மழை - 14
அடுத்த ஒரு வாரம் நாட்கள் விடிவதும், மறைவதும் அவரவர் வேலையில் நொடிப் பொழுதாய் கழிந்து விட்டது.
அன்று காமராஜ் காலை உணவை தன் வீட்டில் முடித்துக் கொண்டு தன் அண்ணனைப் பார்க்க வேண்டி தேவராஜன் வீட்டிற்கு வந்திருந்தார்.
"என்ன ராசா வெல்லன்னையே இந்தப்பக்கம்? உம்பொண்டாட்டி ஏதாச்சும் பொங்கி போட்டாளா இல்லையா?" என்று எகத்தாளமாக கேட்டார் காமாட்சி.
"சாப்பிட்டு தான்மா வரேன்" என்று அவருக்குத் தன்மையாக அவர் பதில் உரைக்கவும்.
"சாப்பிடுங்களேன் தம்பி" என்றவாறு அவ்விடம் வந்தார் வள்ளி.
"அதெல்லாம் அவெம்பொண்டாட்டி மணக்க மணக்க பொங்கி மூக்கு முட்ட சாப்பிட வச்சுதேன் அனுப்பி இருக்காலாம். உங்கொழுந்தனுக்கு வயித்துல இடமே இல்லையாம்" என்று ஏற்றம் இறக்கமாக அவர் பேசி முடிக்கவும்.
"அண்ணா எங்க அண்ணி?".
"அறையில தான் இருக்காங்க போய் பாருங்க தம்பி".
"பொண்டாட்டி சொல்லாம ஒரு இலை கூட அசையாது. கோயிலுக்கு போயி சாமிய பாக்க முன்னாடி கூட பொண்டாட்டி கிட்ட கேக்கனோம். இதெல்லாம் ஒரு பொழப்பு. அவ தாளத்துக்கு இவரு ஆட்டம்.. இப்படி எல்லாம் புருசன கைக்குள்ள வச்சுக்குற வித்ததேன் எங்களுக்கு அந்த காலத்துல தெரியாம போச்சே.. எனக்குதேன் எம்மட தாலாட்டுக்கு ஆடுற புருசன் கிடைக்கலயே" என்று தன் மகனையே ஜாடை மாடை பேசிக்கொண்டு வெற்றிலையை இடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.
காமராஜ் தன் தாய்க்கு எதுவும் பதில் கொடுக்காமல் அண்ணனின் அறைக்குள் நுழையவும். தப்பித்தோம் பிழைத்தோம் என்பதுபோல் வள்ளி சமையலறையை நோக்கி வேகம் எடுத்துவிட்டார்.
அப்போதுதான் வெளியே வருவதற்காக தயாராகியிருந்த தேவராஜ் காமராஜைக் கண்டதும், "வா ராஜா, மில்லுக்கு தான் கிளம்பிகிட்டு இருக்கேன்".
"அண்ணே ஒரு வரன் வந்திருக்குன்னு நடேசன் சொன்னாரு. அதான் உங்கள பாத்து தாக்கல் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்".
அவர் கூறியதைக் காதில் வாங்கிய காமாட்சி, "எடுபட்டப்பய, அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டுதேன் வந்திருக்கியான்" என்று முணுமுணுத்துக் கொண்டே அமர்ந்திருந்தார்.
பொற்செல்வனும் தயாராகி சாப்பாட்டு மேஜையில் வந்தமர்ந்தான்.
"சரி ராஜா, பொண்ணுடைய போட்டோவையும், ஜாதகத்தையும் கொடுத்துட்டீங்களா?".
"எல்லாம் கொடுத்தாச்சுண்ணே. அவங்களுக்கு போட்டோல பார்த்ததுமே அந்த புள்ளைய ரொம்ப பிடிச்சு போச்சு. ஜாதகம் கூட பொருந்தி வந்திருக்குன்னு தான் மாப்பிள்ளை வீட்லருந்து சொன்னாங்களாம். அதனால பொண்ண பார்த்துட்டு மேற்கொண்டு பேசிக்கலாம்னு சொல்லி அனுப்பி இருக்காய்ங்க".
தன் தாய் பரிமாறிய பொங்கலை சட்டினியில் நனைத்து வாய்க்குள் வைத்த பொற்செல்வனுக்கு தன் சித்தப்பா கூறிய செய்தியில் நெய்யில் மிதந்துக் கொண்டிருந்த அந்த வழுவழுப்பான பொங்கல் கூட தொண்டைக் குழியில் ஒரு நொடி சிக்கி இறங்க மறுத்தது.
அவனின் மனம் என்ன வேண்டுகிறது என்பது அவனுக்கே விளங்கவில்லை. அவள் மேல் எந்த ஒரு எண்ணமும் இல்லாத போதும் தனக்குள் ஏன் இந்த வலி என்ற ஆராய்ச்சியை எல்லாம் ஆராயும் மனநிலையிலும் அவன் இல்லை. வேகமாக உணவை உட்கொண்டவன் அங்கிருந்து கிளம்பி விட்டான்.
"அவங்க நம்பர் உன்கிட்ட இருக்குல்ல போன் பண்ணி மாப்பிள்ளை வீட்ல இப்படி சொல்றாங்கன்னு சொல்லிட்டு, இன்னைக்கு சாயந்திரமா பொண்ணு பாக்குறத ஏற்பாடு பண்ணிடுங்க. கல்யாண தேதியையும் அவங்களையே பேசி குறிச்சிட சொல்லு".
"சரிங்கண்ணா" என்றவர் வெளியே வரவும்.
கடுகடுத்த முகத்தோடு அவரை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார் காமாட்சி.
தன் தாயின் முறைப்பைக் கண்டும் காணாதது போல் நைசாக வெளியேறிவிட்டார் காமராஜ்.
அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த காமாட்சிக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகியதுதான் மிச்சம்.
அன்றே மாப்பிள்ளை வீட்டினர் வந்து செந்நிலாவையும் பெண் பார்த்துவிட்டு பிடித்திருக்கிறது என்றும் கூறிச் சென்றுவிட்டனர்.
அவளின் மனநிலையும் ததும்பலாக தான் இருந்தது. ஆனாலும், மறுக்க அவளிடம் காரணம் இல்லை. எனவே, நடப்பதை அமைதியாக ஏற்றுக் கொண்டாள்.
ஒரு மாதத்தில் திருமணம் என தேதியையும் குறைத்துவிட்டே கிளம்பிவிட்டனர். அவர்கள் வெளியேறியதும் செங்கேணி காமராஜிற்கு அழைத்து நல்ல முறையில் பெண் பார்க்கும் நிகழ்வு நடந்து முடிந்ததைப் பற்றியும், திருமணத்திற்கு ஒரு மாதம் கழித்து தேதி குறித்திருப்பதைப் பற்றியும் கூறினார்.
காமராஜ் மூலம் விஷயம் தேவராஜை அடைய. பொற்செல்வனின் செவிகளையும் தீண்ட அவை தவறவில்லை.
செந்நிலாவின் திருமண தேதியை அறிந்து கொண்ட காமாட்சி மீண்டும் வீட்டில் சலசலப்பைத் துவங்கினார்.
"இன்னிக்கு உன் வீட்டுக்காரன் வந்ததும் எனக்கு நீ ஒரு முடிவ கேட்டு சொல்லுத" என்று தன் முந்தானையை இழுத்து இடுப்பில் சொருகியவர். இங்குமங்குமாய் நடந்துக் கொண்டே இருந்தார்.
வள்ளி தன் கைகளைப் பிசைந்து கொண்டே நின்றிருக்கவும். வீட்டிற்குள் நுழைந்த தேவராஜ், "என்ன வள்ளி ஏன் ஒரு மாதிரி இருக்க?".
"என்னங்க அது வந்து.. அந்த பொண்ணுக்கு கல்யாண தேதி குறிச்சிட்டாங்கல்ல. அதான் நம்ம பொற்செல்வனுக்கும், இந்திராவுக்கும் கல்யாணம் பண்ணி ஆகணும்னு அத்த பிரியப்படுறாங்க" என்று அவர் கூறியதைப் பூசிமொழுகி ஒருவாறு தன் கணவரிடம் விஷயத்தை ஒப்படைத்துவிட்டார்.
"இத நீங்க என்கிட்ட நேரடியாவே கேட்டு இருக்கலாமேமா" என்று தன் தாயை நேராகப் பார்த்துக் கூறிய தேவராஜ்.
"நான் உங்ககிட்ட முன்னமே பேசிட்டேன். பொண்ண பெத்தவங்க வந்து நேர்ல பேசட்டும். நான் அவங்களுக்கு பதில் சொல்லிக்கிறேன்" என்றதோடு முடித்துக் கொண்டார்.
அதன்படி மறுநாளே உமாவை அழைத்துக் கொண்டு வந்து தேவராஜன் முன்னாள் நிறுத்திவிட்டார் காமாட்சி.
உமாவை எதிர் நோக்கிய தேவராஜ் எதிர்பார்த்ததுதானே என்பது போல் பெருமூச்சை வெளியேற்றியவர்.
"என்னம்மா கல்யாணத்த பத்தி பேச வந்தியோ?".
"ஆமாண்ணா".
"இந்திராவுக்கு இன்னும் படிப்பு முடியல. அதனால இப்போதைக்கு கல்யாணம் செய்ய முடியாது. படிப்பு முடியட்டும் கல்யாணத்த வச்சுப்போம். நீங்க ரொம்ப ஆசைப்படுறதால பேசுன படி நிச்சயம் மட்டும் வேணும்னா இப்போ செஞ்சுக்கலாம்".
"அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல தேவா. நம்ம வீட்டுக்கு மருமகளா வரப்போறவ தான.. இனி படிச்சு என்னத்த கிழிக்க போறா. கல்யாணம் பண்ணி வச்சிடுவோம், படிப்ப பொறவு பாத்துப்போம்" என்று அவசரப்படுத்தினார் காமாட்சி.
"என்னமா பேசுறீங்க நீங்க, படிக்கிற பிள்ளையோட படிப்ப நிறுத்திட்டு கல்யாணம் பண்ணி வைக்க சொல்றீங்களா. அப்படி இப்போ என்ன அவசியம் வந்துச்சு. பொண்ணு மாப்பிள்ளை இவங்க தான்னு ஆன பிறகு கொஞ்சம் முன்ன பின்ன கல்யாணத்த தள்ளிப் போட்டா தான் என்ன.. அதான் நிச்சயம் பண்ணிக்கலாம்னு சொல்றேன்ல" என்று முடிவாக கூறிவிட்டார்.
இதற்கு மேல் அவரிடம் பேச முடியாது என்று எண்ணிய காமாட்சியும் நிச்சயமாவது முடிந்தால் போதும் என்ற எண்ணத்தோடு ஒப்புக்கொண்டார்.
"சரி, நீ சொல்றதுக்கு நாங்க சம்மதிக்கிறோம். ஆனா, அவளோட பேத்தி கல்யாணத்துக்கு முன்னாடி எம்பேத்திக்கு நிச்சயம் முடிஞ்சிருக்கணும். உடனே நல்ல நாள் எப்போ இருக்குன்னு பாருங்க" என்றவர் அதோடு விடாமல் தேதியையும் குறித்துவிட்டே அவர்களை விட்டார்.
இவர்களின் நல்ல நேரமோ கெட்ட நேரமோ நல்ல நாள் இல்லாமல் போக. செந்நிலாவின் திருமணத்திற்கு முந்தைய நாள் நல்ல நாளாக அமையவும். அன்று நிச்சயத்தை வைத்துக் கொள்ளலாம் என்று தேதியைக் குறித்துவிட்டனர்.
எப்படியோ செங்கேணி பேத்தியின் திருமணத்திற்கு முதல் நாள் தன் பேத்தியின் திருமணம் நிச்சயிக்கப்படுவதே காமாட்சி பாட்டிக்கு எதையோ பெரிதாக சாதித்துவிட்ட உணர்வை கொடுத்தது.
****
இதோ அதோ என நாட்கள் றெக்கை கட்டிக்கொண்டு பறந்து விட்டது. திருமணத்திற்கு இன்னும் 20 நாட்கள் தான் இருக்கின்றன.
"இந்தாரு கண்ணு, உன் அம்மாவுடைய நகை எல்லாம் பாலிஸ் போட்டு வந்திருக்கு. உனக்கு இதுவே போதுமா இல்ல, இத மாத்திட்டு புதுசா வாங்கிக்கலாமா" என்றவாறு செங்கேணி நகைப் பெட்டியை அவளின் முன்பு காட்டவும்.
அதை வாங்கித் தொட்டுப் பார்த்தவளின் கண்கள் லேசாக கலங்கிவிட்டது. இந்த நகைகளில் இருப்பது வெறும் தங்கம் மட்டும் கிடையாது. அவள் அன்னையின் நினைவுகள்.
அவர் வாழ்ந்த வாழ்க்கையின் சுவடுகளும் அல்லவா இந்த நகையோடு கலந்திருக்கிறது. அதை மாற்ற எப்படி அவளுக்கு மனம் வரும்.
"இல்ல பாட்டி, இப்படியே இருக்கட்டும்" என்னும்பொழுதே அவளின் குரல் பிசிறு தட்டி கம்மி ஒலித்தது.
அவளின் தலையைத் தடவிக் கொடுத்த பாட்டி, "உன் அம்மா இருந்திருந்தா இந்நேரத்துக்கு அம்புட்டு சந்தோஷப்பட்டிருப்பா. மகராசி இதையெல்லாம் பார்க்க அவளுக்கு கொடுத்து வைக்கல. வெரசா போய் சேர்ந்துட்டா" என்றார் ஏக்கம் கலந்த பெருமூச்சோடு.
"சரி, அதெல்லாம் விடுகண்ணு. கண்ணாலத்துக்கு மொத பொங்க வச்சுட்டு வந்துடலாம்னு நினைக்கேன். நாளக்கி போய் வச்சுட்டு வந்துடுவோமா. மொத மொதல்ல ஒரு நல்ல காரியம் செய்யப் போறோம், குலதெய்வத்துக்கு பொங்க வச்சுட்டு ஆரம்பிச்சா மனசுக்கும் நிறைவா இருக்கும். நீ என்ன கண்ணு சொல்ற?".
"உன் விருப்பம் பாட்டி. நாளைக்கே போய் வச்சுட்டு வந்துடுவோம்" என்று இன்முகமாக கூறியவளின் கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்தார்.
அதன்படி இவர்கள் மறுநாள் பொங்கல் வைப்பதற்காக கிளம்பி குலதெய்வ கோவிலை அடைந்திருந்தனர்.
செங்கேணிக்கு தேவராஜன் குடும்பத்தோடு ஒட்டி உறவாடவெல்லம் எந்த ஒரு எண்ணமும் கிடையாது. அவரைப் பொருத்தமட்டும் அவரின் பேத்தியின் வாழ்க்கை நல்ல படியாக அமைய வேண்டும். எந்த பிரச்சனையும் ஏற்பட்டு விடக்கூடாது. அதனாலேயே அவர்களின் துணையை நாடினார். மற்றபடி, எதற்கும் அவர்களிடம் சென்று நிற்பது கிடையாது.
கோவிலை சுற்றிலும் மரம் செடிகள் கூடிய காலி இடங்கள் தான். அங்கே தான் குடும்பத்துடன் அவரவர் தங்கள் பொங்கலை வைத்து அதை சாமிக்கு இட்டு வழிபடுவார்கள்.
அதேபோல் இவர்களும் கோவிலுக்கு பின்புறம் ஒரு இடத்தில் பொங்கல் வைப்பதற்கு ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்க.
அப்பொழுதுதான் அவர்களைக் கண்டார் செங்கேணி.
வேறு யாரும் அல்ல, காமாட்சி பாட்டியின் குடும்பம் தான். மொத்தமாக இங்கே வந்து முற்றுகையிட்டிருந்தனர்.
ஆம், அவர்களும் நிச்சயத்திற்கு முன்பு குலதெய்வ கோவிலுக்கு பொங்கல் வைத்து வழிபட வேண்டி வந்திருந்தனர்.
எதிர்பாராத விதமாக இருவரும் ஒரே நாளில் கோவிலுக்கு வந்திருக்கவும், செங்கேணி சற்று படபடப்பு கலந்த குரலில், "அச்சோ! என்ன கண்ணு இது, பெரியவங்க குடும்பமும் வந்திருக்கு போலயே".
அவர்களைத் திரும்பிப் பார்த்த செந்நிலா, "அதனால என்ன பாட்டி? நாம பாட்டுக்கு பொங்கல் வச்சுட்டு போக போறோம். நீ ஏன் இவ்வளவு பதட்டம் ஆகுற?".