“நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல, நேத்த விட இன்னைக்கு தலைவலி குறைஞ்சு தான் இருக்கு!” என்று மாயமித்ரா சொல்ல,
“குறைஞ்சா சந்தோசம்தான, அது சரி அப்புறம் எதுக்கு படுத்து கிடக்கிற?” என்று ரஞ்சனா பாய்ண்டாக கேட்க, “சும்மாதான் படுத்து கிடக்கேன்” என்று கூறினாள் மாயமித்ரா.
“எனக்கு ரெண்டு நாளா உன் நடவடிக்கை எதுவும் சரியில்லாத மாதிரி தெரியுது! என்ன விஷயம் என்கிட்ட இருந்து ஏதாவது மறைக்கிறீயா? “ என்று ரஞ்சனா மாயமித்ராவை பார்த்து கேட்க,
“அதெல்லாம் ஒன்னும் இல்ல, உன்கிட்ட மறைக்கிறதுக்கு என்ன இருக்கு நான் நார்மலா தான் இருக்கேன், நீயா எதையும் கற்பனை பண்ணாத!” என்று கூறினாள் மாய மித்ரா.
‘அழுத்தக்காரி! சொல்றாளா பாரு, நீயும் எத்தனை நாள் உன் மனசுல உள்ளத மறச்சு வைக்கிறேன்னு நானும் பார்க்கிறேன்!” என்று ரஞ்சனா
நினைத்துக் கொண்டிருக்க,
“சரி ரஞ்சனா எனக்கு தூக்கம் வருது நான் தூங்க போறேன். நீ லைட் ஆஃப் பண்ணு!” என்று மித்ரா சொல்ல குறுநகை புரிந்தாள் ரஞ்சனா.
‘அம்மணி அழுகிறத நாங்க பாத்திட கூடாதாம், எவ்வளவு தெளிவா லைட் ஆப் பண்ண சொல்றா’ என்று நினைத்துக் கொண்டே லைட்டை ஆஃப் செய்துவிட்டு அவளும் படுத்து விட்டாள்.
இங்கு,
“அப்பா வந்துட்டியா ? “ என்று
வீட்டுக்குள் நுழைந்த வரை ஓடிவந்து கட்டிப்பிடித்தாள் அசிஸ்டன்ட் கமிஷனர் அசோக்கின் செல்ல மகள் இனியா.
“வந்துட்டேன் டா குட்டி உன்னைய பாக்குறதுக்காக தான் அவசர அவசரமா அப்பா பிளைட் புடிச்சு வந்தேன்!” என்று சொல்ல, அவரை இறுக்கி அணைத்தாள் இனியா.
நெடு நாட்கள் கழித்து தன் பிஞ்சு மகளின் அணைப்பில் அப்படியே உருகி வாசலிலேயே நின்றார் அசோக்.
சில நிமிடங்கள் கட்டிப்பிடித்த இனியா, தன் தந்தையின் தாடியை செல்லமாக இழுத்து,
“ஆமாம், ரெண்டு நாளுக்கு முன்னாடியே நீ வர்ற தான சொல்லி இருந்த! ஏன் வரல. நான் உன்னைய எவ்வளவு மிஸ் பண்ணினேன் தெரியுமா?” என்று இனியா கேட்க,
“சாரிடா குட்டி! அப்பாவுக்கு ஒரு முக்கியமான வேலை இருந்துச்சு
அதான் வர முடியல!” என்று கூறினார் அசோக்.
“உங்க அப்பாவுக்கு நம்மள விட முக்கியமான வேலை நிறைய இருக்கும்!” என்று கோபமாக சொல்லிக் கொண்டே வந்து நின்றாள் அசோக்கின் மனைவி சத்யா.
தன் மனையாளின் கோபம் எதற்கு என்று புரிந்து கொண்டவர் மெல்லமாய் சிரித்துக்கொண்டே, “ உங்களை விட இந்த உலகத்துல எனக்கு எதுவும் முக்கியமில்ல!” என்று கோபத்தில் நின்று கொண்டிருந்த அவளையும் அணைத்தார் அசோக்.
“ஐயடா,... இத யாராவது புயல் காத்துல பொறி சாப்டுகிட்டு இருப்பாங்க அவங்க கிட்ட போய் சொல்லுங்க! என் தங்கச்சி
கல்யாணத்துக்கு வர சொன்னால், அவ கல்யாணம் முடிஞ்சு அவ புருஷன் வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் வந்து இருக்கீங்க!”என்று சலித்துக் கொள்ள,
“டார்லிங் உனக்கு சிறையில என்ன நடந்துச்சுன்னு சொன்னேன்ல, என்னோட சூழ்நிலை தெரிஞ்சும் இப்படி கோபப்பட்டா நான் என்ன பண்றது!” என்று சத்யாவை சமாதானப்படுத்தினான் அசோக்.
சத்யாவோ தன் கணவனின் கையில் இருந்து தன்னை விடுவித்து கொண்டே முரண்டு பிடிக்க, அசோக்கோ தன் மனைவியை இன்னும் அழுத்தமாக தன்னோடு அணைத்துக் கொண்டார்.
“வாங்க மாப்ள! எப்படி இருக்கீங்க?”என்று கேட்ட சத்தத்தில் தன் மனையாளை அணைத்திருந்த கையை அவசர அவசரமாக விடுவித்தார் அசோக். இவ்வளவு நேரம் தான் போராடியும் தன்னை விடுவிக்காதவர் மாமியாரை பார்த்ததும் பதட்டத்தில் கையை எடுத்ததை பார்க்க சத்யாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது.
“இப்பதான் அத்தை வந்தேன். நான் நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க!” என்று அசோக் கேட்க,
“நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் மாப்ள நீங்க எப்படி இருக்கீங்க! ஸ்டேஷன்ல நடந்த பிரச்சனையை பத்தி சத்யா சொன்னா, எங்களுக்கு எல்லாம் ரொம்ப வருத்தமாயிருச்சு! இப்ப அந்த பிரச்சனை எல்லாம் சரியாகிட்டா மாப்பிள்ளை!” என்று அசோக்கின் மாமியார் கேட்டார்.
“ஆமா அத்தை அத முடிச்சுட்டு வர்றதுக்கு தான் ரெண்டு நாள் ஆயிருச்சு! மன்னிச்சிடுங்க அத்தை, பிரியா கல்யாணத்துல மூத்த மாப்பிள்ளையா முன்ன நின்னு எல்லாத்தையும் பார்த்து இருக்கணும்! என் நேரம் எதையும் செய்ய முடியாமல் போச்சு” என்று அசோக் தன்மீதே குறைபட்டு கொள்ள,
“அதுக்கு என்ன மாப்ள? உங்க வேலை அப்படி, எங்களால எல்லாத்தையும் புரிஞ்சுக்கிற முடியும், என்ன பிரியா தான் நீங்க வரலைன்னு கொஞ்சம் வருத்தப்பட்டா, இன்னைக்கு சாயந்தரம் அவளோட மாமியார் வீட்டுக்கு போய் நீங்களும் சத்யாவும் ஒரு தடவை பார்த்துட்டு வந்துருங்க! அவளுக்கும் ஒரு திருப்தி இருக்கும்!” என்று சொல்ல,
“ கண்டிப்பா அத்தை!” என்று கூறினார் அசோக்.
“கோபத்துல இருக்கேன்னு வந்தவர வாசல்லயே வச்சு வம்பு இழுத்துக்கிட்டு இருக்காத, ரொம்ப தூரத்தில் இருந்து பயணம் பண்ணிட்டு வந்து இருப்பாரு குளிச்சிட்டு சாப்பாட கொடுத்து ரெஸ்ட் எடுக்க சொல்லு! அதுக்கப்புறம் உன் சண்டைய வச்சுக்க” என்று அங்கு நின்று கொண்டிருந்த தன் மகளிடம் மெதுவாக சொல்லிவிட்டு போனார் சத்யாவின் அன்னை.
“ஆமா இவங்க மருமகன் கிட்ட நாங்க வம்பு இழுக்கறோம்!” என சலித்துக் கொண்டே, உள்ள வாங்க என்று சொல்லி விட்டு அவன் கையிலிருந்த சூட்கேஸை வாங்கிக் கொண்டு அவர்களின் அறையை நோக்கி சென்றாள் சத்யா.
மனையாளின் கோபத்தை ரசித்துக்கொண்டே பக்கத்தில் நின்று கொண்டிருந்த தன் மகள் இனியாவை தூக்கிக் கொண்டு சத்யாவை தொடர்ந்து அந்த அறைக்குள் நுழைந்தார் அசோக்.
“போய் குளிங்க! நான் உங்களுக்கு சாப்பாட்டை எடுத்து வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சத்யா நகர, அவளை நகர விடாமல் அணை கட்டினார் அசோக்.
“என்ன பண்றீங்க மொதல்ல தள்ளுங்க?” என்று சத்யா சொல்ல,
“என் மேல உள்ள கோபம் குறைஞ்சிருச்சுன்னு சொல்லு அப்பத்தான் உன்னைய விடுவேன்!” என்று சொல்லி கண்ணடித்தார்.
“அதெல்லாம் எனக்கு எந்த கோபமும் இல்லை! முதல்ல தள்ளுங்க!”என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர
முயற்சி செய்ய , சத்யாவின் கையைப் பிடித்து இழுக்க அவளும் பேலன்ஸ் தவறி அசோக் மீது சாய்ந்து விட்டாள்.
“என்ன பண்றீங்க பக்கத்துல பொண்ணு இருக்கா?” என்று மெதுவாக சொல்லிவிட்டு, அவரிடமிருந்து விடை பெற முயற்சிக்க, “ நீ மன்னிச்சுட்டன்னு சொன்னாதான் உன்னையே விடுவேன் அதுவரை உன்னை விடவே மாட்டேன் என்று சொல்ல, “ அதெல்லாம் சொல்ல மாட்டேன்” என்று கூறினாள் சத்யா.
“அப்போ நானும் விடமாட்டேன்” என்று இன்னும் இறுக்கி அணைக்க, தன்னவனின் அணைப்பில் உருகி விட்டவள் தன்னவனையும் இறுக்கி அணைத்தாள்.
“உங்களை எவ்வளவு மிஸ் பண்ணினேன் தெரியுமா? கல்யாணத்துல ஒரு போட்டோ கூட உங்களோட நின்னு நான் எடுக்கலைன்னு ரொம்ப வருத்தமா இருந்துச்சு!” என்று சத்யா தன் வருத்தத்தை தெரிவிக்க,
“அதுக்கு என்ன டார்லிங், இன்னைக்கு பிரியாவோட வீட்டுக்கு போய் பிரியாவையும் பார்த்துட்டுபுது மாப்பிள்ளை பொண்ணோட நம்ம ஒரு போட்டோ எடுத்துட்டு வந்து பெருசா பிரேம் பண்ணி நம்ம வீட்டுல மாட்டுவோம் சரியா?” என்று கேட்க சரியென்று தலையசைத்தாள் சத்யா.
அசோக் சொல்லவும் சத்யாவின் முகம் மாதிரியாக, “ என்னடி என்ன வேண்டாமா? “ என்று கேட்க,
“அதெல்லாம் ஓகே தான்! உங்க மேல ரொம்ப வேர்வை ஸ்மெல்லா இருக்கு என்னால மூச்சு கூட விட முடியல!” என்று சத்யா சொல்ல, சந்தேகமாக தன் மனையளை பார்த்தார் அசோக்.
“அப்போ குளிச்சிட்டு வந்தா, உங்களுக்கு ஓகே தான் போல!” என சொல்லிக்கொண்டு அசோக் புன்னகைக்க,
“அடச்சி போங்க.... “ என்று சொல்லிவிட்டு சத்யா வெக்கப்பட்டுக் கொண்டே அசோக்குக்கு உணவை எடுத்து வைப்பதற்காக சென்று விட்டாள்.
மனைவியை செயலை ரசித்துக்கொண்டே, “ அப்பாவோட சேர்ந்து நீயும் குளிக்க வாரியா? “ என்று பக்கத்தில் இருந்த தன் மகளிடம் கேட்க இனியாவும் வேகமாக தலையை ஆட்ட அவளை தூக்கிக்கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்தார் அசோக்.
சிறிது நேரத்தில் இருவரும் குளித்துவிட்டு உடைமாற்றிவிட்டு வர இருவருக்கும் தேவையான உணவை டைனிங் டேபிளில் எடுத்து வைத்தாள் சத்யா.
அசோக் மனைவிக்கும் மகளுக்கும்
ஊட்டி விட்டுக் கொண்டே தானும் சாப்பிட்டு முடித்தார்.
“அப்பா “என இனியா அழைக்க
“சொல்லு செல்ல குட்டி “ என்று
கூறினார் அசோக்.
“அப்பா நான் உங்ககிட்ட ஒன்னு கேட்பேன் நீங்க சரின்னு சொல்லுவீங்களா?” என்று இனியா சொல்ல,
“நீ முதல்ல சொல்லு அப்பாவுக்கு ஓகேன்னா சரின்னு சொல்றேன்!” என்று அசோக் கூறினார்.
“சித்தியும் சித்தப்பாவும் சுத்தி பாக்குறதுக்கு கேரளா போறாங்களாம். நம்மளும் அவங்களோட போவோமா?” என்று கேட்க,
“போகலாமே!” என்று கூறினார் அசோக்.
“அவங்க ஒரு மாசம் ட்ரிப் பிளான் பண்ணி இருக்காங்க” என்று சத்யா சொல்ல
“அப்போ அவங்களோட போக முடியாதே அப்பா ரெண்டு வாரம்தான் லீவு கேட்டு வந்தேன்! அதுலயும் ஒரு வாரம் மட்டும் தான் உங்க கூட இருப்பேன். அடுத்த வாரம் அப்பாவுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு!” என சொல்ல இருவரும் முறைத்துக் கொண்டிருந்தனர்.
“ரெண்டு வாரம் லீவு போட்டுட்டு வந்து கூட அந்த ரெண்டு வாரம்னு எங்க கூட இருக்க முடியாம அப்படி என்ன முக்கியமான வேலை உங்களுக்கு இருக்கு?” என்று சத்யா கோபமாக கேட்க,
“முக்கியமான வேலை தான் சத்யா ஒரு உயிர் சம்பந்தப்பட்டது. அதுவும் இன்னைக்கு நான் உயிர் வாழ்வதற்கு உதவி செஞ்ச நபரோட உயிர் சம்பந்தப்பட்டது!” என்று அசோக் சொல்ல
“நந்தன் அண்ணாவுக்கா” என்று சரியாக கேட்டாள் சத்யா.
அசோக்கிற்கு சிறையில் நடந்த அசம்பாவிதத்தை கேள்விப்பட்டு மனம் கனத்த சத்யா, மறுநாளே நந்தன் செய்த உதவிக்காக அவனிடம் வந்து நன்றி சொல்லி இருந்தாள். அசோக் சொல்லி நந்தனுடைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதையும் தெரிந்து கொண்டிருந்தாள்.
“ஆமா, ஏன் என்னாச்சு?” என்று கேட்க அங்கு நடந்ததை எல்லாம் கூறினான் அசோக்.
“ஓ இவ்வளவு தூரம் ஆயிருச்சா? பாவம் நந்தன் அண்ணன். கோபத்துல ஒரு நிமிஷம் யோசிக்காம பண்ணுன தப்பு அவங்களோட மொத்த வாழ்க்கையையும் நரகமாக்கிட்டு!”என்று அவனுக்காக பரிதாபப்பட்டாள் சத்யா.
“அப்பா ப்ளீஸ் பா! நம்ம சித்தியோட போவோம்!”என்று இனியா வற்புறுத்த,
“இனியா இந்த தடவை அப்பாவுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. நம்ம அடுத்த தடவை அப்பாவோட போவோம். நீ குட் கேர்ள் தான?” என்று கேட்க
ம்ம்!.. என்று சொல்லி தலை அசைத்தது அந்த பிஞ்சு.
வாடிய தன் மழலையை கையில் ஏந்தி, “ “இந்த தடவை சித்தி சித்தப்பா கூட கேரளாவுக்கு போக முடியாது. ஆனால் இந்த ஒரு வாரம் நீ,நான், அம்மா மூணு பேரும் இந்த ஊர் முழுக்க சுத்தி பாக்கலாம்! சரியா” என்று அசோக் கேட்க, இனியாவின் கண்கள் சந்தோஷத்தில் வியப்பில் ஆழ்ந்தது.
“உங்களோட ஒரு வாரம் என்ஜாய் பண்ணிட்டு அடுத்த வாரம் நந்தனுக்காக அந்தப் பொண்ணு எங்க இருக்கான்னு தேடி கண்டுபிடிக்கணும்!” என்று அசோக் சொல்ல,
“ கவலைப்படாதீங்க! அந்தப் பொண்ணு எங்க இருந்தாலும் உங்க கண்ணுல கண்டிப்பா தென்படுவாங்க. நீங்களும் அவங்கள கூட்டிட்டு நந்தன் அண்ணா முன்னாடி நிறுத்துவீங்க! அண்ணாவும் அந்த பொண்ணு கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு அவர் மனசுல உள்ள குற்ற உணர்ச்சிய சரி பண்ணிட்டு ஒரு நல்ல வாழ்க்கை வாழ ஆரம்பிப்பாரு என்று சத்யா சொல்ல, “ உன் வாக்கு பலிக்கட்டும் சத்யா “என்று சொல்லிவிட்டு சத்யாவின் நெற்றியில் ஒரு முத்தத்தை பதித்தார் அசோக்.
கதையைப் படித்துவிட்டு கதையின் போக்கு எப்படி இருக்கிறது என்று உங்களுடைய விமர்சனங்களையும் மதிப்பீடுகளையும் தந்து விட்டு சொல்லுங்கள் வாசகப் பெருமக்களே!