நேசமுகை - 8
'மரியாள் மண்டபம்' முழுவதும் வண்ண வண்ண விளக்குகளும் வாசனை மலர்களும் அலங்கரிக்கப்பட்டு அந்த இரவு நேரத்தை பகலாக்கிக் கொண்டிருந்தது. மண்டபத்தின் வாயிலில் பெரிய பேனர் நிற்க வைக்கப்பட்டிருக்க, அதில் இளநேயன், இளவேனில் புகைப்படமும், அவர்களின் திருமணத்திற்கு நண்பர்களின் வாழ்த்துக்களும் நிறைந்து நிறைவாய்க் காட்சியளித்தன.
வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஆயத்தங்கள் நடந்துக் கொண்டிருந்தன. இளவேனில் மற்றும் இளநேயன் இருவரும் மணமாலையுடன் கைக்கோர்த்துக் கொண்டு புன்னகையுடன் உள் நுழைந்தனர். அவர்கள் நடந்து வர வர அவர்களை புகைப்படக் கலைஞர் புகைப்படம் மற்றும் காணொளிக் காட்சிகளாக பதிவுச் செய்துக் கொண்டு வந்தார்.
அன்று கல்லூரிக்கு வந்தவள் நேரேச் சென்று நின்றது நன்மதியிடம். இருவரும் ஒருவரையொருவர் பார்த்தனரே தவிர பேச்சைத் தொடங்கவில்லை. யாராவது ஒருவர் பேசிதானே ஆகனும்.
"நான் நேயனை விரும்புறேன்னு தோணுது"
"ரொம்ப லேட்டா புரிஞ்சிடுச்சு போல"
"என்ன சொல்ல வர்ர மதி? இத்தனை நாளும் அவன் எனக்கு ப்ரெண்ட் தான், இப்ப கொஞ்சம் மு.. முன்..னாடி தான் தோ.. தோணிச்சு" தடுமாற்றமாய் அவள்.
"உங்க வீட்டில் அப்பா அம்மா எல்லாம் இருக்காவ ஞாபகம் இருக்கா? அவிய இதுக்கு சம்மதிப்பாவளா? படிக்க அனுப்புனா காதல் கீதல்னு வந்து நிக்கியேனு கேட்டா என்னட்டி சொல்லுவ?" சினத்துடனே கேட்டிருந்தாள்.
"மதி நான் மேஜர். என் லைப்ப டிசைட் பண்ற உரிமை எனக்கு தான் இருக்கு"
"அதுக்கு நீ இண்டிபென்டன்டா இருக்கனும். இப்ப வரைக்கும் நீ உன் பேரண்ட்ஸை தானே டிபண்ட் பண்ணி இருக்க?"
"உன்கிட்ட போய் சந்தோஷமா பேச வந்தேன் பாரு என்னை சொல்லனும்"
"ஓஹோ .. உண்மை கசக்க தான் செய்யும்"
விறுவிறுவென்று வகுப்பறைக்குச் சென்றவள் தன் இடத்தில் போய் அமைதியாக அமர்ந்துக் கொண்டாள். மனமோ இருதலைக்கொள்ளியாக தவித்தது. அன்றைய தினம் வகுப்பில் நடத்திய எந்த பாடத்திலும் அவள் கவனம் செலுத்தவில்லை. கல்லூரி முடிந்தபின் மதி அவளைத் தேடி வந்தாள்.
"இங்க பாரு வேனி நான் உன் நல்லதுக்கு தான் எதுவா இருந்தாலும் சொல்வேன். நாளைக்கு நீ கஷ்டப்பட்டா முதல்ல உன் பேரண்ட்ஸ்க்கு தான் வலிக்கும். எனக்கும் தான். மத்தபடி நீ சந்தோஷமா இருக்க கூடாதுனு நான் என்னைக்கும் நினச்சது இல்லைட்டி. நல்லா யோசிச்சு முடிவு எடு. நான் எப்போதும் உன்கூட தான் இருப்பேன். இத்தனை நாள் பேசாமல் இருந்ததுக்கு சாரிடி" என்றவள் கைகோர்த்துக் கொண்டாள். வேனி சிந்தனைவயப்பட்டவளாக நடந்து வந்தாள்.
ஒரு வாரம் கடந்த நிலையில் அலைபேசியில் 'நெடுமங்காடு' எனும் பெயரில் அழைப்பு வந்து அவளோடு அதிர்ந்தது. அழைப்பை ஏற்றவள் 'ஹலோ' என்று சொல்வதற்குள் வேறு ஆடவனின் குரல் கேட்டது.
"ஹலோ மிஸிஸ் வேனி இளநேயன் இருகாங்களா?"
"வாட்?" அதிர்ந்தே போனாள் பெண்ணவள்.
"ஏங்க என் மச்சான் இளா எவ்வளவு நல்ல பையன் தெரியுமா? இப்படி ஒரு பையன் கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கனும். பத்து நாளா பேசலன்னதும் என் மச்சான் குச்சியாட்டம் இளைச்சிட்டான் தெரியுமா? சாப்பிடவே மாட்..." நேயனின் நண்பன் ரகு பேசுகிறான் என்றுணர்ந்தவள்,
"டேய் எருமைமாடு அந்த நெடுமங்காடு கிட்டே ஃபோன கொடுடா"
"ஐயோ யம்மா என்னா கடி கடிக்கிறா காது ஜவ்வு காலியாயிரும் போல. டேய் மச்சான் நான் வரலடா இந்த ஆட்டத்துக்கு நீயாச்சு உன் ஆளாச்சி" என்றவன் அலைபேசியைக் கொடுத்து விட்டு நகர்ந்தான்.
"ஹலோ" நேயன்.
"நான் என்ன சொன்னேன் நேயா? நானா பண்ற வரைக்கும் டிஸ்டர்ப் பண்ணாதனு சொன்னேன்லா. என்ன இது மிஸிஸ் பிளா பிளானு அவன விட்டு பேச வைக்ற?" பொரிந்து தள்ளினாள்.
"வேனி நீ லவ் பண்ணலனா கூட பராவல ப்ரெண்ட்டா பேசுடி உன்கூட பேசாமல் இருக்க முடில" குரல் உடைந்து பேசியிருந்தான்.
'அச்சோ அழுதுட்டானோ?' என்று மனதோடு வினவியவள்
"என்னடா இப்படி பண்ற? எனக்கு கொஞ்சம் மைண்ட் டிஸ்டர்ப்பா இருந்தது. வேற ஒன்னும் இல்லை. சரி இன்னும் டூ டேய்ஸ்ல கல்ச்சுரல்ஸ் இருக்கு. வரீயா?"
"வான்னு சொன்னா வரப்போறேன்"
"ஆஹான். கொஞ்சம் நேரம் முன்ன அழுத குழந்தையா இது?"
"வேனி" சிணுங்குகிறானோ..?
"முதல்ல போய் சாப்பிட்டு எனக்கு போன் பண்ணு" என்றவள் அழைப்பைத் துண்டித்தாள்.
இரு தினங்களுக்கு பின் திருநெல்வேலிக்கு வந்தவன் 'ராம் திரையரங்கம்' அருகே காத்திருந்தான். வேனி பதற்றமாக வந்தவள்
"இங்க ஏன்டா வந்த? அப்பா வீட்டில் தான் இருகாங்க"
"ஐ லவ் யூ வேனி" அவளது விழிகளை ஊடுருவி சொன்னவன் அவளை நெருங்கி நின்றான். அவனது மூச்சுக்காற்று அவளைத் தழுவும் தொலைவில் வந்து நின்றிருந்தவனைக் கண்டு நெஞ்சம் எல்லாம் பூப்பூத்தது. வயிற்றின் உள்ளே இருந்து பட்டாம்பூச்சிகள் பறந்து வந்து நெஞ்சை மொய்த்தன. அந்த உணர்வு புதுமையாக இருந்தது. அவளுக்கு பிடிக்கவும் செய்தது.
"நேயன் பிளீஸ்" என்றவள் தலைக்குனிந்து நின்றாள் வெட்கம் அவளைக் களவு செய்ய.
"சரி காலேஜ்ல பாக்கலாம்" என்றவன் கிளம்பியிருந்தான். அவள் தான் அப்படியே நின்றிருந்தாள் நன்மதி வந்து அழைக்கும் வரை.
"டி இங்க என்ன செய்ரவ?" நன்மதி
"ஆங்.. அது... இல்லை போலாம்" அவளை ஒரு மாதிரியாக பார்த்தவள் அவளைக் கைப்பற்றி அழைத்துச் சென்றாள்.
கல்லூரியில் நேயன் நின்றிருந்தான். ஆனால் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. சென்னை திரும்பும் வரைக்கும் பேசிக்கொள்ளவில்லை.
'இன்னும் என் மேலே கோவமா?'
'இல்லை நேயா என்ன பேசனு தெரில எனக்கு'
'எப்பவும் போலவே பேசு போதும்'
'சரி' புலனத்தில் பேசிக்கொண்டவர்கள் அதன் பின் ஒரு வருடங்கள் நிறைவு பெறும் வரைக்கும் பேசிக்கொண்டு இருந்தார்கள் நண்பர்களாகவே. அதன் பின் காதலைப் பற்றியோ, காதல் மொழிந்தது பற்றியோ இருவரும் பேசிக் கொள்ளவில்லை, ஆனால் அவரவர் மனதில் காதலை சுமந்து சுகிர்த்து கந்தர்வ காதலை வளர்த்துக் கொண்டனர்.
சாதாரண பேச்சுகள் தான், எப்போதும் எல்லை மீறிய பேச்சுகளுக்கோ, அந்தரங்க பேச்சுகளுக்கோ இடமளிக்கவில்லை இருவருமே.
வேனி கல்லூரிப்படிப்பு முடிந்ததுமே ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தாள். ஒரு வருடம் முடியும் தருவாயில் அங்கு வேலை செய்யும் ஆடவன் அவள் வீட்டிற்கே வந்து இளவேனியைக் கட்டிக் கொள்ள விருப்பம் தெரிவித்திருக்க இளவேனியின் தந்தையும் சம்மதம் தெரிவித்திருந்தார். ஏனெனில் அவன் இளவேனிக்கு தூரத்து சொந்தம்.
அவன் சென்றபின் "ப்பா நான் ஒரு வருஷமா ஒருத்தரை விரும்புரேன். அவரைதான் கல்யாணம் பண்ணிப்பேன்" என்று சொல்லியிருந்தாள். அன்றிலிருந்து ஒரு வாரம் அவளுக்கு அடியும் மிதியும் தான் பரிசாகக் கிடைத்தது.
அலைபேசி அழைப்புகளும் இன்றி, குறுஞ்செய்திகளும் இன்றி ஏழு நாள் கழித்தவன் எட்டாவது நாள் இளவேனியின் வீட்டு வாயிலில் நின்றிருந்தான். கன்னம் இரண்டும் சிவந்து வீங்கி, விழிகள் உள்ளே போய் கருவளையம் சூழ்ந்திருக்க, கைகளிலும் கால்களிலும் தடிப்புகளோடு காட்சியளித்த இளவேனியைப் பார்த்ததும் நேயன் நொறுங்கிப் போனான்.
"வேனி... வேனி... என்னாச்சுடி? யார் இப்படி உன்னை அடிச்சது?" இளநேயன் பதறி போய்க் கேட்க
"ந்நீ.. ப்ப்போ..டா" அவளால் பேசக்கூட முடியவில்லை.
அறையில் இருந்து ஜெரோம் வெளியே வர, கவினி அழுதுக்கொண்டே அவர்பின் வந்தார்.
"யாருப்பா நீ?" ஜெரோம்.
"மாமா என் பேர் இளநேயன். சென்னையில் இருந்து வரேன். நான் ஒரு பிரைவேட் கம்பெனியில் ஒர்க் பண்ரேன். நல்ல சம்பளம். ஒரு அம்மா. அப்பா இல்லை. தங்கச்சி படிச்சிட்டு இருக்கா. வேனியும் நானும் சின்சியரா லவ் பண்ரோம். இதுவரை எங்கேயும் வெளியே போனதில்லை. அத்து மீறி பேசினதும் இல்லை. எப்ப உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க விருப்பமோ அப்ப பண்ணி தாங்க. ஆனால் என் வேனி மேலே கை வைக்காதீங்க பிளீஸ்" மூச்சு விடாமல் பேசியிருந்தான்.
ஆரம்பத்தில் முரண்டு பிடித்தாலும் ஜெரோம் மனதேயில்லாமல் மகளுக்காக சம்மதித்தார். அதன் பிறகு என்ன? இரு குடும்பமும் பேசி முடிவு செய்து, நிச்சயம் செய்து, திருமணமும் முடித்துக்கொண்டு இதோ வரவேற்பு நிகழ்ச்சியில் 'கேக்' கட் செய்துக் கொண்டிருக்கின்றனர்.
டிஜே பாடல்கள் ஒலிக்கப்பட்டு நண்பர்கள் ஆடிக்கொண்டு இருந்தனர். இளவேனிக்கு கால் இருப்புக்கொள்ளவில்லை.
"ஏட்டி ஆடிகீடி தொலைச்சிடாத. நீ மணப்பொண்ணு சரியா? மாமியார் வீட்டு ஆளுங்க பாக்காங்க பாத்துக்க. ஏற்கனவே உன் மாமியா இழவு விழுந்த போல தான் மூஞ்சிய வச்சிருக்கு. கவனம்டி" நன்மதி புத்திமதி கூறினாள்.
அப்பொழுது தான் கிளாரினை கவனித்தாள். அவர் முகம் இருளடைந்து போய் தான் இருந்தது. பிறகு கேட்டு கொள்ளலாம் என்று விட்டாள்.
"டேய் மச்சான்.. வாழ்த்துக்கள்டா எங்க கல்யாணத்துக்கு சிங்கிளா வந்தீங்க. இப்ப நீங்களே கபுள் ஆகிட்டீங்க. அடுத்து சீக்கிரமே குழந்தை குட்டிய பெத்துடுங்க. என் பையனுக்கு விளையாட்டு துணைக்கு ஆள் வேணும்" ஆபு கலாய்த்து தள்ள,
"உன் பையனுக்கு விளையாட்டு துணை வேணும்னா நீ இன்னோரு புள்ளய பெத்துக்கடா. நாங்க இனிதான் லவ்வே பண்ணே போறோம் குழந்தை எல்லாம் அப்புறம் தான். என்ன வேனி" காதலுடன் பேசியவனை 'கட்டியணைத்தாள் என்ன?' என்று தோன்றியது அவளுக்கு.
சடங்குகள் எல்லாம் முடிந்து தங்கள் அறைக்கு இருவரும் வந்து அமர, வேனியோ கைகள் நடுங்க படபடப்புடன் இருந்தாள். அவளது கைகளை பற்றியவன் அவள் மோவாயை நிமிர்த்தி தன்னை பார்க்க செய்து
"நான் தானே? எதுக்கு இவ்வளவு பதற்றம். ரிலாக்ஸ்" என்று எழுந்தவன் வேதாகமப் புத்தகத்தை எடுத்து வந்து அவளிடம் கொடுத்து
"ஒரு வசனம் நீ மறு வசனம் நான். இன்னிலிருந்து நம் வாழ்வு முடியுந்தொட்டு இது தொடரனும்" சரியென்று வாங்கியவள் வாசிக்கத் தொடங்கினாள்.
"அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. அன்புக்கு பொறாமையில்லை"
"அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது."
"அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது. "
"அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். "
"சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். "
"அன்பு ஒருக்காலும் ஒழியாது. "
"புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூருங்கள்."
"என் மகிழ்ச்சியை நிறைவு செய்யுங்கள் ஒரே மனதில் இருப்பது, அதே அன்பைப் பேணுதல், ஆவியில் ஐக்கியம், ஒரே நோக்கத்தில் நோக்கம். "
"சுயநலம் அல்லது வெற்று அகந்தையால் எதையும் செய்யாதீர்கள், ஆனால் மனத்தாழ்மையுடன் ஒருவரையொருவர் உங்களை விட முக்கியமானவர்களாக கருதுங்கள்"
"ஆமென்" என்று சொல்லி முடித்தார்கள்.
"சாப்பிட ஏதும் வேணுமா வேனி? ரொம்ப டயர்டா தெரிர"
"எதுவும் வேணாம்ங்க"
"அப்படியாங்க" என்றவன் அவளது மடியில் தலை வைத்து படுத்து கதைகள் பேச ஆரம்பித்தான். அவன் இயல்பாக உரையாடவும் அவளும் இயல்பாக பேச ஆரம்பித்தாள். அவளை இழுத்து முன் நெற்றியில் முத்தமிட்டவன் "உனக்கு இன்னைக்கு ஓகேவாடி பொண்டாட்டி?" என்று கேட்டான்.
"இல்லைனு சொன்னா இழுத்து போர்த்திட்டு தூங்கிடுவியாடா மாம்ஸூ?" என்று புருவங்களை உயர்த்திக் கேட்டவளை சுவாரஸ்யமாக பார்த்தவனின் விழிகளில் அவளின் இதழ்கள் விழுந்தன.
அவன் நெருங்குவதற்குள் படுக்கையில் தள்ளி விட்டவள் "அவ்வளவு ஈஸியா எல்லாம் கிடைக்காது" என்று அறையைச் சுற்றி வந்தாள். போக்கு காட்டியபடி ஓடியவளை பிடிக்க பின்னோடு ஓடியவன் மெத்தை மீதேறி குதித்து அவளைப் பிடித்திருந்தான். முதல் அணைப்பு இருவருக்குமே தித்திக்க, ஒவ்வொரு தித்திப்பையும் இனிக்க இனிக்க சுவைத்து இல்லற வாழ்வைத் தொடங்கினர்.
ஒரு நேசமிகு
காதலின்
கூடலுக்கு பிறகான
பெரிய வேண்டுதல்
என்னவாக
இருந்திடக் கூடும்...?
நித்தமும்
உன்மத்தம்
கொண்டிரு
என்பதுதானே...?
காலையில் 9 மணி ஆகியும் அறை திறக்கப்படாததில் நேயனின் தங்கை நிலோஃபர் "அண்ணி அண்ணி " என்று தட்டினாள் அறையின் கதவை.
"வேனி.. வேனி.. வேனி.. ஹலோ லைன்ல இருக்கியாட்டி?" நன்மதி
"ஆங்.. ஆ ஆமாட்டி சாரி ஏதோ நினைவில இருந்துட்டேன்"
கனவில் இருந்து முழித்தவள் போல் பேசினாள். நன்மதியுடனான அலைபேசி அழைப்பில் பேசிக்கொண்டு இருந்தவள் தன் வாழ்வின் இனிய பக்கங்களை ஒரு முறை திரும்பி பார்த்து வந்துவிட்டாள்.
"வேனி நீ அடிக்கடி ஒரு விஷயம் சொல்லுவ ஞாபகம் இருக்கா? 'இந்த உலகத்தை கடவுள் உருவாக்குனதுக்கான முழு நோக்கமே நாம எல்லாரும் சந்தோஷமா வாழனும்' என்பது தான்னு அடிக்கடி சொல்லுவ. அதனால் தான் பிடிச்ச மாதிரி லைஃப்ப என்ஜாய் பண்றேனு சொல்லுவ. இதை எப்போதுமே நீ மறந்துடாத. அதைப்போல உன் குழந்தைகளுக்கு நீ ரொம்ப தேவை வேனி. நீ தான் அவங்களுக்கு எல்லாம். மனச தளர விடாமல் அடுத்து என்ன செய்யலாம், எப்படி ஃபேஸ் பண்ணலாம்னு பாரு. பீ பாஸிடிவ். நான் ஃபோன் வைக்றேன்டி நீ எப்ப வேணாலும் எனக்கு கால் பண்ணி பேசு"
"சரி மதி நான் எதுவும் பண்ண மாட்டேன். இவ்வளவு பேசுற நீ நான் லவ் பண்ணும் போது இன்னும் அழுத்தமா சொல்லி இருக்கலாம் தானே?"
"வேனி அப்ப நாம சரியா பேசிக்கலட்டி. பேசியிருந்தாலும் நீ கேக்கிற நிலைமையில் இல்லை. அதோட இந்த பேச்சு இப்ப தேவையா? இரண்டு குழந்தைங்க வந்துட்டாங்க. ஆரம்பத்தில் உங்க லைஃப் நல்லா தானே போச்சு. இடையே இந்த மூணு நாலு வருஷத்தில் தான் ஏதோ நடந்து இப்படி ஆகிருச்சு. கவலபடாத எல்லாம் சரியாகிடும்"
"நீ சொல்றதும் சரிதான்டி" என்றவள் அழைப்பைத் துண்டித்திருந்தாள். அங்கன்வாடியில் விட்டிருந்த ஜோவீஸை அழைக்கப் போனாள் பெண்ணவள்.
முகை உதிரும்...