பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 26

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,564
6,484
113
“அன்னைக்கு தான் காலேஜ் முடிச்சுட்டு என் மகன் ஊர்ல இருந்து வந்திருந்தான். செல்வி கிணத்துல குதிச்சு தற்கொலைக்கு முயற்சி பண்ணி ஆஸ்பத்திரில இருக்கிறத பார்த்துட்டு என்ன நடந்துச்சுன்னு கேட்க ஏன் மூத்த மகன் பாரியும் என் மருமகனும் அங்கே என்ன நடந்துச்சுன்னு எல்லாத்தையும் சொன்னாங்க.

“அதை ஏத்துக்கிற முடியாத நந்தன் எங்க வீட்டு பெண்ணையே அசிங்கப்படுத்தின அவங்க இனி உயிரோடவே இருக்க கூடாதுன்னு கோபத்தோட அவங்க வீட்டுக்கு போனான். செல்வி நிலைமை ரொம்ப மோசமா இருந்ததால நாங்க எல்லாரும் ஆஸ்பத்திரியிலேயே நின்னுட்டோம்.


அந்தப் பொண்ணு வீட்டில இந்த பிரச்சனை நடந்த உடனே அவங்க குடும்பம் அவங்க சொந்தக்காரவங்க வீட்டுக்கு ஓடி ஒளிஞ்சிட்டாங்க. அந்த பொண்ணு மட்டும் தான் தனியா இருந்திருக்கு.

அது தெரியாம என் மகன் அவங்க வீட்டுக்கு போயி,


“பொம்பளைகிட்ட வீரத்த காட்டுற பொட்ட பயல்களா வெளியில வாங்கடா? உங்க வீரத்தை என்கிட்ட காட்டுங்கனு சொல்லி கோபத்துல கத்த ஆரம்பிச்சிருக்கான். அப்பதான் அந்த பொண்ணு வீட்டுக்குள்ள இருந்து வெளியில் வந்து,

“நீங்க யாரு எங்க வீட்டுல யாரும் இல்ல நீங்க எங்க வீட்டு வாசல்ல நின்னு கத்தாம வீட்டை விட்டு வெளியில போங்கன்னு கோபமா பேசி இருக்கா,

அவ பேசுனது நந்தனுக்கு இன்னும் கொஞ்சம் கோபத்தை கொடுக்கவும், உன் அப்பனையும் அண்ணனையும் வீட்டுக்குள்ள ஒளிச்சு வச்சுக்கிட்டு இல்லைன்னும் பொய்யா சொல்றேன்னு அவளை தள்ளி விட்டுட்டு அந்த வீட்டுக்குள்ள போயி தேட ஆரம்பிச்சிருக்கான். அந்த பொண்ணு அவன் பின்னாடியே போயி உண்மையிலேயே எங்க வீட்டில யாரும் இல்லைனு சொல்லி இருக்கு,


உடனே இவன் கோபப்பட்டு அந்த பொண்ணோட கழுத்த புடிச்சு சொல்லு உன் அப்பனையும் அண்ணனையும் எங்க எங்க?அவங்கள இன்னைக்கு வெட்டி சரிக்காம விட மாட்டேன்னு ஆக்ரோஷத்துல கோபமா பேச,


“எங்க அப்பாவும் அண்ணனும் என்ன தப்பு பண்ணாங்க! உங்க வீட்டில உள்ளவங்க தான் ஏற்கனவே வேற ஒருத்தருக்கு நிச்சயமான பொண்ணு கூட்டிட்டு போயி உங்க தம்பிக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க, அதுவும் இல்லாம உங்க அக்கா எங்க குடும்பத்தை ரொம்ப தரக்குறைவா பேசினாங்க.அதனால தான் எங்க அண்ணே அப்படி பண்ணுனான்னு அலட்சியமா சொல்ல நந்தனுக்கு இன்னும் கோபம் வந்திருச்சு.


“ஓ! நியாயமா பேசுற, இப்ப நீயும் என்கிட்ட மரியாதை இல்லாம தான் பேசுற உன்கிட்ட அப்படி நடந்தால் அது சரிதானனு சொல்லிட்டு
என் வீட்டு பொம்பளைய அசிங்க படுத்தினவங்களுக்கு பதிலடி கொடுக்கணும்னால் அவன் வீட்டு பொண்ணுங்களுக்கு அந்த வலியை கொடுக்கணும்னு, என் மகன் கோவத்துல ஒரு நிமிஷம் யோசிக்காம அந்த பொண்ணு கிட்ட தப்பா நடக்க ஆரம்பிச்சுட்டான்.


அந்தப் பொண்ணு விட்ருங்க விட்ருங்கன்னு கதறி அழுது இருக்கு. ஆனாலும் நந்தன் ரொம்ப கோபத்தில இருந்தனால அந்த பொண்ண பத்தி யோசிக்காம தப்பு பண்ணிட்டான். கொஞ்ச நேரத்துல அந்த பொண்ணோட கத்தல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்துல உள்ளவங்க எல்லாரும் ஓடி வந்து பார்க்க எல்லாமே முடிஞ்சிருச்சு!

அக்கம் பக்கத்துல உள்ளவங்களும் போலீசும் உடனே அந்த பொண்ணோட வீட்டுக்கு வந்துட்டாங்க. ஸ்பாட்லையே போலீஸ் நந்தன அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அந்தப் பொண்ணையும் பத்திரமா கூட்டிட்டு போய் ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டாங்க.


அதுக்கப்புறம் அது பெரிய பிரச்சனையாகி ஊர்காரவங்க, ரெண்டு பக்கத்துலயும் தப்பு இருக்கு ரெண்டு பேரும் சமரசமா போங்கன்னு பேச்சுவார்த்தை நடத்தி ரெண்டு குடும்பத்தையும் சமாதானமா போயிருங்கன்னு சொல்லிட்டாங்க. ஊர் பஞ்சாயத்துக்கு கட்டுப்பட்டு நாங்க எல்லாரும் சமாதானம் ஆகிட்டோம். கல்யாணம் பண்ணிட்டு வந்த ஏன் மூத்த மகனையும் மருமகளையும் நாங்க ஏத்துக்கிட்டோம்.


ஆனால் நந்தனால தான் பண்ணின தப்ப ஏத்துக்கவே முடியல. என் வீட்டு பொண்ணுக்கு அப்படி ஒரு அநியாயத்தை பண்ணிட்டான்னு அவன் வீட்டு பொண்ணுக்கு நான் அதே அநியாயத்தை பண்ணி இருக்கேன். அப்போ எனக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம்னு சொல்லி புலம்ப ஆரம்பிச்சுட்டான்.


அம்மா அந்த பொண்ணு விட்ருங்க விட்ருங்கன்னு சொல்லி அழுதுதும்
நான் கேட்காம அந்த பொண்ண..... மிருகம் மாதிரி எனக்கு சொல்ல அசிங்கமா இருக்குன்னு கதறியழ ஆரம்பிச்சுட்டான்.

அவனை என்ன சொல்லி தேத்தறதுன்னு எங்களுக்கு தெரியல. அப்புறம் நான் பண்ணுன தப்புக்கு எனக்கு தண்டனை கொடுங்கன்னு அவனே போலீஸ்ல ஸ்டேஷன்ல ஆஜர் ஆகிட்டான். நாங்களும் எவ்வளவோ சொல்லி அவன் மனசைப் பார்த்த முயற்சி பண்ணியும் அவன் எதையும் ஏத்துக்கல. அதுக்கப்புறம் நடந்தது தான் உங்களுக்கு தெரியுமே தம்பி!” என்று அழுது கொண்டே கதையை அசோக்கிடம் கூறி முடித்திருந்தார் பாக்யா. அதைக் கேட்கவும் அசோக்கும் என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார்.



இங்கு,

“சொல்லுடி அதுக்கப்புறம் என்ன ஆச்சு!” என்று ரஞ்சனா கேட்க,

“எல்லாம் முடிஞ்சிருச்சு! கொஞ்ச நேரத்துல அக்கம் பக்கத்துல உள்ளவங்க எல்லாரும் போலீஸோட எங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சாங்க. அவங்க எல்லாரும் அந்த நிலைமையில என்னைய பரிதாபமா பார்த்தது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு. அவங்க யாரையும் பார்க்க முடியாம நான் கூனி குறுகி நின்னப்ப தான் எனக்கு ஒன்னு புரிஞ்சது

எங்க அப்பாவும் அண்ணனும் பண்ணினது எவ்வளவு பெரிய தப்பு! அந்தப் பொண்ணும் இதே மாதிரி மனநிலமையில தானே இருந்திருப்பாங்கன்னு தோணுச்சு, வாழ்க்கையை வெறுத்துப் போன மாதிரி தோணுச்சு எதுக்கு வாழனும்னு தோணுச்சு! ஹாஸ்பிட்டல்ல வச்சே
நான் தற்கொலைக்கு முயற்சி பண்ணினேன். எல்லாரும் சேர்ந்து என்னைய காப்பாத்திட்டாங்க. அந்த ஒரு வாரத்துல இரண்டு ஊர்காரங்களும் பேசி முடிச்சு சுமூகமா பிரச்சனைய முடிச்சுட்டாங்கனு எனக்கு தகவல் வந்துச்சு. அதை என்னால ஏத்துக்கவே முடியல. ஆண்களோட கோபத்துக்கு பகடைக்காயா பெண்களோட மானம்னு எனக்கு தோணுச்சு. அப்படி பட்ட சிந்தனை இருக்கிறவங்க இருக்கிற இடத்துல நான் வாழ கூடாதுன்னு நினைச்சேன். அதனால என் கேச விசாரிச்ச லேடி இன்ஸ்பெக்டர் கிட்ட அந்த ஊருக்கே போக மாட்டேன் என்னைய ஏதாவது ஆசிரம சேர்த்து விடுங்கனு சொல்ல அவங்களும் என் அம்மா அப்பா கிட்ட சொல்லிட்டு
என்னை சேர்த்து விட்டுட்டாங்க.

அதுக்கப்புறம் அதிலிருந்து நான் மீண்டு வர ரொம்ப வருஷம் ஆச்சு. கொஞ்ச நாள் கழிச்சுஆசிரமத்தில் இருந்து படிக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் எங்க அம்மா எங்க அண்ணே எல்லாரும் என்னைய தேடி வந்தாங்க! நான் யாரையும் பார்க்க விரும்பலைன்னு சொல்லி அனுப்பிட்டேன். இப்ப அவங்க எங்க இருக்காங்கன்னு எனக்கு எதுவும் தெரியாது. நான் எங்க இருக்கேன்னு அவங்களுக்கும் தெரியாது. எங்களுக்குள்ள இருந்த உறவு எல்லாம் முடிஞ்சு போச்சு.


இப்ப சொல்லு, நான் எப்படி பிரகாஷ் சாரோட காதல ஏத்துக்க முடியும்! நான் அப்படியே ஏத்துக்கிட்டாலும் அவருக்கு செய்ற துரோகம் தான? என்று மாயமித்ரா அழுக ரஞ்சனாவின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.


“இதுல உன்னோட தப்பு என்ன இருக்கு?” என்று கேட்டுக் கொண்டே அவள் அருகில் வந்தான் பிரகாஷ் கண்ணா.

மித்ரா ரஞ்சனாவிடம் பேச முயற்சிக்க ரஞ்சனா மித்ராவிடம் பேசாமல் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து வந்ததை பார்த்த பிரகாசும் அவர்களுக்கு பின்னால் வர, மித்ரா ரஞ்சனாவிடம் சொல்லியது அனைத்தையும் கேட்டு விட்டான்.

“இங்க பாரு மித்ரா, இதுல உன்னோட தப்பு என்ன இருக்கு! இதுதான் நீ என் காதல ஏத்துக்காததுக்கு காரணமா? ஒருவேளை இதுதான் காரணமா இருந்தால் இந்த காரணத்தை நான் ஒரு காலமும் ஏத்துக்க மாட்டேன். உன் கடந்த கால வாழ்க்கை எனக்கு தேவையில்லை

முன்ன விட இப்பதான் உன் மேல இன்னும் அதிகமா காதல் கூடுது. உன்னைய ஆழமா காதலிக்கிறேன். இப்பவும் சரி எப்பவும் சரி உன்னை நான் காதலிப்பேன் காதலிக்கிறேன் . உன்னோட பதில் என்ன?” என்று கேட்டுக்கொண்டே அவள் முன்னாடி பிரகாஷ் நிற்க அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அழுது கொண்டே இருந்தாள் மித்ரா.


அவளின் உணர்வுகளை புரிந்தவன், “ நீ ரொம்ப குழப்பத்துல இருக்கேன்னு மட்டும் தெரியுது. நீ இன்னைக்கு எனக்கு பதில் சொல்லணும்னு எந்த அவசியமும் கிடையாது. இன்னும் ரெண்டு நாள் எடுத்துக்க நல்லா யோசிச்சு பதில் சொல்லு, நான் உன்னைய காதலிக்கிறேன்னு நீ சொல்ற,அந்த பதிலுக்காக நான் வெயிட் பண்றேன்!” என்றான் பிரகாஷ்.

மித்ராவை கட்டிப்பிடித்து உனக்கு நான் இருக்கேன் நீ கவலைப்படாதனு சொல்ல தோன்றிய அவனுடைய வார்த்தைகளை உள்ளே அடக்கி விட்டு, மாய மித்ராவை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான் பிரகாஷ்.

“ என்னை மன்னிச்சிருடி!உனக்கு இவ்வளவு பெரிய அநியாயம் நடந்திருக்கும்னு எனக்கு தெரியாது! நான் கோபத்துல வாய்க்கு வந்தபடி உன் கிட்ட பேசிட்டேன்!” என்று ரஞ்சனா சொல்லிக் கொண்டே அழுது கொண்டிருந்த மித்ராவை கட்டி அணைத்து ஆறுதல் படுத்தினாள்.


நந்தனின் ஊரில் அதே நேரம் நந்தனின் அன்னையும் அங்கு நடந்த அனைத்து உண்மைகளையும் அசோக்கிடம் சொல்லி இருந்தார்.


“சரிமா எனக்கு ஒரு உதவி, அந்த பொண்ண பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” என்று நந்தன் கேட்க,


“ தெரியாது தம்பி அந்த பொண்ண நான் பார்த்தது கூட கிடையாது. ஏற்கனவே ஒரு முறை கார்த்திகிட்ட நந்தன் அந்த பொண்ண பத்தி விசாரிச்சு சொல்லுன்னு கேட்டிருந்ததால கார்த்தியும் விசாரிக்க ஆரம்பிச்சான், ஆனால் அந்த பொண்ண பத்தி எந்த தகவலுமே எங்களுக்கு கிடைக்கல! அந்தப் பிரச்சனை நடந்ததோட அந்த குடும்பம் அந்த ஊரை விட்டு வேற எங்கேயோ குடி போயிட்டாங்க.


“சரி தாம்மா, உங்க பெரிய மகன் பாரிய கட்டுன அந்த பொண்ணு சித்ரா அவங்க கிட்ட கேட்டா மித்ராவை பத்தி தெரியறதுக்கு வாய்ப்பு இருக்கு தானே!” என்று அசோக கேட்க,


“அவ இருந்தா தான தம்பி கேப்பிங்க” என்று பாக்கியா சொல்ல அதிர்ந்து போனார் அசோக்.


“என்னம்மா சொல்றீங்க! அந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு?” என்று அசோக் கேட்க, சித்ராவும், என் மகன் பாரியும் இப்ப உயிரோட இல்ல!” என்று பாக்யா கூற அப்படியே அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்று விட்டார் அசோக்.


இனி என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் பதிலுரை சொல்லடி பகல் நிலவே!







 

Author: Vishakini
Article Title: பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 26
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
பாரி ஓட தம்பி தான் நந்தனா?????
ஏன் என்னாச்சி இவங்க ரெண்டி பேருக்கும்????