நெஞ்சில் நிறைந்தவள் - 9

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
அத்தியாயம் 9




இறுக்கமா இருந்து இருக்க வேண்டிய இரவு பொழுதை தனது மாறுபட்ட பார்வையின் மூலம் மொத்தமாக மாற்றி இருந்தார் தேவயானி.

எந்த ஒரு விஷயத்திலும்,
நாம் தெளிவு இல்லாத போதும், அந்த விஷயத்திற்கு காரணம் நாம் இல்லை என்று நினைக்கும் போது தான் அந்த விஷயத்தின் பாதிப்பு நம் மனதை உறுத்தி நம் உறக்கத்தை தொலைக்க செய்கிறது, அதுவே அந்த விஷயம் பற்றிய பார்வையில் நாம் கோட்டை விட்ட இடங்களையும், நாம் தவறு செய்த இடங்களையும் கண்டறிந்து அந்த தவறில் நமது பங்கு இது தான் இதை தவிர்த்து இருந்தால் இத்தகைய நிகழ்வு நடந்து இருக்காது என்ற தெளிவு நமக்கு கிடைத்து விட்டாலே மனம் அமைதி கொண்டு விடும், மனம் அமைதி கொண்டால் நிச்சயமாய் நிம்மதி கிடைத்து விடும். என்று தேவயானி சொன்ன விஷயம் கொஞ்சம் நஞ்சம் இருந்த மன குழப்பங்களை நீங்க செய்து நிரந்தர அமைதியை கொடுத்தது ஷாலினிக்கும் அஜித்துக்கும்.

சம்பந்தப்பட்டவர்கள் சாந்தமாகிய பின்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்பந்தமானவர்களும் சாந்தமாகி விடுவார்கள் தானே அந்த வகையில் நந்தினியும், அதிவீரனும் கூட சாந்தமாகி இருந்தார்கள். கூடவே அவர்கள் இருவருக்கும் இதற்கு காரணமான தேவயானி தனது அத்தை அம்மா என்பதால் பெருமிதமும் கூடியிருந்தது.

அந்த பெருமிதத்தில் அவர்கள் இரவு பொழுதை கடந்திருக்க கதிரவனும் தனது பணியை கடமை தவறாது செய்ய ஆரம்பித்து பொழுது விடிந்ததை அறிவிக்க, அவனுக்கு முன்பாகவே எழுந்து அன்றைய நாளை தொடங்கும் விதமாக வீட்டில் சுப்ரபாதத்தை ஒலிக்க விட்டு வீட்டையே புகை மண்டலத்தில் நிறைய செய்திருந்த தேவயானி கையில் தேநீருடன் அறைக்குள் நுழைந்து குமரன் காலை தொட்டு வணங்கி அவரை எழுப்பிவிட்டு வெளியில் வந்ததை கவனித்த ஷாலினி சிரித்தாள்,

" அம்மா நித்தமும் இப்படி அப்பாவோட காலை தொட்டு கும்பிட்டு தான் எழுப்புவீங்களா? "

" ம்ம்ம் ஆமா டா ஏன்? " என்று கேட்ட போது நந்தினி எழுந்து வந்தாள்.

" காலை வணக்கம் அத்த, என்ன டி ஷாலு சீக்கிரம் எழுந்துட்டியா? "

" ம்ம்ம் ஆமா டி அம்மா சுப்பரபாதம் எழுப்பி விட்டுட்டு, " என்று சிரித்து கொண்டே சொன்னவள்,

" நந்தினி உனக்கு விஷயம் தெரியுமா டி? "

" என்ன விஷயம் டி? "

" அம்மா இன்னுமும் காலையில அப்பா காலை தொட்டு எல்லாம் கும்புடுறாங்க டி " என்று அதிசயமாய் சொல்ல,

ஓரளவு குமரன் தேவயானியை பற்றி தெரிந்து வைத்திருந்தால் நந்தினி ஆச்சர்யம் காட்டாமல்,

" நமக்கு தான் டி இதெல்லாம் அதிசயமா தெரியுது, ஆனா அத்தைக்கும் மாமாவுக்கும் இது ரொம்ப சாதாரணமான ஒரு நிகழ்வு தான், ஏன்னா அவங்க காதல் அப்படி. இல்ல அத்த " முகம் மலர்ந்து கூறி விட்டு தேவயானியை பார்க்க,

" நான்தான் முன்னயே சொன்னேனே மா காதல தனித்து வைக்க கூடாதுன்னு காதலை தனித்து வச்சுட்டு நாம பார்க்குற ஒவ்வொரு விஷயமுமே அதிசயம் தான். காதலர்களுக்குள்ள இருக்க கூடிய அன்பு, நாம விடுற மூச்சு காத்த போல இருக்கனும் அத தனிச்சு பார்த்தா அது அதிசயம் தான்.
நம்மோட இணைச்சு பாக்கும் போது அது இயல்பா இருக்கும். எங்களோட காதலை நாங்க அப்படி தான் பாக்குறோம் நீங்க எப்படி பாக்க போறீங்க? " சிரித்து கொண்டே கேள்வி எழுப்ப,

" இப்படி தான் பாக்கனும்ன்னு நொடியில ஒரு வாழ்கை பாடமே நடத்தீட்டேங்களே ம்மா " என்று பெருமிதம் பொங்க ஷாலினி சொல்ல,

ஒற்றை சிரிப்பை பதிலாக கொடுத்து விட்டு சமையல் அறையில் நுழைந்தார். அவர் நுழைந்த அதே நேரம் நந்தினியின் அலைபேசி அலறியது,

அலைபேசியை பார்த்தவளின் முகம் மொத்தமாக மாறி போனது,
" அய்யயோ அப்பா. என்ன இந்நேரம் கூப்டுறாரு " பதட்டமாக அலைபேசியை காதில் வைக்க,

" நந்தினி எங்க இருக்க? "

" அப்பா, அது வந்து நா "

" எங்க இருக்குன்னு கேட்டேன் நந்தினி "

" அப்பா நேற்று இரவு என் தோழி ஷாலினிக்கு ஒரு பிரச்சனை, அதான் " பதறி திணறி பதிலை விழுங்கி கொண்டிருக்க,

" நந்தினி பொய் சொல்லாத, நா உன் விடுதியில தான் இருக்கேன் " என்று அவர் சொன்ன நிமிடம் பயத்தில் பேச்சு அற்று போனாள் நந்தினி.

அவளின் திணறல் பேச்சு தேவயானியின் காதில் அடுப்பை அனைத்து விட்டு வெளியே வந்தார்,

" யாரு நந்தினி ஏன் இப்படி பதறி போய் இருக்க? "

" அவங்க அப்பா ம்மா "

" அதுக்கு ஏன் இவ்ளோ பதட்டம் அப்பா தான "

" அய்யோ அம்மா அவர் ரொம்ப கண்டிப்பான ஆளு இப்போ கூட அதிகம் பேச மாட்டார் டக்குனு கைய நீட்டிருவாரு பொம்பள பிள்ளைன்னு கூட பாக்க மாட்டார், நானே கூட வீட்டுக்கு போனாலும் சத்தம் இல்லாம இருக்குற இடம் தெரியாம இருக்கனும்ன்னு சொல்லுவார், இந்த வேலைக்கு அனுப்புனது கூட அவங்க அம்மா முயற்சினால தான் " ஷாலினி விளக்கம் சொல்ல,

" சரி ம்மா இப்போ நீங்க ஒன்னும் பொய் சொல்ல போறது இல்லையே உண்மைய தான சொல்ல போறீங்க, ஒன்னு அவர இங்க வர சொல்லு இல்ல நாம அங்க போவோம் "

அதற்குள் அவரது இரைச்சல் அலைபேசியில் அதிகமானது,

" நந்தினி எங்க இருக்க யார் பேசிட்டு இருக்குறது? "

" அப்பா நேத்து இரவு ஒரு சின்ன பிரச்சனை ப்பா அதான் நாங்க இங்க வெளிய தங்கிட்டோம், இப்போ விடுதிக்கு கிளம்பிட்டோம் ப்பா உடனே அங்க வந்துருவோம், நேர்ல வந்துடுறேன் ப்பா " பதறிய விழிகளில் வழிந்த கண்ணீரோடு நந்தினி பேச தேவயானிக்கோ என்னவோ போல் ஆனது.

" சீக்கிரம் வா, உன்ன இரவுல கூட்டிட்டு போன அந்த பையனையும் சேர்த்து கூட்டிட்டு வா " பற்களை கடித்து கோபமாக அவர் பேசியது நந்தினி மனதில் ஆழமாக பயத்தை வேரூன்றியது,

" ப்பா.... " வெளி வராத குரலில் அவள் சொல்ல

" எல்லாம் விடுதில சொல்லிட்டாங்க, நீ அவனை கூட்டிட்டே வா. வேலைக்கு அனுப்புனா...... " என்று பேச்சை நிறுத்தியவர்,

" எல்லாம் உன்னைய சொல்லணும் டி " என்று அருகில் இருந்த மனைவியை அதட்டியது துண்டிக்கப்படாத இணைப்பின் வழியாக நந்தினியின் காதில் விழுந்து இருதய துடிப்பை இருமடங்கு கூட்டி இருந்தது.....


நெஞ்சில் நிறைவாள்......

 

Author: Vishakini
Article Title: நெஞ்சில் நிறைந்தவள் - 9
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Magizh kutty