மழை - 25
"நீங்க எப்ப வந்தீங்க?".
"எதுக்கு மறு வீடு அழைப்பெல்லாம் வேண்டாம்னு சொன்ன நிலா?".
"இந்த கல்யாணம் வேணும்னா எந்த பிரச்சனையும் இல்லாம சுமூகமா நாம எதிர்பார்க்காம நடந்திருக்கலாம். ஆனா, அதேபோல வாழ்க்கை முழுக்க இருக்கும்னு சொல்ல முடியாது. எதுக்கு தேவையில்லாத பிரச்சனை".
"நான் உன் வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்லவே இல்லையே".
"நானும் அப்படி சொல்லலையே" என்றாள் புன்னகையோடு.
"எனக்கு தெரியும். ரெண்டு விஷயம், ஒன்னு, நாங்க யாரும் உங்க வீட்டுக்கு வர மாட்டோம்னு நினைச்சிருக்க. இன்னொன்னு, உன் பாட்டி இங்க வந்து அவமானப்படக்கூடாதுன்னு நினைக்கிற. அவங்க இங்க வந்தா நிச்சயம் என் அப்பத்தா ஏதாவது பேசி அவங்கள கஷ்டப்படுத்துவாங்க. அவங்களுக்கு எந்த ஒரு அவமானமும் ஆகிட கூடாது. அவங்க மரியாதையோட இருக்கணும் அதுக்காக தானே இப்படி எல்லாம் பண்ற".
தன்னை சரியாய் கணித்த தன் கணவனைப் பார்த்து மெச்சாமல் இருக்க முடியவில்லை .
"அதெல்லாம் எதுவும் இல்லையே"
"எனக்கு தெரியும் நிலா உன்ன பத்தி. எங்களோட எந்த ஒரு உறவுமே வேண்டாம்னு நினைச்ச, இப்போ எங்களோட தான் காலம் முழுக்கன்னு ஆகிப்போச்சு. அதனால முடிஞ்சளவு உன் பாட்டி இங்க வந்து அவமானப்படக்கூடாதுன்னு நினைக்கிற அதான".
"உண்மைய சொல்லணும்னா அதுவும் ஒரு காரணம்தான். இப்படி எல்லாம் நடக்கும்னு யாரும் எதிர்பாக்கல, அதுக்காக அவங்க அவமானப்படனும்னு அவசியம் இல்லல்ல. ரெண்டு குடும்பத்துக்குமே எதுக்கு சங்கடம்னு தான் இப்படி சொன்னேன்".
"இங்க பாரு நிலா, இதுல சங்கடப்பட என்ன இருக்கு? எப்ப நமக்கு கல்யாணமாச்சோ, அப்பவே நம்ம ரெண்டு குடும்பமும் ஒன்னுதான். என்னை கேட்டா உன் பாட்டி அங்க தனியா இருந்து கஷ்டப்படணும்னு எந்த அவசியமும் இல்ல. அவங்கள அங்க பாத்துக்க யாரு இருக்கா. அவங்களும் பேசாம நம்மளோட இங்கேயே வந்திருந்திடலாம்".
"என்ன பேசுறீங்க நீங்க?".
"நான் பேசுறதுல என்ன தப்பிருக்கு? வயசான காலத்துல அவங்க ஏன் அங்க தனியா இருந்து கஷ்டப்படணும்".
"அதெல்லாம் சரி வராதுங்க. அவங்க அங்கேயே இருக்கட்டும். நான் அப்பப்போ போய் பார்த்துப்பேன்".
"சரி, இதுக்கு மேல உன்னோட விருப்பம். ஆனா, உனக்கு எப்போ அவங்கள இங்க கூப்பிட்டு வரணும்னு தோணுனாலும் தாராளமா கூட்டிட்டு வந்து இங்க வச்சுக்கலாம். உன்னோட விருப்பம் தான்" என்று முடித்துக் கொண்டான்.
காலை உணவு வேலை முடியவும், "என் பேத்தி இருக்க வேண்டிய இடத்துல இப்படி எவளோ ஒருத்திய கொண்டு வந்து வச்சுட்டாங்களே" என்று முணங்கிக் கொண்டே வெற்றிலை பாக்கை இடித்துக் கொண்டு கால்களை நீட்டியவாறு தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தார் காமாட்சி பாட்டி.
செந்நிலாவைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஜாடை மாடை பேசுவதும், திட்டுவதும் என அவர் ஏதாவது ஒன்று செய்து கொண்டே தான் இருந்தார்.
அவள் தான் அவரைப் பொருட்படுத்தக் கூட இல்லை. அது மேலும் அவருக்கு கோபத்தை அதிகரிக்க, அவரின் பேச்சும் தடித்தது.
அன்று மதிய விருந்திற்கு காமராஜர் வீட்டிற்கு சென்று மறுவீட்டு அழைப்பையும் முடித்து வந்திருந்தனர்.
என்னதான் தன் பாட்டியை பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும், அதைத் தவிர்த்து அவளின் வாழ்க்கை அத்தனை அழகாய் தான் நகர்ந்து கொண்டிருந்தது.
அத்தனை புரிதலோடும், காதலோடும் உணர்வுகளை பரிமாறிக் கொண்டிருந்தனர்.
அன்றே யமுனாவும் தன் கணவருடன் ஊருக்கு புறப்படும்படி சூழல் அமைந்துவிட்டது.
*****
மறுநாள் காலை ஏதோ அவசர வேலை என பொற்செல்வன் வெளியே சென்றிருக்க. தன் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார் காமாட்சி.
"அத்த உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கவா?".
"அதேன் வேண்டாம்னுட்டு சொல்லுதேன்ல ரொம்பத்தேன் அக்கறை. சாப்பிடாம கெடந்து செத்தாலும் உங்களுக்கெல்லாம் சந்தோசம் தானே.. அதேன் புதுசா ஒரு ஆட்டக்காரிய கொண்டாந்து நடு வீட்ல வச்சு ஆடிக்கிட்டு இருக்கீங்களா.. அப்புறம் என்னத்த பெரிய அக்கறை மாதிரி விசாரிக்கிறவ" என்று செந்நிலாவை வைத்துக் கொண்டே முகத்தில் அடித்தார் போல் கூறிவிட்டார். அதில், வள்ளிக்கு வேறு ஒரு மாதிரியாகிப்போக.
"அத்த பசிச்சா அவங்களே சொல்லுவாங்க. இவ்வளவு பேசத் தெரியுறவங்களுக்கு பசிக்குதுன்னு வாயைத் திறந்து கேட்க முடியாதா என்ன.. வயசானவங்க ஒருவேளை செரிமான பிரச்சனையா இருக்குமோ என்னவோ.. உங்களுக்கு ஒன்னும் வயசு அப்படியே இல்ல. உங்களுக்கும்தான் வயசாகிட்டே போகுது. மணி என்ன ஆகுது, நீங்க ஏன் இன்னும் சாப்பிடாம இருக்கீங்கத்த. சாப்பிட்டா தான சுகர் மாத்திரை போட முடியும். அவங்க அவங்களுக்கு பசிச்சா வாயைத் திறந்து கேக்க போறாங்க அப்போ எடுத்து வச்சுக்கலாம். நீங்க வாங்க நாம சாப்பிடுவோம்" என்று வள்ளியை அழைத்துக்கொண்டு சென்று விட்டாள்.
"என்னடி என் வீட்ல வந்து உட்கார்ந்துகிட்டு என் மருமகளையே அதிகாரம் பண்றியா".
"இதுக்கு பேரு அதிகாரம் இல்ல, அக்கறை. அதே அக்கறையில தான் உங்க மருமக உங்க கிட்ட கேட்டாங்க. அதை உங்களால தான் புரிஞ்சுக்க முடியல. நாங்க சாப்பிட போறோம் பசிச்சா சொல்லுங்க எடுத்து வைக்கிறோம்" என்று அவரின் முகத்திற்கு நேராகவே கூறிவிட்டு தன் அத்தையுடன் சென்று உண்ண அமர்ந்துவிட்டாள்.
வள்ளிக்கு சற்று பதைபதைப்பாக தான் இருந்தது செந்நிலாவின் பேச்சு. கீதா வேறு அந்நேரம் சரியாய் அங்கே வரவும்.
"வாங்கத்த சாப்பிடுறீங்களா?".
"இப்பதான் சாப்பிட்டு வரேன். நீங்க சாப்பிடுங்க" என்றவரோ கிசுகிசுப்பாய், "என்னக்கா நம்ம அத்த மூஞ்ச ஒரு முழத்துக்கு தூக்கி வச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்காங்க என்ன விஷயம்?".
அவர் பேசியதையும், அதற்கு நிலா பேசியதையும் விவரித்தார் வள்ளி.
"அப்படி போடு, சரியா தான பேசி இருக்கு நிலா. நீங்க வாயில்லாத பூச்சி மாதிரி அவங்க கொட்ட கொட்ட குனியுறதால தான் அவங்க வாட்டமா கொட்டிக்கிட்டே இருந்திருக்காங்க. இப்படி நாமளும் எதிர்த்து கேட்டா தான் இதோ இப்ப வாயடைச்சு உட்கார்ந்திருக்க மாதிரி கொஞ்சம் அடங்கி இருப்பாங்க. அப்பப்ப நீங்களும் நிலாவ மாதிரி பேச கத்துக்கோங்கக்கா".
"எம்புட்டு திமிரிருந்தா என்கிட்ட பேசுவா, ஏதோ அவ அப்பன் வீட்டிலிருந்து அள்ளிக்கிட்டு வந்து வச்சிருக்க மாதிரி இல்ல தெனாவட்டு காட்டிட்டு போறா.. இன்னைக்கு எம்பேரன் வரட்டும். என்ன இப்படி கேட்டுட்டானு சொல்றேன்" என்று பொறுமியவாறு அமர்ந்திருந்தார்.
செந்நிலா அத்தனை கூறியும் வள்ளி மீண்டும் காமாட்சியிடம் உணவு வேண்டுமா என கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்டுதான் அமைதியானார்.
மதிய உணவுக்காக வந்த பொற்செல்வனிடம் பஞ்சாயத்தை வைத்து விட்டார் பாட்டி.
"இங்க பாருய்யா, ஏதோ அவசரகதியில வேற வழி இல்லாம நின்னவளுக்கு வாழ்க்கை கொடுத்து நீ கட்டி வந்திருக்க. அந்த நன்றி கொஞ்சமாவது இங்க நிக்கிறவளுக்கு இருக்கா" என்று செந்நிலாவை கை காண்பித்தவர்.
"காலையில எம்புட்டு பேச்சு என்னை பேசிப்புட்டா தெரியுமா" என்று தன் புடவையின் தலைப்பால் கண்களை துடைத்துக் கொண்டவர்.
"எனக்கு சோறு போடக்கூடாதுன்னு உன் ஆத்தா கிட்ட சொல்லி கொடுக்குதா. அப்படி நான் என்ன பாவம் பண்ணிட்டேன். எனக்கு ஒண்ணுன்னா கேக்க நாதியத்து நிக்கேன்ற இளக்காரம்தான அவள இப்படி எல்லாம் பேச வைக்குது. இம்புட்டு வருஷத்துல எம்பேச்சுக்கு ஒத்த வார்த்த மறுப்பேச்சு பேசாத எம்மருமகள எனக்கு சோறு தண்ணி காணவிடாம செஞ்சிட்டாளே" என்று மீண்டும் கண்ணைக் கசக்கினார்.
செந்நிலா எதுவும் பேசாமல் அப்படியே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
"ஐயா செல்வா, அத்த சொல்ற மாதிரி எதுவும் நடக்கலப்பா" என்றவரோ மடமடவென காலையில் நடந்த விஷயத்தை தன் மகனிடம் ஒப்பித்தார்.
"சொன்ன வாக்கியம் எப்படி இருந்தாலும், எனக்கு சோறு போட வேணாம்னுட்டு சொன்னதா நான் சொன்னது சரிதேன. இந்த வீட்டுக்கு உரிமைபட்டவ நானு, எனக்கே சோறு தண்ணி கிடையாதுன்னு சொல்ல இவ யாரு. இதை எல்லாம் ஆரம்பத்துலயே எங்க வெக்கணுமோ அங்க வெக்கணும் செல்வா. கொஞ்சம் இடம் கொடுத்தா தலையில ஏறி உக்காந்து ஆடுற கூட்டம். இவ மட்டும் வேற எப்படி இருப்பா.. இவ பாட்டியப் போல தானே இருப்பா" என்று புலம்பலாய் புலம்பி தீர்த்து விட்டார்.
"என்ன அப்பத்தா, சின்ன பிள்ள கணக்கா ஒவ்வொன்னுக்கும் முறுக்கிக்கிட்டு திரியாதிங்க. கொஞ்சமாவது வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கங்க. அதான் உங்களுக்கு ஏதோ செரிமான பிரச்சனைன்னு நிலா சொல்லியிருக்காளே பிறகென்ன. பாருங்க, அம்மாவுக்கும் வயசாகிட்டே போகுது. சுகர், பிபி எல்லாம் இருக்கு. இப்படி அவங்கள நடையா நடக்க வச்சா அதான் நிலா அப்படி சொல்லி இருக்கா. இது ஒரு விஷயம்னு பெருசு படுத்தி பேசிட்டு இருக்கீங்க" என்றவன் தன் சட்டையின் பட்டன்களை கழட்டிக்கொண்டே அறைக்கு சென்று விட்டான்.
தான் இப்படி வருத்தமாய் பேசினால் தன் பேரன் அவனின் மனைவியை ஏதேனும் திட்டுவான் என எதிர்பார்த்த பாட்டிக்கு தான் புஸ்ஸென்று ஆகிப்போனது.
"மொத்தமா கைக்குள்ள சுருட்டி வச்சிருக்கா. அப்படி என்ன வித்தையத்தேன் இவ பாட்டி இவளுக்கு கத்துக் கொடுத்து வச்சிருக்காளோ, இப்படி சரியான கைகாரியா இருக்காங்களே" என காமாட்சி பாட்டியால் புலம்ப மட்டுமே முடிந்தது.
முன்பெல்லாம் அத்தனை வீம்போடும், வீராப்போடும் பேசுபவரால் தன் பேத்தியின் செயலுக்கு பிறகு, அத்தனை வீராப்பை காட்ட முடியவில்லை.
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி என்பது போல் பொற்செல்வனின் திருமணச் செய்தி அவருக்கு தலை இடியாய் வந்து விழுந்தது.
கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் அவர்களுக்குள் ஏதாவது சண்டையை கிளப்பி விட முடியுமா என முயற்சித்துக் கொண்டே இருந்தார் காமாட்சி. இப்படியே அடுத்த இரண்டு நாட்களும் ஓடி விட்டது.
"என்ன டீச்சர் அம்மா காலையிலேயே எங்க கிளம்பிட்டீங்க?" என்று புடவையின் மடிப்பை சரி செய்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து கட்டிலில் அமர்ந்து கொண்டு கேட்டான் பொற்செல்வன்.
"காலேஜ்ல ரெண்டு நாள் தான் லீவ் சொல்லி இருக்கேன்னு சொன்னேன்ல, நீங்க கூட சரி போயிட்டுவான்னு சொன்னீங்க".
"சும்மா கேட்டேன் டி. உடனே சண்டக்கோழி மாதிரி சிலுப்பிக்கிட்டு நிக்காத" என்று அவளின் மூக்கைப் பிடித்து ஆட்டினான்.
செந்நிலா வேலைக்கு கிளம்பும் விஷயம் வள்ளியின் மூலமாக தெரிய வந்து விட ஆட்டமாய் ஆடிக்கொண்டிருந்தார் காமாட்சி.