பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 27

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,564
6,484
113
“அவங்க ரெண்டு பேரும் இப்போ உயிரோட இல்ல. இந்தப் பிரச்சனை நடந்து ஒரு வருஷம் கழிச்சு ரெண்டு பேரும் சேர்ந்து வாழ ஆரம்பிச்சாங்க.

கொஞ்ச நாள் நல்லா தான் எந்த பிரச்சனையும் இல்லாம வாழ்ந்துகிட்டு இருந்தாங்க. ஒரு நாள் பக்கத்து ஊர்ல உள்ள கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு வாரேன்னு போனாங்க, அங்கிருந்து வரும்போது பிணமா தான் வந்தாங்க” என்று கூறினார் பாக்யா.


“பிணமாவா எப்படி அவங்களுக்கு என்ன ஆச்சு?” என்ற அசோக் கேட்க,

“அவங்க கோயிலுக்கு போறதுக்கு ஏற்பாடு பண்ணி இருந்த டாக்ஸி கோயிலுக்கு போயிட்டு திரும்பி வரும்போது எதிர வந்த லாரில மோத, கார்ல இருந்த மூணு பேரும் ஸ்பாட்டிலேயே இறந்து போயிட்டாங்க!” என அழுதார் பாக்யா.


“மூணு மகன்கள் பெத்துட்டேன்னு கர்வத்துல இருந்தேனோ என்னவோ, என்னோட எந்த மகனும் நல்லா வாழ்றத இன்னும் என் கண்ணால நான் பாக்கல!” என்று கதறி அழுக அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் படுத்தினார் அசோக்.


ஒரு காதல் கல்யாணம்,இத்தனை பேரின் வாழ்க்கையில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் இழக்க வைத்திருக்கிறது”என்பதை நினைக்க அசோக்கால் ஜீரணிக்க முடியவில்லை.


“இல்லம்மா போலீஸ் ரெக்கார்டுல எனக்கு தெரிஞ்சவங்க மூலியமா விசாரிச்சிட்டேன். அந்தப் பொண்ண பத்தின ஆதாரம் எதுவும் இல்ல. சம்பவம் நடந்தப்ப அந்த பொண்ணுக்கு பதினெட்டு வயசு முடியாததுனால அந்த பொண்ண பத்தின எந்த இன்பர்மேசனையும் போலீஸ் ரெக்கார்டுல அவங்க எழுதல, அந்தப் பொண்ண அழைச்சிட்டு போயி ட்ரீட்மென்ட் கொடுத்த மருத்துவமனைக்கும், அந்தப் பொண்ண கூட்டிட்டு போயி வச்சிருந்ததா சொல்லப்பட்ட ஆசிரமத்திலும் விசாரிச்சிட்டேன்.அந்த பொண்ண பத்தின எந்த உண்மையான தகவலும் கிடைக்கல. ஏன் ஒரு சின்ன போட்டோ கூட கிடைக்கல!” என்று வருத்தமாக கூறினார் அசோக்.


தம்பி, “போட்டோனு சொல்லவுந்தான் ஞாபகம் வருது. கார்த்திக் அந்தப் பொண்ணு இப்ப எங்க இருக்கான்னு விசாரிச்சப்ப எந்த தகவலும் கிடைக்கல ஆனால் அந்தப் பொண்ணோட படிச்ச நம்ம சொந்தக்கார பொண்ணு கிட்ட அந்த பொண்ணோட பழைய போட்டோ ஒன்னு இருந்து வாங்கிட்டு வந்ததா கார்த்திக் சொன்னான்! ஆனால் அவன் இப்போ இங்க இல்ல. வேலை விஷயமா வெளியூருக்கு போயிருக்கான்! நாளைக்கு தான் வருவான். நீங்க வேணும்னா உங்க நம்பர் குடுத்துட்டு போங்க தம்பி, கார்த்திக் வரவும் உங்க நம்பருக்கு அந்த போட்டோவை அனுப்ப சொல்றேன்” என்று சொல்ல சரியென்று சொல்லிவிட்டு அசோக் தனது அலைபேசியை கொடுத்துவிட்டு சென்னைக்கு விரைந்தார்.

இங்கு நந்தன் அசோக்கின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தான். கண்டிப்பாக அந்தப் பெண்ணை பற்றிய தகவலை தனக்காக விசாரித்து வருவார் என்று நம்பிக் கொண்டிருந்தான்.


அன்று அதிகாலை வழக்கம்போல் அசோக் தன்னுடைய பணிக்கு வர, அவருக்காக எதிர்பார்ப்போடு காத்திருந்தான் நந்தன்.


“சார் எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் நந்தன்,எப்படி இருக்க?”


“ம்! இருக்கேன் சார், உங்களுக்காக தான் காத்துகிட்டு இருக்கேன் “ என்று நந்தன் சொல்லவும் நந்தனின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட அசோக், என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறினார்.

அவரும் சென்னை வந்த பிறகும் கூட அவனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை பற்றி தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்க எந்த தகவலும் அசோக்குக்கும் கிடைக்கவில்லை.

“சார் அந்த பொண்ண பத்தின தகவல் கிடைச்சிச்சா?” என்று தயங்கிக் கொண்டே நந்தன் கேட்க,


“சாரி நந்தா! நானும் எல்லா இடத்திலும் விசாரிச்சு பாத்துட்டேன்.அந்த பொண்ண பத்தின தகவல் எதுவும் கிடைக்கல.
அந்த சம்பவம் நடக்கும் போது அந்த பொண்ணுக்கு பதினெட்டு வயசு பூர்த்தியாகல. அதனால அந்த பொண்ணோட புகைப்படமோ, பேரோ போலீஸ் ரெக்கார்டுல எந்த இடத்துலயும் மென்ஷன் பண்ணல. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து அந்த பொண்ண ரெக்கவரி பண்ணி அழைச்சிட்டு போன ஹாஸ்பிடல் கூட விசாரிச்சுட்டேன்.
அந்த பொண்ண பத்தின எந்த தகவலும் கிடைக்கல” என்று கூற நந்தனின் முகம் சோர்ந்து போனது.

நந்தனை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார் அசோக்.

அப்போது அங்கிருந்து வந்த காவலர் ஒருவர்,” சார் அன்னைக்கு முதலமைச்சர் வந்து சிறையில நடந்த ஃபங்ஷனோட வீடியோவ நீங்க லீவுல இருக்கும்போது கொண்டு வந்து கொடுத்தாங்க!” என்ற சொல்ல அதை வாங்கினார் அசோக்.


“இன்னைக்கு சனிக்கிழமை தானே இன்னைக்கு படம் போடுவதற்கு பதிலா இந்த வீடியோவை ஆடிட்டோரியத்துல எல்லா கைதிகளையும் ஒண்ணா வச்சு போட்டு காட்டுங்க” என்று சொல்ல
சரியென்று கூறினார் அந்த காவலர்.


இங்கு கோயம்புத்தூரிலிருந்து அனைவரும் சென்னை வந்து சேர்ந்தனர். மித்ராவோ பிரகாஷோ ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை.

கோயம்புத்தூருக்கு கிளம்பும்போது எல்லாரிடத்திலும் இருந்த சந்தோசம் இப்போது யாரிடத்திலும் இல்லை. அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர்.



பிரகாஷ் கண்ணா தன் வீட்டிற்குள் நுழைய அவனின் வருகைக்காக காத்திருந்தார் அம்புஜம் பாட்டி,


பேரனை பார்க்கவும் சந்தோஷத்தில் ஓடி வந்து ஆற தழுவி அவனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

பிரகாஷ் பாட்டியை பார்த்து மெதுவாக புன்னகைத்தான். அப்போதுதான் அம்புஜம் பிரகாஷின் கையில் இருந்த காயத்தை பார்த்து அதிர்ந்து” பிரகாஷ் உனக்கு என்ன ஆச்சு, இது எப்படி ஆச்சு? “ என்று கேட்டார்.

அவ்வளவு நேரம் மறைவாக இருந்த ஜானு ஓடி வந்து, “ மாமா உனக்கு என்ன ஆச்சு? “ என்று அவனின் காயம் பட்ட கைகளை பிடித்து கண்கள் கலங்கினாள்.


“அதெல்லாம் எனக்கு ஒன்னும் இல்ல சின்ன காயம் தான் அன்னைக்கு தீ விபத்து நடந்தப்ப ஏற்பட்டது!”என்று சொல்ல,
“அன்னைக்கு எனக்கு எதுவும் ஆகலைன்னு சொன்னியே?” என்று கேட்டார் அம்புஜம்.

“நீங்க பயப்படுவீங்கன்னு தான் பாட்டி நான் உண்மைய சொல்லல,அன்னைக்கே இந்த காயம் பட்டுச்சு!” என்று பிரகாஷ் சொல்ல,

“பாட்டி நான் தான் சொன்னேன்ல? மாமாவுக்கு ஏதோ தப்பா நடக்கிற மாதிரி எனக்கு கனவு வருதுனு.நீ தான் கேட்கவே இல்லை.... இப்ப பாத்தியா எவ்வளவு பெரிய காயம் ஆகி இருக்கு? “ என்ற சொல்லி அழுதாள் ஜானு.


“ஜானு அதெல்லாம் எனக்கு ஒன்னும் இல்ல. நான் நல்லா தான் இருக்கேன் சின்ன காயம் தான், இன்னும் ரெண்டு மூணு நாள்ல சரியாயிரும்!” என்று பிரகாஷ் சொல்ல,


“நீ சும்மா இரு மாமா உனக்கு ஒன்னும் தெரியாது! டாக்டர் என்ன சொன்னாங்க? இன்னும் ஒரு தடவை டாக்டரை போய் பார்ப்போமா?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள் ஜானு.


“அதெல்லாம் ஒன்னும் இல்ல ஜானு! நான் நல்லா இருக்கேன்! நீ ஓவர் ரியாக்ட் பண்ணாத? நீ பண்றத பார்த்து பாட்டியும் பயப்படுவாங்க” என்று ஜானுவை கண்டிக்க,

ஜானு அமைதியாக நின்றாலும் அவன் காயத்தை பார்த்து கண் கலங்கிக் கொண்டிருந்தாள்.

“சரி பாட்டி, நான் போது குளிச்சிட்டு ரெஸ்ட் எடுக்கிறேன். ரொம்ப டயர்டா இருக்கு!” என்று சொல்லிவிட்டு அங்கு நிற்காமல் தன்னுடைய அறையை நோக்கி சென்றான் பிரகாஷ்.

அம்புஜம் மேனேஜருக்கு அழைப்பை விடுத்து, “ இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு எனக்கு ஏன் சொல்லல! பிரகாச பாத்துக்குறதுக்கு தான உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறேன்! ஏன் அவனுக்கு அடிபட்ட விஷயத்தை என்கிட்ட சொல்லல?”என்று திட்ட ஆரம்பித்து விட்டார்.


“ மன்னிச்சிடுங்க மேடம்! பிரகாஷ் சார் தான் நீங்க பயப்படுவீங்க உங்க கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்னு என்கிட்ட சொன்னாரு, அதான் நான் சொல்லல? “ என்று மேனேஜர் கூற,


“அவன் சொல்லக்கூடாதுன்னு சொன்னாலும் நீங்க என்கிட்ட சொல்லி இருக்கணுமா இல்லையா? இன்னும் வேற எத அவன் என்கிட்ட சொல்ல கூடாதுன்னு சொன்னான்! அடிபட்டதை மட்டும்தான் மறைச்சிங்களா இல்ல வேற எதையும் என்கிட்ட இருந்து மறைச்சிங்களா?” என்று அம்புஜம் கோபத்தில் கேட்க,

பயந்து போன மேனேஜர் அங்கு நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூற அப்படியே அதிர்ந்து விட்டார் அம்புஜம்.


சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தவர் தன்னை
சமநிலை படுத்திவிட்டு அவசர அவசரமாக பிரகாஷின் அறைக்கு சென்று கதவை தட்ட, குளிக்காமல் மெத்தையில் மீது அமர்ந்திருந்தவன் கதவை திறந்தான்.

“என்னாச்சு பாட்டி இப்பதான் குளிச்சிட்டு ரெஸ்ட் எடுக்க போறேன்னு சொன்னேன், அதுக்குள்ள வந்து கதவை தட்டிக்கிட்டு இருக்க? “ என்ற பிரகாஷ் கேட்க,


“இந்த காயம் எப்படி ஏற்பட்டுச்சு முதல்ல அத சொல்லு!” என்று அம்புஜம் கேட்க தடுமாறினான் பிரகாஷ்.

“அது வந்து... அதான் சொன்னேனே அன்னைக்கு நடந்த விபத்துல காயம் ஏற்பட்டுச்சுன்னு?” என்று பிரகாஷ் சமாளிக்க,

“மித்ராவை காப்பாத்த போய் ஏற்பட்ட காயம் தானே!” என்று அம்புஜம் பாட்டி கேட்க அப்படியே அதிர்ந்து விட்டான் பிரகாஷ்.


அதிர்ந்தது அவன் மட்டுமல்ல, அவனுக்காக சுடச்சுட தேநீர் ஒன்றை தயாரித்து கொண்டு அவன் அறைக்கு வந்த ஜானுவும் அதைக் கேட்டு அப்படியே அதிர்ந்து விட்டாள்.


சிறுவயதிலிருந்தே ஜானுவுக்கு பிரகாஷ் தான் என்று சொல்லி இருந்ததால், ஜானுவின் மனதில் பிரகாஷ் காதலனாக இடம் பெற்று விட்டான்.

இத்தனை வருடமாக தான் காதலிக்கும் ஒருவர், வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்பது தெரியவும் ஜானுவின் மனம் சுக்கு நூறாய் நொறுங்கி இருந்தது. அதுவும் தன் உயிரையும் பொருட்படுத்தாது அவள் உயிரை காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார் என்றால் எவ்வளவு காதல் அவள் மீது இருக்கும் என்பதை யோசித்துக் கொண்டே கண் கலங்கி நின்றாள்.


“பாட்டி அது வந்து” என பிரகாஷ் தடுமாற,

“இப்பதான் மேனேஜர் அங்கு நடந்ததை எல்லாம் சொன்னாரு! மித்ராவோட வாழ்க்கையில இவ்வளவு பிரச்சனை நடந்து இருக்குனு நினைக்கும் போது ரொம்ப வருத்தமா இருக்கு! ஆனால் அப்படி பட்ட பொண்ண எப்படி நம்ம ஏத்துக்க முடியும்! அதனால அவள மறந்துரு பிரகாஷ் “ என்று அம்புஜம் சொல்ல திகைத்தான் பிரகாஷ்.

“பாட்டி இதுல அவளோட தப்பு என்ன இருக்கு! யார் யாரோ பண்ணுன தப்புக்கு தண்டனை அனுபவிச்சவ மித்ரா, நீங்கதான அவகிட்ட உன் மனசுல உள்ளதை சொல்லி அவளுக்கும் சம்மதமா இருந்தா கூட்டிட்டு வா! உனக்கும் அவளுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னீங்க. இப்ப ஏன் இப்படி மாத்தி பேசுறீங்க!” என கேட்டான் பிரகாஷ்.


“நான் தான் சொன்னேன்! அப்போ அவளோட கடந்த கால வாழ்க்கை எனக்கு தெரியாதே? இப்படி ஒரு பொண்ண கட்டாயம் இந்த வீட்டு மருமகளா என்னால கொண்டு வர முடியாது!” என்று அம்புஜம் சொல்ல,”பாட்டி” என கோபப்பட்டான் பிரகாஷ்.
 

Author: Vishakini
Article Title: பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 27
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
நந்தன் செய்தது ரொம்ப பெரிய தப்பு.... அதுக்கான தண்டனை சரி தான்.....
எனக்கு இன்னமும் இவ பெற்றோர் ஏன் அப்படி ஒரு வயசு பிள்ளைய தனியா வீட்டில் விட்டு போகணும்.????

அவளையும் இல்ல கூட்டி போய் இருக்கணும்......

அப்படி என்ன தலைமறைவு வேண்டி இருக்கு......

இது எல்லாம் ஒரு நல்ல தந்தை, அண்ணன் செய்யும் விஷயமா????