பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 12

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,564
6,484
113
தரையில் கிடந்த மாயமித்ராவின் டைரியை எடுத்து முதல் பக்கத்தை பார்க்க மாயமித்ரா என்னும் பெயர் எழுதி இருந்தது.

மாயா என்ற பெயரைப் பார்க்கவும் அவன் கடந்த காலத்தில் நிகழ்வுகள் அவனுக்குள் வலியை தர அந்த மாயா என்ற பெயரை மட்டும் தன் விரல்களால் தடவினான்.

அடுத்த பக்கத்தை பார்க்க வேண்டும் என்ற உந்துதல் எற்பட அதன் மறுபக்கத்தை திருப்ப அங்கே மாயமித்ராவின் புகைப்படம் ஒன்று
ஒட்டி இருந்தது.

“ நந்தா” என பதட்டமாக அழைத்த குரலில் நோட்டில் இருந்த தன் கண்களை எடுத்து விட்டு எதிரே இருந்தவரை பார்க்க அங்கு அசிஸ்டன்ட் கமிஷனர் அசோக் நின்று கொண்டிருந்தார்.


“சார்” என அவளின் முகத்தை பார்க்காமலே நோட்டை மூடி வைத்துவிட்டு, கமிஷனரை பார்க்க

“இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கு, இது எப்படி நடந்துச்சு! கைதிகளுக்குள்ள ரொம்ப நாளாவே பிரச்சனை இருந்திருக்கே அது உனக்கு கூட தெரியலையா?” என கமிஷனர் கேட்க,


“சாரி சார், எனக்கு எதுவும் தெரியாது! ஒருவேளை தெரிஞ்சிருந்தால் கண்டிப்பா நான் உங்ககிட்ட முன்னமே சொல்லி இருப்பேனே?” என கூறினான் நந்தன்.


“அதுவும் சரிதான்! ஆனா இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடக்கும்னு நினைச்சு கூட பாக்கல, நல்லவேளை கடவுள் புண்ணியத்துல யாருக்கும் எதுவும் ஆகல!

ஆனால் இங்க நடந்த பிரச்சனை பத்தி விளக்கம் கேட்டு மேலிடத்தில் இருந்து லெட்டர் வந்திருக்கு, அங்க போய் இங்கே நடந்தத எக்ஸ்பிளைன் பண்ணனும்! சரி அத விடு அத நான் பாத்துக்குறேன்,

இப்பதான் ஜெயிலர் சொன்னாரு உனக்கு கவுன்சிலிங் கொடுக்க வந்தவங்கள, சிறையில நடந்த கலவரத்தில் சிறைக்கு வெளியில போய் விட்டுட்டு வந்துட்டாராம், அதனால இன்னைக்கு கவுன்சிலிங் கொடுக்க முடியல!” என வருத்தப்பட்டார் அசோக்.


“அதுக்கு என்ன சார் பண்ண! இப்ப நடந்த பிரச்சனையை பாருங்க “ என நந்தன் சொல்ல,


“சரி நந்தன், நீ உன்னோட செல்லுக்குள்ள போ, இங்க என்ன நடந்ததுன்னு இன்வெஸ்டிகேஷன் பண்றதுக்கு சில போலீஸ் ஆபீஸர வர போறாங்க!” என அசோக் சொல்ல சரி என்று நந்தன் அவன் செல்லை நோக்கி நகர,


“ஒரு நிமிஷம் நந்தன், கையில என்னது” என்று கேட்டார் அசிஸ்டன்ட் கமிஷனர் அசோக்.


“சார் கீழ கிடந்துச்சு,ஏதோ டைரி போல பேரு மாயமித்ரானு எழுதி இருக்கு” என்று நந்தன் சொல்ல,


“ஓ மித்ராவோடதா!கவுன்சிலிங் கொடுக்கிறதுக்கு வந்தப்ப இங்கு நடந்த பிரச்சனையில போட்டுட்டு போய்ட்டாங்க போல, சரி அத குடு நான் அவங்களை பார்த்து கொடுத்துடறேன்!” என சொல்லிவிட, நந்தனும் ஒருவித தயக்கத்துடன் அந்த டைரியை அசிஸ்டன்ட் கமிஷனரின் கையில் ஒப்படைத்துவிட்டு அவன் செல்லை நோக்கி சென்றான்.

கமிஷனர் அதை வாங்கிவிட்டு திறந்து பார்க்க நினைத்தபோது, “ சார் கமிஷனர் வந்திருக்காங்க” என்று சொல்லவும், அதை பார்க்காமல் அப்படியே தன் கைகளில் எடுத்துக்கொண்டு கமிஷ்னரை பார்க்க தனது அறைக்குள் நுழைந்தான் அசிஸ்டன்ட் கமிஷனர் அசோக்.

இங்கு,

ஜெயிலில் இருந்து வந்தவளுக்கு அங்கு நடந்த கலவரத்தில் பதபதைப்பு இருந்தாலும், அதை எல்லாம் வெளியில் காட்டிக் கொள்ளாதவாறு கேப் பிடித்து அவள் அறை வந்து சேர்ந்தாள்.


“என்னடி இப்பதான் போன, அதுக்குள்ள கவுன்சிலிங் கொடுத்துட்டு திரும்பி வந்துட்டியா?” என்ன ரஞ்சனா கேட்க, அங்கு நடந்ததை ஒன்று விடாமல் கூறினாள் மாயமித்ரா.


“ஏண்டி ஜெயிலுக்குள்ளயே இவ்வளவு கலவரம் நடக்குமா?” என ரஞ்சனா அதிர்ந்து கேட்க,


“ஏன் நடக்காது! அங்க இருக்கிறவங்க எல்லாரும் குற்றவாளிகள் தானே, ஏதோ ஒரு தப்பு பண்ணிட்டு தான உள்ள வந்திருக்காங்க, அப்போ அவங்களுடைய நடவடிக்கை அப்படிதான இருக்கும்” என அலட்சியமாய் மாயமித்ரா கூறினாள்.

“ஏண்டி இவ்வளவு தெளிவா பேசுறவ எதுக்குடி இப்படி இடத்திற்கெல்லாம் கவுன்சிலிங் கொடுக்க போற! எப்பவும் போல அனாதை ஆசிரமத்துக்கு போனியா ஃபண்டு கலெக்ட் பண்ணி குடுத்தியானு நிக்கலாம்ல, இது எதுக்கு உனக்கு தேவையில்லாத வேலை, அந்தக் கலவரத்துல நீ மாட்டிக்கிட்டு உனக்கு ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்ணி இருப்ப?” என்று ரஞ்சனா கேட்க,


“செத்துப் போய் இருப்பேன் வேற என்ன நடந்திருக்கும்” என அலட்சியமாய் கூறிவிட்டு அமைதியாக அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள் மாயமித்ரா.


“என்னடி இவ்வளவு அலட்சியமா சொல்ற, ஒரு உயிரோட வேல்யூ என்னன்னு உனக்கு தெரியாதா?” என்று ரஞ்சனா கேட்க,


“உயிரோட வேல்யூ தெரிஞ்சதுனால தான் என் வாழ்க்கையில இவ்வளவு நடந்தும் நான் வாழ்ந்து கிட்டு இருக்கேன்... இல்லைன்னால் எப்பவோ இந்த உயிரை மாய்த்து இருப்பேன்!” என மித்ரா கூற அவளை அழுத்தமாக பார்த்தாள் ரஞ்சனா.

அவளின் பார்வையை உணர்ந்து கொண்ட மாயமித்ரா, சிரித்தாள்.

“சரி சொல்லு, அப்படி உன் வாழ்க்கையில் என்ன பிரச்சனை நடந்துச்சு!’ என்று ரஞ்சனா கேட்க,


“சில விஷயங்களை சொல்லாம இருக்கிறது எனக்கு நல்லது! அதை தெரிஞ்சு கஷ்டப்படாம இருக்கிறது உனக்கு நல்லது” என்று சொல்லிவிட்டு குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள் மாய மித்ரா.


“ஏண்டி சொல்லிட்டு போடி, நீ சொல்லாம போனா நான் என்ன நடந்துச்சுனு யோசிச்சுகிட்டே இருப்பேன், அப்புறம் தெரிஞ்சுக்காம இருந்தும் எனக்கு உடம்பு சரியில்லாமல் போய்டும்!” என்று ரஞ்சனா ஆவலாக கேட்க, “போய், ஏதாவது வேலை இருந்தா பாரு” என்ற மாயமித்ரா குரல் குளியல் அறைக்குள் இருந்து கேட்டது.

உள்ளே நுழைந்த மாயமித்ரா சவரின் அடியில் நின்று கொண்டு தன் வாழ்க்கையில் நடந்த கடந்த கால நிகழ்வுகளை எண்ணி கதறி அழ தொடங்கினாள்.


மாயமித்ராவிடம் என்ன நடந்தது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்து அதே இடத்தில் அமர்ந்து கொண்டிருந்தால் ரஞ்சனா.

சில நிமிடங்களுக்கு பிறகு குளியல் அறையில் இருந்து வெளியே வந்த மாயவித்ராவின் கண்கள் அவளின் வருத்தத்தை சொல்ல,

‘உள்ள போயி அழுது இருப்பா போல கண்ணு எல்லாம் சிவப்பா இருக்கு’ என தோன்றியது.

“என்னடி கண்ணலாம் சிவப்பா இருக்கு அழுதியா?” என கேட்க,

“நம்ம கவலையையும் வருத்தத்தையும் அந்த கண்ணீரை வடிச்சு தானே போக்கிக்குற வேண்டியதாயிருக்கு!” என்று கூறினாள் மாயமித்ரா.

ரஞ்சனா அவளிடம் மீண்டும் ஏதோ கேட்க வர, “ சாரி ரஞ்சனா எனக்கு தூக்கம் வருது,நான் தூங்க போறேன் லைட் ஆஃப் பண்ணிட்டு படு காலைல சீக்கிரம் எந்திரிக்கணும்!” என்று சொல்ல,

அவளின் உணர்வுகளை புரிந்து கொண்டு எதுவும் சொல்லாமல் “சரி நீ போய் தூங்கு” என கூறினாள் ரஞ்சனா.


கடந்த இரண்டு வருஷமாக ரஞ்சனாவும் மாயமித்ராவும் ஒரே அறையில் தங்கி கொண்டிருக்கின்றனர்.

இந்த இரண்டு வருடத்தில் எத்தனையோ முறை ரஞ்சனா தன்னுடைய சொந்த ஊருக்கு தாய் தந்தையரை பார்க்க சென்றிருக்கிறாள்,

ஆனால் ஒரு தடவை கூட மாயமித்ரா அப்படி சென்றதில்லை.

ஏன் இந்த இரண்டு வருட பழக்கத்தில் தன் குடும்பத்தை பற்றி ஒரு வார்த்தை கூட மாயமித்ரா பேசியதில்லை அதையெல்லாம் யோசித்த ரஞ்சனாவுக்கு மாயமித்ரா வாழ்க்கையில் ஏதோ பெரிய பிரச்சனை ஒன்று நிகழ்ந்திருக்கிறது என்பதை மட்டும் உணர்ந்து கொண்டாள்.


ஆனால் அதை எப்படி தெரிந்து கொள்வது என்று ரஞ்சனாவின் மனதில் கேள்வி எழ, ‘ நம்ம கேட்டாலும் எதுவும் சொல்ல மாட்டா! இன்னும் எவ்வளவு நாளு உண்மைய மறைக்கிறானு பாப்போம், அவளே சொல்லும்போது என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுகிட்டால் தான் உண்டு! நமக்கு வேற வழி இல்ல “ என நினைத்துக் கொண்டு ரஞ்சனாவும் துயில் கொள்ள ஆரம்பித்தாள்.


பொழுது அழகாக புலர,


கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியின் வாசலில் ஒரு வேன் நின்று கொண்டிருந்தது.

கன்ஸ்டிரக்ஷன் வேலைக்காக ஐந்து பேரும் கோயம்புத்தூருக்கு பயணம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன் பக்கத்தில் பிரகாஷ் கண்ணா மேனேஜருடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். அவர்களின் பக்கத்தில் ஆபீஸின் வாட்ச்மேன் இருவரும் நின்று கொண்டிருந்தனர்.


அப்போது ஆட்டோவில் இருந்து கீர்த்தியும் அவளுடைய தோழியுமான காயத்ரியும் தங்களுக்கு தேவையான லக்கேஜோடு ஆட்டோவில் வந்து இறங்கினர்.


அவர்கள் இருவரையும் பார்த்த வாட்ச்மேன் அவர்கள் வைத்திருந்த லக்கேஜ்களை தூக்கி கொண்டு அந்த வேனில் வைக்க, அவர்களுக்கு உதவியாக காயத்ரியும் சென்றாள்.

அங்கு மேனேஜரோடு பேசிக் கொண்டிருந்த பிரகாஷ் கண்ணாவை பார்த்த கீர்த்தி, அவனின் அழகில் அப்படியே மெய் மறந்து நின்றாள்.

பிரகாஷ் கண்ணாவிடம் பேசிக் கொண்டிருந்த மேனேஜர் நகர்ந்து சென்று அலைபேசியில் பேச, பிரகாஷ் கண்ணாவிடம் பேசுவதற்கு இதுதான் சமயம் என்று நினைத்துக் கொண்டு அவன் அருகில் சென்றாள் கீர்த்தி.

கீர்த்தி இந்த ஆபீசுக்கு வந்த முதல் நாளிலிருந்து பிரகாஷ் கண்ணாவை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள்.

ஆனால் பிரகாஷ், துளி அளவு கூட கீர்த்தியை பார்ப்பதில்லை, தன்னை நிராகரிக்கும் அவனை தன்னைச் சுற்றி சுற்றி வர வைக்க வேண்டும் என்று எண்ணம் கீர்த்தியின் மனதில் வன்மமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதிலும் மாய மித்ராவை அவன் ரசிப்பதை பார்த்தால் கீர்த்தியின் வயிறு கப கப வென்று எறிய தொடங்குகிறது.

அப்படியே மெதுவாக நடந்து சென்று பிரகாஷ் கண்ணாவை பார்த்து,

“சார்” என்று அழைக்க,


“ சொல்லுங்க கீர்த்தி” என புன்னகைத்தான் பிரகாஷ் கண்ணா.

அவன் புன்னகையில் தன்னை மறந்த கீர்த்தி என்ன பேசுவது என்று தடுமாற


“என்னாச்சு கீர்த்தி இன்னும் உங்க பயம் போகலையா? நான் ஏற்கனவே சொல்லிட்டேன், நீங்க என்னைய எம்டினும் பார்க்க வேண்டாம்! உங்க பிரண்டு கிட்ட எப்படி பேசுவீங்களோ அப்படி பேசலாம் “ என சொல்ல ,

“ம்! என சிரித்தாள் கீர்த்தி.

“சரி சொல்லுங்க! கீர்த்தி என்கிட்ட ஏதோ சொல்ல வந்தீங்க” என கேட்டுக் கொண்டிருந்தபோது,பிரகாஷ், என்ற குரல் கேட்டது. யார் என்று இருவரும் பார்க்க அங்கே ரஞ்சனா நின்று கொண்டிருந்தாள்.


“வா! ரஞ்சனா” என பிரகாஷ் கண்ணா ரஞ்சனாவை பார்த்து கூறினாலும் அவன் கண்கள், அவள் பின்னால் நின்று கொண்டிருந்த கேபை பார்த்தபடி இருந்தது.

“வான்னு என்னைய சொல்லிட்டு அங்க யாரை தேடுற?”என ரஞ்சனா கேட்க, சிரித்தான் பிரகாஷ்.

“உனக்கு தெரியாதா! நான் யாரை கேட்கிறேன்னு, எங்க ஆள காணோம்” என பிரகாஷ் கண்ணா கேட்க,

“சொல்ல மாட்டேனே” என கண்ணடித்தாள் ரஞ்சனா.

“ப்ளீஸ் ரஞ்சனா விளையாடாத சொல்லு எங்க மித்ராவை?” என கேட்க,


“சரி ரொம்ப அழுவாத சொல்றேன், நானும் அவளும் ஒண்ணா தான் கிளம்புனோம், காலையில இருந்து எதையோ தேடிகிட்டே டென்ஷனா இருந்தாள்.

என்ன தேடுறேன்னு கேட்டதுக்கு டைரிய காணம்னு காணமுன்னு சொன்னா,
டைரியா அது இங்கதான் இருக்கும் சரியா தேடி பாருனு சொன்னேன்! அவளும் தேடிக் கொண்டே இருந்தா டைரி கிடைக்கவே இல்லை,

கடைசில ஏதோ ஞாபகம் வந்தவ, நீ போடி டைரிய எங்க போட்டுட்டு வந்தேன்னு எனக்கு ஞாபகம் வந்துட்டு நான் போய் அதை வாங்கிட்டு வாரேன்னு சொன்னா, நானும் வந்துட்டேன் “ எனக் கூறினாள் ரஞ்சனா.

“டைரியா! ஊருக்கு போகும்போது எதுக்கு, வந்து கூட வாங்கிக்கிறலாமே என்று பிரகாஷ் கண்ணா கேட்க,


அதைத்தான் நானும் கேட்டேன்! என் வாழ்க்கையில முக்கியமான ஒன்னு. கிட்டத்தட்ட எட்டு வருஷமா அதோட தான் டிராவல் பண்றேன், அது இல்லாம என்னால இருக்க முடியாது செண்டிமெண்டா சொன்னா, எனக்கு அவ சொன்னதைக் கேட்டு சின்ன புள்ள தனமா தோணுனாலும், அவ உணர்வுக்கு மதிப்பு கொடுத்து, அத எடுத்துட்டுவானு சொன்னேன்!”என கூறினாள் ரஞ்சனா.

“இரண்டு பேரும் விளையாட்டுறீங்களா? நேரம் இல்ல தெரியுமில்ல, இப்படி பண்ணினா எப்படி!” என பிரகாஷ் கண்ணா கேட்க,

“உனக்கு தெரியும்ல கண்ணா! எப்பவுமே அவ போக வேண்டிய இடத்துக்கு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி வந்துருவா, கிட்டத்தட்ட இந்த ரெண்டு வருஷத்துல அவ லேட்டா வந்து நம்ம பார்த்தது கூட கிடையாதுல்ல, அப்புறம் ஏன் கவலைபடுற!”என ரஞ்சனா கேட்க,

ஒயிட் கலர் சுடிதாரில், அவள் கேசம் காற்றில் மிதக்க
தேவதை போல் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள் மாயமித்ரா.

அவளைப் பார்த்த பிரகாஷ் கண்ணா இமைகளை கூட இமைக்க மனம் இல்லாமல் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.


இனி என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் பதிலுரை முறை சொல்லடி பகல் நிலவே!
























 

Author: Vishakini
Article Title: பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 12
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
615
475
63
Pondicherry
ஒவ்வொரு எபியும் சஸ்பென்ஸ்லயே முடிக்கிறீங்க...👍🏻💐💐💐💐💐
 

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
இந்த கீர்த்தி வேற குறுக்க மறுக்க போய்கிட்டு🤦🤦🤦🤦🤦🤦
போ மா அங்கிட்டு.....இவங்க அப்படியே உலக அழகி😏😏😏😏😏😏.....