அத்தியாயம் 46
தேவயானியின் குணம் அறிந்த கிருஷ்ணனும் தண்டமும் சூழல் காரணமாக வேறு வழியின்றி அவள் சொன்னது போல செய்தனர். ஆனால் அதை செய்யும் பொழுது இருவருக்கும் மனம் வலிக்க தான் செய்தது.
அதை மாற்றி அமைக்க குமரனும் நினைக்க தான் செய்தான் ஆனால் அவள் ஒப்புக்கொள்ளவில்லை. என்னவனுக்கு ஏற்பட்ட இழுக்கை சரி செய்ய எதையும் செய்வேன், நீயே வேலைக்காரன் ஆன பின்பு நான் மட்டும் என்ன? என்ற எதிர் கேள்விக்கு குமரனிடமும் பதில் இல்லை, அவளின் ஆழ்மன எண்ணத்திற்கு மதிப்பளித்து அமைதியானான்.
அவர்களது அந்த உணர்ச்சி மிகு பேச்சுகளை அங்கேயே முடித்து விட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தவள் குமரனின் அறையையே தனது அறையாகவும் பகிர்ந்து கொண்டாள் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டது போல.
தேவயானியின் குணம் குமரனின் அம்மாவின் மனதையும் மாற்றி இருந்தது அவருக்கு இருந்த கோபங்களை எல்லாம் காற்றில் கரைந்து போயிருந்தது.
தேவயானி அன்பு மிகுந்த மருமகளாக அவரை கனிவோடு பார்த்துக் கொண்டாள் அந்த கனிவு அந்த வயதான அம்மாவின் மனதில் இருந்த ரணங்களை மெல்ல ஆற்றி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியது.
அவர்களது பொருளாதார நிலையும் இருவர் வருமானத்தால் மெல்ல நிமிர்ந்து மேலேறியது.
அதன்பின் குமரனும் தேவயானியும் வேலையில் மேலும் தீவிரமாக வெற்றியும் அவர்கள் கையில் எளிதாக வந்து சேர்ந்தது ஒரு முறை கிடைத்த வெற்றியை இறுக்கமாக இருவரும் பிடித்துக் கொள்ள அந்த வெற்றி அவர்களை மேலும் மேலும் உயரத்திற்கு கொண்டு போய் அமர வைத்தது நிறுவனத்தின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து உலகளவில் ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக வளர்ந்து நின்றது அந்த நிறுவனம். உலகின் பல துறைமுகங்கள் இப்போது அவர்கள் நிறுவன வாடிக்கையாளர்களாக மாறியிருந்தார்கள்.
இத்தனை பெரிய வெற்றியை பெற்று தந்த பின்பும் கூட மீண்டும் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொள்ள தேவயானி சம்மதிக்கவில்லை. காலம் மெல்ல கடந்து வருடங்கள் ஓடியது அவளின் நிலை அப்படியே தொடர்ந்தது. என்று தனது அன்னை தந்தையின் கடந்த கால காதல் வாழ்க்கையை சொல்லி முடித்தான் அதிவீரன்.
அதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த கந்தசாமி,
" எல்லாரையும் போல தானே இவங்களும் அவங்களோட காதலுக்காக அவங்களோட அந்தஸ்தை தியாகம் பண்ணி இருக்காங்க, அத பெரிய சாதனையா சொல்ல போற அப்படித்தானே " அவரின் புரிதலோடு கேட்க,
அதை சிரித்துக்கொண்டு மெல்லிய புன்னகையோடு மறுத்தான் அதிவீரன்
" எங்க அம்மா அவங்களோட காதலுக்காக ஒரு போதும் சமரசம் செய்தது கிடையாது. அவங்க எடுத்த முடிவுல உறுதியாகவும் தீர்க்கமாகவும் இருந்தாங்க அந்த தீர்க்கத்துக்கு பேரு தியாகம் இல்லை எந்த சூழல்லையும் தன் நெஞ்சில் நிறைந்த அந்த ஒற்றை உயிரை விட்டுக் கொடுக்கக் கூடாதுங்குற காதல்.
இங்க நிறைய பேரு உங்கள மாதிரி தான் நினைச்சுகிட்டு இருக்காங்க காதல்னா தியாகம் பண்ணனும்ன்னும் நான் அதை விட்டுட்டு வந்தேன் இதை விட்டுட்டு வந்தேன்னு சொல்லுறதுல பெருமைனும் நினைச்சுகிட்டு,
அப்படி நீங்களும் நினைச்சதோட விளைவு தான் உங்களோட இந்த எண்ணம்.
ஆனா நிஜம் அது கிடையாது.
நீங்க கூட இப்போ நினைக்கலாம் உனக்காக நான் அதை விட்டுட்டு வந்து இருக்கேன் இத விட்டுட்டு வந்திருக்கேன் சொல்லுறது எல்லாம் பெருமை தானேன்னு அது பேசுற வாதத்துக்கு வேணும்னா பேசிக்கலாம், அப்படி பேசுறத விட உன்னை நான் ஒருபோதும், யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்னு உறுதியா இருக்கேன்னு சொல்லுறதுல இருக்குற பெருமை வேற எதுலயுமே இல்ல,
அந்த பெருமை அந்த கொண்டாட்டம் அது தான் உண்மையான காதல்.
அந்த காரணத்துக்காக தான் என் அப்பா அம்மாவ நான் காதலோட முகவரின்னு சொன்னேன் வழக்கமான வளமையை உடைத்து தனித்துவமான அடையாளத்தோட,
உனக்காக நான் அதை விட்டேன் இதை விட்டேன்னு பேசாம எதுக்காகவும் உன்னை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்னு உறுதியாக இன்னைக்கு வரைக்கும் இருக்கிறாங்க பாருங்க அதனால தான் அவங்க காதலோட அடையாளம்.
அந்த அடையாளத்தோட உருவம் தான் இந்த அதிவீரன்.
முழுமையான காதலுக்கு பொறந்தவன். அதனால காதலை ஒரு ஆயுதமா வச்சி ஒருபோதும் தப்பு செய்ய மாட்டேன். நீங்க சொன்ன அந்த வயசு வேகம் மோகம் எல்லாம் காதல்ல அடங்கி அடக்கமாகி போய்டும் " என்று அதிவீரன் சொல்ல கந்தசாமிக்கு என்ன பதில் உரைப்பது என்று தெரியாமல் அமைதியாக அவனே பார்த்துக் கொண்டிருந்தார்.
" இதுக்கு மேலயும் எங்க காதல் உங்களுக்கு வயசு வேகமா தெரிஞ்சா நீங்க என்ன முடிவு எடுத்தாலும் சரி " என்று சொல்லிவிட்டு நடையை கட்டினான் அதிவீரன்.
சில மாதங்களுக்கு பின்.....
டெல்லி,
குடியரசு தலைவர் மாளிகை.
ஆண்டின் 'சிறந்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சாதனையாளர் விருது' வழங்கும் விழா
தங்கள் உழைப்பாலும் சிந்தனையாலும் சர்வதேச வர்த்தக உலகையே வியக்க வைத்து, இந்திய ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து தேசத்திற்கு பெருமதிப்பு பெற்று கொடுத்த குமரன் தேவயானியை அழைக்க
அந்த அரங்கமே கை தட்டலில் நிறைந்தது அந்த கூட்டத்தின் நடுவில் குமரனும் தேவயானியும் நடந்து சென்றார்கள்,
அன்று முக்கண்ணன் முன்னால் கோர்த்த கைகளை அப்படியே கோர்த்து இன்று முதல் குடிமகன் முன்னால்.
இதை பார்வையாளர் வரிசையில் அமர்ந்து அதிவீரன் நந்தினி தம்பதியராக பார்த்து கொண்டிருந்தார்கள்....
விருது வாங்கிய மகிழ்வோடு இருவரும் நிறைவாய் காட்சி கொடுத்தார்கள்.
இன்றைய காலத்தில் காதல்,
வயசுவேகம் என்ற இச்சையில் இக்கட்டாக மாட்டி தவிக்கிறது.
காரணம் காதல் என்பது என்னவென்று அறியாது போனதே...
காதல் அறிவோம்,
காலம் வெல்வோம்.....
சுபம்.....

Author: Vishakini
Article Title: நெஞ்சில் நிறைந்தவள் - 46 ( இறுதி அத்தியாயம் )
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.