• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நேசமுகை உதிரும் இளவேனில் - 9

Vishakini

Moderator
Staff member
நேசமுகை - 9

பள்ளியில் இருந்து குழந்தைகள் இருவரும் வந்த பின் அவர்களுக்காக சிற்றுண்டி தயார் செய்துக் கொண்டிருந்தாள் இளவேனி. குட்டீஸ் இருவரும் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"ம்மா.. ம்மா.. ம்மா" ஜோவீஸ்

"என்னடா காபி போட்டுட்டு வரேன்"

"என்க்கு இது டீவி வேணாம். புது டீவி வாங்கி தாரீயா" ஜோவீஸ்

"ஏண்டா இந்த டீவி நல்லா தானே இருக்கு"

"ஒம்ப விம்பம்(விளம்பரம்) போதுதான் ம்மா(போடுறான்)"

"அதுக்கு புது டீவி கேப்பியா தங்கம்? புது டீவி வாங்குனாலும் அதுலயும் விளம்பரம் போட தான் செய்வான். பேசாமல் பாருடா"

"மம்மி மம்மி எனக்கு இது வாங்கி தரீங்களா? பிளீஸ்" என்று ஜோனீஸ் ஆரம்பித்தான்.

டெலிவிஷனில் 'பியாமா ஹேண்ட் வாஷ்' பர்பிளுக்கான விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஹேண்ட் வாஷ் உபயோகிக்கும் போது வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறப்பது போல சித்தரிக்கப்பட்டக் காட்சி ஓடிக் கொண்டிருந்தது.

"இது எதுக்குடா உனக்கு?"

"ம்மா பிளிஸ்மா எனக்கும் என் கையில் இருந்து பட்டர்பிளை பறக்கனும்னு ஆசையா இருக்கு" ஜோனீஸ்

"தங்கமே இதலாம் ஜஸ்ட் விளம்பர யுக்திடா. இதை மக்கள் வாங்கனும்னு தான் இந்த மாதிரி கற்பனைக் காட்சிகளை போட்டு ஏமாத்துராங்கடா தங்கம். இப்படி தான் போனவாரம் 'செவன்அப்' வாங்கி குடிச்சா மழை பெய்யும், ஜில்லுனு இருக்கும்னு சொல்லி வாங்கி கேட்ட. ஆனால் நீ குடிச்சதும் மழை வந்துச்சா? இல்லைல. இதலாம் ஏமாற்று வேலை சரியா?" பொறுமையாகவே சொன்னாள் இளவேனி.

"...."

"என்னடா? சரி வாங்கி தரேன் என்னவோ பண்ணு"

"நோ மம்மி. எனக்கு வேண்டாம். எதுக்கு இப்படி ஏமாத்துராங்க?"

அறியாமல் கேட்கும், அறிந்து கொள்ள கேட்கும் கேள்விகளுக்கு எப்படி விடையளித்தாலும் அவர்களின் மனம் அந்த ஏமாற்று வித்தைக்கு தான் மயக்கம் கொள்ளும். ஒருவாறாக சமாளித்து சிற்றுண்டி சாப்பிட வைத்து அன்றைய பாடங்களை படிக்க வைத்தாள். மனமோ நினைவுகளை நோக்கிப் பின்னோக்கி நகர்ந்தது.

'ஸ்டீவ் காலனி'

"அண்ணி ... அண்ணி.." நிலோஃபர் கதவை தட்டிக் கொண்டிருந்தாள். முதலில் விழித்தது இளநேயன் தான்.

"வேனி.. ஹேய் வேனி.." அவளைத் தட்டி எழுப்ப முயற்சித்தான்.

"ம்மா இன்னும் ஒரு அஞ்சி நிமிஷம்மா" அன்னையின் வீட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டாள் போலும்.

"அடியேய் நான் உன் புருஷன்டி. நீ நம்ம வீட்டில் இருக்க. எழுந்திரு. வெளியே நிலோ கதவ தட்டுறா பாரு" என்றதும் பதறியடித்து எழுந்தவள்

"எதுக்கு தட்டிட்டே இருக்கா?"

"டைம் 9 ஆகுதுடி. எழுந்து குளிச்சிட்டு சாப்பிட வேணாமா? அப்பதானே தெம்பா.."

"விடிய விடிய தூங்க விடாமல் பண்ணிட்டு இப்ப பேச்சு பாரு. எனக்கு தூக்கம் வருது நான் தூங்க போறேன்" என்றவள் படுத்துக் கொண்டாள்.

"விளையாடத வேனி. ரெண்டு பேருமே போலாம் வா" என்றவன் தங்களது ஆடைகளை சரிசெய்துக் கொண்டபடி வெளியே வந்தார்கள். அவனின் தங்கை இருவரையும் குறுகுறுவென்று பார்த்தாள்.

"நீ ஏண்டா வெளியே வந்த? நீ போய் ரெஸ்ட் எடு. வேனி நீ வா. மொதல்ல போய் குளிச்சிடு. மொதல்ல ஏதாவது இனிப்பு செய்துடுமா. அப்புறம் சமையல் என்ன பண்ணலாம்னு சொல்றேன்" கிளாரின் படபடவென பேசிக்கொண்டே போனார்.

கூடத்தில் உறவுக்கார பெண்மணிகள் அமர்ந்து கதையளந்துக் கொண்டிருந்தனர். இளவேனி நேயனை பார்க்க

"ம்மா அவளுக்கும் தானே டயர்டா இருக்கும். ஸ்வீட் குக்கிங் எல்லாம் நீயே பண்ணிடு. வா வேனி" என்றழைத்துச் சென்றவனை கிளாரினின் வார்த்தைகள் நிறுத்தின.

"எங்கயாவது இப்படி நடக்குமாடா? வீட்டுக்கு வந்த மருமவ தான் முதல் நாள் சாப்பாடு ஆக்கனும். இத சொல்லி கொடுக்காமயா அவங்க வீட்டில் வளத்து விட்ருகாங்க?"

அவர் என்னவோ சாதாரணம் போல் வார்த்தைகளை உதிர்த்துவிட்டார். ஆனால் அதன் அர்த்தம் புரிந்தவள் எரிமலை ஆவது நேயனுக்கு புரிந்த அடுத்த நொடி

"என்னம்மா பேசுறீங்க? தேவை இல்லாமல் எந்த வார்த்தைகளையும் பேசாதீங்க. அவளுக்கு சமைக்க தெரியாது. நீ பொறுமையா அவளுக்கு சொல்லிக் கொடு. இப்ப வந்தவங்களை கவனிம்மா" என்றவன் அவளை இழுத்துக் கொண்டு அறைக்குச் சென்றான்.

"கையை விடு நேயா. என்ன பேச்சு இது? உங்கம்மாக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லையா? உண்மைய சொல்லு நேயா" வருத்தத்துடன் வந்து விழுந்தன வார்த்தைகள்.

"வேனிம்மா நான் சொல்றது கேளு. அவங்க சுபாவமே இப்படி தான். படபடனு பேசுவாங்க. நீ அதை பெருசா எடுத்துக்காத சரியா. உனக்கு என்ன வேணும்னாலும், வேண்டாம் அப்படின்னாலும் என்கிட்ட சொல்லு அதை முழுசா நான் உனக்கு செய்து தரேன்." என்று மொழிந்தவனை பாவையவள் அணைத்துக் கொண்டாள்.

இருவரும் குளித்துத் தயாராகி வரவும் காலை உணவு மேஜையை வந்தடைந்தது. இருவரும் சாப்பிட்டு ஆலயத்திற்குச் சென்று ஜெபம் செய்துவிட்டு வந்தனர்.

இரு நாட்களும் வீடு முழுவதும் உறவினர்கள் தான். மூன்றாம் நாள் இருவரும் திரையரங்கம் செல்ல போவதாகக் கூறினர் வீட்டில்.

"நிலோவையும் கூட கூட்டிட்டு போடா. அவளுக்கும் ஆசையா இருக்கும்." என்று கிளாரின் சொல்லியவுடன் இளவேனியின் வதனம் மாறியிருந்தது.

"என்னம்மா பேசுற நீ? கல்யாணம் ஆகி முதல் தடவை படம் பாக்க போறோம். எங்களுக்கு கொஞ்சம் பிரைவேசி கொடுமா. இன்னொரு நாள் நாம எல்லாருமே சேந்து போலாம். பைக்கில் ரெண்டு பேர் தான் போக முடியும்" பொறுமையாகச் சொல்லியவனை முறைத்த கிளாரின்

"ஏண்டா நீ இப்படி மாறிட்ட? நாம மூணு பேரும் இதே பைக்கில் வெளியே போனதில்லையா? இப்ப என்ன புதுசா பேசுற" ஆற்றாமையோடு பேசினார்.

"அதான் அடுத்த தடவை கூட்டிட்டு போறேன்னு சொல்றேன் தானே அம்மா. ஹேய் நிலோ அம்மாவ பாத்துக்க நாங்க கிளம்புரோம்" என்றவன் இளவேனியின் கைகளைப் பிடித்து இழுத்தபடி வெளியேறினான்.

"மாம்ஸ் நான் சொல்லாமலே நல்லா என்னை புரிஞ்சி வச்சிருக்கடா ஐ.. ஐ.."

அவள் பேசுவதற்கு முன் ஈருருளியை சடாரென்று நிறுத்தியிருந்தான் நேயன். அந்த வேகத்தில் அவன் மீதே அவள் மோதியிருக்க

"என்னடா ஆச்சு?"

பதற்றமாக வினவியவளை சிரித்துக்கொண்டே பார்த்தவன்

"இப்ப சொல்லு" என்றான் அவள் வதனம் நோக்கி.

"என்ன சொல்லனும்?"

"ஐ லவ் யூ"

"எதுக்கு?"

"இப்ப அதானடி சொல்ல வந்த?"

"இல்லையே"

"பொய் சொல்லாதடி"

"அப்ப தோணுச்சு சொல்ல வந்தேன். இப்ப தோணல"

"லவ் பண்றன்னு சொல்லாமயே கல்யாணம் பண்ணியாச்சி இன்னும் ஒரு ஐ லவ் யூ சொல்லல. இனி குழந்தை பெத்து அந்த குழந்தைக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கும் போது தான் சொல்லுவ போல" சிறு பிள்ளையின் முறையீட்டைப் போல சொன்னவனைப் பார்த்தவள் கிளுக்கிச் சிரித்திருந்தாள்.

இருவரும் சினிமா பார்த்து விட்டு, இரவு உணவையும் வெளியே முடித்துக் கொண்டு, அன்னை, தங்கை இருவருக்கும் உணவு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தனர். கிளாரின் கயிற்றுக் கட்டிலில் திரும்பி படுத்திருந்தார்.

"ம்மா சாப்பிடியா? இந்தா சாப்பாடு வாங்கி வந்துருக்கேன்"

"ஏண்டா பொறம்போக்கு சினிமா பாக்க இவ்வளவு நேரம் ஆகுதா உனக்கு? இவ்வளவு நேரம் உனக்காக அம்மா காத்துட்டு இருந்தா தெரியுமா? லேட் ஆகும்னா சொல்ல மாட்டியா?" நிலோஃபர் திட்டியதை கேட்டு இளவேனி அதிர்ந்து தான் போனாள்.

தன் சொந்த அண்ணனை 'பொறம்போக்கு' என்கிறாளே என்று. அதை உணர்ந்துக் கொண்டவனோ அவளின் கைகளில் அழுத்தம் கொடுத்தபடி

"வெளியே போனால் முன்னபின்ன ஆக தான் செய்யும். நாளப்பின்ன நீ கல்யாணம் பண்ணபிறகு என்ன பண்றனு பாக்றேன்டி"

"நான் ஒன்னும் உன்னை மாதிரி அம்மாவை அம்போனு விட்டுரமாட்டேன் போடா. சரி பார்சல கொண்டா. என்ன வாங்கி வந்த?" என்றபடி உணவில் கவனம் ஆனாள்.

இருவரும் அறைக்குள் நுழைந்ததும் இளவேனி தன் கையில் இருந்த 'ஹேண்ட் பேக்'கை தூக்கி விசிறியெறிந்தாள்.

"அம்மு பிளீஸ்.. இதை இதோட விடேன்டி." அவளது கைகளைப் பற்றி கிட்டத்தட்ட கெஞ்சினான்.

"என்னடா இது? மூவி பார்க்க தானே போனோம். சொல்லிட்டு தானே போனோம். அவ என்னடானா அம்போனு விட்டு போனதா சொல்லுறா. நீயும் எதுவும் சொல்லாமல் வர்ர. அண்ணன்ற மரியாதை இல்லை வாட்ஸ் தி வேர்ட் 'பொறம்போக்கு' ஓ மை காட் அன்பிலிவபுள் நேயன்" அயர்ந்து போனாள் இளவேனி.

"வேனி வேனி இங்கு பாரு ரிலாக்ஸ். அவ என் தங்கச்சி அப்படியே பேசி பழகிட்டா. அவங்க பழக்கத்தில் நீ இடைபுகாத அதேபோல் நமக்கு இடையே அவங்க வராதமாதிரி நான் பாத்துக்கிறேன். பிளிஸ். பைக்கில் வரும் போது ஏதோதோ சொன்னீயேடி இப்ப ரிகர்சல் பாக்கலாமா?" என்றதும் அவள் வதனம் செவ்வரளியாய் பூத்தது.

"டேய் பேச்ச மாத்துரியா? சரி பொழைச்சி போ. பட் பனிஷ்மென்ட் இருக்கு."

"தாங்கள் எவ்வளவு பனிஷ் வேணாலும் பண்ணாலும். வாங்கிக் கொள்ள ஆவலுடன். இங்கவா ... இல்லை உதட்டிலா?" கன்னங்களை திருப்பி காட்டியவன் பிறகு உதட்டை குவித்துக் காட்டினான்.

"அங்கு இல்லை இங்க" என்றவள் தன் கை முஷ்டியை மடக்கி அவன் வயிற்றில் ஒரு குத்து விட்டாள்.

"அடியேய் அம்மாஆஆ... இருடி இன்னிக்கும் உன்னை தூங்கவிடாமல் பண்றேன்."

"நாளைக்கு ஆபிஸ் போகனும்லா சீக்கிரமே போய் தூங்குடா" என்றவள் மெத்தையில் அவனைத் தள்ளி விட அவளையும் இழுத்துக்கொண்டே விழுந்தான். விரும்பியே அவளும் அவனுள் மூழ்க ஆரம்பித்தாள்.

மறுநாள் காலையில் வழக்கம் போல் தாமதமாகவே எழுந்து வெளியே வந்தாள் இளவேனி.

"அய்யய்ய அண்ணி என்ன இது நைட்டியை மாத்தி போட்டு வந்துருகீங்க?" என்றவள் சொன்னதும் தான் தன்னை குனிந்து பார்த்தாள். அவசரத்தில் நைட்டியை அணிந்தவள் இதைக் கவனிக்கவில்லை. இன்னும் அவள் சிரித்துக் கொண்டே இருக்க அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

இளநேயனும் அங்கு சிரித்தபடி நிற்க, கோவத்துடனே குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள். அவள் தாழிடமுன் அவனும் உள்நுழைந்து சமாதானம் செய்து தாமதமாகவே வெளியே வந்தார்கள். பின் அரக்க பரக்க அலுவலகம் கிளம்பினான். அவனை அனுப்பி வைத்தவள் தன் அன்னையிடம் அலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தாள்.

"ம்ம் சாப்பிட்டேன்மா. நீங்க சாப்பிட்டீங்களா? அப்பா எங்கம்மா? பெல்வின் வேலைக்கு போய்ட்டானா?" பேசிக்கொண்டு இருந்தவள் வாசலில் நிழலாடவும் அழைப்பைத் துண்டித்து விட்டு வந்து நின்றாள்.

"எங்க மேரி வயசு காலத்துல நாம உக்காரலாம்னு பாத்தா வந்தவளுக்கும் சேத்து வடிச்சிக் கொட்ட வேண்டியிருக்கு. ம்ஹூம் சமையல்ல 'அ' கூட தெரியாத பொண்ண கட்டினு வந்துருக்கான். வெந்நீர் வைக்க தெரியுமோ இல்லையோ" வந்த பெண்மணியிடம் புலம்பிக் கொண்டிருந்தார் கிளாரின். அன்றைய தினத்தில் மட்டுமே மூன்று பெண்களிடம் இந்த பாட்டினை பாடிக்கொண்டிருந்தார் எனலாம்.

வேலை முடிந்து வந்த நேயனிடம் "மாம்ஸூ நான் நாளைல இருந்து சமைக்கவா?" என்றுக் கேட்டாள்.

"ஏன்டி நான் நல்லா இருக்க வேணாமா? என் வயிறு என்ன பாவம் செய்தது?"

"டேய் என்னடா நீயே இப்படி சொல்ற?" இளவேனி

அண்ணனை அழைக்க வந்த நிலோஃபரின் காதில் இளவேனி பேசியது விழ,

"ம்மா இங்க வாயேன் அண்ணி அண்ணாவ டேய் டானு பேசுறாங்க"

அவளது சத்தத்தில் அதிர்ந்தவர்கள் கதவைத் திறந்து வெளியே வர

"எதுக்கு அண்ணாவ அப்படி பேசுறீங்க? மரியாதையா பேச தெரியாதா?" நேரடியாகவே கேட்டிருந்தாள் இளவேனியிடம்.

"மரியாதைய பத்தி நீ எனக்கு கிளாஸ் எடுக்காத நிலோ. பெத்த அம்மாவையே வாயேன் போயேன்ற. அண்ணாவ பொறம்போக்குனு சொல்ற. நீ மரியாதைய பத்தி பேசிறீயா?"

என்று சூடாக பதிலளித்த இளவேனியை அமைதிப்படுத்தவா?, முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகியபடி வந்த அன்னையை தடுப்பதா? என்று வெகுவாகக் குழம்பி போய் நின்றான் இளநேயன்.

"என் புள்ளய நாங்க எப்படியும் பேசுவோம் கூப்பிடுவோம். அத கேக்க நீ யாருடி? இப்ப வந்தவள பேச விட்டு வேடிக்கை பாக்றீயாடா இளா?" அவளில் ஆரம்பித்து இவனிடம் முடித்தார் கிளாரின்.

"நான் யாரா? உங்க பையன் தாலிக் கட்டின பொண்டாட்டி. எனக்கு எல்லா உரிமையும் இருக்கு" இளவேனி

"வேனி நீ உள்ள போ. ம்மா நாங்க பேசிட்டு இருக்கும் போது கதவை தட்டாமல் பேசுறத ஒட்டுக் கேட்டு வந்து சண்டை போடுறா உம்பொண்ணு. அவளை கேக்காம நீ என்னையும் அவளையும் பேசுற. அவளும் இந்த வீட்டு பொண்ணுதான் அம்மா. புரிஞ்சி நடந்துக்க"

"வந்தவளுக்காக பெத்தவள எடுத்தெறிஞ்சி பேசுறான் பாரு" நிலோ

"நிலோ வாயை உடைச்சிருவேன். வாயை மூடிட்டு போடி அங்குட்டு" என்றவன் அறைக்குள் நுழைந்தான்.

"உங்க வீட்டில் நம்ம கல்யாணத்துல இஷ்டம் இல்லை தானே நேயன்?"


"...."

"ஆமாவா இல்லையா"

"எனக்காக ஒத்துகிட்டாங்க"

"இதை ஏன் முன்கூட்டியே சொல்லல எனக்கு? நான் வலிய வலிய போய் பேசும் போதெல்லாம் விலகி போனாங்க. நிலோவும் ஒட்டுதல் இல்லாமல் தான் பேசுனா. நான் போக போக சரியாகும் நினைச்சேன். இது எப்போதும் சரியாகாத வியாதி"

"கொஞ்சம் நாள் போனால் சரியாகிவிடும் வேனி. நான் ஆபிஸ் போய்ட்டு வரேன்டி. ஆயிரம் டென்ஷன் மண்டைக்குள் ஓடுது. வீட்டில் எனக்கு கொஞ்சமாது நிம்மதி கொடுங்கடி" என்றவனை அணைத்துக் கொண்டாள்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல ஒரு மாதம் கடந்திருந்தது. அன்றைய தினம் காலை எழும் போதே தலைவலியோடு தான் எழுந்தாள் இளவேனி. இந்த ஒரு மாதத்தில் சமையல் செய்ய கற்றுக் கொண்டாள்.

இருக்கவே இருக்கிறது வலையொளி தளம். அதில் ஒவ்வொரு சமையல் காணொளி காட்சிகளை ஓட விட்டு கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டாள். எழும் போதே தலைவலி படுத்த,

"அத்தை இன்னைக்கு நீங்க சாப்பாடு செய்றீங்களா? எனக்கு கொஞ்சம் உடம்பு முடில"

"ம்க்கும் பகலெல்லாம் ஒரே தூக்கம் சாப்பிட கூட வராமல். நைட் விடிய விடிய தூங்குறது கிடையாது பின்ன எல்லாம் செய்ய தான் செய்யும்" என்று முணுமுணுத்துக் கொண்டே உணவுக் கூடத்திற்கு சென்றார்.

இளவேனிக்கு அவரது பேச்சு தெளிவாகக் கேட்க தன்னிரக்கத்தில் கண்ணீர் சுரந்தது. அதனை கவனித்த நேயன் விருட்டென்று சமையல் கூடத்திற்கு நுழைந்தவன்

"உங்களுக்கு சமைக்க முடிலனா சொல்லுங்கம்மா. நான் வெளியே வாங்கி தரேன். ஆனால் தேவை இல்லாத வார்த்தைகளை உதிர்க்காதீங்க. அவளுக்கு கொஞ்ச நாளாவே அப்படி தான் இருக்கு. இன்னைக்கு நான் சீக்கிரம் வந்துடுவேன் வேனி டாக்டர பாத்துட்டு வரலாம்"

தனக்காக பேசியனை விழிஉவர்நீரோடு பார்த்தவள் புன்னகைத்தாள். மாலை விரைவாக வந்தவன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

மருத்துவ பரிசோதனைக்கு பின் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் காத்திருந்தது. இளவேனி முதல் மாதமே கர்ப்பம் தரித்திருந்தாள். அதன் பொருட்டு சோர்வின் காரணமாக அதிக நேரம் உறக்கமும் தலைச்சுற்றலுமாக இருந்ததை உணர்ந்துக் கொண்டார்கள். வீட்டிற்கு வரும் வழியில் இனிப்புக் கடையில் 'லட்டு' வாங்கிக் கொண்டார்கள்.

"மாம்ஸ் எனக்கு ஏதாவது குடிக்கனும் போல இருக்குடா" ஈருருளியை ஓரமாக நிறுத்தியவன் அருகில் இருந்தக் கடையில் மாதுளை பழச்சாறு வாங்கி தந்தான். அதனை பருகியவள் அவனையும் சேர்த்து பருகிக் கொண்டிருந்தாள்.

"என்னடி அம்மு அப்படி பாக்குற? நாம வெளியே இருக்கோம்." இலேசாக வெட்கம் எட்டிப்பார்த்ததோ?

"ஐ லவ் யூ மாம்ஸ்" என்றவள் மொழிந்ததும் "ஹேய்" என்று துள்ளிக் குதித்தான்.

"இப்ப நீதான்டா எல்லாரும் பாக்குற மாதிரி பண்ற"

"நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்டி டபுள் டமக்கா மாதிரி டபுள் சந்தோஷம் தேங்க்ஸ்டி என் அருமை பொண்டாட்டி" கன்னங்களை கிள்ளிக் கொஞ்சினான்.

"நான் தான் உனக்கு தேங்க் பண்ணணும் நேயா. இந்த சமூகத்தில் எனக்கு 'அன்னை'ன்ற ஸ்தானத்தை தந்துருக்க. நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன். வா செல்பி எடுக்கலாம்" மனம் முழுவதும் உவகைக் கொள்ள பேசியிருந்தாள் இளவேனி.

"நீயும் தான் எனக்கு தந்தை என்ற ஸ்தானத்தை தந்துருக்க அதுக்கு நானும் உனக்கு தேங்க் பண்றேன்டி" என்றவன் அவள் பழச்சாறு அருந்தியதும் வீடு வந்துச் சேர்ந்தனர்.

"ம்மா ம்மா இங்க வாயேன்"

"என்னடா ஏன் கத்திட்டே வர்ர?" அடுக்களையில் இருந்து வந்தவரை கைப்பற்றி சுற்றி விட்டவன்,

"நீ பாட்டி ஆகிட்டம்மா. நான் அப்பா ஆகிட்டேன்" என்று மகிழ்ச்சி பொங்கக் கத்தியவன் அவரது மறுமொழியில் வாயடைத்து போய் நின்றிருந்தான்.

"ஒரு மாசம் தானேடா ஆச்சு இளா அதுக்குள்ள என்ன அவசரம் உங்களுக்கு" கிளாரின்

"எனக்கு கல்யாணம் எல்லாம் பண்ணி கொடுக்க வேணாவா? நீ உன் லைஃப்ப பாக்க ஆரம்பிச்சிட்டா எங்கள யார் பாத்துப்பா?" நிலோஃபர்.

"வாயை மூடுங்க ரெண்டு பேரும். என்ன உங்களை நடுரோட்டில் விட்டு வந்துட்டேனா? எவ்வளவு சந்தோஷமா வந்தேன் தெரியுமாம்மா? ச்சைக்" என்றவன் விறுவிறுவென்று அறைக்குள் நுழைந்துக் குளியலறைச் சென்று தாழிட்டு கொண்டான். பின்னே வந்த இளவேனி அழைத்து பார்க்க

"வரேன் வேனி பைஃவ் மினிட்ஸ்மா"

ஐந்து நிமிடம் கழித்து வெளியே வந்தவன் உடை மாற்றி வந்து அமர அவனை ஆதுரமாக அணைத்துக் கொண்டாள்.

"இப்படி ஏதாவது நடக்கும்னு தெரிஞ்சி தான் அங்கேயே உன் சந்தோஷத்தை சொன்னியா வேனி"

"விடு மாம்ஸ். நான் போய் சாப்பாடு எடுத்துட்டு வரேன்" என்றவள் அவனை சாப்பிட வைத்து உறங்க வைத்தாள்.

✍பிரியமான இதழணைப்புகளும்
அடங்காத மோகத்தீயும்
ஏக்கம் கொண்டு
காத்திருக்கின்றன...
பெருங்காதல் தந்த பரிசு
சுந்தரி வயிற்றில்
உதயம் ஆகியிருக்க
'காதல் மொழிதல்'
போலவே வருடம்
காத்திருக்க வேண்டுமோ...?
என்ன செய்வேன்?
இதுவரை இருந்த
காதல் மும்மடங்கு
அதிகரிக்க
என் மகவின்
வரவை எதிர்பார்த்து
நான்✍


மறுநாள் அவளிடம் இருவரும் பேசவும் இல்லை, சாப்பிட அழைக்கவும் இல்லை. சாப்பிட மறந்து உறங்கிக் கொண்டிருந்தாள் இளவேனி. ஆனால் வயிற்றிற்கு அது தெரியாதே. கூப்பாடு போட்ட வயிற்றினை சமாதானம் செய்ய சாப்பிட எழுந்தாள் இளவேனி தாமதமாக. ஆனால் எதிர்பாராதவகையில் தலைசுற்றிக் கீழே விழுந்திருந்தாள்.

முகை உதிரும்...
 
Top Bottom