ஒரு வாரம் கழித்து.....இன்று தான் பிரகாஷ் கண்ணாவின் மனநிலை நன்றாக இருந்தது. ஒரு வாரத்திற்கு முன்பு சைடில் நடந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நபரை தினமும் மருத்துவமனைக்கு சென்று பார்த்துக் கொண்டிருந்தான்.
இன்று மருத்துவர் இனி எந்த பிரச்சனையும் இல்லை! இன்னும் ஒரு வாரத்துல டீச்சார்ஜ் பண்ணிடலாம். நடக்கிறது மட்டும் கொஞ்சம் சிரமமா இருக்கும். அதுக்கு வாக்கிங் ஸ்டிக் பயன்படுத்தனும். கொஞ்ச நாள் போகப் போக பழைய மாதிரி நடந்துருவாரு” என்று சொல்லி இருந்தார்!
அந்த செய்தியை கேட்ட பின்பு தான் மனம் நிம்மதியாகி மீண்டும் சைட்டில் வேலையை தொடங்கச் சொல்லி இருந்தான் பிரகாஷ் கண்ணா
ஒரு வாரம் கழித்து இன்று தான் சைட்டில் வேலை தொடங்கப்பட்டிருந்தது. இந்த முறை யாரும் அலட்சியம் இல்லாமல் அவரவருடைய பணியை சரியாக செய்து கொண்டிருந்தனர்.
சைட்டுக்கு வந்த பிரகாஷ் கண்ணா அனைவரின் முகத்தை பார்த்துவிட்டு, “எல்லாரும் எதுக்கு இவ்வளவு வருத்தமா வேலை பாக்குறீங்க? அதெல்லாம் எந்த பிரச்சனையும் இல்ல, அந்த நபர் நல்லா இருக்காரு! இதுக்கு மேல இப்படி எந்த தப்பும் சைட்டுல நடக்காம பார்த்துக்கிட்டா போதும்! அதனால நடந்ததை நினைச்சு கவலைப்படாம பழையபடி எல்லாரும் சந்தோஷமா மன நிம்மதியா வேலைய பாருங்க!” என்று அங்கிருந்த ஊழியர்களிடம் கூறிவிட்டு வந்தான்.
“ரெண்டு வாரத்துல நம்ம பண்ற வேலைய இந்த ஒரு வாரத்துல முடிச்சு கொடுத்துட்டு நம்ம ஊருக்கு கிளம்பனும்! அதனால கவனமா வேலை பாருங்க!” என்று கூறினான் பிரகாஷ்.
ஒரு வாரமாக மிகச் சிரத்தையுடன் அனைவரும் வேலை பார்க்க தொடங்கினர்.
ஒரு வழியாக ஒரு வாரத்தில் தங்களுடைய வேலையை முடித்து விட்டனர். மறுநாள் காலையில் ஊருக்கு கிளம்ப அனைவரும் தயாராக இருந்தனர்.
ஊருக்கு செல்வதற்குள் மித்ராவிடம் தன் காதலை சொல்லிட வேண்டும் என்று பிரகாஷ் கண்ணா நினைத்துக் கொண்டு, ரஞ்சனாவிடம் சொல்லி இருக்க, ரஞ்சனாவின் திட்டப்படி அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலில்
மித்ராவும், பிரகாஸும் சந்தித்து பேசுவதற்கான ஏற்பாட்டை பண்ணி இருந்தான்.
அதன்படி ரஞ்சனா மாயமித்ராவை அங்கு இருந்த ரெஸ்டாரண்ட்ற்க்கு அழைத்து வர, அவளின் வருகைக்காக காத்திருந்தான் பிரகாஷ் கண்ணா.
அந்த நட்சத்திர ஹோட்டலின் மெல்லிய விளக்கொளி, பிரகாஷ் கண்ணாவின் மனதிற்குள் இருந்த பதற்றத்தை அதிகமாக்கிக் கொண்டிருந்தது.
கோட்டின் உள்பாக்கெட்டில் இருந்த அந்தச் சிறிய மோதிரப் பெட்டியை அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தான்.
இன்று சைடில் இருந்து வரும்போது, ரஞ்சனாவும் பிரகாசும் ஒரு நகை கடையில் வண்டியை நிறுத்தி அந்த மோதிரத்தை வாங்கி இருந்தனர்.
ரஞ்சனா சொன்னது போல் இன்று, எப்படியாவது தன் காதலை மாயமித்ராவிடம் சொல்லிவிட வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் அவளுக்காகக் காத்திருந்தான்.
அங்கு அமர்ந்திருந்த பிரகாசை பார்த்து கண்களால் சைகை செய்துவிட்டு பக்கத்தில் இருந்த மித்ராவிடம், “ நீ டேபிள்ல போய் உட்காரு நான் காபி ஆர்டர் பண்ணிட்டு வந்துடறேன்!” என்று சொல்லிவிட்டு செல்ல மித்ராவும் அங்கு போடப்பட்டிருந்த டேபிளில் அமர்ந்தாள்.
அதுவரை மித்ராவின் கண்களுக்கு மாயமாக இருந்தவன் மித்ரா வந்து அமரவும், எழுந்து வந்து அவன் எதிர் டேபிளில் அமர்ந்தான் பிரகாஷ்.
அவனைப் பார்க்கவும் மித்ரா அதிர்ச்சியாக, புன்னகைத்தான் பிரகாஷ்.
இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனா அவர்கள் பேசி முடிக்கும் வரை அந்த டேபிளுக்கு செல்லக்கூடாது என்று ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தாள்.
எப்படி காதலை சொல்வது என்று தயங்கிக் கொண்டே பிரகாஷ் சில வினாடிகள் மாயமித்ராவின் முகத்தை பார்த்துக் கொண்டிருக்க மித்ராவும் பிரகாஷின் முகத்தை எதிர்கொள்ள முடியாமல் தயங்கியபடி அமர்ந்திருந்தாள்.
திடீரென ஹோட்டலின் சமையலறைப் பகுதியில் இருந்து ஒரு பயங்கரமான வெடிப்புச் சத்தம் கேட்டது.
எரிவாயு சிலிண்டர் வெடித்து, தீப்பிழம்புகள் மளமளவென அவர்கள் அமர்ந்திருந்த ரெஸ்டாரண்டிற்குள் வர அமர்ந்திருந்தவர்கள் அலறிக்கொண்டு நாலாபுறமும் ஓடினர்.
அங்கு அமர்ந்திருந்த மாயமித்ராவும், பிரகாசும் என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்வதற்குள் புகையும் தீயும் அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் அதிகமானது. உடனே பதட்டத்தோடு மித்ரா எழ
பிரகாசும் எழுந்தான்.
மித்ரா இங்கிட்டு வா என்று பிரகாஷ் அழைக்க, புகை மூட்டத்தால் எதிரே நின்ற பிரகாஷ் அவள் முகத்திற்கு தெரியவில்லை. தீ பற்றி வருகிறது என்ற பயத்தில் மாயமித்ரா தப்பிக்க முயற்சி செய்ய தடுமாறி கீழே விழுந்து விட்டாள்.
அந்த நேரம் அவளுக்கு மேல் இருந்த ஒரு பெரிய மர அலங்காரத் தூண் தீப்பற்றி எரியத் தொடங்கி, அவள் மீது விழும் நிலையில் இருந்ததை பார்த்த பிரகாஷ்,
மித்ராவை சுற்றிலும் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தும் நொடியும் தாமதிக்காமல் பாய்ந்து சென்று, மித்ராவின் மேலே விழுந்து விட்டான். அந்தத் தூணில் இருந்து விழுந்த சிறிய தீப்பிழம்பு ஒன்று பிரகாஷின் கைகளில் விழுந்து காயத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் மித்ராவின் மீது எந்த சேதாரமும் ஆகாமல் அவளை தன் நெஞ்சோடு அணைத்து காப்பாற்றினான்.
உடனே, பதட்டத்தில் ரஞ்சனா “காப்பாத்துங்க காப்பாத்துங்க!”என்று கத்த ஹோட்டல் ஊழியர்கள் அங்கு வேலை செய்தவர்கள் என்று அனைவரும் இருவரையும் காப்பாற்றினர்.
சிறிது நேரத்திற்குள் தீயணைப்பு வாகனங்கள் வந்து ஹோட்டலின் தீயை அணைக்க தொடங்கியது.
சில வினாடிகளில் என்ன நடந்தது என்பதையே யூகிக்க முடியாமல் மித்ரா பித்து பிடித்தவள் போல் இருக்க, அவளை தீக்காயத்துடன் தான் இருந்த போதிலும் பாதுகாப்பாக அணைத்தபடி இருந்தான் பிரகாஷ் கண்ணா.
“தம்பி, கொஞ்சம் உன் உயிரைப் பத்தி யோசிச்சியா? சுத்தியும் அவ்வளவு நெருப்பு... ஒரு நிமிஷம் தப்பியிருந்தா நீயே செத்திருப்ப!” என்று கூறினார்கள் அந்த காட்சிகளை நேரில் கண்டவர்கள்.
பிரகாஷ் தன் காயங்களின் வலியைப் பொருட்படுத்தாமல் லேசாகப் புன்னகைத்தான்.
மித்ராவை நோக்கித் தன் பார்வையைத் திருப்பி, “என் உயிரைப் பத்தி யோசிச்சதால தான்... நான் மித்ராவை காப்பாத்துனேன்,” என்று கூற அனைவரும் அதிர்ந்தனர். அவன் சொன்ன வார்த்தையில் சுயத்திற்கு வந்த மித்ரா அவனை பார்க்க அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“மித்ரா... புரியலையா? என் உயிர் என்கிட்ட இல்ல, உன்கிட்ட தான் இருக்கு. உனக்கு ஏதாவது ஆகியிருந்தா, நான் உயிரோட இருந்தும் செத்த பிணம் தான். அதனால தான், என் உயிரைக் காப்பாத்திக்கணும்னு உன்னை ஓடி வந்து காப்பாத்துனேன்,” என்றான் பிரகாஷ் கண்ணா.
அங்கு நடந்ததை எல்லாம் கீர்த்தி, காயு ரஞ்சனா, மேனேஜர், என நால்வரும் பதட்டதோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.
மித்ரா பிரகாஷ் சொன்னதை கேட்டுக்கொண்டு அழுத்தமாக பார்த்துக் கொண்டிருக்க “மித்ரா, இந்த இடத்துல, இந்த நிலைமையில வச்சு இதைக் கேட்பேன்னு நான் நினைக்கல. ஆனா, எனக்கு வேற வழி தெரியல. நான் உன்னை உருகி உருகி காதலிக்கிறேன். நீ இல்லாம என்னால வாழ முடியாதுன்னு நினைக்கிறேன். கண்டிப்பா உன்னைய நல்லபடியா நான் பாத்துப்பேன்! நீ என்ன சொல்ற மித்ரா?” என்று பிரகாஷ் காதலோடு அவன் வாங்கி வைத்திருந்தத மோதிரத்தை நீட்டியவாரு அவளை பார்த்து கேட்க, மித்ராவின் கண்கள் கலங்கியது.
சில வினாடிகள் பிரகாசையே பார்த்துக் கொண்டிருந்தவள் , தன் கண்களை துடைத்து விட்டு ஒரு முடிவெடுத்தவளாய் தன் வாயை திறந்து பேச தொடங்கினாள்.
‘கண்டிப்பா, பிரகாஷோட காதல மித்ரா ஏத்துப்பா’ என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்க
“என்னைய மன்னிச்சிருங்க பிரகாஷ்!” என்று மித்ரா சொல்ல அனைவரும் அதிர்ந்து மித்ராவை பார்த்தனர்.
“நீங்க செஞ்சது ரொம்ப பெரிய விஷயம். எனக்காக உங்க உயிரையே பணையம் வச்சி என்னைய காப்பாத்தி இருக்கீங்க . நான் அதை எப்பவும் மறக்க மாட்டேன். ஆனால் அதுக்காக உங்கள என்னால காதலிக்க முடியாது! உங்க மேல அப்படி ஒரு எண்ணம் எனக்கு இதுவரை வந்ததில்லை இனிமேலும் வரப்போவதில்லை!” என மித்ரா சொல்ல அப்படியே சுற்றி இருந்த நால்வரும் அதிர்ந்து நின்றனர்.
மித்ரா சொல்ல சொல்ல பிரகாஷின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த அனைவரும் கண்கலங்கினர்.
“முதல்ல இங்கே இருந்து கிளம்பு, நம்ம ஹாஸ்பிடல் போவோம், அதுக்கப்புறம் பேசிக்கிறலாம்!”என்று ரஞ்சனா பிரகாஷிடம் சொல்ல பிரகாஷ் சிலையென நின்றான்.
கண்டிப்பாக மித்ரா தன்னை காதலிக்கிறாள், கண்டிப்பாக தன் காதலை ஏற்றுக் கொள்வாள் என்று ஆழமாக நம்பிக் கொண்டிருந்தவனின் இதயம் சுக்குநூறாக உடைந்து இருந்தது!
ரஞ்சனாவோ அங்கு நின்ற மித்ராவை முறைத்து விட்டு,” பிரகாஷ் முதல்ல ஹாஸ்பிடல் போவோம் வா! அதுக்கப்புறம் எல்லாத்தையும் பேசிக்கலாம்!” என்று ரஞ்சனா சொல்ல,
“மித்ரா என்ன சொன்னானும் பாத்தியா ரஞ்சனா? என்னால தாங்கிக்கவே முடியல!” என்று சிறு பிள்ளை போல் அழுதவனை பார்த்த கீர்த்தி, காயத்ரி மேனேஜர் என மூவரின் கண்களிலும் கண்ணீர் ததும்பி கீழே விழவா? என்ற நிலையில் இருந்தது.
கதையைப் படித்துவிட்டு கதையின் போக்க எப்படி இருக்கிறது என்று உங்களுடைய விமர்சனங்களை மதிப்பீடுகளையும் தந்து விட்டு செல்லுங்கள்.