• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 11

Vishakini

Moderator
Staff member
பிரகாஷ் கண்ணா தன் அறைக்குள் நுழைந்து தன் பாட்டி சொன்னதை யோசித்துக் கொண்டிருந்தான்.

அத்தை மகள் ஜானுவை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று அவன் சிறு வயதிலேயே இருந்து பாட்டி போதித்து கொண்டே தான் இருந்தார்.

அதனால் தான் என்னவோ பெண்களிடம் ஜாலியாகவும், நட்பு ரீதியாக பழகியவன் எந்த பெண்ணிடத்திலும் காதல் என்ற உணர்வோடு பழகவில்லை.


ஆனால் அப்படி இருந்தும் என்று படிப்பை முடித்துவிட்டு முதல் முறையாக தன்னுடைய பரம்பரை பிசினஸை கையில் எடுத்தானோ, அன்று முதல் நாள் ஆபீஸ்க்குள் நுழைந்தபோது, முதல் முதலாக அவன் கண்ணில் விழுந்தவள்
தான் மாயமித்ரா.

ஆபீசுக்கு புது எம்டி வராரு, அவர இன்வைட் பண்றதுல எந்த குறையும் இருக்கக் கூடாது என்று முன்னால் எம் டியான அம்புஜம் பாட்டி சொல்லி இருக்க, அவனை வரவேற்க மிக சிரத்தையாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் மாயமித்ரா.

முதல் முறை பூங்கொத்து கொடுத்து தன்னை ஆபீஸ்க்குள் இன்வைட் செய்த மாயமித்ராவிடம் தன் மனதை கொடுத்து விட்டான் நம் நாயகன் பிரகாஷ் கண்ணா.

தன்னுடைய காதலை மறைமுகமாக எத்தனையோ வழியில் மாயமித்ராவிடம் உரைக்க முயற்சியும் செய்திருக்கிறான், ஆனால் அதையெல்லாம் கண்டு கொண்டவளோ அவனிடம் தன் மனதில் உள்ளதை மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ ஒரு முறை கூட காட்டிக் கொள்ளவில்லை, அதையெல்லாம் நினைத்துப் பார்க்க அவன் மனம் ரணம் கொண்டது.


‘மித்ரா உனக்காக ரெண்டு வருஷம் காத்துகிட்டு இருந்துட்டேன். இதுக்கு மேல என்னால காத்துகிட்டு இருக்க முடியாது, பாட்டிவேற இன்னைக்கு கோபமா பேசிட்டாங்க. சீக்கிரத்துல வெளிப்படையா என்னுடைய காதல உன்கிட்ட சொல்லுவேன்,
அப்போ எப்படி நீ எதுவும் தெரியாத மாதிரி நடிக்கிறேனு நானும் பாக்குறேன்’ என நினைத்துக் கொண்டே
தன்னவளின் நினைவுகளில் அப்படியே உறங்கியும் போனான் பிரகாஷ் கண்ணா.


மறுநாள் பொழுது புலர, கோயம்புத்தூருக்கு தேவையானதை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் மாயமித்ரா.

அவள் எடுத்து வைத்துக் கொண்டிருந்த பொருள்களின் சத்தம் தூங்கிக் கொண்டிருந்த ரஞ்சனாவின் காதுகளில் விள விழித்தவளோ,

“ஏண்டி காலங்காத்தால உருட்டிகிட்டு இருக்க! கொஞ்சம் கூட தூங்க விட மாட்டியா? நாளைக்கு கோயம்புத்தூர் போறதுக்காக நல்ல மனசோட இன்னைக்கு நமக்கு லீவ் கொடுத்து இருக்கிறார் நம்ம எம் டி, நானே இன்னைக்கு நல்லா தூங்கி மதியத்துக்கு மேல தான் எந்திரிக்கணும்னு நினைச்சேன், நீ போடுற சத்தத்துல என் தூக்கம் கலையுது!” என ரஞ்சனா சலித்துக் கொள்ள


“கோயம்புத்தூருக்கு போறதுக்கு எல்லாத்தையும் எடுத்து வச்சுக்கிட்டு இருக்கேன்!”


“அதுக்குத்தான் இன்னைக்கு ஈவினிங் வர நேரம் இருக்கே, அதுக்குள்ள ஏன் எடுத்து வைக்கிற?” என ரஞ்சனா கேட்க,


“அது ஒன்னும் இல்லடி! நான் ஏற்கனவே உன்கிட்ட சொன்னேன்ல, கமிஷனர் அசோக் ஒரு கைதிக்கு கவுன்சிலிங் கொடுக்க சொன்னார்ருனு “


“ஆமா சொன்ன அதுக்கு என்ன இப்ப, உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது சொல்லுங்கன்னு சொன்னதா தான சொன்ன?” என ரஞ்சனா கேட்க,

“இல்லடி நேத்து சார் போன் பண்ணுனாரு! அந்த கைதி திரும்பவும் தற்கொலை முயற்சி பண்ண ஆரம்பிச்சுடாருன்னு, இப்ப அவர் இருக்கிற சிச்சுவேஷன்ல கண்டிப்பா கவுன்சிலிங் கொடுத்தே ஆகணுமாம், அதுவும் நான் கொடுத்தா நல்லா இருக்கும்னு சார் விருப்பப்பட்டு சொன்னாரு,

முடிஞ்சா நாளைக்கு ஈவினிங் நீங்க வந்து கொடுக்க முடியுமான்னு கேட்டாரு, நானும் சார் கிட்ட நேத்து இன்னைக்கு ஈவினிங் வரேன்னு வர்றேன்னு சொல்லிட்டேன்,

அங்க போயிட்டு வந்து எல்லாத்தையும் பேக் பண்ணி வைக்க முடியாதுல்ல அதான் பேக் பண்ணி வச்சிட்டா
அங்க போயிட்டு வந்து தூங்கி எந்திரிச்சு மறுநாள் காலையில அஞ்சு மணிக்கு போயிடலாம்ல! என கூறினாள் மாயமித்ரா.


“ஏண்டி இப்படி நேரம் காலம் இல்லாம உன்னை வருத்திக்கிற! ஒரு பக்கம் வேலை பாக்குற, ஒரு பக்கம் ஏதாவது தொண்டு செய்ற, உன்னோட வாழ்க்கையை நீ எப்ப தான் வாழ போற?” என ரஞ்சனா கேட்க,

“எனக்கு வாழ்க்கையா?” என விரக்தியாக சிரித்தாள் மாயமித்ரா. உடனே ரஞ்சனா மித்ராவை முறைக்க

“நான் இப்ப வாழுற வாழ்க்கை எனக்கு புடிச்சிருக்கு! என்னோட தேவைக்கு வேலை பாக்குறேன். வேலையில்லாத நேரத்துல என்னால முடிஞ்ச அளவுக்கு சில பேருக்கு தொண்டு செய்யுறேன். இதுக்கு மேல எப்படி வாழனும், இப்படியே காலம் போற போக்குல வாழ்ந்துட்டு போயிடலாம்!” என கூறினாள் மாயமித்ரா.


“என்னடி இருபத்தி ஆறு வயசு தான் ஆகுது.அதுக்குள்ள அறுபத்தி ஆறு வயசு கிழவி பேசுற மாதிரி பேசுற! உனக்குன்னு குடும்பம் வேண்டாமா ?” என ரஞ்சனா கேட்க, உதட்டுக்கு வலிக்காமல் சிரித்தாள் மாயமித்ரா.


“சரிடி, எனக்கு வேலை இருக்கு பேசிக்கிட்டே இருந்தா வேலை நடக்காது” என அந்த பேச்சை நிறுத்திவிட்டு ரஞ்சனாவுக்கு எந்த பதிலும் சொல்லாமல் கேள்வியை கடந்து செல்ல நினைத்த மாயமித்ராவின் உணர்வுகளை புரிந்து கொண்ட ரஞ்சனாவோ இதற்கு மேல் பேசி அவளை சங்கட்டப்படுத்த வேண்டாம் என்று நினைத்துக் கொண்டு

“ சரி நீ உன் வேலையை பாருடி , நான் தூங்குறேன் “என சொல்லிவிட்டு தூங்க ஆரம்பித்தாள் ரஞ்சனா.

மாயமித்ரா தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, ரஞ்சனாவுக்கும் அவளுக்கும் தேவையான சாப்பாட்டை செய்து விட்டு மணியை பார்க்க, மணி நான்கை தாண்டி இருந்தது.


உடனே வேகமாக குளித்துவிட்டு அவசர அவசரமாக கிளம்பி தூங்கிக் கொண்டிருந்த ரஞ்சனாவை எழுப்பி, “ரஞ்சனா நான் போறேன் நீ சாப்ட்று” என சொல்லிக்கொண்டு கேபை புக் செய்து கொண்டு, புழல் சிறையை நோக்கி பயணித்தாள் மாயமித்ரா.

சிறிது நேரம் பயணத்தில் சிறை வந்து விட, சிறைக்குள் நுழைந்தாள் மாயமித்ரா.

உள்ளே நுழைந்தவள், அங்கிருந்த காவலர் ஒருவரை சந்தித்து,

“ சார் நான் மாயமித்ரா! கமிஷனர் சார் வர சொல்லி இருந்தாங்க “:என சொல்ல

“வாங்க மேடம், அசோக் சார் நீங்க வருவீங்கன்னு சொல்லி இருந்தாங்க!”

“ம்! அந்தக் கைதி எங்க இருக்காரு,”


“வாங்க மேம் உங்கள கூட்டிட்டு போறேன். நந்தன சந்திக்கிறதுக்கு முன்னாடி இங்கே இருக்கிற விசிட்டர்ஸ் நோட்ல நீங்க கையெழுத்து போடணும்” என்று அவர் சொல்லி அந்த நோட்டை திறந்து காட்ட

“சரி சார்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்த பதிவேட்டில் கையெழுத்து இட்டாள்.


கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்ட அறையில் மாயமித்ராவிற்காக காத்துக் கொண்டிருந்தான் நந்தன்.

அவன் மனம் முழுவதும் ஏதோ பதட்டமாக இருந்தது.

‘எனக்கு என்னாச்சு இன்னைக்கு ஏதோ ஒரு மாதிரியான உணர்வு தோணுது, இப்படி ஒரு உணர்வு இதுக்கு முன்னாடி எனக்கு தோணுது கிடையாதே!’ என்று நினைத்து தன்னை சுய அலசல் செய்து கொண்டிருந்தான் நந்தன்.

அந்தக் காவலர் நந்தன் இருந்த அறையை நோக்கி மாயமித்ராவை அழைத்துச் செல்ல அவரின் பின்னே மாயமித்ராவும் சென்று கொண்டிருந்தாள்.

மாயமித்ரா அங்கு வந்து கொண்டிருக்க அறையில் இருந்த நந்தனின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

மாயமித்ரா நந்தன் இருக்கும் அறையின் வாசலை நெருங்கி வர

திடீரென்று “காப்பாத்துங்க! காப்பாத்துங்க ஜெயிலர் அம்மாவை குத்த வராங்க” என்று ஒரு கைதி ஓடி வந்தார்.

மாயமித்ராவை கூட்டிக்கொண்டு வந்த காவலர் “என்னாச்சு ஏன் ஓடி வர?” என்று பதட்டத்தோடு கேட்க அடுத்த வினாடி சைரன் சத்தம் சிறை முழுவதும் ஒலித்தது.

சிறையில் இருந்த இரண்டு ரவுடி கும்பலுக்குள் திடீரென்று பயங்கர மோதல் வெடித்தெருந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சமையலறையில் இருந்த கத்திகளையும் இரும்பு சம்பந்தப்பட்ட ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு முதலில் ஜெயிலர் அம்மாவை தாக்கி விட்டு, அவர்களின் எதிரிகளை தாக்குவதற்காக அவர்கள் இருந்த சிறையை நோக்கி ஆக்ரோசமாக முன்னேறிக் கொண்டிருந்தனர்.


“அலர்ட் எல்லாரும் பொசிஷனுக்கு போங்க! துப்பாக்கியை எடுங்க” என்ற அசோக்கின் குரல் வாக்கி டாக்கியில் அனைத்து காவலர்களின் கவனத்திற்கும் வர


“மேடம் ஏதோ ஒரு பெரிய பிரச்சனை போல இந்த நேரம் நீங்க இங்க இருக்கிறது உங்களுக்கு பாதுகாப்பு இல்லை, உடனே வெளில போவோம்!” என்று சொல்லிவிட்டு மாயமித்ராவை அழைத்துக் கொண்டு வேகமாக சிறையில் பிரதான வாயிலை நோக்கி ஓடினான்.

மாயாவும் பதட்டத்தில் ஓட அவளின் ஹேண்ட் பேக்கில் வைத்திருந்த அவளது டைரி அந்த இடத்தில் கீழே விழுந்தது.

கவுன்சிலிங் அறையில் இருந்த நந்தனுக்கும் சிறையில் ஏதோ தவறாக நடப்பது தெரியவர அறையை விட்டு வெளியில் வந்து எட்டிப் பார்க்க, மாயா மித்ரா ஓடி செல்லும்போது அவள் கையில் இருந்த டைரி அவன் காலில் தட்டப்பட்டது. குனிந்து அதை எடுத்து புரட்ட போக

கைதிகளை லத்தி சார்ஜ் செய்து கொண்டு சில காவலர்கள் ஓடி வந்து கொண்டிருந்தனர்.


நந்தன் அந்த நோட்டை அப்படியே கீழே போட்டுவிட்டு, எதிரே வந்த கலகம் செய்த கைதிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.

அவர்கள் திமிறியோட ஆஜான பாகுவான நந்தன் அவர்களை பிடித்து சில கைதிகளை அடித்து நிறுத்த காவலர்களும் அவர்களை வந்து பிடித்தனர்,

சில நிமிட போராட்டத்திற்குப் பிறகு கூடுதல் போலீசார்கள் வரவழைக்கப்பட்டு கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அங்கிருந்த அனைத்து காவலர்களும் அந்த கைதிகளை அழைத்துச் சென்று போக, “நந்தன் நீ உன்னோட செல்லுக்குள்ள போ, நாங்க இவனுங்கள பாத்துக்குறோம்!”என சொல்ல, அப்போதுதான் கீழே கிடந்த நோட்டை பார்த்தான் நந்தன்.

கீழே குனிந்து அதை எடுத்து கையில் வைத்துக்கொண்டு , அதை திருப்ப மாயமித்ரா என்று எழுதி இருந்தது.

மாயமித்ரா என்ற பெயரை பார்க்கவும் அதிர்ந்தவன் நினைவுகளில், மாயா எனும் குரல் லேசாக ஒலிக்க, கடந்த கால நினைவுகளில் ஒரு கணம் அவன் கண்கள் கலங்கியது.

மாயமித்ரா என்ற பெயரை பார்க்கவும் அவன் விரல்கள் தானாக அந்த மாயாவை தடவியது.

ஏதோ உணர்வு வந்தவனாய் அடுத்த பக்கத்தை திருப்ப, அவளின் புகைப்படம் அதில் ஒட்டி இருந்தது. “நந்தன்” என்ற குரல் கேட்க, நோட்டில் இருந்த தன் பார்வையை திருப்பி தன் எதிரே நின்றவரை பார்த்தான் நந்தன்.


நோட்டில் இருக்கும் மாயமித்ராவின் புகைப்படத்தை பார்ப்பானா? அப்படி அவன் பார்த்தால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.


































 
Top Bottom