இவ்வளவு நாள் அமைதியா இருந்த குடும்பத்துல பிரகாஷ் கண்ணாவோட கல்யாண விஷயத்தை ஆரம்பிச்சாலே பெரிய புயல் அடிக்கும்” என்ற விரக்தியாக கூறினார் பங்கஜம் பாட்டி.
“அப்போ எதுக்குமா தம்பி கிட்ட அந்த பொண்ணு கிட்ட காதலை சொல்லி கல்யாணம் பண்றதுக்கு சம்மதம் வாங்கிட்டு வர சொல்றீங்க” என்று பொன்னம்மா தன் சந்தேகத்தை கேட்க,
“எல்லாம் கண்ணாவுக்காக தான். சின்ன வயசுலயே ஒரு ஆக்சிடென்ட்ல அம்மா அப்பாவை இழந்துட்டான். நான் என் மகனையும் மருமகளையும் இழந்துட்டேன். நான் இத்தனை வயசு வரை குத்துக்கல்லா இருக்கும் போது என்னால இந்த உலகத்துக்கு வந்த என் புள்ள இந்த உலகத்துல இல்லாம போனத என்னால தாங்கிக்க முடியல. அன்னைக்கு என் புள்ள என்னை நம்பி விட்டுட்டு போனது தான் என் பேரன், அவனுக்காக தான் இத்தனை வருஷம் என் உயிரை கையில புடிச்சுகிட்டு இருக்கேன்.
ஆக்சிடெண்டாகி உயிர் போற நிலைமையில், அம்மா உங்களை நம்பி தான் என் மகனை நான் விட்டுட்டு போறேன். என் மகன் வாழ்க்கையில எங்களுடைய இழப்பை தவிர, அவன் வேற எந்த இழப்பையும் சந்திக்க கூடாது. அவனுக்கு புடிச்ச எல்லாத்தையும் செய்யுங்க. அவன் வாழ்க்கையில வருத்தப்படவே கூடாது, கண்டிப்பா என்னைய நீங்க வளத்ததை விட பல மடங்கு பாசம் காட்டி என் மகனை வளர்ப்பீங்கன்னு தெரியும், இருந்தாலும் எங்களுக்கு நடந்தது எதேர்ச்சியா நடந்த மாதிரி தெரியல. யாரோ எங்களை கொலை பண்றதுக்கு முயற்சி பண்ணி சதி திட்டம் தீட்டிருந்த மாதிரி தான் தெரிஞ்சுச்சு, என் கணிப்பு சரினால் , கட்டாயம் கண்ணாவோட உயிருக்கு ஆபத்து இருக்கும். அதனால உங்க கண்காணிப்புல மட்டும் என் மகனை வச்சுக்குருங்க. பத்திரமா பாத்துக்கிருங்க அவன் ஆசைப்பட்ட எல்லாத்தையும் அவனுக்கு வாங்கி கொடுத்து சந்தோசமா பாத்துக்குங்கன்னு சொல்லிட்டு இந்த உலகத்தை விட்டே போயிட்டான்.
அன்னையிலிருந்து என் மகன் சொன்ன மாதிரி, பிரகாஷ் கண்ணா ஆசைப்பட்ட எல்லாத்தையும் இதுவரை செஞ்சு இருக்கேன். என் மக இங்க இருந்தால் பிரகாஷ் கண்ணாவோட சந்தோசத்துக்கு இடைஞ்சல் கொடுப்பான்னு ஒரே காரணத்துக்காக அவளையே இந்த நாட்டை விட்டு அனுப்பிட்டேன், கண்ணா ஆசைப்பட்டதை அவன் வாழ்க்கையில அமைச்சு கொடுக்கிறதுக்காக நான்
எந்தப் பிரச்சனையும் சந்திக்கிறதுக்கு நான் ரெடியா இருக்கேன்” என உறுதியாக கூறினார் பங்கஜம் பாட்டி.
இங்கு,
நந்தன் மன வருத்தத்தில் அமர்ந்திருந்தான். சக கைதியாக சிறையில் இருந்த வாசுதேவனின்
இறப்பு நந்தனை உலுக்கியது.
நந்தன் சக கைதிகளுடன் பேசவில்லை என்றாலும் வாசு தேவும் அவனும் ஒரே சிறைக்குள் இருந்ததால் அவ்வப்போது பேசியதுண்டு.
என் மனைவி என்னை பார்க்க வரல என்னை வெளியில் எடுக்க முயற்சி பண்ண மாட்டா? அவ என் மேல கோவத்துல இருக்கான்னு அப்பப்ப வாசுதேவ் சொன்னதுண்டு,
ஆனால், வாசுதேவ் இறந்த பின்பு அவரின் பிரேதத்தை வாங்க வருவதற்காக அவரின் மனைவி வந்திருந்த போதுதான் இருவருக்குள்ளும் என்ன பிரச்சனை என்பது தெரிந்தது நந்தனுக்கு.
“என்னங்க என்னை மன்னிச்சிடுங்க. இத்தன நாளு உங்களோடு மனசு தெரியாம உங்களை பத்தி தப்பா புரிஞ்சுகிட்டேன். நீங்க ஒரு கொலைகாரன்னு நானே என் வாயால சொல்லிட்டேனே,
நீங்க கொலை பண்ணதுக்கு காரணமே நானா தான இருந்திருக்கேன். அதுவே இப்பதான் எனக்கு தெரியுது,
அந்த ராசுமவன் எனக்கு தெரியாம நான் குளிச்சத போட்டோ எடுத்து வச்சு அவனோட சேர்ந்த சேக்காளி பயல்களுக்கெல்லாம் காட்டி இருக்கான், அத தெரிஞ்சு நீங்க அவனை மிரட்டியும் அவன் திருந்தாம அதே வேலையை செஞ்சதனால, நீங்க கோவத்துல கத்திய வச்சு குத்திட்டீங்க. எதுக்கு அவனை குத்துனீங்கன்னு ஊர்க்காரங்க, நான் எல்லாரும் கேட்டப்ப குடிபோதையில் குத்திட்டேன்னு சொல்லிட்டீங்க.
உண்மை எனக்கு தெரிஞ்சால் நான் பயந்து மானம் போயிருச்சுனு ஏதாவது பண்ணி இருப்பேன்னு நினைத்து எனக்கு தெரியாமலேயே மறைச்சிட்டீங்களே, நானும் குடிகார பையன் எப்பவும் குடிச்சிட்டு தான் பிரச்சனை பண்ணுவான் இந்த தடவை குடிச்சிட்டு கொலையை பண்ணிட்டானே கொலைகார பையன்னு உங்கள தப்பா புரிஞ்சுகிட்டேனே, அந்த உண்மை கூட எனக்கு இப்ப தானே தெரியுது. கொலைகாரன நம்ம எதுக்கு போயி பாக்கணும்னு தான நான் இத்தனை நாள் உங்கள பாக்கல,
இப்ப நான் என்ன பண்ணுவேன், இருக்கும்போது உங்க அருமை எனக்கு தெரியலையே’ என்று கதறி அ
அழுதது நந்தனின் நினைவுகளில் ஓடியது.
மனைவியின் மானத்தை காப்பாற்ற எண்ணி கொலை செய்ததை காரணத்தை கூட யாரிடமும் சொல்லாமல் இருந்த வாசுதேவ் எங்கே? ஆத்திரத்தில் ஒரு அப்பாவி பெண்ணை இழிவாக்கி பழி வாங்கிய நான் எங்கே? என்று நினைத்து தன்னை தானே காயப்படுத்திக் கொண்டிருந்தான்.
நந்தனின் நடவடிக்கைகளை சில காவலர்கள் அசிஸ்டன்ட் கமிஷனர் அசோக்கிற்கு சொல்ல,
விரைந்து வந்தார் அவர்.
“நந்தா என்ன காரியம் பண்ணிக்கிட்டு இருக்க? “
“சார் விடுங்க நானெல்லாம் வாழ்றதுக்கு தகுதியே இல்லாத ஆளு, நல்லவங்க எல்லாம் இந்த உலகத்துல வாழாம சாவுறாங்க என்னைய மாதிரி கேடு கெட்டவனுக்கு சாவ வரமாட்டேங்குது” என தன்னை தானே அடித்துக்கொண்டே தன்னை காயப்படுத்தினான்.
“இங்க பாரு இப்ப எதுக்கு இவ்வளவு எமோஷனல் ஆக்குற”
“என்னால முடியல சார், எந்த தப்புமே பண்ணாம இத்தனை வருஷமா
தண்டனை அனுபவிச்சி இருக்காரு வாசுதேவ். இத்தனை வருஷத்துல அவர் ஒரு நாள் கூட அவரோட மனைவியை பத்தி தப்பா என்கிட்ட சொன்னதே கிடையாது. அவங்க மனைவி வந்து அழுகும் போது தான் அவங்களுக்கு இடையில என்ன பிரச்சனையுமே எனக்கு தெரிஞ்சுச்சு, ஏன் உங்களுக்கு கூட அப்பதான் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.
ஆனால் நான் ஒரு சேடிஸ்ட், ஒரு பொண்ணோட உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன். நான் பண்ணுன அந்த தப்பால அந்த பொண்ணு இப்ப எப்படி இருக்கும்னு நினைக்கும் போதே ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று நந்தன் சொல்ல,
“ரெண்டு குடும்பமும் சமரசம் ஆகிட்டாங்கன்னு சொன்னாங்களே
அப்புறம் என்ன? அந்தப் பொண்ணு அவங்க குடும்பத்தோட நல்லா தான் இருக்கும்!”
“அதுதான் சார் இல்ல, அந்தப் பிரச்சனை முடிந்து கொஞ்ச நாளிலேயே தம்பி என்னைய பாக்க வந்தான். ஊருகாரவங்க ரெண்டு பேரும் பேசி முடிச்சு இரண்டு குடும்பத்தையும் சமரசம் பண்ணிட்டாங்க. அந்தப் பொண்ண அப்படியே போலீஸ்காரங்க அங்க இருந்து கூட்டிட்டு போய்ட்டாங்களாம். ட்ரீட்மெண்ட் முடிஞ்சும் அந்த பொண்ணு அந்த ஊருக்கு வர மாட்டேன்னு பிடிவாதமா இருந்ததால அந்த பொண்ண ஒரு ஆசிரமத்துல பாதுகாப்பா வச்சிருக்காங்கன்னு தம்பி சொன்னான், ஆனா இத்தனை வருஷத்துல அந்த பொண்ணு எங்க இருக்குன்னு தெரியல” என்று தன் மனக்கவலையை நந்தன் சொல்ல, கமிஷ்னருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
நந்தன் அதிகமான மன அழுத்தத்தில் உள்ளான் என்பதை தெரிந்து கொண்டார். இவனை இப்படியே விட்டால் ஏதாவது தன்னைத்தானே பண்ணிக் கொள்வான் என்று அவருக்கு தோன்றியது,
உடனே அவனுக்கு மருத்துவ உதவியும் சைக்கார்டிஸ்ட் ஒருவரின் கவுன்சிலிங்கும் கட்டாயம் தேவை என்பதை உணர்ந்து கொண்டார், உடனே அங்கிருந்த காவலர்களுக்கு அழைப்பை விடுத்து நந்தனை சிறையில் இருந்த மருத்துவ குழுவினரிடம் அழைத்துச் செல்லும்படி கட்டளையிட்டார்.
அவர்களும் நந்தனை பரிசோதித்து விட்டு காயப்பட்ட இடங்களில் மருந்தை வைத்து கட்டினார்கள்.
“நந்தன் எப்படி இருக்கான்?” என்று அவனை பரிசோதித்த மருத்துவரிடம் கேட்க,
“இப்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்ல சார். ஆனா சொன்னதையே சொல்லி புலம்பிக்கிட்டே இருக்கார். வாசுதேவோட மரணம் அவர் மனசு ரொம்ப பாதிச்சிருச்சு போல “
“ம்ம்ம், புரியுது , கண்டிப்பா நந்தனுக்கு கவுன்சிலிங் தேவைப்படுது. ஆமா சார், அதைத்தான் நானும் உங்ககிட்ட சொல்லனும்னு நெனச்சேன்”
“சரி நான் கமிஷனர் கிட்ட பேசிட்டு என்ன பண்ணலாம்னு முடிவு எடுக்கிறேன் அதுவரை நந்தன பத்திரமா பாத்துக்கோங்க, எப்பவும் அவன சுத்தி காவலுக்கு ஆளுங்க இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்ளுங்கள். சிறையில் இருந்து ஏதாவது ஒரு கைதி தற்கொலைக்கு முயற்சி பண்ணுனா
அது எவ்வளவு பிரச்சனையாகும்னு உங்களுக்கு தெரியும், அதனால கவனமா இருந்துக்கங்க” என சொல்லிவிட்டு நந்தனை பார்ப்பதற்காக உள்ளே சென்றார் கமிஷனர்.
“ஹேய் நந்தா உடம்பு எப்படி இருக்கு”
“ம்ம்ம், நல்லா இருக்கேன் சார்”
“இங்க பாரு இங்க இருக்கிற நிறைய கைதிகளுக்கு நீ ரோல் மாடல், இவ்வளவு பிரச்சினைகளுக்கும் மத்தியில இந்த எட்டு வருட சிறை தண்டனையையும் அனுபவச்சும் மனம் தளராமல் கூட படிச்சிருக்க, உன்னை மாதிரி நிறைய கைதிக படிக்கிறதுக்கு முன் வந்து என்கிட்ட கேக்குறாங்க, அப்படி இருக்கும்போது நீயே இப்படி தற்கொலைக்கு முயற்சி பண்ணுனால் எப்படி உன்னைய பார்த்துட்டு நிறைய பேரு இந்த மாதிரி பண்றதுக்கு வாய்ப்பு இருக்கு” என வருத்தமாக சொல்ல,
“சாரி சார், என்னால முடியல வாழ்க்கையில் நான் பண்ணுன ஒரே ஒரு தப்பு என்னை சுத்தி சுத்தி அடிக்குது. சாப்பிடும்போது தூங்கும்போது உட்காரும்போது எல்லாம் நேரமும் அந்த பொண்ணோட முகம் என் கண் முன்னாடி வந்து என் வாழ்க்கையை இப்படி சீரழிச்சிட்டியேனு கேட்கிற மாதிரி இருக்கு, எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல”
என்று நந்தன் சொல்லவும் தான்
நந்தனின் மனநிலை புரிந்து கொண்டார் அசோக்.
“இங்க பாரு, அதெல்லாம் அந்த பொண்ணு நல்லா இருக்கும். நீ எதுக்கு கவலைப் படுற!”
“ இது போதும் சார், ஒருவேளை அந்த பொண்ணு நல்லா இருக்குறத நான் கண்ணால பார்த்தால் அதுக்கப்புறம் என் மனநிலை மாறுமோ என்னவோ?” என்று நந்தன் விரக்தியாக கூறினான்,
“சரி அப்போ ஒன்னு பண்ணுவோம்,
நான் அந்த பொண்ண பத்தின டீடைல்ஸ் உனக்கு விசாரிச்சு சொல்றேன், அதுக்கப்புறம் நீ எந்த தவறான முடிவும் எடுக்கக் கூடாது சரியா?” எனக் கேட்க
“சார் உண்மையாவா, அந்த பொண்ண பத்தி விசாரிச்சு சொல்லுவிங்களா?”என சந்தோசமாக கேட்டான் நந்தன்.
“ஆமா உண்மையாத்தான், ஆனால்
ஒரு கண்டிஷன்” என்று அசிஸ்டன்ட் கமிஷனர் சொல்ல, ‘என்ன சொல்லப் போறாரு’ என்று நினைத்துக் கொண்டே கமிஷனரை இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தான் நந்தன்.