• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 10

நிதனிபிரபு

Administrator
Staff member
“ உனக்கு கவுன்சிலிங் கொடுக்கணும்னு ஆசைப்படறேன், நீ மறுக்காம எதுவும் சொல்லாம கவுன்சிலிங் எடுத்துக்கனும்” என கமிஷனர் கூறினார்.


“கவுன்சிலிங்கா நான் நல்லா தான் சார் இருக்கேன் எனக்கெல்லாம் தேவையில்லை?”என நந்தன் சொல்ல


“அப்போ நான் அந்த பொண்ண பத்தி உனக்கு விசாரிச்சு சொல்ல மாட்டேன் பரவாயில்லையா?” என கமிஷனர் கேட்க, அதிர்ந்து போனான் நந்தன்.


“சார் ப்ளீஸ் சார், அந்த பொண்ண பத்தி மட்டும் விசாரிச்சு சொல்லுங்க, நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்” என்று நந்தன் சொல்ல,


‘அப்படி வா வழிக்கு’என்று தன் மனதில் நினைத்தார் கமிஷனர் அசோக்.


“சரி உனக்கு கவுன்சிலிங் குடுக்குறதுக்கு நான் ஏற்பாடு பண்றேன், நீ கவுன்சிலிங் எடுத்துக்க , நான் பர்சனல் வொர்க் நிமித்தமா ரெண்டு வாரம் லீவு கேட்டு இருக்கேன், அந்த ரெண்டு வாரத்துல என்னோட பர்சனல் வேலையையும் முடிச்சிட்டு அந்த பொண்ண பத்தின டீடெயில்ஸ்யும் கலெக்ட் பண்ணிட்டு வந்து உன்கிட்ட சொல்றேன், அதுவரை பொறுமையாக இரு. இந்த மாதிரி சின்ன புள்ள தனமா எதுவும் செய்யாத” என்று கமிஷனர் சொல்ல சந்தோஷத்தில் அவரை கட்டிப்பிடித்தான் நந்தன்.


“கண்டிப்பா சார், நீங்க சொன்ன மாதிரி நானும் கவுன்சிலிங் எடுக்க ஒத்துக்கிறேன். நீங்க சொன்ன மாதிரி இரண்டு வாரத்துல என்னால பாதிக்கப்பட்ட பொண்ண பத்தி விசாரிச்சு என்கிட்ட சொல்லுங்க அது போதும் எனக்கு” என்று நந்தன் கூறினான்.


“சரி நந்தன், எனக்கு வேலை இருக்கு நான் கிளம்புறேன். நீ போயி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்க, நான் ஜெயிலர் கிட்ட உன்னைய தொந்தரவு பண்ண வேண்டாம்னு சொல்லிடுறேன்” என்று சொல்லிவிட்டு நந்தனிடமிருந்து விடை பெற்றார் அசோக்.


நந்தனை விட்டு சிறிது தூரம் நடந்து சென்றவர் எதையோ யோசித்து விட்டு பின் திரும்பி,


“நந்தா ஒரு நிமிஷம், அந்த பொண்ண பார்த்தால் நீ என்ன செய்வ?” என்று தன் சந்தேகத்தை கேட்க, எந்த உணர்வையும் பிரதிபலிக்காமல் “மன்னிப்பு கேட்பேன் சார்” என்று கூறினான் நந்தன்.


நந்தனின் முகத்தை பார்த்துவிட்டு ஒரு நிமிடம் ஆராய்ந்தார் அசோக்.

நந்தனும் அவரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.


சில நிமிடங்கள் நந்தனை வைத்த கண் வாங்காமல் பார்த்தவர், “சரி நான் போறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து விடைபெற்றார்.


‘இப்போதைக்கு முதல்ல நந்தனுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவனை நார்மல் ஆக்குவோம்.அதுக்கப்புறம் அவன் சொன்ன மாதிரி அந்த பொண்ண தேடி புடிச்சு இவன் கண் முன்னாடி நிக்க வச்சால் கொஞ்சம் இவனோட குற்ற உணர்ச்சி குறையறதுக்கு வாய்ப்பு இருக்கு’ என்று நினைத்துக் கொண்டு

தன் அலைபேசியை எடுத்து மாயமித்ராவின் நம்பரை தேடினார்.


சில வினாடிகளில் மாயமித்ரா என எழுதியிருந்த பெயரை பார்த்து அழைப்பை விடுக்க,


“ஹலோ மாயமித்ரா “


“சொல்லுங்க சார்”,


“எப்படி இருக்கீங்க?”



“நல்லா இருக்கேன் சார், நீங்க எப்படி இருக்கீங்க”


“ம்ம்ம், நான் நல்லா இருக்கேன். நம்ம ஏற்கனவே ஒரு கைதிக்கு கவுன்சிலிங் கொடுக்கிறத பத்தி உங்க கிட்ட சொல்லி பேசுனோம்ல , அவருக்கு இப்ப அர்ஜெண்டா கவுன்சிலிங் கொடுக்கணும்.


நீங்க வந்தப்ப அவரோட ஒன்னா ஜெயில்ல இருந்தவரு இறந்து போயிட்டாருன்னு உங்களுக்கு தெரியும் தான, அதுல இருந்து அந்த பையனோட நிலைமை இன்னும் மோசம் ஆயிருச்சு, இன்னைக்கு காலையில தன்னை தானே தாக்கி காயப்படுத்திகிட்டு இருந்துருக்கான் , நல்லவேளை அங்கிருந்த போலீஸ் பார்த்துட்டு அவன காப்பாத்திட்டாங்க”


“அச்சச்சோ என்ன சார் சொல்றீங்க,

இப்ப நல்லா இருக்காரா?”


“இப்ப நல்லா இருக்காரு,எந்த பிரச்சனையும் இல்ல

போலீஸ்காரங்க பாத்துட்டு நந்தன தடுத்துட்டு, மருத்துவ உதவி கொடுத்து இருக்காங்க,


அவன் ரொம்ப மன அழுத்தத்துல இருக்கான். கட்டாயம் அவனுக்கு கவுன்சிலிங் தேவைப்படுது. நீங்க வந்து கொடுத்தால் இன்னும் பெட்டரா இருக்கும், நந்தன் சீக்கிரமா ரெக்கவரி ஆகுறதுக்கு வாய்ப்பு இருக்குன்னு எனக்கு தோணுது அதனாலதான் உங்க கிட்ட கேட்டேன், நீங்க எப்ப ஃப்ரீ என்று சொல்ல முடியுமா?” என்று அசோக் கேட்க,


“சார் இப்போதைக்கு பிஸியா தான் சார் இருக்கேன்! நேத்து எங்க கம்பெனிக்கு புது கவர்மெண்ட் ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கு. அந்த ப்ராஜெக்ட் கோயம்புத்தூர்ல பண்ண வேண்டியது இருக்கு. ஆபீஸ்ல இருக்கிற அஞ்சு பேரு அந்த கன்ஸ்ட்ரக்ஷன டிசைன் பண்ணி மானிட்டர் பண்றதுக்கு கிளம்பனும்னு ஓனர் சொல்லி இருக்காங்க, அதுல நானும் ஒருத்தி”என கூறினாள் மாயமித்ரா.


“அச்சச்சோ அப்படியா, நந்தனுக்கு நீங்க கவுன்சிலிங் கொடுத்தால் நல்லா இருக்கும்னு எனக்கு தோணுச்சு அதான் உங்ககிட்ட கேட்டேன், சரி விடுங்க மித்ரா வேற யாரையாவது கவுன்சிலிங் கொடுக்க சொல்லலாம்” என்று அசோக் சொல்ல,



“சார் நீங்க என் மேல இவ்வளவு நம்பிக்கை வச்சு என்னைய கவுன்சிலிங் கொடுக்க சொன்னதுக்கு முதல்ல நன்றி, ஒன்னு பண்ணலாம், சார் நான் நாளை மறுநாள் தான் கோயம்புத்தூருக்கு கிளம்புறேன். நாளைக்கு ஈவினிங் வேணும்னால் நான் கொஞ்சம் ப்ரீ தான் அந்த டைம் உங்களுக்கு ஓகேன்னா சொல்லுங்க நான் வந்து கவுன்சிலிங் கொடுத்துட்டு போறேன்” எனக் கூறினாள் மித்ரா.



“ரொம்ப நல்லது மித்ரா, அப்போ நாளைக்கே கவுன்சிலிங் கொடுங்க”


“சரி சார், நான் சாயங்காலம் வரும்போது உங்களுக்கு போன் பண்றேன்”


“சரி மித்ரா, நீங்க கவுன்சிலிங் கொடுக்கிறதுக்கான அரேஞ்ச்மென்ட் எல்லாத்தையும் நான் ஏற்பாடு பண்ணிடுறேன் , ரொம்ப நன்றி மித்ரா” என்று அசோக் சொல்ல,



“ சார் ஒரு சந்தேகம் கேட்கலாமா?”


கேளுங்க மித்ரா”,


“ எத்தனையோ கைதிகளை உங்க வாழ்க்கையில நீங்க பார்த்திருப்பீங்க ஆனா இந்த கைதிக்கு மட்டும் நீங்க ரொம்ப மெனக்கெடுற மாதிரி எனக்கு தெரியுது, அது ஏன்னு தெரிஞ்சுக்கலாமா? “ என்று மித்ரா கேட்க,



“இன்னைக்கு நான் உயிர் வாழ்வதற்கு காரணம் அவன் தான்” என்று அசோக் சொல்ல அதிர்ந்து போனாள் மாயமித்ரா.


“ சார் நீங்க சொல்றது புரியல!”


“நான் இந்த ஜெயிலுக்கு அசிஸ்டன்ட் கமிஷனரா வந்தப்ப, ஜெயிலுக்குள்ளயே கஞ்சா போதப்பொருள் புழக்கம் அதிகமா இருந்துச்சு. எங்க வேலை பார்த்த உயர் அதிகாரிகளே சப்ளை பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அதை நான் தட்டிக் கேட்க ஆரம்பிச்சேன். இதனால இங்கே இருந்த காவலர்களுக்கும் எனக்கும் ஒத்துப் போகல, போதப்பொருள் கிடைக்காததற்கு நான் தான் காரணம்னு சில கைதிகளும் என் மேல கோபமா இருந்தாங்க. முடிஞ்சவரை காவலர்கள் என்னைய இந்த போஸ்டிங்கில் இருந்து வெளில அனுப்புறதுக்கு நிறைய முயற்சி பண்ணுனாங்க ஆனால் அது நடக்கல. ஆனா கடைசில கைதிகள் கிட்ட சொல்லி, என்னைய போட்டு தள்ளறதுக்கு பார்த்தாங்க.


அவங்க திட்டப்படி ஒரு கைதிய ரெடி பண்ணி கொலை முயற்சி பண்ண நெனச்சு கத்திய வச்சு என்னைய குத்த வந்தப்ப ஓடி வந்து என்னை காப்பாத்துறதுக்காக குத்த வந்த கத்திய அவன் கையால புடிச்சு தடுத்துட்டான், அவன் கையில குத்தி இரத்தம் வழிஞ்சு ஓடுச்சு, அதுக்கப்புறம் நான் சுதாரிச்சு அந்த கைதிய அடிக்க காவலர்கள் எல்லாரும் வந்து அவனை கூட்டிட்டு போயிட்டாங்க. அதுக்கப்புறம் அவன யாரு அனுப்புனான்னு இன்வெஸ்டிகேஷன் பண்ணி அவர்களை எல்லாம் இங்கே இருந்து அனுப்பியாச்சு,


அன்னைக்கு நந்தன் மட்டும் இல்லைனால் கட்டாயம் நான் உயிரோட இருந்திருக்க மாட்டேன்,



என் உயிரை காப்பாத்துன்னு அவனுக்கு என்னால முடிஞ்சத செய்யணும்னு அன்னைக்கு நினைச்சேன், ஆனால் அவங்கிட்ட என்ன பிரச்சனையும் நான் கேட்க கேட்க பதில் எதுவுமே சொல்லாம அமைதியா போயிட்டான். ஏன் இவன் இப்படி போறான்னு எல்லார்கிட்டயும் கேட்டதுக்கு அவன் எப்பவும் அப்படித்தான், அதையும் ஜெயிலுக்கு உள்ள வந்த நாள்ல இருந்து யார்கிட்டயும் பேசறது இல்லைன்னு சொன்னாங்க,


கடைசியா அவனோட கேஸ் ஹிஸ்டரிய பார்த்தப்ப தான் அவன் எதற்காக ஜெயிலுக்கு வந்திருக்கான்னு எனக்கு தெரிஞ்சிச்சு.


ரொம்ப நல்ல பையன் ஏதோ ஒரு கோபத்துல குடும்ப பிரச்சனையில ஒரு பெரிய தப்பு பண்ணிட்டான், கடைசில ஜெயிலுக்கு வந்துட்டான். ஆனா அவங்க ரெண்டு குடும்பமும் சமரசம் ஆகிட்டாங்க, இவ மேல போட்ட கேச கூட வாபஸ் வாங்கறேன்னு அந்த பொண்ணு குடும்பத்துல இருந்து சொல்லிட்டாங்க, ஆனாலும் நான் பண்ணுன தப்புக்கு தண்டனை அனுபவிக்காமல் நான் வெளியில வரமாட்டேன்னு பிடிவாதமா கிட்டத்தட்ட எட்டு வருஷமா இங்கேயே தண்டனையை அனுபவிச்சிட்டு இருக்கான். இன்னும் முப்பது நாள்ல அவனோட ரிலீஸ் இருக்கு, அதுக்குள்ள அவன் மனசுல இருக்குற குற்ற உணர்ச்சியை மாத்தி வெளியில போய் நல்லபடியா வாழ்வதற்கு அவனை தயாரா அனுப்பனும்னு நான் ஆசைப்படுறேன்” என்று சொல்லி முடித்தார் கமிஷனர் அசோக்.


எதிர்ப்புறம் எந்த பதிலும் வராமல் இருக்க,


“ மித்ரா, லைன்ல இருக்கீங்களா? “


“ இருக்கேன் சார், என்னாச்சு எதுவும் சொல்லாம இருக்கீங்க “


“அதெல்லாம் ஒன்னும் இல்ல சார், நீங்க சொன்னத கேட்டு கொஞ்சம் வருத்தமாயிருச்சு, சில கடந்து போன நிகழ்வுகள் கூட கண் முன்னாடி வந்த மாதிரி இருந்துச்சு, பரவால்ல சார் தப்பு பண்றது நம்மளோட இயல்பு, என்னைக்கு நம்ம தப்பு பண்ணிட்டோம்னு நம்ம மனசார மன்னிப்பு கேட்கிறோமோ அப்பவே நம்ம மனுஷன் ஆயிட்டோம். அதனால கடந்த காலத்தை நினைத்து நிகழ் காலத்தை வெறுத்து ஒதுக்குகிறது எந்த வகையில நியாயம், அதனால கண்டிப்பா அவரு அதையெல்லாம் மறந்து நல்லபடியா புது வாழ்க்கை வாழனும், அதுக்காக என்னால என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்றதுக்கு தயாரா இருக்கேன், கண்டிப்பா நாளைக்கு வாரேன் சார் “ என சொல்லிவிட்டு அழைப்பை அணைத்தாள் மாயமித்ரா.


இனி என்ன நடக்கும், நாளை இருவரும் சந்திப்பார்களா? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

 
Top Bottom