மழை - 2
தன் நண்பிகளின் வாயிலாக கேட்டறிந்த விஷயம் தான். ஆனாலும், இப்படி நடுவீதியில் நிற்கவே அத்தனை சங்கடமாக இருந்தது.
யாரிடமேனும் உதவி கேட்கலாம் என்று பார்த்தால் அவளின் கெட்ட நேரத்திற்கு ஒருவரும் அவ்வழியாக கடந்து செல்லவில்லை.
அப்படியும் கடந்து சென்ற ஒன்றிரெண்டு பேர்களும் ஆண்கள் தான். அவர்களிடம் உதவி கேட்கவோ, தன்னிலை விளக்கம் அளிக்கவோ அவளுக்கு விருப்பமில்லை.
தைரியமான பெண் தான். ஆனாலும், இந்த சூழலை கடந்து வர அவளுக்கு சற்று பதட்டமாக தான் இருந்தது. தன் சீருடையை இறுக்கமாக பற்றிக்கொண்டு நின்றிருந்தாள். ஆற்றாமையில் கண்கள் வேறு கலங்கிக் கொண்டே வந்தது.
மற்றவர்களை போல் அவளை கடந்து செல்ல முற்பட்ட பொற்செல்வனுக்கு ஏதோ ஒன்று சரி இல்லை என்று அவளின் தெளிவில்லாத முகம் எடுத்துரைத்தது.
முகம் சற்று வெளிறிப் போய் கண்கள் கலங்க பதட்டத்தோடு பரிதவிப்பாக நின்றிருந்தவளை பார்த்தவனுக்கு ஏனோ அவளைக் கடந்து செல்ல மனம் வரவில்லை.
அவளுக்கு அருகில் சென்று தன் வண்டியை நிறுத்தியவன், "என்னாச்சு?".
அவனுக்கு ஒன்னும் இல்லை என்பது போல் தலையசைத்தவளுக்கு, எப்படி அவனிடம் இதைப் பற்றி கூறுவது என்ற தயக்கம் தான் பெரிதாய் இருந்தது.
உறவினர்கள் தான். ஆனாலுமே, பெரிதாக பேசி பழகியது கிடையாது. அவளுக்கு விவரம் தெரிந்த நாள் முதலே இவர்களின் குடும்பத்தை திட்டிக்கொண்டே இருப்பவர்களிடம் இப்பொழுது தன் நிலையை எப்படி கூறுவது என்று கழிவிரக்கம் வேறு தோன்ற.
சீருடையை பற்றி இருந்த கைகளில் மேலும் இறுக்கத்தை கூட்டி நின்றிருந்தாள்.
"அண்ணா அப்பத்தாவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான். இவங்க கிட்ட எல்லாம் பேசக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. நீ ஏன் பேசுற, கிளம்பு மணி ஆகுது" என்று அவனின் காதில் கிசுகிசுத்தாள் யமுனா.
அவனுமே இதுநாள் வரை இவர்களின் குடும்பத்து ஆட்களிடமோ, இவளிடமோ பேச முற்பட்டது கிடையாது. இப்போது எதுவோ சரி இல்லை என்று தோன்றவே அவளிடம் பேச நின்றிருக்கிறான்.
தன் தங்கையின் வார்த்தைகள் காதில் விழுந்தாலும் மூளையை எட்டவில்லை. அவனின் கண்கள் செந்நிலாவையே ஆராய்ந்துக் கொண்டிருந்தது.
"பள்ளிக்கூடத்துக்கு போகாம இங்க நின்னுட்டு என்ன பண்ற, ஏதாவது பிரச்சனையா?".
அவனுக்கு 'இல்லை' என்று மறுப்பாக தலையசைத்தவளின் பார்வை அனிச்சையாக பின்புறம் செல்ல.
பொற்செல்வனின் மூளையில் பொறி தட்டியது.
அவனும் ஒன்றும் சிறுவன் இல்லையே.. கல்லூரி படித்துக் கொண்டிருக்கிறான். சட்டென்று ஏதோ சிந்தனை எழ.
தன் தங்கையை திரும்பி பார்த்தவன், "ஏதாவது துப்பட்டா வச்சிருக்கியா?".
"என்னணா சொல்ற, நான் எதுக்காக ஸ்கூலுக்கு துப்பட்டா கொண்டுப் போக போறேன்?" என்ற யமுனாவிற்கு இவன் எதற்காக இப்படி கேட்கிறான் என்பது தான் விளங்கவில்லை.
சட்டென்று தன் பையை திறந்தவன் அதற்குள் இருந்த தனது ஸ்போர்ட்ஸ் டி-ஷர்ட்டை வெளியே எடுத்து செந்நிலாவை நோக்கி நீட்டி இருந்தான்.
அவளோ தயக்கமாக அவனை பார்க்கவும்.
"இத யூஸ் பண்ணிக்கோ, அப்புறமா வாங்கிக்கிறேன்".
அவளுக்கும் மறுக்க முடியாத நிலை. 'சரி' என்று தலையசைத்து விட்டு அவன் நீட்டிய டி-ஷர்ட்டை வாங்கியவள் அதனை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.
"அண்ணா என்ன பண்ற நீ?".
"ஒன்னும் இல்ல" என்று இவன் கூறி முடிப்பதற்குள்ளாகவே அவன் கொடுத்த டி-ஷர்ட்டை அவசரமாக அணிந்து கொண்டாள் செந்நிலா.
இப்பொழுது தான் அவளுக்கு சற்று ஆசுவாசமாக இருந்தது. அவனின் டி-ஷர்ட் இவளின் முட்டிவரை நீண்டிருந்தது.
"யமுனா நீ இந்த பொண்ணு கூட அவ வீடு வரைக்கும் போயிட்டு வரியா?" என்றதும்.
பதறியவள், "ஐயோ அண்ணா! என்ன விளையாடுறியா? அப்பத்தாவுக்கு தெரிஞ்சது என்னை கொன்னே போட்டுடும். நான் மாட்டேன்" என்றாள் சற்றும் யோசிக்காமல்.
"இல்ல, நானே போயிப்பேன்" என்றவள்.
அவனின் பதிலையும் எதிர்பாராமல் விறுவிறுவென வேகமாக நடையை எட்டிப் போட்டு தன் வீட்டை அடைந்திருந்தாள்.
அவள் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டவன், "இங்க நடந்த விஷயத்த எல்லாம் வீட்ல சொல்லக்கூடாது சரியா?" என்றான் தன் தங்கையைப் பார்த்து.
அவளுக்கு இவர்கள் இருவரின் செயலுக்கான காரணம் புரியவில்லை என்றாலும், 'சரி' என்று தலையசைத்தாள்.
இந்த விஷயத்தைப் பற்றி வெளியே கூறினால் தன் அண்ணனுக்கு மட்டும் திட்டிவிழாதே, தனக்கும் சேர்த்து அல்லவா விழும்.
அதுவும் அவளின் பாட்டியைப் பற்றி நினைக்கும் பொழுதே பயம் வேறு பிடித்துக் கொண்டது. அதனாலேயே இந்த விஷயத்தை வெளியில் கூறாமல் மறைத்து விட்டாள்.
அவள் வெளிப்படையாக எதையும் கூறவில்லை என்றாலும், பொற்செல்வனுக்கு அவளின் நிலை நன்கு புரிந்தது.
ஆனால், யமுனாவிற்கு தான் விளங்கவில்லை. அவள் இன்னும் அந்த பருவ வயதை எட்டவில்லை அல்லவா.. ஒருவேளை, வெளிப்படையாக செந்நிலா கூறி இருந்தால் அவளுக்கும் விளங்கி இருக்குமோ என்னவோ..
செந்நிலாவை விட ஒரு வயது சிறியவள் தான் யமுனா.
பள்ளிக்கு சென்ற செந்நிலா வீடு திரும்புவதை கண்ட பக்கத்து வீட்டு பாட்டி, "ஆத்தே! என்னடி இது, பள்ளிக்கூடம் போனவ உடனே திரும்பிட்ட. ஏதாவது பிரச்சனையா? உன் பாட்டி இப்போதான் வேலைக்கு கிளம்பி போனா.. நீ என்னடி ஆம்பள பையன் சட்டைய போட்டுக்கிட்டு வந்திருக்க?" என்று இவளை பதில் பேசவிடாமல் பதட்டமாக தன் கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றார் கனகவள்ளி.
இவர்களின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பாட்டி. இவளின் பாட்டியும், அவரும் நெருங்கிய தோழிகள்.
அவருக்கு தன்னைப் பற்றி அனைத்தையும் விளக்கி கூறியவள். தான் அணிந்திருக்கும் சட்டை யாருடையது என்பதை மட்டும் கூறாமல் மறைத்து விட்டாள்.
அவள் கூறியதை கேட்டவருக்கோ சட்டையை பற்றி எல்லாம் எங்கே நினைவிருந்தது.
"அம்மாடி! நீ சொல்றதெல்லாம் உண்மையா.. ரொம்ப சந்தோஷம். உன் பாட்டி வேலைக்கு வேற போயிட்டா. நான் போய் அவள கூட்டிட்டு வந்துடறேன். நீ உள்ள போய் இரு.. அந்த கிழவி கிட்ட உன்ன ஒத்தையில விட்டுட்டு உன் அம்மாவும் அப்பாவும் போயிட்டாங்க. உன்ன கரை சேர்க்க அவ ஒத்தையா கஷ்டப்பட்டுகிட்டு இருக்கா. இப்படி பெரிய மனுஷியாகி இருக்கனு தெரிஞ்சா, அவ அம்புட்டு சந்தோஷப்படுவா" என்று கண்கள் கலங்க கூறியவர்.
நொடியும் நிற்காது செங்கேணியை தேடிச் சென்று விட்டார்.
பாட்டி வருவதற்குள்ளாக வேறு உடைக்கு மாறியவள். பொற்செல்வனின் உடையையும் யாரின் கண்ணிலும் படாதவாறு பத்திரப்படுத்தி வைத்தாள்.
கனகம் கூறிய செய்தியை கேட்டு கண்களில் கண்ணீரோடு வீட்டிற்குள் வேக வேகமாக நுழைந்த செங்கேணி, "கண்ணு!" என்ற தழுதழுத்த குரலோடு அவளை அணைத்துக் கொண்டார்.
"ரொம்ப சந்தோஷமா இருக்கு கண்ணு. இதுக்கு தான் நான் உன்ன காலையிலேயே பள்ளிக்கூடம் போக வேண்டாம்னு சொன்னேன். சரி, ஏதாவது வயித்துக்கு போட்டியா.. இப்படி உட்காரு" என்றவருக்கு விஷயத்தை கேள்விப்பட்டதிலிருந்து கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.
வேகமாக சமையலறையைக்குள் நுழைந்தவர், கையில் பால் டம்ளருடன் வெளியே வந்தார்.
"கண்ணு இத குடி" என்றவர் நேராக செந்நிலாவின் தாய் தந்தையின் புகைப்படத்திற்கு முன்பு சென்று நின்று, "இப்படி இந்த கிழவிய நம்பி இந்த புள்ளய விட்டுட்டு போயிட்டீங்களே இரண்டு பேரும்.. உன் பொண்ணு பெரிய மனுஷி ஆகியிருக்காத்தா, இத பாக்க நீ இல்லாம போயிட்டியே.. இந்த நேரத்துல அம்மாவ அந்த புள்ள எவ்வளவு தேடும். கடவுள் உங்க ரெண்டு பேரயும் இவ்வளவு சீக்கிரம் அந்த புள்ளகிட்ட இருந்து பிரிச்சு எடுத்திருந்திருக்க கூடாது" என்றவாறு தன் முந்தானையால் கண்களை துடைத்துக் கொண்டார்.
"பாட்டி, இப்ப எதுக்கு அழற. அம்மா இல்லனா என்ன, அதான் நீ இருக்கியே.. அம்மாவை விட நீ என்னை நல்லா பாத்துப்பேன்னு தான் சாமி உன்ன எனக்கு கொடுத்துட்டு அம்மாவ கூட்டிட்டு போயிட்டாரு. சும்மா கவலைப்பட்டுக்கிட்டு இருக்காத" என்று இந்த சூழலிலும் அத்தனை தைரியமாக பேசினாள் செந்நிலா.
"நான் அழல கண்ணு" என்றவாறு தன் கண்களை துடைத்துக் கொண்டவர்.
"கண்ணு, வர வழியில எந்த ஆம்பளைங்க முகத்தையும் பார்த்துடலயே".
"ஏன் பாட்டி?" என்றவளின் மனக்கண் முன்பு பொற்செல்வன் தான் தோன்றி மறைந்தான்.
"பெரிய மனுஷி ஆனதும் தலைக்கு தண்ணி ஊத்தி முறை பையன் கையால கட்டுன ஓல குடிசையில உக்காத்தி வச்ச பின்னாடி முதல்ல கட்டிக்கிற முறையிருக்க மாமன தான் பார்க்கணும்னு சொல்லுவாங்க. அதான் கேட்கேன், நீ யாரையும் பாத்துடலயே".
"இல்ல.. இல்ல பாட்டி".
"அப்போ சரி, கனகம் பிள்ளைக்கு தலைக்கு தண்ணி ஊத்தணும். அக்கம்பக்கத்துல இருக்கவங்கள எல்லாம் கூப்பிடலாம்" என்றவாறு அவர் வாசலுக்கு விரையவும்.
அவரின் கால்கள் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டது.
"என்னத்த என் மருமக பெரிய மனுஷியாகிட்டாளாமே.. ஒரு வார்த்த கூட எனக்கு நீங்க சொல்லி அனுப்பல பாருங்க" என்று நொடிந்துக் கொண்டு நின்றிருந்தார் வெண்ணிலாவின் அத்தை லலிதா.
அவளின் தந்தையின் சொந்த தங்கை தான் இந்த லலிதா.
"நீங்க சொல்லி அனுப்பலைன்னாலும், நாங்க அதை அப்படியே விட்டுட முடியுமா.. எங்களுக்கு தானே உரிமை இருக்கு. செய்ய வேண்டிய முறையை எல்லாம் முறைப்படி எம்மகன் தானே செய்யணும். அவன் தானே என் அண்ணன் மகளுக்கு முறைப் பையன்" என்று தன் முப்பத்திரெண்டு பற்களையும் ஈ என்று இளித்துக் கொண்டு இனிக்க இனிக்க பேசினார்.
அவர் அருகில் நின்றிருந்த அவரின் மகன் அசோக் செங்கேணியை தாண்டி வீட்டிற்குள் தன் பார்வையால் சொந்நிலா எங்கேனும் தென்படுகிறாளா என்று துலாவினான்.
அவனின் பார்வையும், லலிதாவின் வார்த்தையுமே செங்கேணியின் அடிவயிற்றை கலங்கச் செய்தது.
அவருக்குள் இத்தனை நேரம் இருந்த ஆர்வம் மொத்தமாக வடிந்துவிட்ட உணர்வு.
பிறகு, நேற்று தான் சிறையில் இருந்து வெளிவந்திருக்கிறான். அதற்குள் செந்நிலாவிற்கு முறை செய்யப் போகிறேன் என்று வந்து நின்றால், அவருக்கு பதட்டமாகத்தானே செய்யும்.
அசோக்கிடம் இல்லாத கெட்ட பழக்கமே கிடையாது என்று கூறலாம். படிப்பை பாதியிலேயே கைவிட்டவன், ஊதாரி தனமாக ஊர் சுற்றிக்கொண்டு குடி, பெண்கள், சூதாட்டம் என்று தன் இருபதாவது வயதை உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
பாட்டியின் பயத்திற்கு முக்கிய காரணமே, இப்பொழுது முறை செய்யும் மாமனுக்கு தான் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும்பொழுது பெண் கேட்க அதிக உரிமை இருக்கும்.
பெற்றோரின் துணை இன்றி பாட்டியின் துணையில் வாழும் செந்நிலாவிற்கு தன்னால் இன்னும் எத்தனை காலங்கள் பாதுகாப்பு கொடுக்க முடியும் என்ற சந்தேகம் செங்கேணிக்கு எப்பொழுதும் இருந்து கொண்டே தான் இருக்கும்.
ஒருவேளை, அவளின் திருமண வயதில் தான் இல்லாமல் போய்விட்டால், இப்பொழுது முறை செய்ததை மனதில் வைத்துக்கொண்டு அவளின் திருமணத்திற்கு ஏதேனும் பிரச்சனை செய்வார்களோ என்ற பயம் தான் பாட்டிக்கு பெரிதாக இருந்தது.

Last edited: