அத்தியாயம் 5
ஐம்பது வயதிலும் அழகாய் காதலை வெளிப்படுத்தி வாழும் குமரன் தேவயானியை பார்த்து அதிசயித்து நின்ற நந்தினியை பார்த்து,
" என்ன நந்தினி ஏதோ அதிசயமா பாக்குற மாதிரி பாத்துட்டு நிக்குற? " என்று தேவயானி கேட்க,
" அதிசயமா தான் அத்தை இருக்கு, நா இப்படி எல்லாம் பாத்தது இல்லையா அதான் கொஞ்சம் மலைச்சு போயிட்டேன் "
" ஏன் நந்தினி அப்படி சொல்லுற? "
" எங்க வீட்ல அம்மாவை அப்பா எப்பவுமே ஒரு கண்ட்ரோல்ல தான் வச்சிருப்பாரு, அப்பாவை பாத்தாலே அம்மா நடுங்குவாங்க, ஒரு வார்த்தை எதிர்த்து பேச முடியாது, அவ்ளோ ஏன் ஒரு கருத்து கூட சொல்ல முடியாது " என்று சொல்லும் நந்தினியை பார்த்து,
" ஒரு நிமிஷம் நந்தினி, குமரா கொஞ்சம் இறக்கி விடேன்,
ஹப்பா குறுக்கு வலிக்குது டா "
" வயசு ஆகி போச்சு டி பொண்டாட்டி " என்று குமரன் சிரிக்க,
" ம்ம்ம் போடா, சாம்பார பாத்து இறக்கு. வா நந்தினி நாம அப்படியே வெளிய நடந்து போய்ட்டு வருவோம், உட்கார்ந்து உட்கார்ந்தும் உடம்பு வலிக்குது " என்று சொல்லிவிட்டு வெளியே வந்த தேவயானியை அழைத்து,
" தேவா மறக்காம செருப்பு போட்டுட்டு போ " என்று குரல் கொடுத்தார் குமரன்.
" ம்ம்ம் சரி டா "
" ஹப்பா, செம்மையா இருக்கு அத்தை உங்க ரெண்டு பேர் காதலையும் பாக்க, பாருங்களேன் ஒரு செருப்பு போடுறத கூட மறக்காம நினைவுப்படுத்தி சொல்லுறாங்க " என்று சொன்னவளிடம் மீண்டும் தனது தாயை நினைத்து ஒரு ஏக்கம் தெரிந்தது,
" என்ன நந்தினி மறுபடியும் உங்க அம்மா நினைப்பா? "
" ம்ம் ஆமா அத்தை, எங்க அம்மா கிட்ட எங்க அப்பா இப்படி பாசமா பேசி நா பாத்ததே கிடையாது தெரியுமா? "
" அவ்ளோ தான் டா விஷயம் நீ பாத்தது கிடையாது அது தான் உண்மை " என்று சொன்ன தேவயானியை பார்த்தாள் நந்தினி
" என்ன நந்தினி முழிக்குற, என்கிட்ட பேசுற மாதிரி என்னைகாவது உன் அம்மா கிட்ட பேசிருக்கியா? உன் அப்பாவை பத்தி கேட்டுருக்கியா? "
" இல்ல அத்தை, ஆனாலும் பாத்தாலே தெரியும் தான "
" ம்ம்ம் போய் கேட்டு பாரு உண்மை புரியும். எப்பவுமே எந்த விஷயத்தையும் வெளியில இருந்து பாத்து இது இப்படி தான்னு முடிவு பண்ண கூடாது நந்தினி, அந்த விஷயத்தோட நாம ஒன்றி போகணும், அப்படி போனா தான் அதோட தன்மை என்னனு முழுசா புரிஞ்சிக்க முடியும். இன்னைக்கு இருக்குற இளைய சமூகம் நிறைய விஷயங்களை அப்படி தான் பாக்குறீங்க, நீங்க பாக்குற பார்வை தான் உண்மைன்னு நினைக்குறீங்க. எங்கள பாத்ததும், நாங்க பேசுனத கேட்டதும் கண்டிப்பா எங்க மேல உனக்கு ஒரு நம்பிக்கையோ பிடித்தமோ வந்து இருக்காது, ஏன்னா உங்க கிட்ட நா சொன்ன ஆத்மார்த்தமான காதல் ஒரு நாடக தன்மையா உனக்கு தெரிஞ்சு இருக்கலாம். அது உன் தப்பு கிடையாது நீ பார்த்த உலகம் அப்படி. ஆனா நா சொன்ன விஷயங்களை அதி சரியா புரிஞ்சு இருப்பான், ஏன்னா அவன் பாக்குற உலகம் வேற " என்று தான் சினிமா வசனம் பேசியதாக சொன்னதை கூட சரியாக கணித்து சொல்லி விட்ட தேவயானியை பார்க்க பார்க்க அவளுக்கு இன்னும் வியப்பு கூடியது. அதையும் புரிந்து கொண்டதை போல,
" ரொம்ப வியப்பா பாக்க வேண்டாம் டா, சாதாரணமா பாருங்க. காதல் சாதாரணமா கொண்டாட வேண்டிய விஷயம், அத தூக்கி வேற ஒரு உயரத்தில தூக்கி வச்சி அத அந்நியம் ஆக்காதீங்க, மூச்சு காத்த போல கூடவே வச்சி சுவாசிங்க அப்படி சுவாசிச்சா தான் காதலோட முழு அர்த்தமே விளங்கும். உங்க அப்பா அம்மா கூட அந்த ரகமா தான் இருப்பாங்க. இந்த கோபம், அதிகாரம் எல்லாம் வெளி பார்வைக்கு தான் கணவன் மனைவிக்குள்ள தனியா ஒரு உலகம் இருக்கும். அவ்ளோ ஏன் உனக்கும் அதிக்கும் கூட தனியா ஒரு உலகம் இருக்குமே, அந்த உலகத்துல நீங்க மட்டும் எப்படி எப்படி உணர்வுகளோட இருந்து இருப்பீங்கன்னு யோசிச்சு பாரு " என்று சொன்ன கணமே அந்த நினைவுகள் நந்தினியின் மனதில் எழுந்து இதழில் ஒரு புன்னகையை மலர செய்தது.
" ம்ம்ம் பாத்தியா உன் அம்மாக்காக இப்போ ரெண்டு நிமிசத்துக்கு முன்னாடி தான் கவலை பட்ட அதுவே ரெண்டு நிமிஷம் கழிச்சு உன் காதலை பத்தி சொல்லவும் அத மறந்து சிரிக்க ஆரம்பிச்சுட்ட பாத்தியா? " என்று தேவயானி சொன்ன போது தான் அவளுக்கு அந்த உண்மை புரிந்தது.
" இது தான் நந்தினி காதலோட தன்மை. நாம எந்த மனநிலைல இருந்தாலும் கூட அத மாத்தி கொண்டாட்ட மனநிலைக்கு நம்மள கொண்டு போய் நிறுத்திரும். இதுல உங்க அம்மா அப்பா மட்டும் விதி விலக்காவா இருப்பாங்க? " என்று அவளின் கேள்வியை அவளுக்கே திருப்பி அவளிடமே பதிலை வாங்கிவிட்டாள்,
இல்லையென்று.
நந்தினி மனதில் அப்படி ஒரு பரவசம். தேவயானியின் பார்வையில் காதலுக்கு புது அகராதியே கிடைத்து விட்டது போல ஒரு உணர்வு அவளிடத்தில் மேல் எழும்பி நின்றது. அப்போது சரியாய் அதி அழைக்க அலைபேசியை காதிற்கு கொடுத்த நந்தினி,
" ஹான் அதி நானும் அத்தையும் வீட்டுக்கு பின்னாடி தோட்டத்தில தான் இருக்கோம். "
" சரி சாப்பாடு தயார் ஆகிட்டுன்னு அம்மா கிட்ட சொல்லு "
" அத்தை சாப்பாடு தயார் ஆகிட்டாம் "
அவளிடம் அலைபேசியை வாங்கி,
" அதி அப்படியே நீயும் அப்பாவும் சாப்பாட எடுத்துட்டு மரத்தடிக்கு வாங்க டா இங்க வச்சே சாப்பிடுவோம், இயற்கை சூழல் அருமையா இருக்கு "
" அப்படியா சரி ம்மா இதோ வரோம் "
அழகாய் அடர்ந்து விரிந்து இருந்த அந்த வேப்பமர நிழலில் அமர்ந்து அவர்கள் நான்கு பேரும் மனநிறைவோடு வயிற்றையும் நிறைத்தார்கள்.......
நெஞ்சில் நிறைவாள்.....

Author: Vishakini
Article Title: நெஞ்சில் நிறைந்தவள் - 5
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.