நெஞ்சில் நிறைந்தவள் - 8

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
அத்தியாயம் 8


அழுத விழியோடு ஷாலினி நடந்த நிகழ்வுகளை சொல்லி முடிக்கும் தருணத்தில் அதில் விருப்பம் காட்டாது தனது அறைக்குள் நுழைந்த தேவயானியை கண்டதும்,
அங்கு நிலவிய சூழல் அப்படியே மாறி போனது. ஷாலினியை கவனத்தில் கொண்டிருந்த நந்தினியும் கூட தேவயானியின் செயல் கண்டு கவனத்தை மாற்றினாள்.
ஏனென்றால் அங்கிருந்த அனைவரது எதிர்பார்ப்புமே இத்தகைய சூழலில் அவளது நிலைப்பாடு எத்தகையது என்பதே, அப்படி இருக்கும் போது அவர் எதுவும் பேசாமல் அறையினுள் சென்றது அவளை நோக்கியே அனைவரையும் இழுத்து சென்றது. முதலாவதாக குமரன்,

" என்ன தேவா எல்லாரும் வெளிய பேசிட்டு இருக்கும் போது நீ இப்படி உள்ள வந்துட்டா எப்படி? "

" இதுல நாம பேச என்ன இருக்கு குமரா, அவங்களுக்கு இப்போ தேவை தனிமை தான், அவங்க வயசு பசங்க பேசிகிட்டா அவங்க மனநிலைக்கு தகுந்த மாதிரி பேசிப்பாங்க அது அவங்களுக்கு மன அமைதிய கொடுக்கும், அத கொடுக்குறத விட்டுட்டு நாம இப்போ அறிவுரை சொல்லுற மாதிரி பேசுனா கண்டிப்பா அது அவங்களுக்கு எரிச்சல தான் கொடுக்கும் " என்று தேவயானி சொல்ல அறையினுள் வந்த நந்தினி,

" இத உங்க கிட்ட இருந்து இப்படி ஒரு அணுகுமுறையை நா எதிர்பார்க்கல அத்தை, உங்க அனுபவம், தன்மையான குணம் மூலமா எனக்கு முன்னாடியே ஷாலினிய நீங்க நிதானதுக்கு கொண்டு வந்துருவீங்கன்னு நினைச்சேன், ஆனா... "

" ஆனா.... முதல்ல உள்ள வா நந்தினி " புன்னகை மலர அழைக்க,

" யாருக்கு எப்போ என்ன தேவைன்னு சரியா புரிஞ்சு அத கொடுக்குறீங்க அத்தை நிஜமாவே உங்கள பாக்க பாக்க எனக்கு வியப்பா தான் இருக்கு " முகம் மலர்ந்து கூறினாள்.

" இதுல பெரிய விஷயம் எல்லாம் ஒன்னும் இல்ல நந்தினி ஒருவேளை இப்படி ஒரு சூழல்ல நாம இருந்தா எப்படி இருப்போம்ன்னு ஒருமுறை நம்மள அந்த சூழல்ல பொருத்தி பாக்கணும், அப்படி பாக்கும் போது நமக்கு அப்போ என்ன தேவைன்னு தோணுதோ அதையே அடுத்தவங்களுக்கும் கொடுத்துட்டு வந்துரனும் " மிக சாதாரணமாக சொல்ல,
நந்தினி இந்த முறையும் அதிசயித்து தான் போனாள்,

" ஆனாலும் பொது இடத்தில அவங்க அப்படி நடந்துகிட்டது தப்பு தான் அத்த, ஏன்னா அது ஒரு பூங்கா,
அங்க நிறைய பேர் வர வாய்ப்பு இருக்கு, குறிப்பா குழந்தைங்க, பெரியவங்க.
அவங்களை தவிர்த்து குடும்பங்களும் அதோட சேர்த்து இவங்க கிட்ட வம்பு பண்ணுன காலி பசங்களும் வருவாங்க. அப்படி பட்ட ஒரு இடத்தில இவங்க கொஞ்சி கிட்டது தப்பு தான், ஆனா அத சொல்லி காட்ட கூடிய சூழல்ல அவங்க ரெண்டு பேரும் இப்போ இல்லை.
இப்போ அவங்களுக்கு தேவை ஆறுதல்ன்னும், அத நீங்களும் செய்வீங்கன்னும் உங்க அனுபவம், பக்குவமான குணம் அவங்க மன பாரத்தை நீக்கி வைக்கும்ன்னு நினைச்சேன் அத்தை " என்று நந்தினி தனது எண்ணத்தை சொல்ல,

" அவங்க அப்படி செஞ்சது தப்புன்னு நான் சொல்லவே இல்லையே நந்தினி " என்று புது குண்டை தூக்கி தேவயானி போட, அவர் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாமல் பார்த்தாள் நந்தினி.

" காதல்ல இத செய்யணும் இத செய்ய கூடாதுங்குற வரையறைகள் எல்லாம் கிடையாது நந்தினி. உனக்காக எதையும் செய்வேன்னு சொல்லுறது தான் காதல், அதுக்காக உன்ன என்ன வேணும்னாலும் செய்வேன்னு செய்யுறது காதல் இல்ல. " தேவயானி சொல்ல வரும் விஷயம் தெளிவாக புரியாது விழித்த நந்தினியின் எண்ணம் புரிந்து,

" உனக்கு புரியுற மாதிரியே சொல்லுறேன் கேளு நந்தினி,
அவங்க காதலின் மையல்ல சின்ன சின்ன குறும்பு, சேட்டை செய்யுறது எல்லாம் தப்பு கிடையாது, அத செய்யலாம். அத எங்க வேணும்னாலும் செய்யலாமான்னு கேட்டா?
எங்கையும் செய்யலாம்ன்னு தான் நா சொல்வேன், ஆனா அத செய்யும் போது நிறைவான காதல் இருக்கனும்.
அந்த காதல் எது தெரியுமா?,
தன்னை மறந்தும் தன்னவளையோ தன்னவனையோ அடுத்தவங்க பார்வையில தரம் தாழ்த்தி காட்டிற கூடாதுங்குற எண்ணத்தில தான் இருக்கு " என்று தேவயானி சொல்ல அதை கேட்டுக்கொண்ட ஷாலினியும் அஜித்தும் அறையின் உள்ளே வந்தார்கள், அவர்கள் இருவரும் செய்த தவறை புரிந்து.

" ஐயோ அத்தை உங்களை எப்படி எந்த நிலையில உயர்த்தி வைக்கன்னே தெரியல, அப்பா..... ஒவ்வொரு விசயத்துலயும் உங்களோட பார்வை என்னை சிலிர்க்க வைக்குது, இப்போ கூட பாருங்களேன்,எல்லை இல்லா காதலுக்கு எல்லைக்கோடு போடாம காதலின் தரத்தை மறைமுகமாக அதே நேரம் நெற்றி பொட்டுல அடிச்ச மாதிரி எவ்ளோ அழகாக விளக்கியிருக்கீங்க " என்று முதல் முறையாக தேவயானி கூறிய விடயத்தின் முழு அர்த்தம் புரிந்து பேசினாள் நந்தினி.


நெஞ்சில் நிறைவாள்.........
 

Author: Vishakini
Article Title: நெஞ்சில் நிறைந்தவள் - 8
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Love
Reactions: Magizh kutty

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
எல்லாத்திலும் ரொம்ப வித்யாசமான தான் இருக்காங்க தேவா❤️❤️❤️❤️