பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 24

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,564
6,484
113
வருத்தப்பட்டுக் கொண்டிருந்த பிரகாஷ் கண்ணாவை தேற்றி மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். பிரகாஷ் கண்ணாவின் உடல் காயத்தை விட, அவளின் மனக் காயமே அதிகமாக இருந்தது.


“சார் பாட்டி போன் பண்ணிக்கிட்டே இருக்காங்க! நியூஸ்ல இங்க நடந்ததை கேள்விப்பட்டிருப்பாங்க போல?” என்று சொல்ல,

“நீங்க போன் போட்டு குடுங்க நான் பேசுறேன் “ என பிரகாஷ் கூறினான். “சார் இந்த நிலமைலையா?” என்று மேனேஜர் கேட்க,

“வேற வழி இல்ல! நான் போன் பண்ணி பேசலைனால் அவங்க இங்க வந்துருவாங்க!” என கூறினான். பிரகாஷ் சொல்வதும் சரி என்று மேனேஜருக்கு பட அம்புஜம் பாட்டிக்கு போன் செய்து கொடுத்தார் மேனேஜர்.

“பிரகாஷ் நீ நல்லா இருக்கியா? இப்பதான் நீ தங்கி இருந்த ஹோட்டல்ல தீ பிடிச்சிருச்சுனு செய்தி வந்துச்சு! உனக்கு ஒன்னும் ஆகலையே? ஏன் நான் போன் பண்ண பண்ண போன் எடுத்து பதில் சொல்லல!” என்று பதட்டத்தோடு பாட்டி கேட்க,

“ பாட்டி அப்பதான் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டு இருந்துச்சு. அதனாலதான் உனக்கு பதில் சொல்ல முடியல. நீயே பாரு எனக்கு எந்த அடியும் படல! நல்லவேளை யாருக்கும் ஒன்னும் ஆகல!” என்று தன்காயம் பட்ட கையில் அலைபேசியை பிடித்துக் கொண்டு சதுரியமாக பேசினான் பிரகாஷ்.



“ம்! புரியுது. நீ போனை எடுக்காமல் இருக்கவும் நான் ரொம்ப பயந்துட்டேன். உனக்கு ஒன்னும் இல்லைனு
சொல்லவுந்தான் எனக்கு நிம்மதியா இருக்கு. ஆனா உன் முகம் ஏன் ஒரு மாதிரியா இருக்கு?” என்று கேட்டார் அம்புஜம்பாட்டி.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல பாட்டி! திடீர்னு இப்படி ஒரு சம்பவத்தை பார்த்ததனால கொஞ்சம் படப்படப்பா இருக்கு!”என்று பிரகாஷ் கண்ணா கூற,

“சரி கண்ணா நீ எதையும் நினைச்சு பயப்படாத உடனே கிளம்பி வா! ஜானுவும் வந்ததுல இருந்து உன்னைய கேட்டுகிட்டே இருக்கா!”என்று கூறினார் அம்புஜம்பாட்டி.

“பாட்டி உடனே எப்படி கிளம்பி வர முடியும்! கொஞ்சம் முக்கியமான வேலை பாக்கி இருக்கு. இப்ப நாங்க வேற ஹோட்டல்ல பத்திரமாதான் இருக்கோம்.நீங்க எதையும் நினைச்சு கவலைப்படாதீங்க, வேலைய முடிச்சுட்டு சீக்கிரமா வந்துடுவேன்! ஜானுவையும் கேட்டதா சொல்லுங்க “ எனக் கூறினான் பிரகாஷ்.

“சரி பிரகாஷ், வேலைய விட நம்ம பாதுகாப்பு ரொம்ப முக்கியம் கவனமா இரு “என்று சொல்லிவிட்டு அழைப்பை அணைத்தார் அம்புஜம் பாட்டி.


பிரகாஷை பார்ப்பதற்காக மித்ரா மருத்துவமனைக்கு வந்திருந்தாள். அங்கிருந்த யாரும் அவளிடம் பேசவில்லை ரஞ்சனா உட்பட!!


எப்போதும் மாயமித்ராவிற்கு சாதகமாக பேசும் காயத்ரி கூட இன்று மாயமித்ரா மேல் அளவில்லாத கோபம் கொண்டிருந்தாள்.

பிரகாஷ் சார் மேல உங்களுக்கு விருப்பம் இல்லாம இருந்தால்,ஒரு ரெண்டு மூணு நாள் கழிச்சு சொல்லி இருக்கலாமே? அதுக்குள்ள அவசரப்பட்டு ஏன் சொன்னிங்க. தன்னோட உயிரைக் கூட துச்சமா நினைச்சு உங்க உயிரை காப்பாத்த முயற்சி பண்ணிஇருக்காருன்னா அவரு உங்கள எந்த அளவுக்கு காதலிச்சு இருப்பாரு! அவரப் போயி வேண்டான்னு சொல்லி அவர் மனச காயபடுத்திட்டீங்களே?”என்று கீர்த்தி கேட்க என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தாள் மாயமித்ரா. அவள் கண்கள் மட்டும் கலங்கிக் கொண்டிருந்தது.


மெதுவாக கீர்த்தியை கடந்து பிரகாஷ் அட்மிட் செய்யப்பட்ட அறையின் கதவை திறந்து உள்ளே நுழைந்தாள் மித்ரா.


மித்ராவை பார்த்த பிரகாஷ்,

“வாங்க மித்ரா?” என சொல்ல,

“உடம்புக்கு எப்படி இருக்கு?” என்று கேட்டாள் மித்ரா.

“ம்! பரவால்ல, மனசுல இருக்குற காயத்தை விட இந்த காயம் ஒன்னு பெருசா இல்ல” என்று விரக்தியாக புன்னகைத்தான் பிரகாஷ்.


மாயமித்ராவிற்கு என்ன சொல்லி சமாதானம் செய்வது என்றே தெரியவில்லை,


ரஞ்சனாவிடம் பேசு நினைத்துக் கொண்டு மித்ரா அவள் அருகில் செல்ல ரஞ்சனா கோபப்பட்டு அவளிடம் எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். ரஞ்சனாவிற்கு பின்னால் மித்ராவும் சென்றாள்.


“ரஞ்சனா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ஒரு நிமிஷம் நில்லு!”

“உன் கிட்ட பேசுறதுக்கு எனக்கு விருப்பமில்லை!”

“ப்ளீஸ் ரஞ்சனா நான் சொல்றதை கேளு!”

“என்னத்த கேட்க? நீ சொன்னதெல்லாம் கேட்டு ஏற்கனவே எங்க எல்லார் மனசும் நிறைஞ்சு போச்சு! இதுக்கு மேல நீ பேசுறத கேட்டு நாங்க வருத்தப்படுவதற்கு தயாராக இல்லை!” என்று ரஞ்சனா
ஜாடை மடையையாக சொல்ல மித்ராவின் கண்ணில் இருந்து
கண்ணீர் வழிந்தோடியது.


“ப்ளீஸ் ரஞ்சனா என்னைய புரிஞ்சுக்க, பிரகாஷ இன்னைக்கு நான் வேண்டான்னு சொல்றது அவரோட நல்லதுக்காக தான்! இன்னைக்கு நான் அவரை காதலிக்கலைன்னு சொன்னது உங்களுக்கு வருத்தமா தெரிஞ்சாலும் ஒரு நாள் நீங்க எல்லாரும் நல்லதுன்னு புரிஞ்சுக்குவீங்க” என்று மாயமித்ரா சொல்ல,

“போதும் நிறுத்து! உன் கதைய கேக்குறதுக்கு எனக்கு விருப்பம் இல்ல. தெரியாமத்தான் கேட்கிறேன் உனக்கு பிரகாச விட நல்ல மாப்பிள்ளை கிடைச்சிருமா? ஈஸியா அவர மாதிரி ஒரு நல்ல பையன வேண்டான்னு தூக்கி வீசுற!” என்று ரஞ்சனா கோபத்தில் கத்தினாள்.


“கண்டிப்பா பிரகாஷ் மாதிரி என் மேல பாசம் வைத்திருக்கிறவங்க எனக்கு இந்த ஜென்மத்துல எங்க தேடினாலும் கிடைக்க மாட்டாங்க! “ என மித்ரா சொல்ல,


“தெரியுதுல! அப்போ பிரகாஷோட காதல ஏத்துக்கிறதுக்கு உனக்கு எதுக்கு இவ்வளவு கஷ்டம்!” எனக் கோபத்தில் கேட்டாள் ரஞ்சனா.


“எனக்கு எந்த கஷ்டமும் இல்ல, ஆனா நான் பிரகாஷோட காதல ஏத்துக்கிட்டா காலம் முழுக்க பிரகாஷ் கஷ்டப்படுவாரு!” என கதறி அழுக,


“ என்ன சொல்ற புரியிற மாதிரி சொல்லு, நீ காதல ஏத்துக்கிட்டா பிரகாஷ் சந்தோஷம்தான் படுவாரு. ஏன் கஷ்டப்பட போறாரு!”என ரஞ்சனா கோபமாக கேட்டாள்.


“ I am a victim of sexual abuse” என்னைய காதலிச்சாலோ கல்யாணம் பண்ணினாலோ அவர் காலம் முழுக்க கஷ்டம் தான் படுவாரு!” என்று மித்ரா சொல்லி அழுக, ரஞ்சனா அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.


அதே நேரத்தில்,நந்தனின் சொந்த ஊரான பட்டினம் காத்தான் என்ற ஊருக்கு வந்திருந்தார் அசோக்.


அங்கு, வழியில் வந்தவரிடம் நந்தனின் வீட்டை காட்டுமாறு சொல்ல அவரும் நந்தன் வீட்டிற்கு கூட்டி வந்தார்

“ பாக்கியா உன்னை தேடி வெளியூரிலிருந்து ஒரு பையன் வந்து இருக்கான்!’ என்று அசோக்கை
அழைத்து வந்த நபர் சொல்ல,

அந்த வீட்டுக்குள் இருந்து வாட்டமாக ஐம்பது வயது நிரம்பிய பெண் ஒருத்தர் வெளியே வந்தார்.

அவரை பார்த்ததும் அசோக் யார் என்று கண்டுபிடித்து விட்டார். காரணம் நந்தனின் முகச்சாயில் அந்த பெண்மணியிடம் ஏராளமாக காணப்பட்டது.


“என்னைய தேடி வந்திருக்காங்களா? யாரது?” என்று பக்கத்தில் இருந்தவரிடம் கேட்க, “ இந்த தம்பி தான்! உன் வீட்டுக்கு வழி கேட்டுச்சு நானும் கூட்டிட்டு வந்துட்டேன். எனக்கு வேலை இருக்கு நான் போறேன்! நீ பேசிக்க “என்று சொல்லிவிட்டு சென்றார் அவர்.


“சொல்லுங்க தம்பி யார் வேணும்! கார்த்திக் இப்ப வீட்டுல இல்லையே? அவன் வெளியூர் போயிருக்கான் வரதுக்கு ரெண்டு நாள் ஆகும்!” என்று தன்னுடைய இளைய மகனை பற்றி கூறினார் பாக்கியா.

“அம்மா நான் சென்னையில இருந்து வரேன் அசிஸ்டன்ட் கமிஷனர்!” என்று சொல்லவும் புரிந்து விட்டது பாக்யாவிற்கு...!


“ஐயா நீங்க எதுக்கு இங்க? என் புள்ள நல்லா இருக்கானா?”என்று பதட்டத்தோடு கேட்க,


“அதெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லம்மா நல்லா இருக்கான் “ என்று கூறினார் அசோக்.

“நான் பெத்த மகனை பார்த்து எட்டு வருஷமாச்சு.ஒவ்வொரு தடவையும் மாசமாசம் நானும் என் சின்ன மகனும் ஜெயிலுக்கு வந்தாலும் எங்கள அவன் பாக்குறதே இல்ல!” என்று கதறி அழுகத் தொடங்கினார் பாக்யா.


“அம்மா கவலைப்படாதீங்க இன்னும் கொஞ்ச நாள்ல உங்க மகனோட தண்டனை காலம் முடிஞ்சு உங்க மகன் வெளியில வந்துருவான்! அப்புறம் நீங்க உங்க மகனை பார்த்துக்கிட்டே இருக்கலாம்!” என்று அசோக் சொல்ல

“அந்த நாளுக்காக தான் காத்துக்கிட்டு இருக்கேன்!” என்று கூறினார் பாக்யா.

“கண்டிப்பா நடக்கும். நந்தன் வெளியில வந்து நல்லபடியா வாழனும்தான் நான் உங்களை தேடி வந்து இருக்கேன்!” என அசோக் சொல்ல

“புரியலையே?” என்று கூறினார் பாக்யா.


“நந்தனோட வாழ்க்கையில என்ன நடந்துச்சுனு எனக்கு அவனோட கேஸ் ஹிஸ்டரிய படிச்சப்ப தெரிஞ்சி இருந்தாலும், முழுசா என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியாது. அன்னைக்கு நடந்தது எல்லாத்தையும் மறைக்காம என்கிட்ட சொன்னால் நல்லா இருக்கும்!” என்று அசோக் சொல்ல அசோக்கை சந்தேகமாக பார்த்தார் பாக்யா.


“அம்மா எனக்கு புரியுது! உங்களுக்கு என் மேல ஏதோ சந்தேகம் வருதுன்னு நினைக்கிறேன், என்று சொல்லிவிட்டு நந்தன் சிறையில் நடந்து கொண்டதையும், அவனுக்கு கொடுத்த வாக்குறுதிக்காக மித்ராவை தேடி வந்ததையும் ஒன்று விடாமல் கூறினான் அசோக்.

அதையெல்லாம் கேட்டவர் அழுது கொண்டே “ என் மகன் தங்கமானவன், அவனுக்கு இப்படி ஒரு நிலைமை வந்ததுக்கு அவங்க தான் காரணம்!” என்று சொல்லிவிட்டு கடந்த காலத்தை சொல்ல ஆரம்பித்தார் பாக்யா.


இங்கு,

“என்னடி சொல்ற? “என்று பதட்டத்தோடு ரஞ்சனா கேட்க,

“ஆமா, நான் ரேப் விக்டிம் தான்!’என்று சொல்லிவிட்டு தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை கூற ஆரம்பித்தாள் மித்ரா.


இனி என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் பதிலுரை சொல்லடி பகல் நிலவே!


 

Author: Vishakini
Article Title: பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 24
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.