அத்தியாயம் 8
காரில் இருந்து இறங்கி வீட்டுக்குள் நுழைந்தவனின் காதுகளில் “வீட்டுக்குள் வராத?” என்று குரல் கேட்க அப்படியே நின்றான் பிரகாஷ் கண்ணா.
எழுபது வயதை நிரம்பிய பெண்மணி ஒருத்தர் தன்னுடைய கண்ணாடியை சரி செய்து கொண்டே வீல்சேரில் அமர்ந்திருக்க, அவரின் கேர் டேக்கர் பொன்னம்மா வில் சேரை தள்ளிக் கொண்டு வந்தார்.
“என்னாச்சு, பாட்டி எதுக்கு கோவமா இருக்காங்க?”என்று பொன்னம்மாவிடம் பிரகாஷ் கண்ணா புருவத்தை உயர்த்தி கேட்க, எப்பவும் போல தான் இமையை மூடி சைகை செய்தார் பொன்னம்மா.
‘அப்ப சரி, எப்பவும் போல சமாளிப்போம்’ என்று மனதில் நினைத்துக் கொண்டு, “என்ன டியர், என்னைய வெளியில நிக்க வச்சு ஆரத்தி எதுவும் எடுக்க போறீங்களா? அப்படி எடுக்க போறதா இருந்தால் , கொஞ்சம் திருஷ்டியும் சேர்த்து கழுச்சிடுங்க” என சொல்ல,
“ஆமா ஆரத்தி எடுக்க நீ உன் பொண்டாட்டிய கூட்டிட்டு வந்து வாசல்ல நிக்கிற, நீங்க ரெண்டு பேரும் பதினாரு செல்வமும் பெற்று பெருவாழ்வு வாழுங்கன்னு நான் ஆரத்தி எடுக்கிறேன்” என்று சலித்துக் கொண்டார் பங்கஜம் பாட்டி.
“அப்போ நான் கூட்டிட்டு வந்தால் , நீ ஆராத்தி எடுத்துடுவ அப்படித்தானே” என்று பாட்டியின் கன்னத்தில் தட்ட,
“சும்மா இருடா படுவா, உன் அத்தை இப்பதான் போன் பண்ணுனா, ஆஸ்திரேலியாவில் இருந்து கிளம்பி இந்தியா வருகிறாளாம். வர்ற கையோட உனக்கும் ஜானுவுக்கும் நிச்சயம் பண்ணிடனும்னு சொல்றா?”
“என்னது நிச்சயமா? பாட்டி என்ன இப்படி குண்ட தூக்கி போடுற? “
“எந்த குண்டையும் நான் தூக்கி போடல, உன் அத்தை தான் போடுறா,
“டியர் உங்களுக்கு தான் என் மனசுல உள்ளது தெரியுமே, உங்க மக கிட்ட இருந்து என்னைய காப்பாத்தலாம்ல”
“இத்தனை நாளா நானும் காப்பாத்தி கிட்டு தான் இருக்கேன், இனிமேலு என்னால காப்பாத்த முடியாது, எனக்கு ஒரு மருமகள் வேணும், நீயும் கூட்டிட்டு வர மாட்டேங்குற, அதனால நானே என் பேத்திய கூட்டிட்டு வந்து எனக்கு மருமகளா ஆக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் “
“அச்சச்சோ, டியர் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது உங்க பேரன் பாவம்” என்று பிரகாஷ் கண்ணா முகத்தை சோகமாக வைக்க,
“இங்க பாரு இந்த பெர்ஃபார்மென்ஸ் எல்லாம் இனிமேல் என்கிட்ட பலிக்காது, உனக்கு கல்யாணம் பண்ண போறது உறுதி, மாப்பிள்ளையா மணவரைல உட்கார தயாராய் இரு,
“நான் என்ன உட்கார மாட்டேன்னுமா சொல்றேன், மணவரையில உட்காரதற்கு உன் மருமகள் சம்மதிக்க மாட்டேங்கிறாளே, செல்ல குட்டி மட்டும் சம்மதம் சொல்லி இருந்தால் இந்நேரம் புள்ள குட்டியே
பெத்து யிருப்பேன்” என சிரித்தான் பிரகாஷ் கண்ணா.
“யாரு நீ, புள்ள குட்டி பெத்துருப்ப, இத நான் நம்பனும் “
“பாட்டி, இப்படி எல்லாம் என்னை அசிங்கப்படுத்தக் கூடாது.நான் உன் பேரன். நீ வேணா பாரு கல்யாணம் பண்ணி பத்து மாசத்துல என் பொண்டாட்டி கிட்ட சொல்லி உனக்கு குட்டி பேரனை பெத்து தர சொல்றேன்”
“நீ எனக்கு பேரன் பெத்து தந்தது இருக்கட்டும்! உன்னோட லவ்வ சொல்லிட்டியா? “
“அதான் ஆபீஸ்ல வேலை பாக்குற ஆபீஸ் பாயில இருந்து, எல்லாருக்கும் தெரியுமே? இதுல என்ன தனியா சொல்லணும்” என்று பிரகாஷ் கண்ணா கேட்க,
“முட்டாள் உன்னைய என் பேரனுன்னு சொல்வதற்கே எனக்கு வெட்கமா இருக்கு. உன் வாயால அவகிட்ட உன் காதலை சொன்னியா அதை சொல்லு முதல்ல?” என்று கேட்டார் பங்கஜம் பாட்டி.
“அவ எங்க சொல்ல விடுறா,
நான் ஏதாவது பேச ஆரம்பிச்சாலே அவ எதையாவது சொல்லிட்டு தப்பிச்சு போயிடுறா? வலுக்கட்டாயமா அவள நிறுத்தி என் காதலை சொல்லவும் எனக்கு விருப்பம் இல்லை, என்ன செய்ய சொல்ற? “
“அப்போ ஜானுவ கல்யாணம் பண்ணிக்க?”
“ பாட்டி?
“ அப்புறம் என்ன? “
“ பாட்டி உனக்கு தெரியும்ல, நான் மித்ராவை ரெண்டு வருஷமா காதலிக்கிறேன்னு,
“தெரியும், தெரிஞ்சனாலதான் இவ்வளவு நாளு அமைதியாக இருந்தேன், ஆனா நீ உன் மனசுல உள்ள காதல கூட இன்னும் அந்த பொண்ணு கிட்ட சொல்லாம இருக்க, இதுக்கு மேல என்னால பொறுக்க முடியாது, நான் பொறுத்தாலும் உன் அத்தை பொறுக்க மாட்டாள் “
“பாட்டி, உங்க பொண்ணு கிட்ட நீங்க பேசுங்க”
“இங்க பாரு கண்ணா, ஏற்கனவே உனக்கு நான் ரொம்ப செல்லம் கொடுக்கிறேனு என்னைய திட்டுறா? “
“உனக்கும் அவளுக்கும் ஒத்துப்போகாத நாலதான் இங்கே இருந்து ஏதாவது உன்னைய குறை சொல்லிக்கிட்டே இருப்பானு தான் அவளை ஆஸ்திரேலியாவில் உள்ள பிசினஸை பார்த்துக்கணும் சொல்லிட்டேன். அவளும் விருப்பமே இல்லாம தான் அத பாத்துட்டு இருக்கா,
அவ மகளை உனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து, அவ இங்க வந்து ராஜ்ஜியம் பண்ணனும்னு நினைக்கிறா,
என் மகளை விட, ஏன் மகன் வயிற்று பேரன் நீ. என் குடும்ப வாரிசு
நீ நல்லா இருக்கணும்னு தான் நான் ஆசைப்படுவேன். நீ மட்டும் அந்த பொண்ண காதலிக்கிறத என்கிட்ட சொல்லாம இருந்தால் நானும் ஜானுவ உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்பட்டு இருப்பேன். உன் மனசுல மாயமித்ரா இருக்கான்னு நீ சொன்னதுல இருந்து தான் என் மனசுல உள்ள ஆசைய விட்டுட்டு உன் ஆசையை நிறைவேற்றனும்னு ஆசைப்படுறேன்.
நீ ஜானுவ கல்யாணம் பண்ணாம வேற இடத்துல பொண்ணு கட்ட போறேன்னு தெரிஞ்சால் உன் அத்தை சும்மா இருப்பானு நினைக்கிறியா? ஏகப்பட்ட பிரச்சனை பண்ணுவா? அதையெல்லாம் எப்படி சமாளிக்க போறேன்னு தெரியாம நான் ஏற்கனவே குழம்பி போய் இருக்கேன், இதுல நீயும் என்னைய குழப்பாத!
உனக்கு இன்னும் கொஞ்ச நாள் டைம் தாரேன். அதுக்குள்ள அந்த பொண்ணு கிட்ட உன் காதலை சொல்லி அந்த பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு வா?
இல்ல அது உன்னால முடியலைன்னா, அடுத்த முகூர்த்தத்திலேயே ஜானுவ கல்யாணம் பண்ணி வைப்பேன், அப்புறம் என் மேல நீ வருத்தப்படாத!” என்று கோபமாக கூறினார் பங்கஜம்.
“பாட்டி நீயே இப்படி சொன்னா எப்படி? எனக்குன்னு நீ மட்டும் தான் இருக்க. நானும் அவகிட்ட பேசுறதுக்கு முயற்சி பண்றேன் ஆனா முடியலையே? “
“அப்போ ஒன்னு பண்ணு. நான் நாளைக்கு எதார்த்தமா ஆபீஸ் வர்ற மாதிரி வரேன். நானே அந்த பொண்ணு கிட்ட என் பேரனை கட்டிக்கிறியானு கேட்கிறேன் “
“பாட்டி, அது மட்டும் வேண்டாம், நானே பாத்துக்கிறேன் “
“ நீயும் சொல்ல மாட்டேங்குற!நானும் சொல்றேன்னு சொல்றேன் அதையும் ஏற்றுக்கொள்ள மாட்டேங்குற, என்னதான் நினைச்சுகிட்டு இருக்க. அப்பா அம்மா இல்லாத பையன்னு உனக்கு செல்லம் கொடுத்தது ரொம்ப தப்பா போச்சு” என பங்கஜம் சொல்ல.
“கோபப்படாத டியர், இந்த தடவை கண்டிப்பா என் காதல அவகிட்ட சொல்லி அவளை இந்த வீட்டு மருமகளா கூட்டிட்டு வாரேன் “
“கூட்டிட்டு வந்தா சரி”என சொல்லிவிட்டு பங்கஜம் செல்ல, “ டியர் உள்ள வரவா? “ என்று பிரகாஷ் கண்ணா கேட்க,
“வராதன்னு சொன்னா அப்படியே போயிடுவியா!” என சிரித்தார் பங்கஜம் பாட்டி.
“ பாட்டி வர வர உனக்கு குசும்பு அதிகமாகுது” என்று சொல்லிக்கொண்டே, வீட்டுக்குள் நுழைந்தான் பிரகாஷ் கண்ணா.
“ சரி பாட்டி நான் ரூமுக்கு போய் பிரெஷ் ஆகிட்டு வரேன். ரெண்டு பேரும் சேர்ந்து டீ குடிக்கலாம்” என சொல்லிவிட்டு மாடு ஏறி தன்னறைக்குச் சென்றான் பிரகாஷ் கண்ணா.
“என்னமா தம்பி கிட்ட இவ்வளவு கோபமா பேசுறீங்க”
“வேற என்ன செய்ய சொல்ற பொன்னமா? எத்தனை நாள், இவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்காம இருக்கிறது, சொந்தக்காரங்க எல்லாரும் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க, இதுல இவனோட அத்தை காரி வேற போன் பண்ணி டார்ச்சர் பண்றா?
இவன் ஜானுவ கல்யாணம் பண்ணிப்பான்னு நினைச்சு வர்ற சம்பந்தத்தை எல்லாத்தையும் அவ தட்டி கழிச்சுக்கிட்டே இருக்கா, ஆனா இவன் மனசுல அந்த மித்ரா பொண்ணு தான் இருக்கு, என்ன பண்றதுன்னு தெரியல” என்று சலித்துக் கொள்ள,
“ஆமாமா, அந்த மித்ரா பொண்ண பார்த்தாவே கையெடுத்து கும்பிடனும் போல லட்சுமி கடாட்சமா இருக்கா. நம்ம தம்பிக்கு ஏத்த பொண்ணு, அந்த பொண்ணு மட்டும் நம்ம வீட்டுக்கு மருமகளா வந்தா நல்லா இருக்கும்” என்று கூறினார் பொன்னம்மா.
“நம்ம நல்ல பொண்ணு நினைக்கிறோம், ஆனா இந்த வீட்டில இருக்கிற யாரும் பொண்ண பார்க்க மாட்டாங்க, பொன் எவ்வளவு இருக்குன்னு தான் பார்ப்பாங்க, பிரகாஷ் கண்ணா அந்த பொண்ண விரும்புறான்னு தெரிஞ்சாலே எல்லாரும் பிரச்சனை பண்ண ஆரம்பிச்சிடுவாங்க, ஆனாலும் கண்ணாவோட ஆசை தான் எனக்கு முக்கியம்னு நானும் சரின்னு சொல்லிட்டேன்,
ஆனா எந்த முடியுமே இன்னும் தெரியல, நான் இன்னும் எத்தனை காலத்துக்கு உயிரோட வாழ போறேன்னு தெரியல. அதுக்கு முன்னாடி பிரகாசுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கணும்னு நினைக்கிறேன். அது புரியாம இவனும் அலட்சியமா இருக்கான், அதனால தான் இன்னைக்கு கோவத்துல அவன்கிட்ட பேசினேன். கூடிய சீக்கிரத்துல மனசுல உள்ளது சொல்லி அந்த பொண்ண கூட்டிட்டு வரட்டும்” எனக் கூறினார் பங்கஜம் பாட்டி.
“ அம்மா எனக்கு ஒரு சந்தேகம், ஒருவேளை, அந்தப் பொண்ணு தம்பியோட காதல ஏத்துக்கிட்டு நம்ம தம்பியை கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டால் , நீங்க உடனே கல்யாணம் பண்ணி வச்சிருவீங்களா? வீட்டில உள்ளவங்க எல்லாரும் சம்மதம் சொல்லுவாங்களா? “ என்று கேட்க,
“சம்மதம்கிற வார்த்தைக்கே இந்த வீட்டில இடம் கிடையாது. இவ்வளவு நாளா அமைதியா இருந்த இந்த குடும்பத்துல அப்பத்தான் பெரிய புயல் அடிக்கும் “ என்று பங்கஜம் பாட்டி விரக்தியாக சொல்ல, அதிர்ச்சியானார் பொன்னம்மா.