நெஞ்சில் நிறைந்தவள் - 6

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
அத்தியாயம் 6


மதிய உணவை அந்த மரத்தடி நிழலில் இயற்க்கையின் அழகோடு இன்பமாய் உண்டு முடித்த நால்வரும் சில நிமிட அரட்டையோடு நேரத்தை கடத்தி மாலை நேரம் வர அங்கிருந்து எழுந்து வீட்டிற்கு வந்து சுவையான தேநீரும் பருகி முடித்தார்கள்,

" அதி,
நேரம் ஆகிட்டு டா நீ நந்தினிய கூட்டிட்டு போய் அவளோட விடுதில விட்டுட்டு வந்துடுறியா? "

" இப்போவே கூட்டிட்டு போறேன் ம்மா "

" இப்போ விடுதிக்கு போ நந்தினி, இன்னொரு நாள் நாம உன் வீட்டுக்கு போவோம் நீங்க ரெண்டு பேரும் சொன்ன மாதிரி முறையா பொண்ணு கேட்க " என்று தேவயானி சொல்ல,

அவளை பார்த்து சிரித்து கொண்டே தலை அசைத்தாள் நந்தினி, ஆனால் அவளது மனதில், அவர்கள் தன் வீட்டிற்கு வரும் முன்பே அதிவீரனை அழைத்து சென்று தாய் தந்தையிடம் தனது காதலை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் குடி கொண்டது.

தன் காதலை துணிச்சலாய் கூறி அதற்க்காக தன்னை அர்ப்பணிப்பு செய்வது தான் ஆக சிறந்த செயல் என்பது தான் அவளின் தற்போதைய புரிதல். அதை மனதில் எண்ணிக்கொண்டு இருக்கும் போதே அதிவீரன் அழைக்க,

" நந்தி போலாமா? "

" ம்ம் போலாம் அதி " அவளும் கிளம்பி விட,

" டேய் அதி இருட்டு ஆகிட்டு பொம்பள பிள்ளைய கூட வச்சிட்டு அங்குட்டு இங்குட்டு நிக்க கூடாது பத்திரமா இறக்கி விட்டுட்டு பத்திரமா வரணும் காலம் கெட்டு கிடக்குது " என்று எச்சரிக்கை கூறி அனுப்ப அதை கேட்டு கொண்ட இருவரும் இப்போது இருசக்கர வாகனத்தில் கிளம்பினார்கள்,

மாலை காற்றின் குளுமையை அனுபவித்து, அசுர வேகம் தவிர்த்து அழகியல் ரசிக்கும் சாதாரண வேகத்தில் வாகனத்தை செலுத்த,
மனம் நிறைந்த நந்தினி அதிவீரனை இறுக்கமாக அணைத்து அவனது தோள்பட்டையில் நாடியை வைத்து அவன் காதோடு இவள் தலையை அணைத்து கொண்டாள்.

நந்தினியின் செய்கை அவர்கள் இருவரது மனதிலும் இன்ப நிறைவை கொடுத்து இருக்க அந்த நிறைவோடு சொன்னாள்,

" அம்மா அப்பா எல்லாருமே இப்படி இருக்கனும் அதி, எவ்ளோ இனிமையா இருக்காங்க இல்ல " அவளது மனம் குதூகளிக்க அவனும் அதே நிலையில் தான் இருந்தான்.

" அவங்கள பாக்க பாக்க, அவங்க கிட்ட பேச பேச அப்படி ஒரு சந்தோசம் டா அதி. ப்பா என்ன மாதிரி மனுசங்க ரெண்டு பேரும். நானும் அத்தையும் வெளிய போறோம்ன்னு மாமா கிட்ட அத்தை சொன்னாங்க டா உடனே அத்தையை கூப்டு செருப்பு போட்டுட்டு போன்னு மாமா சொன்னார் பாரு, அடடா நிஜமாவே சிலிர்த்து போய்ட்டேன் அதி " என்று அவளது வாய் வீட்டில் நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் வரிசை கட்டி கொண்டு வர அவள் முடிக்கும் முன்பே அவளது தங்கும் விடுதியும் வந்து சேர்ந்தது. வண்டியிலிருந்து கீழே இறங்கியவள்,

" அதி அதி நாளைக்கு உன் வேலைக்கு விடுப்பு சொல்லு டா "

" எதுக்கு நந்தி? "

" நாளைக்கு மறுபடியும் வீட்டுக்கு வருவோம் அத்த மாமா காதல் கதையை கேட்போம் டா, ரொம்ப சுவாரஷ்யமா இருக்கும் " கண்கள் மிளிர சொல்ல,

" ம்ம்ம் செம்ம சுவாரஷ்யமா இருக்கும் நானே உனக்கு சொல்லுறேன், ஆனா நாளைக்கு இல்ல, இடையில ஒரு நாள் சொல்லுறேன் "

" டேய் அதி நீயா டா, ஹையோ எதாவது ஒரு சின்ன வேலை கொடுத்தா கூட அத நீ மறந்துருவயே டா "

" ஆனா இத மறக்க மாட்டேன், இந்த சிறப்பான காதல் கதையை சிறப்பான ஒரு நாள்ல உன்கிட்ட சொல்லுறேன், இப்போ கிளம்பட்டுமா, பெண்கள் விடுதி முன்னாடி ரொம்ப நேரம் நிக்க கூடாதுல " என்று சொல்லிவிட்டு கிளம்ப அவளும் கை அசைத்து வழியனுப்பி வைத்தாள்.

இன்றைய நாள் நிகழ்வுகளை எத்தனை அசைப்போட்டாலும் அது இனிமையை அள்ளி அள்ளி கொடுத்து கொண்டிருக்க அதை தோழியோடு பகிர்ந்து கொண்டு தன் இன்பம் விரும்பும் அவளையும் இன்பத்தின் ஒரு அங்கமாக சேர்க்கும் எண்ணத்தில் அறைக்கு வந்து பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது,

ஷாலினி இன்னும் அறைக்கு வரவில்லை,

" என்ன ஆச்சு இவளுக்கு இன்னும் ஆளை காணோம்? இந்நேரம் அறைக்கு வந்துருவாளே " என்ற யோசனையோடு தனது துண்டை எடுத்து கொண்டு குளியல் அறையில் நுழைந்தாள், அவள் குளித்து முடித்து விட்டு வெளியே வந்த போதும் ஷாலினி இன்னும் வந்திருக்கவில்லை தனது அலைபேசியை எடுத்து அவளுக்கு அழைப்பை விடுக்க அது ஒலியை கக்கி நின்று போனது.

இரவு உணவு நேரமும் வந்துவிட அவள் இன்னும் வராமல் போக நந்தினியின் பயம் அதிகமானது, இந்த இடைவெளியில் அவளுக்கு நான்கு முறை அழைப்பு விடுத்தும் அவளிடம் பதில் வராமல் போகவே திக் திக் மனதோடு அதிவீரனுக்கு அழைப்பை சொடுக்கினாள்....

அதே நேரம் தலைத் தெறிக்க ஓடி கொண்டிருந்தாள் ஷாலினி.....


நெஞ்சில் நிறைவாள்......
 

Author: Vishakini
Article Title: நெஞ்சில் நிறைந்தவள் - 6
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.