பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 22

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,564
6,484
113
காலையில் வழக்கம்போல் அனைவரும் சைட்டிற்கு வந்திருந்தனர்.

நேற்றை போல இல்லாமல் இன்று மாயமித்ராவின் முகம் மிகவும் தெளிவாக இருந்தது. எந்த வருத்தங்களும் என்னை ஒன்றும் செய்யப் போவதில்லை என்பதை போல் பழையபடி இறுக்கமாக நின்று கொண்டிருந்தாள்.

அனைவரும் தங்களுடைய பணியை திறம்பட செய்து கொண்டிருந்தனர். சந்தியாவும் இன்று வேலைக்கு வந்திருந்தாள்.


பிரகாஷ் கண்ணாவும் சந்தியாவும் தங்களின் திட்டப்படி மித்ராவின் கண்முன் நின்று சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்.

ஆனால், மித்ரா அவர்களை ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை.

“என்ன ஆச்சு உன் ஆளு நேத்து நம்ம பேசுறத பார்த்து கவலையில சுத்திக்கிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு இன்னைக்கு, யாரு எப்படி போனாலும் எனக்கு எதுவும் பிரச்சனை இல்லைங்கிற மாதிரி இருக்கா?’ என்று பிரகாஷ் சொல்ல, அதைத்தான் நானும் யோசிச்சுகிட்டு இருக்கேன்!” என்று கூறினான் பிரகாஷ்.


“ஒருவேளை நம்ம திட்டம் மித்ராவுக்கு தெரிந்திருக்குமோ?” என்று சந்தியா தன் சந்தேகத்தை கேட்க,

“எதுவும் தெரிஞ்சி இருக்கிறதுக்கு வாய்ப்பு இல்ல! ஆனால் நேத்து வருத்தப்பட்டவ இன்னைக்கு வருத்தப்படாமல் பழையபடி கடந்து போறாளே அதான் சந்தேகமா இருக்கு!” என்று பிரகாஷ் கூறினான்.


“ஒருவேளை நீ யாரோட பேசினாலும் அது என்னைய பாதிக்காதுனு உன்கிட்ட காட்டுறதுக்காக இப்படி இறுக்கமா இருக்காளோ?” என்று சந்தியா கேட்க,

“இருக்கலாம் அவ எப்பவுமே அப்படிதான். ஈஸியா அவ மனசுல உள்ளதை யாரும் தெரிஞ்சுக்க முடியாது! அவ நம்ம ஆபீசுக்கு வேலைக்கு வந்த ரெண்டு வருஷமாவே இப்படிதான் இருக்கா!” என்று கூறினான் பிரகாஷ்.


இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, அங்கு வந்து சேர்ந்தால் ரஞ்சனா.

“என்ன மித்ராவோட நடவடிக்கையை பார்த்து ரெண்டு பேரும் அதிர்ச்சியாக்கிட்டீங்க போல!’ என்று ரஞ்சனா சிரிக்க,

“ஆமா நேத்து வருத்தமா இருந்தவ இன்னிக்கு எனக்கு என்னனு இருக்கிறா?” என்று பிரகாஷ் கூறினான்.

“அதுக்கு காரணம் இருக்கு! நேத்து நைட்டு ரெண்டு நாளா உன் முகமே சரியில்லையே நீ எதையாவது மறைக்கிறியான்னு நான் கேட்டுட்டேன். அதனால அம்மணி இன்னைக்கு எப்பவும் போல இருக்கிற மாதிரி காட்டிக்கிட்டு இருக்காங்க வேற ஒன்னும் இல்ல! உள்ளுக்குள்ள பயம் இருக்கத்தான் செய்யும்!” என்று ரஞ்சனா சொல்ல
இருவரும் சிரித்தனர்.


“சரி போ பிரகாஷ் இது தான் சரியான நேரம் உன்னோட காதல அவ கிட்ட சொல்லு!” என்று ரஞ்சனா சொல்ல, தன் மனதில் இருந்த படபடப்பை ஒதுக்கி வைத்து விட்டு மித்ராவை நோக்கி சென்றான்.


அவன் வருகையை தூரத்தில் இருந்தே பார்த்தவள், எப்போதும் போல அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தாள்.

அவன் வரவும், ஓனர் என்ற முறையில் அவள் எழுந்து நிற்க, “ பரவாயில்ல மித்ரா உட்காருங்க!” என்று பிரகாஷ் சொல்ல மித்ராவும் அமர்ந்தாள். அவள் பக்கத்தில் இருந்த நாற்காலியை அவளுக்கு எதிராக இழுத்து போட்டு அமர்ந்தான் பிரகாஷ்.

பிரகாஷின் நடவடிக்கைகள் மாயமித்ராவிற்கு படபடப்பை உண்டாக்கின. சிறிது நேரம் பிரகாஷ் கண்ணா எதுவும் பேசாமல் முன்னால் இருந்த மாயமித்ராவை பார்த்தது ரசித்துக்கொண்டே இருக்க அவளுக்கு அது அசௌகரியமாக இருந்தது.

அவன் பார்வையில் அங்கு இங்கும் நெளிந்தபடி தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள் மாயமித்ரா.


இங்கே, பிரகாஷ் தன் காதலை சொல்கிறானா என்று பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனாவும் சந்தியாவும் தங்களின் தலையில் அடித்துக் கொண்டனர்.

அவகிட்ட போய் லவ்வ சொல்லுனு அனுப்புனா அவ பக்கத்துல உக்காந்து அவளை சைட் அடிச்சு கிட்டு இருக்கான்! ஏற்கனவே அவ பேச வாயைத் திறந்தாலே இவன் வாய் மூடிரும். இன்னைக்கு பக்கதுல வேற உக்காந்து பாத்துகிட்டு இருக்கான். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்து “ அவ கண்ணம் பண்ணு மாதிரி இருந்துச்சு! அத பார்த்த எனக்கு அடுத்த வார்த்தை வரலைன்னு சொல்லுவான் பாரு!” என்று ரஞ்சனா கிண்டல் அடித்தாள்.

“இது வேறயா? சரி இன்னைக்கு என்ன நடக்குதுன்னு வேடிக்கைய பாப்போம்!” என்று சந்தியாவும் புன்னகைக்க இருவரும் அங்கு நடப்பதை வேடிக்கை பார்க்க தொடங்கினர்.


மித்ரா... என தயங்கியபடி அழைத்தான் பிரகாஷ்.

“சொல்லுங்க சார்?”

“நேத்து உங்களுக்கு தலைவலின்னு காயு சொன்னாங்க, இப்ப எப்படி இருக்கு?” எனக் கேட்டான் பிரகாஷ்.


“இன்னைக்கு பரவால்ல சார்!”என்று மெதுவாக புன்னகைத்தாள் மித்ரா.

மித்ரா சொல்வதைக் கேட்டுக் கொண்டே அங்கு ரஞ்சனாவும் சந்தியாவும் நிற்க்கிறார்களா?என்று பார்க்க அவர்களும் இவனை தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ‘சொல்லு சொல்லு’ என்பதைப்போல் அவர்கள் சைகை செய்ய, பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்டு,

“மித்ரா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்!”

“சொல்லுங்க சார், நானும் உங்க கிட்ட பேசணும் தான் நினைச்சுகிட்டு இருந்தேன்!” என்று மித்ரா சொல்ல,

‘ஆரம்பிச்சிட்டா’ என்று மனதுக்குள் முணுமுணுத்தான் பிரகாஷ்.

“சார் எதாவது சொன்னீங்களா?” என்று மித்ரா பிரகாசை பார்த்து கேட்க,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல மித்ரா, சரி சொல்லுங்க என்ன சொல்லணும்னு நினைச்சீங்க?”எனக் கேட்க


“இந்த பேஸ்மெண்ட் டிசைன்ல சின்ன ஆல்ட்ரேஷன் பண்ண வேண்டியதிருக்கு! அதை எப்படி பண்ணலாம்னு நான் ஒரு டிசைன் பண்ணி இருக்கேன்! இத பாத்துட்டு உங்க கருத்த சொல்லுங்க! எது சரியோ அதை யோசிச்சு பண்ணுவோம்!” என்று மித்ரா சொல்ல அதை வாங்கி தனியாக வைத்தான்.

அதை பார்த்த மித்ரா கேள்வியாக பிரகாசை பார்க்க, “ மித்ரா கொஞ்ச நேரம் வேலையை எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு பர்சனலா பேசணும்னு நினைக்கிறேன்!” என்று பிரகாஷ் சொல்ல மாயமித்ராவின் மனம் படப்படுத்தது.


“மித்ரா நான் உன்ன காத...... க்...”என்று சொல்லிக் சொல்லிக் கொண்டிருக்கும்போது அவசர அவசரமாக இருவரையும் நோக்கி ஓடி வந்தார் மேனேஜர்.

அவரின் பதட்டத்தை பார்த்த இருவரும் எழுந்து “என்ன ஆச்சு?” என்று ஒரே குரலாக கேட்க,

“சார் நம்ம கன்ஸ்டிரக்சன்ல வேலை பார்க்க வந்த கொத்தனார் ஒருத்தர் , அஸ்திவாரம் போடுவதற்காக தோண்டி வச்ச பள்ளத்துல விழுந்துட்டாரு!” என்று சொல்ல இருவரும் அதிர்ந்தே விட்டனர்.


“என்னாச்சு என்ன சொல்றீங்க? இப்ப அவர் எங்க இருக்காரு, எப்படி இருக்காரு?” என்று பிரகாஷ் கண்ணா பதட்டத்தோடு கேட்க,

“சார் இப்ப எல்லாரும் சேர்ந்து அவர தூக்கி, அவரோட நண்பரோட ஹாஸ்பிடல் அனுப்பி இருக்கோம் ஆம்புலன்ஸ்ல!” என்று மேனேஜர் கூற மித்ராவும் பிரகாஷும் ஒருவரை ஒருவர் அதிர்ந்து பார்த்தனர்.



“கால் உடைஞ்சு போச்சு மண்டையிலயும் இரத்தம் வந்துச்சு! எனக்கு என்னமோ கொஞ்சம் கிரிட்டிக்கல் தான்னு தோணுது” என்று தயங்கிக் கொண்டே மேனேஜர் கூறினார்.

“இவ்வளவு அஜாக்கிரதையா எப்படி இருந்தீங்க! அறிவில்ல?
இப்ப எந்த ஹாஸ்பிடல்ல சேர்த்துக்கறீங்க, முதல்ல காரை ஸ்டார்ட் பண்ணுங்க! முதல்ல ஹாஸ்பிடல் போய் பாத்துட்டு அப்புறம் என்ன செய்யலாம்னு முடிவு பண்ணிக்குவோம்!” என்று பிரகாஷ் சொல்ல, மேனேஜர் காரை ஸ்டாட் செய்து விட்டார்.


மாயமித்ராவையும் பிரகாசையும் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனாவும் சந்தியாவும் மேனேஜர் ஓடி வந்ததை பார்த்து ஏதோ ஒரு பிரச்சனை என்பதை புரிந்து கொண்டு , அவர்களும் அங்கு வந்தனர். அங்கு நடந்ததை கேட்டு அவர்களும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

பிரகாஸும் மித்ராவும் காரில் ஏற, ரஞ்சனாவும் சந்தியாவும் அவர்களோடு ஏறிக்கொண்டனர். அவர்களின் கார் அடிபட்டவரை அட்மிட் செய்திருந்த மருத்துவமனை நோக்கி விரைந்தது.


அதற்குள் அடிபட்டவருடைய குடும்பத்திற்கு தகவல் தெரிந்து அவர்கள் மருத்துவமனையில் வாசலில் வந்து பிரச்சனை செய்து கொண்டிருந்தனர்.

பிரகாஷ் கண்ணா,மித்ரா, ரஞ்சனா சந்தியா மேனேஜர் என ஐவரும் காரில் இருந்து இறங்கி வேகமாக மருத்துவமனைக்கு செல்ல அங்கிருந்த உறவினர்களால் தடுக்கப்பட்டனர்.

கன்ஸ்ட்ரக்ஷன் சைட்டில் நடந்த பிரச்சனைகள் போலீசாருக்கு தெரிவிக்கப்பட அவர்களும் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.



“சார் இங்க நிக்கிற கூட்டத்தை பார்த்தாலே பிரச்சனைய பெருசு மாதிரி தெரியுது! இப்ப என்ன பண்றது” என்று மேனேஜர் கேட்க,

“எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் அதை பேஸ் பண்ணி தான் ஆகணும்! எவ்வளவு பணமும் செலவழிச்சாலும் அவரோட உயிரை காப்பாத்தணும் அதுதான் முதல்ல நமக்கு முக்கியம்!” என்று பிரகாஷ் கூறினான்.

அங்கிருந்த காவலர்களும் பிரகாஸை பற்றி தெரிந்து, “ கொஞ்ச நேரம் பொறுமையா இருங்க! முதல்ல அவரோட கண்டிஷன் எப்படி இருக்குன்னு நம்ம கேட்டுக்கிடுவோம்! அதுக்கப்புறம் நம்ம பேசிக்கலாம்! இப்போதைக்கு அவரோட உயிர் தான் நமக்கு முக்கியம்!’ என்று அடிபட்டவரின் உறவினரிடம் எடுத்துச் சொல்ல, சிலர் காவலர்களோடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

“சார் நீங்க முதல்ல உள்ள போயி பாருங்க நாங்க இவங்கள பார்த்துக்கிறோம், அதுக்கப்புறம் என்ன செய்யலாம்னு முடிவு பண்ணுவோம்!” என்று காவலர்கள் சொல்ல, ஐவரும் மருத்துவமனைக்குள் சென்றனர்.

அங்கு அவருக்கு ட்ரீட்மென்ட் செய்த மருத்துவரை சந்தித்து கேட்க, அவரின் உடல்நிலை கொஞ்சம் கவலைக்கிடமாக தான் இருக்கிறது என்பதையும் சொல்லிவிட்டு,

இப்போதைக்கு அவருக்கு எந்த வைத்தியமும் பண்ண முடியாது காரணம் அவர் ட்ரிங்க் பண்ணி இருக்காரு என்று சொல்ல ஐவரும் அதிர்ந்து நின்றனர்.

இங்கு அடிபட்ட நபரின் உறவினர்கள் சிலர் பிரகாஷிடம் பிரச்சனை செய்து சில பணக்கட்டுகளை வாங்கி விடலாம் என்று திட்டமிட்டு பெரிய பிரச்சனைகளை செய்து கொண்டிருந்தனர்.


அங்கிருந்த காவலர்களும் அந்த நபரின் நிலையை விசாரிக்க அந்த நபர் குடித்துவிட்டு வேலைக்கு வந்தது தெரிய வந்தது.


“சார் குடிச்சுட்டு வந்து கீழே விழுந்தா அதுக்கு நம்ம என்ன பண்ண முடியும்! இவங்க நம்மகிட்ட பணத்தை ஏமாத்தி புடுங்கலாம்னு நினைக்கிறாங்க, போலீஸ் கிட்ட சொல்லி அடிச்சு துரத்த சொல்லுவோம்!” என்று மேனேஜர் சொல்ல,


“ அது தப்பு! இந்த ஆளோட மனைவி அழுததை நீ பார்த்த தான, குடிச்சிட்டு வந்தவரை வேலை பாக்க அனுமதித்தது நம்ம தப்பு! அவர் குடிச்சிட்டு வந்தது தெரிஞ்சு அவரை அனுப்பி இருந்தால் நமக்கு இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது! அதனால கட்டாயம் நம்மளும் இதுக்கு பொறுப்பு ஏத்துக்கிறணும்!” என்று பிரகாஷ் சொல்ல, மித்ராவின் மனதில் உயர்ந்து நின்றான் பிரகாஷ்.



“பிரகாஷ் நஷ்ட ஈடாக ஒரு தொகையை அந்த குடும்பத்திற்கு வழங்கிவிட்டு உங்க வீட்டுக்காரர் குணமாகி வீட்டுக்கு அனுப்புறது வர்ற ஆகுற செலவை எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்!” என்று பிரகாஷ் கூறவும் அந்தப் பெண்மணி பிரகாஷை கையெடுத்து கும்பிட்டார்.


“போலீஸ்காரங்க சொன்னாங்க! எல்லா தப்பும் என் புருஷன் மேல தான்னு, ஆனாலும் அதை எதுவும் பொருட்படுத்தாம எங்களுக்கு இவ்வளவு உதவி செஞ்சதுக்கு ரொம்ப நன்றி!” என்று கூற,

“பரவால்லம்மா, இனிமையாவது கவனமா இருங்க. அவர குடிக்க விடாதீங்க. அப்படியே குடிச்சாலும் இப்படி வேலைக்கு அனுப்பாதீங்க! அது உங்களுக்கும் பிரச்சனை வேலைக்கு எடுக்கிற எங்களுக்கும் பிரச்சனை!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து விடை பெற்றான்.


இந்தப் பிரச்சனை நடந்ததிலிருந்து ஒரு வாரம் சைட்டில் எந்த வேலையும் நடக்கவில்லை. அனைவரும் மனதிலும் ஏதோ ஒரு நெருடல் இருந்தது. அதனால் அமைதியாக அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலில் இருந்தனர்.

கவர்மெண்ட் ப்ராஜெக்ட் குறித்த நேரத்தில் முடித்து கொடுக்க வேண்டும் என்பதால், வேறு வழி இல்லாமல் ஒரு வாரத்திற்கு பிறகு சைட்டில் வேலையை ஆரம்பித்து இருந்தனர்.


இங்கு அசோக்கும் ஒரு வாரத்தை தன் குடும்பத்தோடு சந்தோஷமாக செலவிட்டு முடித்துவிட்டு கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னால் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்வதற்காகவும், மாயமித்ராவைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் நந்தனின் சொந்த ஊருக்கு பயணமானார்.


இனி என்ன நடக்கும்? கடந்த காலத்தில் நந்தனின் வாழ்க்கையில் நடந்தது என்ன என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் பதிலுரை சொல்லடி பகல் நிலவே!














 

Author: Vishakini
Article Title: பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 22
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.