன்பு தான் காதல்ன்னு புரிய வச்சது இவங்க ரெண்டு பேர் தான அதுக்காக இவங்களுக்கு நாம நன்றி கடன் பட்டுருக்கோம்ல குமரா. இல்ல ப்பா. இந்த கோம்ல யார் இருக்காங்கன்னு அன்னைக்கி விட இன்னைக்கு ரொம்ப தெளிவா இருக்கேன் ப்பா " என்று தேவயானி சொன்ன போது நர நரவென பற்களை கடித்தார் கிருஷ்ணன்.
" இதுக்கு நான் ஒருபோதும் ஒத்துக்க மாட்டேன் தேவயானி எக்காரணத்தை கொண்டும் இவனை நீ என்னால அதை சொல்ல கூட முடியல "
" நீ சொல்ல வேண்டாம் பா சொல்ல வேண்டியது நான் சொல்லிட்டேன் முடிவும் எடுத்துட்டேன் "
" தேவயானி.... " சற்றே கோபத்தோடு குரலை உயர்த்த
" சும்மா கத்தாதே எப்போ என் மனசு கஷ்டப்படும்னு தெரிஞ்சும் கஷ்டப் படுத்துற மாதிரி வேலைக்காரன் வேலைக்காரன்னு என்னோட குமரனை பேசினியோ அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன் இனிமேல் நீ என்ன சொன்னாலும் நான் கேட்க போறது இல்லன்னும், என் குமரனை வேலைக்காரன்னு சொன்னதால இனிமேல் நானும் உன்னோட நிறுவனத்தில் ஒரு வேலைக்காரியா தான் இருக்கணும்னு முடிவு செஞ்சேன். இப்போ அந்த எண்ணத்தோட தான் வந்துருக்கேன் அதுக்கு சம்மதம்னா சொல்லு உன்னோட நிறுவனத்தில் நான் வேலை பார்க்கிறேன் இல்ல முடியாதுன்னு சொன்னா நீ எப்படியோ சமாளிச்சுக்கோ அதை பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லை நான் இங்க இருந்து கிளம்பி போயிட்டே இருக்கேன். " தேவயானி உறுதியான குரலில் சொல்லி விட அங்கிருந்த மூவருக்கும் அது பயங்கர அதிர்ச்சியை கொடுத்தது.
" தேவயானி தப்புடா நீ பேசறது ரொம்ப தப்பு "
" இல்ல மாமா நான் பேசறது ரொம்ப சரி என்னைக்கு கொஞ்சம் கூட பெத்த பிள்ளைகளை பத்தி யோசிக்காம பெத்தவங்க பேச ஆரம்பிக்கிறீங்களோ அப்பவே பெத்தவங்க அந்த தகுதிய இழக்குறீங்க.
தாம் பெத்த பிள்ளைங்க கிட்ட நியாயமா உட்கார்ந்து பேசி அவங்களோட நியாயமான எண்ணங்களை கேட்டு புரிஞ்சுக்க முடியாத பெத்தவங்க எந்த வகையில நல்ல பெத்தவங்களா இருக்க முடியும்?
பணமும், பேரும், புகழும், அந்தஸ்தும் பாசம் என்கிற உண்மையான உணர்வை உங்க கிட்ட இருந்து சுத்தமா அறுத்து எடுத்துருச்சு இல்ல " ஆதங்கமும் கோபமும் ஒருசேர உரத்த குரலில் வந்தது.
" பெத்தவங்களுக்கு புடிச்சத செய்யுற வரைக்கும் பிள்ளைங்க நல்ல பிள்ளைங்க அத மறுத்து ஏதோ ஒன்னு சொல்ல நினைச்சுட்டா கூட போதும் அப்படியே.....
வேண்டாம்,
வேண்டாம்.
இதை இப்போ நான் பேசினாலும் உங்களுக்கு புரியாது பேசி என்னோட வேண்டாம் என் வாயிலிருந்து கூட ஏதாவது வார்த்தைகள் தவறா வந்திடலாம் அதை தவிர்க்க சிறந்த வழி அமைதி தான். " என்று வாயை மூடி கொண்டவள் பெருமூச்சு ஒன்றை விட்டு,
" இப்போதைக்கு என்னோட முடிவு ஒன்னு தான் உங்களோட நிறுவனத்தில் வேலைக்காரியா இருக்க எனக்கு முழு சம்மதம் உங்களுக்கு சம்மதம்னா எனக்கு உங்க நிறுவனத்தோட வேலைக்காரிங்குற அடையாளத்தை கொடுங்க. உங்களுக்கு தேவையான வேலையை முன்னாடி செஞ்சதை விட ரொம்ப சிறப்பா செய்து கொடுக்கிறேன். அதாவது நான் முதலாளி தேவயானியா இருந்து வேலை பார்த்ததைவிட வேலைக்காரி தேவயானி குமரனா இருந்து சிறப்பா வேலை பார்த்து கொடுக்கறேன்னு சொல்றேன் " என்று சொன்ன போது பதில் பேச முடியாமல் கலங்கி நின்றார் கிருஷ்ணன். அவரை எப்படி சமாதானம் செய்யலாம் என்பதை யோசித்து கவலை கொண்டார் தண்டம்.
ஆனால் குமரன் மட்டும் எவ்வித உணர்வில் இருக்கிறான் என்பது அவனே அறியாத ஒன்று.
நெஞ்சில் நிறைவாள்.......

Author: Vishakini
Article Title: நெஞ்சில் நிறைந்தவள் - 45
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.