நேசமுகை உதிரும் இளவேனில் -11

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,210
16,607
113
Germany

நேசமுகை - 11

🎶
சிறு புன்னகையில்
என்னை வென்றுவிடும்
அவள் தென்றலே
இரு கண்களையும்
எழில் செய்துவிடும்
அவள் மின்னலே
காலை மாலை
யாவுமே காதல் கொள்ள
வேணுமே தினம் பேசி
போகிற ஜாடைகள் பல
நூறு கவி சொல்லுதே
இரவே பகலே
இரவாய் தோன்றிடு
இரவே இரவே பகலை
நீங்கிடு மூச்சுக் குழலிலே
மோகம் விரியுதே கூச்சம்
தொலையவே தேகம் சரியுதே
கனவிலே கனவிலே
பல நாள் கண்டது எதிரிலே
எதிரிலே அழகாய் வந்தது
உடை தொட்ட இடம்
விரல் தொட்டு விட உயிர்
கெஞ்சுமே அடைபட்ட நதி
உடைபட்டுவிட அலை
பொங்குமே
வாசம் வீசும் பூவிலே
நாளும் உந்தன் வாசனை
மிதமான சூரிய தீபமாய்
இமை நான்கு மொழி
சொன்னதே
எது நீ எது நான்
இனிமேல் தேடுவோம்
நதி நீ கரை நான் கலந்தே
ஓடுவோம்
பூக்கள் முழுவதும்
தீண்டும் விழியிலே கூட்டம்
நடத்துமே தோற்கும் அழகிலே
🎶


அலைபேசியில் பாடல் மெல்லியதாக இசையெழுப்பி ஒலிக்க, தம்பதியர் இருவரும் அருகருகே படுத்துக்கொண்டு, இசையை ரசித்துக் கொண்டிருந்தனர். திருநெல்வேலியிலிருந்து சென்னை வந்து ஒரு வாரம் கடந்திருந்தது.

"மாம்ஸ் ஜோனீய இந்த வருஷம் ஸ்கூல்ல போட்டுரலாம்டா. அப்படியே எனக்கு ஒரு ஜாப் ஆஃபர் பண்ணிக் கொடுத்தால் நல்லாருக்கும்"

"அதான் நான் வேலைக்கு போறேனேடி. நீ வீட்டையும் குழந்தையையும் பார்த்துக்க. முக்கியமா இந்த மாம்ஸ 'நல்லா' கவனி போதும்டி" என்றுக் கண்ணடித்தான்.

"இல்லடா படிச்சிருக்கேன் ஏன் அதை வேஸ்ட் செய்யனும்?"

"நீ படிச்சிருக்க தான். நான் இல்லைனு சொல்லலடி. பட் இன்னும் கொஞ்சம் நாள் போகட்டுமே ஸ்ட்ரெஸ் ஏத்திக்க வேணாமேனு சொல்றேன்"

"என்னால மேனஜ் பண்ண முடியாதுனு சொல்ல வரீயாடா?"

"லூசு மாதிரி பேசாதடி. ஏற்கனவே உனக்கும் அம்மாக்கும் ஏழாம் பொருத்தம். இதுல நீ வேலைக்கு போனால் ஜோனீய யார் பார்த்துப்பாங்க? அப்படியே அவங்க பாத்துக்கிட்டாலும் அவன் இருப்பானா? முதல்ல அதுக்கு எல்லாம் அவனை பழக்கப்படுத்துடி"

"..."

"என்னடிக் கோவமா செல்லம்?"

"இல்லை நான் அந்த ஆங்கில்ல யோசிக்கலடா"

"நீ முட்டாள் தானே? அதலாம் எப்படி யோசிப்ப?"

அவன் கேலியாக பேச, கோர்த்திருந்த கைகளை உதறியவள் அவன் வயிற்றின் மீதேறி உட்கார்ந்து அவனது நீண்ட கேசத்தைக் கொத்தாக பிடித்த படி,

"நான் உனக்கு முட்டாளாடா?"

"ஷ்ஷ்ஷ் அம்மு கத்தாதடி ஜோனீ எழுந்துக்க போறான்"

"அப்படி தான்டா கத்துவேன் இப்ப சொல்லு. உனக்கு நான் முட்டாளா?"

"இன்னும் கொஞ்சம் கீழே இறங்கி உட்கார்ந்தினா சரியா இருக்கும்டி"

"எதுக்கு?" என்று கேட்டவள் ஓர் நொடியில் புரிந்து அவனை மீண்டும் அடித்தாள்.

"ஹ்ஹா ஹே.. ஹா.. போதும்டி அடிக்காத. செமயான பாட்டு கேக்க வச்சு மூடேத்தி விட்டு இப்ப என்னை வந்து அடிக்கிற?"

அவன் வயிற்றின் மீதிருந்து இறங்கியள் திரும்பி படுத்துக்கொண்டாள்.

"ஹே அம்மு எதுக்குடி இப்ப மூஞ்சியைத் தூக்கி வச்சிருக்க? இப்ப நான் என்ன சொல்லிட்டேன்?"

அவள் உடல் குலுங்கியது. அழுகிறாள் என்று உணர்ந்தவன் அதிர்ந்து அவளை வலுக்கட்டாயமாக தன் பக்கம் திருப்பிப் பார்க்க அவனை பார்க்க இயலாமல் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

"மாம்ஸ் நான் தெண்டமா வீட்டில் இருக்கிறேனா? சும்மா உட்கார்ந்து சாப்பிடற பீல் வருது. என்னால எந்த பிரயோஜனமும் இல்லை தானே? நீ கூட முட்டாள்னு சொல்ற"

அவளைத் தன்னில் இருந்து பிரித்து அவள் மோவாயைப் பற்றி தன்னை பார்க்குமாறு செய்தவன்

"அப்படின்னு நான் உன்னை சொன்னேனா?"

"..."

"பதில் சொல்லுடி. உன்னை நான் மகாராணி மாதிரி வச்சு பார்த்துப்பேன். சரியா ? அதைக் கேட்கிற உரிமை யாருக்கும் இல்லை. இரு இப்பவே இதுக்கு முடிவுக் கட்டுரேன்" என்று எழுந்தவனை தடுத்தவள்

"ப்ளீஸ்டா இப்ப எந்த பிரச்சினையும் வேணாம். அப்புறம் இதுவும் நான் தான் தூண்டிக் கொடுத்து பிரச்சினை பண்ண வச்சேன்னு வரும். ஆனால் அவங்க சொன்னதுல தப்பு இல்லையே. படிச்சு என்ன பிரயோஜனம் ? தெண்டமா தானே வீட்டில் இருக்கேன்." வலியுடன் வார்த்தைகளை உதிர்த்தாள்.

"ஆமா நீ தெண்டமாதான்டி இருக்க"

அவளுக்கு அப்பட்டமான அதிர்ச்சி.

"காலையில் எழுந்ததும் பால் அதுவாவே பொங்கிடும். சாதம் அதுவே வடிச்சிக்கும். குழம்பு, கூட்டு, டிபன் எல்லாம் அதுவே கால் முளைச்சி வந்திடும். துணி அதுவே வாஷ் ஆகி தானாவே கொடியில் காய்ஞ்சி மடிச்சு போய் உக்காந்துக்கும். உன் பையன் அவனே கிளம்பிடுவான். வீடு அதுவே தன்னை சுத்தம் பண்ணிக்கும். சோ நீ தெண்டமா தான் இருக்க"

அவன் சொல்லிய தொனியில் "மாம்ஸ்" என்று அவனைக் கட்டிக்கொண்டாள்.

"போடி அங்குட்டு. யாராவது எதாவது சொன்னா வந்து கண்ணை கசக்கிட்டே நில்லு. ஐ மிஸ் தி கிரேட் இளவேனி. காலேஜ் டேய்ஸ்ல உன்னை நினைச்சி வியக்காத நாளே இல்லைடி இப்ப என்னடானா" ஆதங்கமாக நேயன்.

"யோவ் மாம்ஸ் போதும் ஓவரா கரிச்சிக் கொட்டாத. திட்டுனதுக்கு பனிஷ்மென்ட் கொடுப்பேன்"

"ம்ம்ம் எங்க வேணாலும் கொடுடி"

"தேங்க்ஸ்டா. என்னை புரிஞ்சிகிட்டதுக்கு"

"சரிடி. அம்மு அப்புறம் நாளைக்கு என் ப்ரெண்ட் ஒருத்தன் பார்ட்டி வச்சிருக்கான். நானும் போகவா?" என்று இழுத்தான்.

"போய்ட்டு வாடா. இதென்ன கேள்வி"

"ரியலி ஹேஹே தேங்க்ஸ்டி. பசங்க எல்லாம் ஒய்ப் இதுக்கு எல்லாம் அக்செப்ட் பண்ண மாட்டாங்க னு சொல்வானுக. மேரேஜ் ஆனால் பசங்க கூட சேர விட மாட்டாங்க சொல்வானுக. பட் யூ ஆர் தி யூனிக் அம்மு" என்றுக் கொஞ்சினான்.

அன்று மட்டும் அவள் தடுத்திருந்தால் அநேக அனர்த்தங்கள் நடைபெறாமலே இருந்திருக்கும். விதி வலியது அல்லவா.

மறுநாள் எழுந்ததில் இருந்து இளவேனியின் மனதில் ஏதோ உறுத்தல். என்னெவென்று சொல்ல முடியாத பாரம் இதயத்தை அழுத்தியது. என்ன முயன்றும் அவளால் அதை தடுத்திட முடியவில்லை. இரவு வரை மனதின் ஊசலாட்டம் பெருங்குரலெடுத்து ஆர்ப்பரித்தது.

இளநேயனுக்கு அழைத்துப் பார்த்தால் துண்டிக்கப்பட்ட அழைப்புகளாகவே முடிந்திருந்தது. நேரம் செல்லச் செல்ல மனதின் பாரம் கூட பொடியனை உறங்க வைத்தவள், குளியலறைச் சென்று முகத்தில் நன்றாக தண்ணீர் தெளித்துப் பார்த்தாள். பதற்றம் தான் கூடியதே தவிர மாற்றமில்லை.

சரியென்று வந்துப் படுத்தாள். வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. தன்னவன் வந்து விட்டான் இனி எல்லாம் பறந்து போய்விடும் என்று ஆனந்தமாக கதவைத் திறந்தவளை வரவேற்றது, கால்களில் தள்ளாட்டமும், கண்களில் சிவப்பேறியும், மென் இதழ்களில் ஒவ்வாத மதுநெடியுடனும் நின்றிருந்த இளநேயன் தான்.

ஒரு நொடி தான் காண்பது கனவோ என்றெண்ணியவள் விழிகளை இறுக்கமாக மூடி திறக்க,

"ஏய் அம்..மூஊ எவ்..ளவு நேர..ம்டி வ..ழியை அச்சி..ட்டு நிப்ப போ..டி"

என்று அவளைக் கைகளால் விலக்கியவன் உள்நுழைய இளவேனியோ கீழே விழுந்திருந்தாள் அவனின் விலக்கல் தந்த விசையில்.

மதுவின் ஆதிக்கத்தில் இருப்பவன் அவளைக் கவனியாமல் போனது பெருந்துயரே. விழிகளில் கண்ணீருடன் எழுந்தவள் கதவை அடைத்துவிட்டு அறைக்குள் வர

"எங்..க போன? நா..னு ஜெ..யிச்சிட்..டேன்டி.. நா.. இனி எங்க......யோ போக போறே...ன் பா...ரு" என்றவன் அவளை கைப்பற்றி இழுக்க அவன் மீதே மோதி நின்றாள்.

"என்னடா பண்ணிட்டு வந்து நிக்கிற? அதுவும் குழந்தை வளந்துட்டு வரான் இப்..."

"ஷ்ஷ்ஷ்ஷ் இங்க பாரு எல்...லாம் இனி ஏறு..முகம் தான்" என்று கைகளை ஏணிபோல் வைத்துக் காட்டினான்.

'இவன் என்ன உளருகிறான்?' என்றெண்ணியவள் 'சரி காலையில் பேசிக் கொள்ளலாம்' என்று படுக்கையில் விழ அப்பொழுது தான் ஒன்று புரிந்தது. காலையில் இருந்து மனதை ஆட்டுவித்த ஊசலாட்டமும் பதற்றமும் இப்போது இல்லை.

ஆனால் அடுத்த நொடியே அவளை இழுத்து வெறும் தரையில் படுக்க வைத்தவன் அவள் அனுமதியின்றியே அவள் தடுத்தும் அவளை வன்மையாக ஆதிக்கம் செலுத்தியிருந்தான் நேயன். இந்த நாள் இப்படி இருக்கும் என்று கனவில் கூட வேனி நினைத்திருக்கவில்லை.

அதுவரையில் அவனின் மென் பக்கம் மட்டுமேக் கண்டவள், அவளை மென்மையாகவே கையாண்டவன் இன்று தலைகீழாக நிற்பது அவளுக்கு பேரதிர்ச்சியைத் தந்திருந்தது. விடிய விடிய உறங்காமல் இருந்தவள் அவனின் விழிப்புக்காகக் காத்திருந்தாள் அவனையே வெறித்தபடி.

'சோம்பல்' முறித்தபடி மெல்ல எழுந்தவன் தன்னையேப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த இளவேனியை பார்த்ததும்,

"ஹேய் அம்மு என்னடி ஏன் இப்படி உட்கார்ந்திருக்க?" என்றவன் அவளது ஆடையால் அவளை போர்த்தி விட்டவன்
"என்னடி இதுக் காயம்? எப்படி ஆச்சு? ஏன் வாயத் திறக்காம இப்படி சிலை மாதிரி உட்கார்ந்திருக்க?"

"கையை எடுடா"

"வேனி?"

"காது கேட்கும் தானே? கையை எடுடா. உனக்கு ட்ரிங்க்ஸ் பண்ற பழக்கம் இருக்குனு ஏன் என்கிட்ட சொல்லவே இல்லை?" உச்சஸ்த்தாயில் கத்தியிருந்தாள். அவளது கத்தலில் அறையின் கதவை வந்து தட்டினார் கிளாரின்.

"இளா டேய் இளா என்ன ஆச்சு?"

"எதுக்குடி அசிங்கபடுத்துற?"

"வாட்? நான் அசிங்கப்படுத்துறேனா? நேத்து நீ பண்ணதுதான்டா அசிங்கம்"

"லிசன் வேனி நேத்து..."

"எந்த விளக்கமாறும் சொல்ல தேவையில்லை எழுந்து போடா வெளியே உன் ஆத்தா கத்தியே ஊரைக் கூட்டிடும் போல"

ஆடைகளைச் சரிசெய்தவள் எழுந்து வழக்கமான வேலைகளைச் செய்யத் தொடங்கினாள். ஆனால் காயப்பட்ட மனம் அவளைத் தின்றுக்கொண்டிருந்தது. அவளின் ஆழ்மனதில் இருந்து ஒரு சிவப்பு குரல் மெல்லியதாக ஆட்கொள்ள நினைத்தது அவளை.

'குடிகாரன் கூட வாழவே முடியாது. இதை இப்பவே தடுத்திடு. இல்லனா நீ தான் கஷ்டபடுவ. குழந்தை வளர்ந்திட்டு வரான் ஆம்பள புள்ள வேற. அவனுக்கு அப்பா தான் ரோல் மாடல் இதைபார்த்து அவன் வளர்ந்தால் அவனும் குடிகாரன் தான் ஆவான்'

அந்த குரல் உதிர்த்த வார்த்தைகளில் அதிர்ந்து போனவள் "நோ... நோ... அப்படி மட்டும் நடக்கவே கூடாது.. என் பையன்" என்றுக் கத்தியிருந்தாள்.

கூடவே கையிலிருந்த கரண்டி கீழே விழ அதை எடுக்க குனிந்தவளின் தலை கிச்சன் மேடையில் மோத, தேய்த்துக் கொண்டே மீண்டும் விட்ட சமையலைத் தொடர்ந்தாள். மீண்டும் மீண்டும் அந்தக் குரல் அவள் செவிகளை வந்தடைய, அவளின் 'டோபமைன்' செவிகளை வந்தடைந்த எண்ணங்களை தூரத் தள்ளி அவளை ஆசுவாசமுறச் செய்தது.

வாரம் ஒன்று கடந்திருந்த போதும் இளநேயன் தானாக வந்து அவளிடம் பேச முயற்சிக்கவில்லை. இளவேனி அவன் வதனத்தைப் பார்த்தால் தானே பேசுவான். அவளோ அங்கு அப்படி ஒருவன் இல்லை என்பது போல அல்லவா நடந்துக் கொண்டாள்.

இளநேயனும் அலைபேசியில் 'பிஸி'யாக இருந்ததால் கண்டுக் கொள்ளவில்லை. நாட்கள் செல்லச் செல்ல இதுவே வழக்கம் ஆக மெல்ல நேயனிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள். ஆனால் அவனோ அவளை உதாசீனம் செய்தான்.

அலைபேசியில் தொடர்ந்து 'ஏதோ' செய்தான். இளவேனிக்கோ குழப்பம். 'வேறு ஏதேனும்... இல்லை இல்லை அப்படி இருக்க வாய்ப்பு இல்லை என் நேயன் வேலை டென்ஷன்ல தான் இருக்கிறான்' என்றுத் தறிகெட்டு ஓடிய மனதை சமன்செய்தவள் நாளுக்கு நாள் அவனின் போக்கில் மாற்றம் தெரியவும் சோர்ந்துப் போனாள்.

வீட்டிற்கு தாமதமாக வர ஆரம்பித்தான். இன்னும் சொல்ல போனால் மனைவி, குழந்தை இருப்பதையே ஏன் அவர்கள் வதனத்தைக் கூட மறந்து விட்டான் என்று சொல்லலாம். இரவு 12.30 மணியளவில் வீட்டிற்கு வருபவன் வீட்டினுள் நுழையாமல் வாசலிலேயே நின்று அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான். இவள் அருகில் வந்தாலோ பதட்டம் கொண்டான். விலகிச் சென்றான்.

சாதாரணமாக ஏதாவதுக் கேட்டாலும் டென்ஷனில் எக்குதப்பாக பேசிக் காயப்படுத்தினான். நான்கு மாதங்கள் ஓடியேவிட்டன. ஆனால் அவன் நிலை இன்னும் மோசமாகத் தான் மாறியது.

அன்று இரவு வீட்டுக்கு வந்த நேயன் அனைவரும் உறங்கி விட்டனர் என்று எண்ணி யாரும் அறியாமல் வந்து படுத்துக்கொண்டான். ஆனால் அவனுக்காகக் காத்திருந்தவள் எழுந்து டியூப்லெட்டை ஆன் செய்வாள் என நேயன் எதிர்பார்க்கவில்லை. விழிகளிலில் சிவப்பேறி மதுவின் ஆதிக்கத்தில் இருந்தவன் வதனம் வெளிறி போய் இருந்தது.

"என்ன பிரச்சனை நேயா? ஏன் இப்படி ஒதுங்கி போற? நான் என்ன தப்பு பண்ணேன்? நான் உன்னை ஏதாவது ஹர்ட் பண்ணி இருந்தா மன்னிச்சிடுடா. பட் பிளிஸ் பேசுடா"

"வே..னி அ..தா இ..ல்..ல"

"எதுக்குடா இப்படி குடிச்சிட்டு வர்ர? என்ன பிரச்சினைனாலும் சொல்லு சேந்து சமாளிப்போம். பட் தனிமைபடுத்தாத என்னை. உன் மேல இருந்து வர்ர வாசனை எனக்கு பிடிக்கலைனா கூட எத்தனையோ நாள் நீ தூங்கின பிறகு உன் ஸ்பரிசத்திற்காக வந்து உன்னை ஒட்டி படுத்திருக்கேன்டா. எனக்கு நீ வேணும்டா நேயா"

"..."

"இப்ப நீ எதுவும் பேசமாட்டனு தெரியும். காலையில் பேசலாம் படு" என்றவள் கண்ணீரோடு காலை புலர்வதற்காகக் காத்திருந்தாள்.

வழமை போல கிளம்பி வெளியேற போனவனை பிடித்தவள் 'தனக்கு ஒரு முடிவு தெரிய வேண்டும்' என்று நின்றாள்.

"எனக்கு பதில் சொல்லாமல் நீ நகர முடியாது நேயா"

"வேனி எனக்கு கொஞ்சம் கடன் இருக்கு. நிலோ மேரஜ் அப்ப வாங்குனது அதைக்கட்ட முடியாமல் அலையுரேன் ப்ளீஸ் தொந்தரவு பண்ணாத."

"அவ்வளவு தானா?"

"ஆமா"

"நிஜமா"

உஷ்ணமாக முறைத்தான் நேயன்.

"சரி இரு கோச்சிக்காத" என்றவள் தனது பீரோவில் ஓய்வில் இருந்த பொன் ஆபரணங்களை எடுத்து வந்து அவனிடம் தந்துக் கடனை அடைக்கச் சொல்ல வாயடைத்துப் போனான். ஆனால் மறுப்பேதும் இன்றி வாங்கிக் கொண்டான்.

'என்னை மன்னிச்சிடு வேனி. எனக்கு வேறு வழித் தெரில. இப்ப எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருக்கேன். ஆனால் கூடிய சீக்கிரமே எல்லாம் சரிபண்ணிட்டு உன்கிட்டே வந்துடுவேன்டி அம்மு' மனதோடு உரைத்தவன் கிளம்பியிருந்தான். அன்று இரவு இளவேனி துயில் கொள்வதற்கு முன்பே வந்திருந்தான்.

"மாம்ஸ் ஒரு வாக் போய்ட்டு வரலாமா?"

"இந்த நேரத்திலயா?"

"ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு தான் உன் திருமுகம் பார்க்க நேரம் அமைஞ்சிருக்கு. சோ இதைக் கொஞ்சம் 'ரொமான்டிக்'கா செலிப்ரேஷன் பண்ணலாம்டா வாடா"

அவளின் கோரிக்கையை ஏற்று கைகள் கோர்த்துக் கொண்டு வீட்டினைச் சுற்றியுள்ள ஒரு சந்தினை ஒரு சுற்று நடந்து வந்தனர். இரவின் இதமானக் காற்று மெய்யைத் தீண்டி இதத்தைத் தந்தது. மனகிலேசங்கள் நீங்கி புத்துணர்வைத் தந்தது. வீடு வந்ததும் இறுக்கமாக கட்டியணைத்துக் கொண்டாள்.

"ரொம்பப் பயந்துட்டேன்டா மாம்ஸ். திரும்ப என்கிட்டயே வந்துட்ட ஐ லவ் யூடா" என்றவள் அவன் முகமெங்கும் முத்தம் வைத்து அவனை சிலிர்க்க வைத்திருந்தாள். மோகம் தீப்பற்றி எரிய அதை அணைத்திடும் வழியில் இருவரும் இணைந்தனர்.

✍️
இதழ் தீண்டும் தூரத்தில்
அவன் மூச்சுக்காற்றின் வெப்பம்
மோகத்தீயாய் என்னுள் படர...
இத்தனை நாட்களின் தேகப்பிரிவு
முன்னர் கொண்டாடிய உணர்வுகளை
சிறிதளவேனும் தேடல் கொண்டிருக்க
கொஞ்சும் கவிதையாய்...
இதழ் மிடறும் முத்தமாய்...
தேகம் எரியும் அணைப்புக்குள்ளாய்...
பேரன்பை விதைக்கும் காதலாய்...
பிரிவின் வலியுணர்தலாய்...
பிரிதலுக்குப் பிறகான
நிஜத்தில்
காதலின் பேரன்பு இதுவே.....!
✍️


இருவரும் களைத்துப் போய் படுத்திருந்தனர். இளவேனி பேச்சைத் தொடர்ந்தாள்.

"உன் ஸ்பரிசத்துக்காக எத்தனை நாள் ஏங்கி இருக்கேன் தெரியுமா நேயா? உன் தொடுதல் மோகத்திற்கானது மட்டும் அல்ல நேயா. உன் அணைப்பு எனக்கு 'நான் இருக்கேன்டி உனக்கு'னு சொல்லாமல் சொல்லும். வார்த்தை தராத காதல் உணர்வை உன் அணைப்பு தரும். ஒரு வாட்டி என் முகத்தை பார்த்து பேச மாட்டியா? என் கிட்ட வரமாட்டியா?னு இந்த நாலு மாசம் நான் ஏங்காத நாளே இல்லைடா. பைனலி யூ ஆர் மைன்" நெகிழ்ச்சியுடன் பேசியவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டான்.

ஆனால் ஒரு வாரம் கூட இந்த மகிழ்ச்சி நீடிக்கவேயில்லை. மீண்டும் அளவில்லா அலைபேசி அழைப்புகளும், டென்ஷனும், நிராகரிப்புகளும் தொடர ஆரம்பித்தன. இளவேனியால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சரியாக உண்ணாததில் உடல் நிலை மோசமாகித் திடீரென்று ஒருநாள் மயங்கிச் சரிந்திருந்தாள். அவள் உடலுக்கு ஏதும் இல்லை.

அவள் வயிற்றில் இரண்டாவது கருவைச் சுமந்துக் கொண்டிருக்கிறாள் என்ற நற்செய்தி கிடைத்தது. ஆனால் இளவேனியோ நேயனின் உறவை முறித்துக் கொண்டு ஜோனீஸூடன் வீட்டை விட்டு வெளியேறியிருந்தாள்.

முகை உதிரும்...
 

Author: நிதனிபிரபு
Article Title: நேசமுகை உதிரும் இளவேனில் -11
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.