மழை - 17
"நல்லா கேளுங்கக்கா, நான் உங்ககிட்ட அத்த என்ன சொன்னாலும் அமைதியா போகாதீங்க வாயைத் திறந்து பேசுங்கன்னு சொல்லும்போதெல்லாம் என் பேச்ச நீங்க கேட்டீங்களா.. வயசுல பெரியவங்க, வயசானவங்கன்னு அவங்க என்ன செஞ்சாலும் அமைதியா போனீங்க. அது இப்போ எங்க வந்து நிக்குதுன்னு பாருங்க. நீங்க கொடுத்த மரியாதைக்கு உங்க மகனுடைய வாழ்க்கையவே அவங்க காவு வாங்க பாத்துட்டாங்க. எப்படி.. எப்படி.. இவங்க பேத்தி தெரியாம தப்பு பண்ணிட்டாங்களாம், யாரும் பிள்ளைய கொடுத்து ஏமாத்திட்டாங்களாம், அதுக்கு நம்ம செல்வா வாழ்க்கை கொடுக்கணுமாமா.. இதுக்காக தான் நாம புள்ளைய பெத்து வளர்த்திருக்கோம் பாருங்க" என்று கிடைத்த சந்தர்ப்பத்தை உபயோகித்து தன் மாமியாரை வஞ்சம் தீர்த்துவிட்டார் கீதா.
"கீதா நீ சும்மா இரு, எதுவா இருந்தாலும் அண்ணாவும், அண்ணியும் பேசிக்கட்டும்" என்று தன் வார்த்தையால் அவரை அடக்கினார் காமராஜ்.
பொற்செல்வனுக்கு இந்த திருமணத்தில் பெரிதாக எந்த ஒரு ஈடுபாடும் இல்லை என்றாலும், ஏதோ சபை நடுவே கூப்பிட்டு வைத்து அசிங்கப்பட்டது போல் ஆகிவிட்டது.
எதுவும் பேசத் தோன்றாமல் தன் அப்பத்தாவின் வார்த்தைகளில் மனம் வெறுத்துப் போய் நின்றிருந்தான்.
வேகமாகச் சென்று பொற்செல்வனின் கரத்தை பிடித்துக் கொண்ட காமாட்சி, "செல்வா நீயாவது சொல்லுயா, இந்திரா தப்பு பண்ணிட்டாதேன். நான் இல்லேங்கல. ஆனா, அவ வேணும்னுட்டு செய்யலயா தெரியாம செஞ்சிட்டா. இந்த ஒருக்கா அவள மன்னிக்க கூடாதாய்யா.. திரும்ப இது மாதிரி நடக்காம நான் பாத்துக்கிடுதேன். சொந்தம் விட்டுப் போயிடக்கூடாதுபா".
"உங்களுக்கு உங்க பேத்தியுடைய வாழ்க்கை மட்டும்தான் முக்கியமா அப்பத்தா. நானும் உங்க பேரன் தான.. இதே இந்திரா ஒழுக்கமா இருந்து நான் வேற ஒரு பொண்ணோட குடும்பம் நடத்தி குழந்தையோட வந்து நின்னிருந்தா, இந்திராவ எனக்கு கட்டிக் கொடுத்திருப்பீங்களா?".
அவன் கோபமாக கத்தவில்லை, சண்டையிடவில்லை. எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் செய்யாமல் வார்த்தையை மட்டும் நன்கு வலிக்கும்படி கேட்டு விட்டான்.
பாட்டிக்கு பேச முடியாத நிலை. எத்தனை ஆசைப்பட்டார் தன் பேரனுக்கும், பேத்திக்கும் மணம் முடித்து வைக்க வேண்டும் என்று. அவள் இப்படி ஒரு காரியத்தை செய்வாள் என்று இவர் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. இப்பொழுது கையறு நிலையில் நின்றிருக்கிறார்.
"ரகு இந்திராவை கூட்டிட்டு வர சொல்லு".
அடுத்த நொடி இந்திராவும் மொத்த குடும்பத்தினர் முன்னிலையிலும் நின்றிருக்க.
அவளின் முதுகில் இரண்டு அடிப்போட்ட உமா, "பாருடி, உன்னால நம்ம குடும்ப மானமே போச்சு. எப்படி கௌரவமா வாழ்ந்த குடும்பம் எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கன்னு பாரு" என்று திட்டிக்கொண்டே அடித்தார்.
யாருமே அவரைத் தடுக்க கூட தோன்றாமல் அப்படியே நின்றிருந்தனர். அனைவருக்குள்ளும் அத்தனை ஆதங்கம், கோபம், வெறுப்பு என பல்வேறு உணர்வுகள்.
"அத்த ஒரு நிமிஷம், இதையெல்லாம் நீங்க வீட்டுக்கு போய் பார்த்துக்கோங்க. நான் இந்திராகிட்ட கொஞ்சம் பேசணும்" என்று தெளிவாக பேசினான் பொற்செல்வன்.
அனைவரும் அமைதியாக இருக்கவும்.
"இந்திரா இதுக்கு யார் காரணம்?".
"நான் ஒருத்தர காதலிச்சேன் மாமா. ஆனா, இப்போ இல்ல.. நமக்கு கல்யாணத்துக்கு பேசுறதுக்கு முன்னாடி.. அவரோட ஏற்பட்ட பழக்கத்துல தான்.." என்று இழுத்தவள் சற்று இடைவெளி விட்டு, "ஆனா, எப்போ நமக்கு கல்யாணம்னு பேசுனாங்களோ, அப்பவே நான் அவரோட பேசுறத நிறுத்திட்டேன். உங்கள மட்டும் தான் மாமா நான் என் மனசுல நினைச்சிட்டு இருக்கேன். இப்படியானது எனக்கே தெரியல. ரெண்டு, மூணு மாசமா கவனிக்காம விட்டிருக்கேன்" என்று அவசரமாய் துவங்கியவள் மெதுவாய் முடித்தாள்.
"ஏம்மா இப்படி சொல்றியே உனக்கு கொஞ்சம் கூட அசிங்கமா இல்ல. வயித்துல இன்னொருத்தனுடைய பிள்ளைய வச்சுக்கிட்டு, செல்வாவ மனசுல நினைச்சுகிட்டு இருக்கேன்னு சொல்ற" என்று பொறுக்க மாட்டாமல் கேட்டுவிட்டார் கீதா.
"ஐயோ அத்த! ஏதோ வயசு கோளாறுல காதலிச்சது உண்மைதான். ஆனா, செல்வா மாமாக்கும், எனக்கும் கல்யாணம் பண்ணுவாங்கன்னு எனக்கு அப்பவே தெரியாது இல்ல. முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் அவரைக் காதலிக்காம இருந்திருப்பேன். அவரையும் செல்வா மாமாவையும் கம்பேர் பண்ணிப் பார்த்தா, எல்லா விதத்துலயுமே செல்வா மாமா தான் பெஸ்டா இருக்காங்க. அதான் நான் என் மனச அப்பவே மாத்திக்கிட்டேன் அத்த. செல்வா மாமாவையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்" என்று தான் பேசுவது தவறு என்பதையே உணராமல் நல்லவள் போல் பேசிக்கொண்டிருந்தாள் இந்திரா.
அவள் பேசியதைக் கேட்ட அனைவருக்கும் அருவருப்பில் முகம் சுருங்கியது.
"அடச்சீ வாய மூடு! ரெண்டு பேரையும் கம்பேர் பண்ணி பார்த்தாங்கலாம், அதுல செல்வா பெஸ்ட்ன்னு தெரிஞ்சதும் செல்வாவ கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லிட்டாங்களாம். அப்போ, நாளைக்கு உனக்கும், செல்வாக்கும் கல்யாணமான பிறகு வேற எவனாவது பெஸ்ட்டா வந்தா செல்வாவ விட்டுட்டு அவன் கூட போயிடுவியா?".
"ஐயோ அத்த! என்ன நீங்க இப்படி எல்லாம் பேசுறீங்க" என்றவளுக்கு கொஞ்சமும் கூச்சமோ, குற்ற உணர்வோ இருப்பது போல் தெரியவில்லை.
இதுதான் அவளுக்கு முதல் தடவையா என்று அனைவரும் யோசிக்கும் அளவிற்கு இருந்தது அவளின் செயலும், பேச்சும்.
ரகு இங்கு நடப்பவற்றை அதிர்ச்சியாகப் பார்த்தவன், அப்படியே திரும்பி ரதியைப் பார்க்கவும்.
எதேர்ச்சையாக அவனின் விழிகளை சந்தித்த ரதியோ சட்டென்று தன் தலையைத் தாழ்த்திக் கொண்டாள். அவளுக்கு அங்கு நிற்கவே ஒரு மாதிரியாகிப் போனது.
தன் அக்காவின் நடத்தையை வைத்து தானே அனைவரும் தன்னையும் எடை போடுவார்கள் என்று நினைத்துவிட்டாள் போலும்.
ஏனோ, ரகுவின் பார்வை அவளை அங்கே நிற்க விடாமல் துரத்தியது. அவன் தன்னை சந்தேகித்துப் பார்க்கிறான் என்று நினைத்துக் கொண்டவளால், மற்றவர்களின் பார்வையை எதிர்கொள்ள திறனாய் இன்றி அங்கிருந்து விறுவிறுவென வெளியேறிவிட்டாள்.
தன் அக்காவின் வார்த்தைகளை அவளால் இன்னமுமே ஜீரணிக்க முடியவில்லை. எப்படி அவளால் இப்படியெல்லாம் பேச முடிகிறது. அதுவும் வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு என்று எண்ணும் பொழுதே அருவருப்பாய் இருந்தது.
ஏனென்றே தெரியாமல் கண்களிலிருந்து கண்ணீர் பொல பொலவென கீழிறங்கியது.
அவளின் பேச்சு உமாவிற்கும், காமாட்சி பாட்டிக்கும் கூட உவக்கவில்லை. கடுப்பாக இருந்தது. இதற்கு மேல் அவளைப் பேச விட்டால் இன்னும் என்னவெல்லாம் உளறி வைப்பாளோ என்று எண்ணிய காமாட்சி.
"வாய மூடுடி கழுத, பண்ணுத தப்பெல்லாம் பண்ணிட்டு இப்போ வந்து இப்படி பேசுதியா. பாவம் செல்வா, உன்னய கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஆசையா இருந்தியான். இப்ப அவனுக்கு என்னமுன்னு பதில் சொல்லுதது? உனக்கும், அவனுக்கும் கல்யாணம் கட்டி வைக்கலாம்னு வீட்ல பேசுனதே நான்தேன். இப்படி சபைக்கு முன்ன வச்சு என் கழுத்தை அறுத்துட்டியேடி" என்று அவளைத் திட்டியவர்.
தேவராஜைப் பார்த்து, "இப்ப என்னத்த செய்ய தேவா? செல்வா மனசுல வேற ஆசைய வளர்த்துட்டோமே.. அதுக்கான்டியாவது செத்த யோசிப்பா. கிறுக்குப் புடிச்ச கழுத என்னத்தமோ தப்பு பண்ணிட்டா, இந்த ஒரு தடவ மட்டும்.." என்று அவர் முடிப்பதற்குள்ளாக, "போதும்மா! இனி, நீங்க ஒரு வார்த்தை கூட பேசாதீங்க. மொத்தமா வெறுத்துப் போச்சு. தங்கச்சி குடும்பமாச்சேன்னு தான் நானும் பேசாம அமைதியா இருக்கேன். இதே வேற யாராவதா இருந்தா இந்நேரம் இங்க நடக்கிற சோலியே வேற. சின்னவங்க தப்பு பண்ணா பெரியவங்க தட்டி கேக்குற இடத்துல இருக்கணும். இங்க பெரியவங்களே தப்பா இருக்கும்போது சின்னவங்கள நாம என்னத்த சொல்றது" என்றதும்.
இந்திராவின் தந்தை, காமாட்சி, உமா என அனைவருக்கும் சுட்டுவிட்டது அவரின் வார்த்தை.
எப்படியும் தன் மாமியார் பேசி இவ்விஷயத்தை சரிகட்டி விடுவார் என்ற நம்பிக்கையோடு நின்றார் சேகர்.
கோபத்தோடு உஷ்ண மூச்சை வெளியேற்றிய தேவராஜிற்கு இப்பொழுது என்ன முடிவு செய்வது என்றே தெரியவில்லை.
வள்ளிக்கோ வார்த்தைகளின்றி தன் மகனின் வாழ்க்கையை இப்படி செய்கிறார்களே என்ற ஆதங்கத்தில் அழுகையில் கரைந்து கொண்டு நின்றார்.
தன் அண்ணனின் அருகில் சென்ற காமராஜ், "அண்ணா இப்போ என்ன பண்றது? வெளியில சொந்தக்காரங்க எல்லாம் காத்துகிட்டு இருக்காங்க".
"எனக்கு தெரியல ராஜா" என்ற தேவராஜின் குரல் முதல்முறை கலங்கி ஒலித்தது.
இதுவரை அவரை இப்படி எல்லாம் பார்த்திடாத பொற்செல்வனுக்கு அவரின் மனநிலை நன்கு விளங்கியது.
"அப்பா, இந்திரா காதலிக்கிற பையனையே அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுங்க".
அவனின் குரலில் வருத்தமோ, அதங்கமோ எந்த ஒரு உணர்வின் பிரதிபலிப்பும் இன்றி வெறுமையாய் இருந்தது.
"ஐயோ மாமா! நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக அவனோட பிரேக்கப் பண்ணிட்டேன்" என்றாள் அவசர குரலில் இந்திரா.
அனைவருக்கும் அவளின் வார்த்தை 'சீ' என்று ஆகிவிட்டது.
அவன் அவளை அருவருப்பாக ஒரு பார்வை பார்த்தானே தவிர, எதுவுமே பேசவில்லை. வயிற்றில் இன்னொருவனின் குழந்தையை சுமந்து கொண்டு மணப்பெண்ணாக ஆசைப்பட்டு பேசுபவளைப் பார்க்க அனைவருக்கும் அருவருப்பாக தானே இருக்கும்.
பாட்டியாலும் எதுவும் செய்ய முடியாத நிலை. வேறு ஏதேனும் பிரச்சனை என்றால் இந்நேரம் ஒரு கை பார்த்திருப்பார். ஆனால், இங்கோ சூழ்நிலை அவரின் கையை மீறிச் சென்றுவிட்டது.
எத்தனை ஆங்காரமாக பேசுபவரையே வாய் திறக்க முடியாதவாறு செய்துவிட்டாள் இந்திரா. யாரும் அவளை ஒரு ஆளாக கூட கருதவில்லை.
காமாட்சியைப் பார்த்த தேவராஜ், "செல்வா சொல்ற மாதிரி உம்பேத்திக்கு அவ காதலிக்கிறவன கட்டி வைக்கிறியோ இல்ல, வேற யாரயும் கட்டி வைக்கிறியோ அது உன்னோட விருப்பம். ஆனா, திரும்ப கல்யாணம் கருமாதின்னு என்னத்தயாவது பேசிக்கிட்டு என் முன்னாடி வந்துடாதீங்க. அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். கடவுள் ஏன் மனுஷங்களுக்கு ஆறறிவு வச்சு படைக்கிறார்னு தெரியுமா.. யோசிச்சு செயல்படனும்னுட்டு தான். இப்படி ஒழுக்கம் கெட்டு போய் வேறொருத்தவனுடைய குழந்தைய வயித்துல சுமந்துகிட்டு என் பையனுக்கு கழுத்த நீட்ட வந்திருக்கா உம்பேத்தி, உம்பேத்திக்கும் உங்களுக்கும் வேணும்னா இது சாதாரணமா கடந்து போற விஷயமா இருக்கலாம். ஆனா, எங்களுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது. கிளம்பலாம் வள்ளி" என்றவர்.
வெளியே வந்து நிச்சயம் இன்று நடக்காது நின்றுவிட்டது என்ற அறிவிப்பையும் அனைவரின் முன்னிலையிலும் கொடுத்துவிட்டு விறுவிறுவென வெளியேறிவிட்டார்.
காரணம் என்னவென்று தெரியாமல் கூட்டத்தில் அனைவரும் தங்களுக்குள் சலசலத்துக் கொண்டே வெளியேறி விட்டனர்.