• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 2

நிதனிபிரபு

Administrator
Staff member
“பிரகாஷ் சார் தான் மித்ரா மேடத்தை காதலிக்கிறாரு, மித்ரா மேடம்
இல்ல, அவங்கள பத்தி தெரியாம இப்படி அசிங்கமா பேசாத?
அவங்கள மாதிரி யாரையும் நான் இதுவரை பார்த்தது கிடையாது!

இந்த ஆபீஸ்ல ஸ்டாப்ஸுக்கு இவ்வளவு மரியாதை இருக்குதே இதுக்கெல்லாம் காரணம்
மித்ரா மேடம் தான். இங்க உள்ள வசதிகள் எல்லாம் மித்ராவுக்காக பிரகாஷ் சார் பார்த்து
பார்த்து பண்ணுனது,

அவங்களுக்காக தான் இவளத்தையும் பார்த்து பார்த்து பிரகாஷ் சார் பண்றாங்கன்னு
மித்ரா மேடத்துக்கு தெரியவும்,எனக்கு மட்டும் இவ்வளவு வசதி தேவை இல்லை?
உங்களால முடிஞ்சால் இந்த ஆபீஸ்ல வேலை செய்றவங்க எல்லாருக்கும் இந்த
வசதியெல்லாம் செஞ்சு கொடுங்கனு மேடம் சொன்னதுக்கு அப்புறம் சார் எல்லாருக்கும்
இந்த வசதிகள செஞ்சு குடுத்துட்டாரு!

ஆனாலும் மித்ரா மேம் பிரகாஷ் சார் செஞ்சு கொடுத்த எந்த வசதிகளையும் இதுவரை
பயன்படுத்தினது கிடையாது. அவங்களோட கேபின்ல அவங்க உட்கார்ந்து வேலை
செய்வதற்கு பழைய பிளாஸ்டிக் சேர் தான் இன்னும் வர இருக்கு. ஆபீஸ்க்கு வருவாங்க
அவங்களோட வேலையை சரியா செய்வாங்க, அப்புறம் போய்க்கிட்டே இருப்பாங்க.
யார்கிட்டயும் அதிகமா பேச மாட்டாங்க! அவங்க தோழி ரஞ்சனாவ தவிர....” என்று
கூறினாள் காயத்ரி.

காயத்ரி சொல்லியதை கேட்டு கீர்த்தி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க மேலும்
தொடர்ந்தாள் காயத்ரி.

“நம்மள மாதிரி ஆளாய் இருந்தால் இவ்வளவு பெரிய பணக்காரர் நம்மள
காதலிக்கிறார்னு பெருமையா நெனச்சு ரொம்ப சீன் போட ஆரம்பிச்சுருப்போம்.
இங்க வேலை செய்றவங்க எல்லாரையும் நம்ம அடிமை மாதிரி நடத்த
ஆரம்பித்திருப்போம்! ஆனா அவங்க அப்படி எதுவுமே செய்யல!” என்று காயத்ரி சொல்ல,

“அதான் சொன்னியே பிரகாஷ் சார் மட்டும்தான் அவங்கள காதலிக்கிறாரு மித்ரா மேடம்
இல்லனு, அப்புறம் எப்படி அவங்க சீன் போடுவாங்க!” என்று நக்கலாக கூறினாள்
கீர்த்தி.

“நான் சொன்னதை நீ தப்பா புரிஞ்சுகிட்ட, பிரகாஷ் சார் மித்ரா மேடத்த காதலிக்கிறாருனு
எல்லாருக்கும் தெரியும். ஆனா மித்ரா மேடம் சார வேண்டாம்னு சொல்றதுக்கு ஒரே ஒரு
காரணம் மட்டும் தான்!” என்று காயத்ரி சொல்ல, என்ன காரணமாக இருக்கும் என்று
தனக்குள்ளே யோசிக்க தொடங்கினாள் கீர்த்தி.

“அது என்ன காரணமா இருக்கும்னுதான யோசிக்கிற கீர்த்தி?” என்று கீர்த்தியின் மனதை
படித்தது போல காயத்ரி சொல்ல, கீர்த்தி காயத்ரியின் முகத்தை பார்த்தாள்.

“தகுதிக்கு மீறி ஆசைப்படுறது தப்புன்னு எப்பவுமே மித்ரா மேம் சொல்லுவாங்க,
அதுதான் சாரோட காதல அவங்க ஏத்துக்குறாததுக்கு காரணம்!” என்று காயத்ரி
கூறினாள்.

காயத்ரி சொன்னதைக் கேட்டு கீர்த்தி சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

“ ஏண்டி இப்ப சிரிக்கிற என்று காயத்ரி கேட்க, “ தகுதிக்கு மீறி ஆசைப்படக் கூடாதுன்னு
சொன்னால் யாரும் இந்த உலகத்துல அவங்க ஆசைப்பட்டதை அடைய முடியாது,
எனக்கு தெரிஞ்சு அந்த மித்ராவுக்கு அறிவு இல்லைன்னு தான் சொல்லுவேன்! பிரகாஷ்
சார் இருக்கிற அழகுக்கும் பணத்துக்கும் மித்ரா அவங்களுக்கு தகுதியானவங்களே
கிடையாது! அந்த உண்மை அவங்களுக்கே புரிந்திருக்கும் அதனாலதான் சாரோட காதல
ஏத்திருக்க மாட்டாங்க!” என்று கூறினாள் கீர்த்தி.

“இங்க பாரு கீர்த்தி, அவங்கள பத்தி தெரியாம அவங்கள பத்தி இப்படி தப்பா பேசாத! நீ
இப்பதானே இந்த ஆபீசுக்கு வந்திருக்க நீயே எல்லாத்தையும் புரிஞ்சுக்குவ? ஆனா நீ
இப்ப பேசின பேச்சு எனக்கு கொஞ்சம் கூட புடிக்கல நீயா இப்படி பேசுறேன்னு
ஆச்சரியமா இருக்கு!” என்று காயத்ரி தன் சந்தேகத்தை கேட்டாள்.

காயத்ரி கேட்ட கேள்வியை ஒரு கணம் கீர்த்தியும் யோசித்துப் பார்த்தாள். உண்மைதான்
கீர்த்தி யாரையும் இப்படி மட்டமாக பேசும் பெண்ணல்ல, ஆனால் இப்படி பேசியதற்கு
காரணம் பிரகாஷ் கண்ணா மட்டுமே!

ஆடவனை பார்த்த முதல் நொடியிலேயே அவனை விரும்ப ஆரம்பித்து விட்டாள்.
பிரகாஷின் காதலி என்று மித்ராவை காயத்ரி அறிமுகப்படுத்த அதை அவளால் ஏற்றுக்
கொள்ள முடியவில்லை, அதனால் தான் இப்படி பேசிவிட்டாள் கீர்த்தி.

“சரி வா வேலைய பார்ப்போம்! சாரு கோபப்பட மாட்டார் ஆனால் சரியான நேரத்தில்
அவர் கொடுத்த வேலையை நம்ம முடிச்சு கொடுத்திடனும்னு நினைப்பாரு, நம்ம
வேலைக்கு ஏத்த மாதிரி போனஸ் சேலரின்னு எல்லாத்தையும் கரெக்டா கொடுப்பாரு!”
என்று காயத்ரி கூற இருவரும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு சென்றனர்.
போகும் வழியில் கீர்த்தியின் கண்கள் பிரகாஷ் கண்ணாவின் அறையை ஒரு முறை
பார்த்தது.

இங்கு,

பிரகாஷ் கண்ணாவின் கண்கள் பிரகாசமாக அவனுடைய லேப்டாப்பை பார்வையிட்டுக்
கொண்டிருந்தது.

சில நிமிடங்கள் லேப்டாப்பையை உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருந்தான். காரணம்
அதில் தெரியும் மித்ராவின் உருவம் தான்.

இவ்வளவு நேரம் கம்ப்யூட்டரில் காட்சியளித்த அவனின் அழகு தேவதை, “எக்ஸ்கியூஸ் மீ
சார்” என்று அவன் கேபினுக்கு வெளியே நின்று காட்சியளித்தாள்.

அவ்வளவுதான் அவளை பார்த்த அடுத்த நொடி அவனையே அறியாமல் எழுந்து “உள்ள
வாங்க மித்ரா” என்று கூறினான் பிரகாஷ் கண்ணா.

சாந்தோரி காட்டன் புடவையில் சிங்கிள் ஃப்ளீட்டில் புடவையை அணிந்து, அதன்
பார்டரிலேயே பிளவுசை சரியாக அணிந்து, நெற்றியில் வட்ட பொட்டு ஒன்றை வைத்து
, 90ஸ் ஹீரோயின் மயூரா போன்று காட்சியளித்தவளை கண்டு அசந்து தான் போனான்
பிரகாஷ் கண்ணா.

பெண்களை பார்க்காதவன் அல்ல, முழுக்க முழுக்க வெளிநாட்டு கலாச்சாரத்தில்
வளர்ந்தவன் இந்தியா வந்த பிறகும் அப்படியே சுற்றிக் கொண்டிருந்தவன் , என்று
முதன்முறையாக மாயமித்ராவை பார்த்தானோ! அன்றிலிருந்து அவளை மட்டுமே
தனக்கானவளாக நினைத்து கொண்டிருக்கிறான்.

அவனுடைய பிளேபாய் தனத்தை எல்லாம் விட்டுவிட்டு மாய மித்ராவின் ராமனாக
மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறான் அவளைப் பார்த்த நொடியில் இருந்து இன்று
வரை....!!

தன்மன எண்ணங்களை எத்தனையோ முறை பிரகாஷ் கண்ணா பல வழிகளில்
மறைமுகமாக மாயமித்ராவிற்கு வெளிப்படுத்தி இருக்கிறான். ஆனால் அது எல்லாம்
பெண்ணவள் புரிந்து கொண்டாலோ இல்லையோ? அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல்
அமைதியாகவே அவள் வேலையை மட்டும் செய்து கொண்டிருக்கிறாள்...!

வைத்த கண் வாங்காமல் தன்னை பிரகாஷ் கண்ணா பார்த்துக் கொண்டிருப்பதை
உணர்ந்த மாயமித்ரா, “சார் இது கவர்மெண்ட் பில்டிங்கோட கன்ஸ்ட்ரக்சன்
டாக்குமெண்ட், இதுல உள்ள கொட்டேஷன் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்து
சொன்னீங்கன்னா, இன்னைக்கு அவங்களுக்கு அனுப்பிரலாம்!” என்று கூறினாள்
மாயமித்ரா.

மாயமித்ரா கூறியதை கேட்டுக் கொண்டிருந்த பிரகாஷ், “ கன்னத்துல விழுந்திருக்கிற
முடி கூட அழகுதான்!” என்று தன்னை அறியாமலே கூறினான்.
பிரகாஷ் சொல்லியதை கேட்ட பின்பும் மாயமித்ரா எவ்வித ரியாக்ஷனும் இல்லாமல்
அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

எப்போதும் அவள் அப்படித்தான். யார் என்ன சொன்னாலும் அவளின் உணர்வுகளை
அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் வெளிப்படுத்த மாட்டாள். சில பேருக்கு அவளைப்
பார்த்தால் உணர்வுகள் இல்லா ஜடம் என்று கூட தோன்றியிருக்கிறது. ஆனாலும்
பிரகாஷ் கண்ணா ஒவ்வொரு முறையும் அவளின் இறுக்கமான உணர்வுகள் துடைத்த
முகத்தை பார்க்கும் போதெல்லாம், “ ஒரு நாள் இல்ல ஒரு நாள் உன்னுடைய எல்லா
உணர்வுகளையும் என்கிட்ட கொட்டி தீப்ப! அன்னைக்கு உன்னைய இறுக்கமா
கட்டிப்புடிச்சு என்னோட நெஞ்சுல சாய்ச்சு ஆறுதல் சொல்வேன் , கூடிய சீக்கிரத்துல
இதெல்லாம் நடக்கும்! நடக்க வைப்பேன்!’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்வான்.

மாயமித்ரா அவனின் விழிகளை பார்த்து அவனுடைய எண்ணங்களை உள்வாங்கிக்
கொண்டாலோ என்னவோ? அலட்சியமாயும் விரக்தியாயும் உதட்டுக்கே வலிக்காமல் ஒரு
சிறு புன்னகையை உதிர்த்துக் கொண்டு கற்சிலை போல நின்று கொண்டிருந்தாள்.

இங்கு,

சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள புழல் மத்திய சிறை
மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

முன்னாள் முதல்வர் சி என் அண்ணாதுரையின் பிறந்த நாளான இன்று இன்னாள்
முதல்வர் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு இனிப்பு வழங்குவதற்கான ஏற்பாடும்,
கைதிகளின் நன்னடத்தை காரணமாக ஒரு கைதிக்கு விடுதலையும் கொடுப்பதும் அந்த
நிகழ்ச்சியின்
நிரலாக இருந்தது.

கைதிகள் அனைவரும் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளுக்காக வண்ண பேப்பர்கள் கொண்டு
அந்த இடத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். காவலர்கள் கைதிகளை மேற்பார்வை
இட்டுக் கொண்டிருந்தனர்.

இன்னும் சற்று தொலைவு போனால் அங்கு நான்கு காவலர்கள் தங்களுக்குள் எதையோ
பேசி வாதிட்டு கொண்டிருந்தனர். அனைவரும் எதைப் பற்றி பேசிக்
கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்க விடுதலை செய்ய நால்வரும் ஒருவரின் பெயரை
மட்டுமே உச்சரித்துக் கொண்டிருந்தனர்.

இவர்களின் பேருக்கெல்லாம் சொந்தக்காரனோ , இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை
என்பதைப் போல் அங்கிருந்த பாத்ரூம்மை கிளீன் செய்து கொண்டிருந்தான் நந்தன்.

“நந்தா, உன்னைய இன்னைக்கு விடுதலை செய்யணும்னு போலீஸ்காரங்க எல்லாரும்
பேசிகிட்டு இருக்காங்க நீ என்னடானா சந்தோசமே இல்லாம இங்க பாத்ரூம் கழுவி
கிட்டு இருக்க?”என்று கேட்டார் சக கைதியான வாசுதேவ்.

நந்தன் விரக்தியான புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு, “எனக்கு விடுதலையா? எனக்கு
விடுதலை வேணும்னு நினைச்சிருந்தால் ஆறு வருஷத்துக்கு முன்னாலேயே இந்த
இடத்தை விட்டு போயிருப்பேன்!” என்று கூறினான் நந்தன்.

“அப்போ போய் இருக்கலாமே ஏன் இங்கே இருந்து இத்தனை வருஷமா இப்படி
கஷ்டப்படுற, நீ ஜெயில்ல இருக்கிறத நினைச்சு உன் குடும்பம் எவ்வளவோ
வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கும்னு நீ நெனச்சு பாத்தியா?” என்று வாசு கேட்க,

“கண்டிப்பா தேவ், அவங்க எத்தனையோ நேரம் என்னைய வெளிய எடுக்க முயற்சி
பண்ணுனாங்க. நான்தான் வெளியில வரமாட்டேன்னு பிடிவாதமா இருந்துட்டேன். நான்
தண்டனை காலம் முடிஞ்சு வெளியில் வருகிற வரைக்கும் யாரும் என்னைய பார்க்க
வரக்கூடாதுனு கண்டிப்பா சொல்லிட்டேன். ஆனாலும் எங்க அம்மாவும் அப்பாவும்
என்னோட தம்பியும் மாசா மாசம் என்னைய பார்க்க வந்துகிட்டு தான் இருக்காங்க ,
ஆனா நான் தான் அவங்கள பார்க்க விருப்பப்படுறதே இல்ல, அதனால இத்தனை
வருஷமோ அவங்களும் என்னைய பாக்காமலே போய்க்கிட்டு இருக்காங்க!” என்று
கூறினான் நந்தன்.

“எங்களையெல்லாம் வெளியிலே எடுக்குறதுக்கு ஆள் இல்லாதனால தான் நாங்க இப்படி
கஷ்டப்பட்டு கிட்டு இருக்கோம்.ஆனால் உன்னைய வெளில கொண்டு வர்றதுக்கு
முயற்சி செய்றவங்க இருந்தும் ஏன் நீ வெளியில போகல?” என்று வாசு கேட்க,

“எல்லாம் நான் பண்ணுன தப்பு! நான் பண்ணுன தப்புக்கு கிடைச்ச தண்டனை இது.
என்னைய பொறுத்த வர நான் பண்ணுன தப்புக்கு இந்த தண்டனை பத்தாதுன்னு
நம்புறேன். அப்படி இருக்கும்போது இந்த தண்டனை காலகட்டம் முடிகிறதுக்குள்ள நான்
வெளியில போனால் என் மனசாட்சியே என்னை கொன்னுடும்!” என்று நந்தன்
கூறினான்.

“அப்படி என்ன தப்பு பண்ணுன கொலை எதுவும் பண்ணிட்டியா? “ என்று வாசு கேட்க,
“கொலையை விட பெரிய தப்பு!” என்று கூறினான் நந்தன்.
 
Top Bottom