“மித்ரா மனசுல எனக்காக இருக்கிற இடம் நட்பாக காதலான்னு உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் ரஞ்சனா” என்று பிரகாஷ் சொல்ல என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நின்றாள் ரஞ்சனா.
நேற்று மித்ரா நடந்து கொண்டதில் இருந்து ரஞ்சனாவுக்கு , மித்ராவும் பிரகாஷ் கண்ணாவை காதலிக்கிறாளோ என்ற சந்தேகம் அவள் மனதில் வலுத்தது.
ஆனாலும் மித்ராவின் வாயிலிருந்து அந்த வார்த்தை வந்தால் மட்டுமே நிம்மதி எனும் அளவுக்கு ரஞ்சனாவின் மனநிலை இருந்தது.
“ஆமா பிரகாஷ்! எனக்கும் நீ சொல்ற மாதிரி ரஞ்சனா உன்னைய காதலிக்கிறாளோனு சந்தேகமா தான் இருக்கு!” என்று சொல்லிவிட்டு நேற்று இரவு நடந்ததை கூறினாள் ரஞ்சனா.
“இவ்வளவு நடந்து இருக்கா? அதான் அம்மணி இன்னைக்கு என்னைய ஓவரா சைட் அடிச்சிருப்பாங்க போல!” என்று புன்னகைத்தான் பிரகாஷ்.
“ம்! நானும் பார்த்தேன், நீ சந்தியாகிட்ட பேசிகிட்டு இருந்தத பார்த்தப்ப அவ முகம் வழக்கத்துக்கு மாறா இருந்துச்சு. எப்பவும் அவ உணர்வுகளை வெளி காட்டவே மாட்டாள். ஆனால் நேத்துல இருந்து அவ முகம் வாட்டமா தான் இருக்கு! ஆனாலும் அதை வச்சு நம்ம எதையும் முடிவு பண்ணிட முடியாது, அவ வாயாலேயே உன்னைய காதலிக்கிறேனு அவளை சொல்ல வைக்கணும்!” என்று ரஞ்சனா சொல்ல,
“ம்! அந்த ஒரு வார்த்தையை கேக்குறதுக்கு தான் நானும் ரெண்டு வருஷமா வெயிட் பண்றேன். அப்படி ஒன்னு நடக்கவே மாட்டேங்குது!’ என்ற பிரகாஷ் வருத்தமாக கூறினான்.
“கவலைப் படாத! இதுக்கு மேல நம்ம பொறுமையா இருக்கிறதுல்ல அர்த்தம் கிடையாது. நீ நேரடியா அவ முன்னாடி போயி நின்னு அவ கண்ண பாத்து நான் உன்னைய காதலிக்கிறேன். உன்னை நல்லபடியா பார்த்துப்பேன். நீ என்ன சொல்றன்னு கேளு!” என்று ரஞ்சனா சொல்ல,
“க்கும், நான் அவ கிட்ட பேச போனாலே என்னைய பேசவிடாம வேற எதையாவது பேசி டிஸ்ட்ரக்சன் பண்ணிறா? நானும் நான் பேசப்போன விஷயத்தை மறந்து அவ சொல்றத கேட்டுட்டு அப்படியே திரும்பி வந்துடறேன்!” என்று பிரகாஷ் சலித்துக் கொண்டான்.
“நீ சொல்றது எனக்கு புரியுது.ஆனா இதையே காரணமா சொல்லாத! இன்னைக்கு அவ என்ன பேச வந்தாலும் அவளை பேச விடாம உன் மனசுல உள்ளத நீ சொல்லு, இன்னைக்கு அவ மனசுல என்ன இருக்குன்னு நமக்கு தெரிஞ்சாகணும்!” என்று ரஞ்சனா சொல்ல,
“ம்! சரி அப்போ ஹோட்டல்ல போயி அவகிட்ட நான் பேசுறேன்” என்று கூறினான் பிரகாஷ் கண்ணா.
“வேண்டாம்! வேண்டாம்! இன்னைக்கு சைட்ல நடந்ததை பார்த்து சகிச்சுக்க முடியாம தல வலிக்குதுன்னு பொய் சொல்லிட்டு போயிருக்கா! இன்னைக்கு ஒரு நாள் பீல் பண்ணட்டும். நாளைக்கு காலைல சைட்ல வச்சே அவ கிட்ட உன் காதலை சொல்லு!” என்று கூறினாள் ரஞ்சனா.
ரஞ்சனா கூறியதும் சரி என்று பிரகாசுக்கு தோன்ற, நாளைக்கு தன் காதலை மித்ராவிடம் சொல்லலாம் என்று முடிவெடுத்தான்.
இருவரும் பேசி முடித்துவிட்டு அங்கே இருந்த மீதி கன்ஸ்ட்ரக்ஷன் வேலைகளை பார்த்துவிட்டு ஹோட்டலுக்கு கிளம்பினர்.
இங்கு,
காயத்ரியும் கீர்த்தியும் பேசிக் கொண்டிருந்தனர்.
“பரவால்ல! நான் சொன்னத நீ புரிஞ்சுகிட்டு, தேவையில்லாத வேலை எதுவும் பண்ணாம இருந்தியே?” என்று காயத்ரி கேட்க சிரித்தாள் கீர்த்தி.
“என்னடி சிரிக்கிற?” என்று காயத்ரி தன் சந்தேகத்தை கேட்க,
“ஒன்னு இல்ல இன்னைக்கு சைட்ல நடந்ததை நினைச்சேன் சிரிச்சேன்” என்று கூறினாள் கீர்த்தி.
“சைட்ல என்ன நடந்துச்சு சிரிக்கிற அளவுக்கு, அப்படி எதுவும் நடந்த மாதிரி எனக்கு தெரியல?” என்று காயு கேட்க,
“நீ ஒழுங்கா பார்த்து இருக்க மாட்ட, அதான் உன்னால கண்டுபிடிக்க முடியல!” என்று சாதாரணமாக கூறினாள் கீர்த்தி.
“அடியேய் என்னடி நடந்துச்சுனு சொல்லு!”என்று ஆவலாக காயு கேட்க,
“மித்ராவுக்கும் பிரகாஷ் கண்ணா மேல காதல் இருக்குன்னு எனக்கு சந்தேகமா இருக்குன்னு நீ சொன்னியே, அது உண்மையா இருக்குமோன்னு இன்னைக்கு என் மனசுல சந்தேகம் வந்துச்சு!” என்று கீர்த்தி சொல்ல,
“புரியல தெளிவா சொல்லு?”என்று கூறினாள் காயத்ரி.
“இன்னைக்கு நம்ம சைட்டுக்கு புதுசா வந்திருந்தாங்கல்ல ஒரு ஆர்கிடெக்ட் சாரோட ஃப்ரெண்ட் சந்தியா,
“அவங்களும் சாரும் பேசுறத பார்த்து மித்ராவோட முகம் வாடி போச்சு, இவ்வளவு நாளு எதையும் வெளிக்காட்டாம இருந்தவங்க இன்னைக்கு அவங்களையே அறியாம அவங்க மனசுல உள்ளத வெளிப்படுத்திக்கிட்டு இருந்தாங்க!” என்று அங்கு நடந்ததை கூறினாள் கீர்த்தி.
“ஏய் உண்மையாவா? இவ்வளவு நடந்துச்சா, அதனாலதான் இன்னைக்கு மித்ரா மேடம் என்றைக்கும் இல்லாத அதிசயமா எனக்கு தலை வலிக்குதுன்னு சொல்லிட்டு போனாங்களா? அவங்க சொல்லவும் எனக்கே ஆச்சரியமா தான் இருந்துச்சு.இந்த ரெண்டு வருஷ காலத்துல அவங்களோட வேலையை முடிக்காம அவங்க போனதே கிடையாது!” என்று காயு சொல்ல,
“ம்! ஆனா இன்னைக்கு அப்படி இல்லையே. அவங்க இவ்வளவு நாளும் மறைச்சு வச்சிருந்த காதல் இன்னிக்கி லைட்டா பொறாமையா வெளியில வந்துருச்சு!”என புன்னகைத்தாள் கீர்த்தி.
“நான்தான் சொன்னேன்ல, எனக்கு ஏற்கனவே மித்ரா மேல ஒரு சந்தேகம் இருந்துச்சு! அதனாலதான் தேவையில்லாம நீ உன் மனசுல கற்பனையே வளர்த்துக்காதன்னு உன்கிட்ட எச்சரிக்கை பண்ணுனேன், நீதான் நான் சொன்னத புரிஞ்சுக்காம என் மேல கோவத்துல இருந்த. இப்பயாவது புரிஞ்சு உன் மனசுல தேவையில்லாத எண்ணத்தை வளக்காம இரு. அதுதான் எல்லாருக்கும் நல்லது!” என்று காயு கூறினாள்.
“அவங்க ரெண்டு பேருக்கும் இடையில போயி எந்த பிரச்சனையும் பண்ணாம இருன்னு நீ சொல்லு அதை நான் கேட்டுக்கிடுவேன்! ஆனா பிரகாஷ் சார காதலிக்காதனு நீ சொல்லாத, அத நான் ஏத்துக்க மாட்டேன்!” என்று கீர்த்தி சொல்ல அவளை புரியாத பார்வை பார்த்தாள் காயு.
“என்னடி லூசு மாதிரி உளர? “ என காயு சொல்ல
“நான் தெளிவா தான் இருக்கேன். அவங்க ரெண்டு பேரும் காதலிச்சுக்கிட்டு இருக்கும்போது நான் இடையில் போய் பிரச்சனை பண்ணுவேன்னு சொல்லவே இல்லையே! ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் இடையில ஏதாவது பிரச்சனை வந்து அவங்க ரெண்டு பேரும் சேராம போனால், அன்னைக்கு என் மனசுல உள்ள காதல கட்டாயம் நான் பிரகாஷ் சார் கிட்ட சொல்லுவேன்!” என்று கூறியவளை விசித்திரமாக பார்த்தாள் காயத்ரி.
“இங்க பாரு காயு நான் பிரகாஷ் சாரை காதலிக்கிறேன். அவரு வேற ஒரு பொண்ண காதலிக்கிறார் என்கிறதுக்காக என்னோட காதல் பொய்யின்னு ஆகாது. அவர் எப்படி மித்ராவை சின்சியரா காதலிக்கிறாரோ அதே மாதிரி நானும் அவரை காதலிக்கிறேன். அப்படி இருக்கும் போது எனக்கு பிரகாஷ அடைறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா அதை பயன்படுத்திக்கிருவேன்னு சொல்றேன் புரியுதா?” என்று கீர்த்தி சொல்ல,
“ஒன்னும் புரியல! நீயா அவங்க ரெண்டு பேருக்கும் இடையில போயி எந்த பிரச்சனையும் பண்ண மாட்டேன்னு சொன்னது வர சந்தோஷம். கூடிய சீக்கிரத்துல அவங்க ரெண்டு பேரும் சேர்றத நீ பார்க்க தான் போற! அதனாலதான் சொல்றேன் அன்னைக்கு வருத்தப்பட்டு நிக்காத!” என்று சொல்லிவிட்டு குளியல் அறைக்குள் நுழைந்தாள் காயு.
“நீ சொல்றது எனக்கு புரியுது காயு, ஆனால் என் மனசு அத எத்துக்க மாட்டேங்குது. நாளுக்கு நாள் நான் பிரகாஷ் மேல வச்சிருக்கிற காதல் கூடிக்கிட்டே இருக்குதே தவிர கொஞ்சமும் குறைய மாட்டேங்குது’ என்று தன் மனதில் நினைத்துக் கொண்டாள் கீர்த்தி.
ரஞ்சனா, மித்ராவும் அவளும் தங்கியிருந்த அறைக்குள் நுழைய அங்கு மாயமித்ரா படுத்துக் கொண்டிருந்தாள்.
அவளை ரஞ்சனா பார்த்துவிட்டு, “என்னாச்சு காயத்ரி கிட்ட தலைவலின்னு சொல்லிட்டு வந்தியாம். இப்ப எப்படி இருக்கு? நேத்துல இருந்து இன்னும் சரியாகலையா? கிளம்பு ரெண்டு பேரும் டாக்டரை போய் பார்த்துட்டு வந்துருவோம்!” என்று ரஞ்சனா சொல்ல!
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுத்தா எல்லாம் மாறிடும்!” என்று கூறினாள் மித்ரா.
“ஏன் நேத்து காபி கூட குடிக்காம வந்து தூங்க தானே செஞ்ச அப்ப குறைஞ்சு இருக்கணுமே “என்று கேட்டாள் ரஞ்சனா
ரஞ்சனாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல்,” நேத்த விட இன்னைக்கு குறைஞ்சு தான் இருக்கு!” என்று சமாளித்தாள் மித்ரா.
“நேத்த விட குறைஞ்ச மாதிரி தெரியல! உன் முகத்தை பார்த்தா இன்னைக்கு தான் தலைவலி கூடி இருக்கிற மாதிரி தான் தெரியுது!” என்று ரஞ்சனா நக்கலாக சொல்ல அதிர்ச்சியாக ரஞ்சனாவை பார்த்தாள் மித்ரா.
கதையைப் படித்துவிட்டு கதையின் போக்கு எப்படி இருக்கிறது என்று உங்களுடைய விமர்சனங்களையும் மதிப்பீடுகளையும் தந்து விட்டு செல்லுங்கள்.