• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 17

Vishakini

Moderator
Staff member
“மித்ரா நான் உங்ககிட்ட ஒன்னு கேட்பேன் நீங்க உண்மைய சொல்லணும்!” என்று பிரகாஷ் கண்ணா சொல்ல,

கண்ணாடியில் தெரிந்த அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் மாயமித்ரா.

பிரகாஷ் கண்ணாவும் பின் சீட்டில் அமர்ந்திருந்த மாய மித்ராவின் முகத்தை முன் சீட்டில் இருந்த கண்ணாடியின் வழியே பார்த்துக் கொண்டிருந்தான்.

பிரகாஷ் கண்ணா என்ன சொல்வான் என்ற பரிதவிப்பில் மாயமித்ரா தன்னுடைய கைகளை பிசைந்து கொண்டு எச்சில் விழுங்க, அவளிடம் எப்படி தன் காதலை சொல்வது என்று பிரகாஷ் கண்ணாவும் தடுமாற ஆரம்பித்தான்.

“மித்ரா.... ஐ என பிரகாஷ் கண்ணா தட்டு தடுமாறி சொல்ல வர, மாயமித்ராவின் அலைபேசி அடித்தது.

“சார் ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு தன்னுடைய அலைபேசியை எடுத்து யார் என்று பார்க்க, அசிஸ்டன்ட் கமிஷனர் அசோக் அழைத்திருந்தார்.

அவரின் எண்ணை பார்க்கவும், முகத்தில் புன்னகையோடு அழைப்பை ஏற்று,

“குட் ஈவினிங் சார்!” எப்படி இருக்கீங்க?”

“நான் நல்லா இருக்கேன் மித்ரா!நீங்க எப்படி இருக்கீங்க?” என அசோக் கேட்டார்.

“நான் நல்லா இருக்கேன் சார்!” என்று மித்ரா சொல்ல,


“சாரி மித்ரா! நீங்க நேத்து போன் பண்ணுனப்ப கொஞ்சம் வேலையில் இருந்தேன்.அதான் உங்ககிட்ட சரியா பேச முடியல!” என அசோக் மன்னிப்பு கேட்க,

“மன்னிச்சிடுங்க சார்,உங்க வேலை நேரத்துல போன் பண்ணுனது என்னோட தப்பு தான்!” என்று கூறினாள் மாயமித்ரா.


‘யாரோட பேசுறா?’ என்று யோசித்துக் கொண்டே பிரகாஷ் கண்ணா தன் செவி வழியே மித்ரா பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான்.

“ஸ்டேஷன் வந்ததும் கான்ஸ்டபிள் சொன்னாரு. நீங்க உங்களோட டைரிய தேடி வந்ததா?” என்று அசோக் சொல்ல,


“ஆமா சார்! அன்னைக்கு ஸ்டேஷன்ல நடந்த பிரச்சனையில்ல அவசர அவசரமா அங்கிருந்து வரும்போது என்னோட டைரி அங்க விழுந்திருச்சு, அதான் தேடி வந்தேன். பிரச்சனை நடந்த அன்னைக்கு அங்க எடுக்கப்பட்ட பொருளை எல்லாம் உங்க கிட்ட தான் கொடுத்ததாக அங்கிருந்த போலீஸ்காரவங்க சொன்னாங்க! அதான் என்னோட டைரி இருந்துச்சான்னு கேக்குறதுக்காக உங்களுக்கு போன் பண்ணேன்!” என்று மாயமித்ரா கூறினாள்.

“ஆமா மித்ரா, உங்களோட டைரி கிடைச்சது! அது இப்போ என்கிட்ட தான் இருக்கு. நான் ரெண்டு வாரத்துக்கு ஸ்டேஷன்ல லீவு சொல்லிட்டு என்னோட பர்சனல் வேலையை பார்க்க போறேன், இப்ப நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க, நான் உங்ககிட்ட வந்து தந்துட்டு போறேன்!” என்று அசோக் சொல்ல,


“சாரி சார், நான் இப்ப கன்ஸ்ட்ரக்ஷன் ஒர்க்குக்காக கோயம்புத்தூர் வந்து இருக்கேன்!” என்று கூறினாள் மாயமித்ரா.

“ஓ அப்படியா! அப்போ இப்ப என்ன பண்றது?” என்று அசோக் கேட்க,

“ஒன்னும் பிரச்சனை இல்ல சார்! இப்போதைக்கு எனக்கு எந்த அவசரமும் இல்லை! இரண்டு வாரம் கழிச்சு தான் நானும் சென்னை வருவேன், அப்போ வந்து உங்க கிட்ட என்னோட டைரிய வாங்கிக்கிறேன்” சார்” என்று மாயமித்ரா கூறினாள்.

“அப்ப பிரச்சனை இல்ல மித்ரா, நான் லீவு முடிஞ்சு வந்ததுக்கப்புறம் உங்கள பாத்து ஒப்படைக்கிறேன்!” என்ற அசோக் சொல்ல,

“ஓகே சார், தேங்க்யூ “என சொல்லிவிட்டு அழைப்பை அணைத்தாள் மாயமித்ரா.

டைரி கிடைத்த சந்தோஷத்தில் அவள் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை ரசித்த பிரகாஷ் கண்ணா மீண்டும் ஏதாவது சொல்லி அவளை பதட்டப்பட வைக்க வேண்டாம் என்று நினைத்துக் கொண்டு, கோயிலுக்குள்ள வச்சு சாமி கும்பிட்டதுக்கு அப்புறம் நம்ம மனசுல உள்ளத சொல்லிக்கிருவோம் என்று நினைத்து அமைதியானான்.


“டைரி கிடைச்சிட்டா மித்ரா!”

“ம்! கிடைச்சுட்டு சார், எங்க தொலைந்து போயிட்டோனு நினைச்சு வருத்தப்பட்டேன்! நல்லவேளை எங்கேயும் தொலைக்கல கமிஷனர் சார் கிட்ட தான் இருக்காம் “என்று மித்ரா சந்தோசமாக சொல்லிக் கொண்டிருக்க கார் நின்றது.


கார் நிற்கவும் “கோயில் அதுக்குள்ள வந்துட்டா?”என்று மாயமித்ரா கேட்க, “ம்! வந்துட்டு இறங்குங்க, உள்ள போவோம் என்று சொல்லிவிட்டு பிரகாஷ் கண்ணா இறங்க, இந்த பக்கம் மாயமித்ரா காரின் கதவை திறந்து கொண்டு இறங்கினாள்.

அங்கிருந்த கடையில் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு இருவரும் கோயிலுக்குள் நுழைந்தனர்.

சிறிது நேரத்தில் தரிசனம் முடிய, இருவரும் பிரகாரத்தை சுற்ற ஆரம்பித்தனர்.

‘இப்ப மித்ரா கிட்ட சொல்லலைன்னா இனிமேலு சொல்ல முடியாது!’
என்று நினைத்துக் கொண்டு,

“மித்ரா?” என பிரகாஷ் அழைத்தான்.

“சார் கொஞ்ச நேரம் சாமி சன்னிதானத்துல உக்காந்துட்டு போவோமா?” என்று மித்ரா கேட்க, பிரகாஷ் கண்ணா வேகமாக தலையாட்டினான்.

அந்தத் திண்டில் சில பக்தர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அமர்ந்திருந்தனர்.

அவர்களுக்கு நடுவில் இருந்த தூணில் மாயமித்ரா சாய்வாக அமர, பிரகாஷ் கண்ணாவும் அவளோடு அமர்ந்தான்.

“மித்ரா... உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்...” என்று பிரகாஷ் கண்ணா ஆரம்பிக்க,

“நானும் உங்ககிட்ட பேசணும் சார்” என்று கூறினாள் மித்ரா

“எங்கிட்டயா என்ன விஷயம் மித்ரா?” என கேட்க,

“இல்ல சார் முதல்ல நீங்க சொல்லுங்க!” என்று மாயமித்ரா கூறினாள்.

“பரவாயில்ல மித்ரா நீங்களே சொல்லுங்க!” என்று பிரகாஷ் கண்ணா சொல்ல,

மாயமித்ரா சில நொடிகள் அமைதியா பிரகாஷ் கண்ணாவை பார்த்து, “அதிர்ஷ்டமே இல்லாத நான் ஒரு விஷயத்துல அதிர்ஷ்டசாலி!” என்று சொல்ல,

“புரியலையே மித்ரா, எதுல அதிர்ஷ்டசாலி?”என்று கேட்டான் பிரகாஷ் கண்ணா.


“என் வாழ்க்கையில நான் நம்புற ஆண்கள் ரொம்ப குறைவு, அதுல ஒரு சிலர மேல கண்மூடித்தனமான நம்பிக்கை வச்சிருக்கேன் ! அப்படி நான் கண்மூடித்தனமா நம்பிக்கை வைத்திருக்கிற ஆளுல நீங்களும் ஒருத்தர்!” என்று மாயமித்ரா சொல்ல அவளை அழுத்தமாக பார்த்தான் பிரகாஷ் கண்ணா.

“என் கண்மூடித்தனமா நம்புறேன்னு நீங்க கேட்க மாட்டீங்களா சார் ? “ என்று மாயமித்ரா கேட்க, எந்த பதிலும் சொல்லாமல் அவளை பார்த்தான்.

“என் வாழ்க்கையில இப்படி எல்லாம் ஒருத்தர நம்பி அவர் கூட இவ்வளவு நேரம் பயணம் பண்ணினதே கிடையாது!” என்று மித்ரா சொல்ல,

“நீங்கதான் நம்பவே இல்லையே? மித்ரா, ரஞ்சனா சார் கூட போயிட்டு வான்னு சொன்னப்ப கூட நீங்க தயங்கி நின்னதை நான் பார்க்க தான் செய்தேன்!” என்று குத்தலாக கேட்டான் பிரகாஷ் கண்ணா.


மாயமித்ரா அதற்கு சிரித்துக் கொண்டு,” நான் நின்னதுக்கு காரணம் உங்க மேல நம்பிக்கை இல்லைன்னு கிடையாது! ஒருவேளை உங்க மேல நம்பிக்கை இல்லாம இருந்தால் இந்நேரம் வேலைய ரிசைன் பண்ணி போயிருப்பேன் கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா நம்பிக்கையோடு தான் உங்ககிட்ட வேலை பாத்துட்டு இருக்கேன்!” என கூறினாள் மித்ரா.

“என் மேல உங்களுக்கு நிறைய நம்பிக்கை இருக்கா மித்ரா?” என்று பிரகாஷ் கண்ணா சந்தோஷப்பட்டு கேட்க,

“என் மனச புரிஞ்சு நடந்துக்கிருவீங்க! எந்த இடத்திலும் என்னை காயப்படுத்த மாட்டீங்க, என்னோட உணர்வுக்கு மதிப்பு குடுப்பீங்க, எனக்கு புடிக்காதத எப்பவும் செய்ய மாட்டீங்கன்னு நம்பிக்கையை இருக்கு!” என்று அடுத்த குண்டை தூக்கி போட்டாள் மாயமித்ரா.

மாயமித்ரா பேச்சை கேட்கவும் வாய் வரை சொல்ல வந்த தன் காதலை தன் மனதில் அடக்கிக் கொண்டு, “நேரம் ஆச்சு கிளம்பலாமா மித்ரா?” என்று கேட்க, “ம்! போகலாம் சார்!” என்று மாயமித்ராவும் சொல்ல இருவரும் கோயிலில் இருந்து வெளியே சென்று காரிலில் ஏறினர்.

மாயமித்ரா சொன்ன வார்த்தைகள் மட்டும் அவன் மனதுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்க, அவன் காதலை சொல்ல அவன் விரும்பவில்லை!

இவ்வளவு தூரம் மாயமித்ராவோட தனியா வாய்ப்பு கிடைச்சு கூட என்னோட காதலை சொல்ல முடியாம போயிருச்சே என்ற வலி மட்டும் அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

அதை உணர்ந்த மாயமித்ரா, “மன்னிச்சிடுங்க பிரகாஷ், நீங்க என்கிட்ட கேக்குற கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்கே தெரியல? இப்போதைக்கு அந்த கேள்வியை நீங்க என்கிட்ட கேட்காம இருக்குறதுக்காக தான் நான் உங்ககிட்ட அப்படி பேசினேன்!” என தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.


வரும்போது மாயமித்ராவிடம் பேசிக்கொண்டே வந்தவன் போகும்போது ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசவில்லை. அவளும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.


சிறிது நேரம் பயணத்திற்கு பிறகு இருவரும் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலுக்கு வந்து சேர இவர்களின் வருகைக்காக காத்திருந்தாள் ரஞ்சனா.

“ வாங்க! உங்க ரெண்டு பேரோட சேர்ந்து காபி குடிக்கலாம்னு உங்களுக்கும் காபி ஆர்டர் பண்ணிட்டு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்!” என்று ரஞ்சனா சொல்ல,

“எனக்கு எதுவும் வேண்டாம். நீங்க ரெண்டு பேரும் குடிங்க” என்று சொல்லிவிட்டு சில வினாடிகள் கூட அங்கு நிற்காமல் அவனுடைய அறைக்கு விறுவிறு என்று நடந்து சென்றான் பிரகாஷ் கண்ணா.

“இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு, நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன் ரஞ்சனா” என்று சொல்லிவிட்டு மாயமித்ராவும் அவள் தங்கி இருந்த அறைக்கு சென்றாள்



பிரகாஷ் கண்ணா உள்ள வரும்போது முகம் வாடி வருவதையும் மாயமித்ரா, சாதாரணமாக வருவதும் ரஞ்சனாவின் கண்ணில் பட்டது.

மாய மித்ராவிடம் பிரகாஷ் கண்ணா தன் காதலை சொல்லி மாயமித்ரா ரிஜெக்ட் செய்து விட்டால் என்று தவறாக புரிந்து கொண்ட ரஞ்சனா, வருத்தப்பட்டு பிரகாஷ் கண்ணாவை சமாதானம் செய்வதற்காக அவனின் அறைக்குள் நுழைந்தாள்.

முதுகு காட்டி நின்று கொண்டிருந்தவனின் தோள்களை தொட்டு,

“கண்ணா! உன்னோட வருத்தம் புரியுது. நான் ஏற்கனவே உன்கிட்ட மாயமித்ராவுக்கு உன் மேல எந்த விருப்பமும் இல்லைன்னு சொன்னேன். நீதான் அவ கண்ணுல என் மேல வச்ச காதல் தெரியுதுன்னு சொல்லிக்கிட்டு இருந்த, இப்ப அவ வாயில இருந்தே உன் மேல விருப்பம் இல்லைன்னு நீ தெரிஞ்சுகிட்ட, இனிமேலாவது உண்மைய புரிஞ்சுகிட்டு மித்ரா பின்னாடி சுத்துறத விட்டுட்டு, ஜானுவ கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழ்றதுக்கு வழிய பாரு!” என்று ரஞ்சனா வருத்தமாக கூற, வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்துக்கொண்டே அவள் பக்கம் திரும்பினான் பிரகாஷ் கண்ணா. ரஞ்சனாவோ, ஒன்றும் புரியாமல் பிரகாசை பார்த்தாள்.


இனி என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் பதில் உரை சொல்லடி பகல் நிலவே!
 

ஷமீம்

Active member
இவன் லவ் சொல்றதுக்குள்ள கதையே முடிஞ்சிடும் போல.. சீக்கிரம் சொல்லுப்பா... இல்லன்னா சொல்ற சான்ஸ் போய்டும்..
 
Top Bottom