மழை - 28
மறுநாள் சனிக்கிழமை விடுமுறை. முந்தைய நாள் இரவின் மகிழ்ச்சி இன்னமும் வள்ளியிடமும், கீதாவிடமும் இருந்தது. முகத்தில் ஒருவித மலர்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது.
வள்ளி கீரையை சுத்தம் செய்து கொண்டிருக்க. அவர் அருகில் அமர்ந்திருந்த கீதாவும் அவருக்கு உதவி செய்தவாறு, "என்னால நம்பவே முடியலக்கா. என் புருசன் எனக்கு தோசை சுட்டு தருவார்னு நான் கனவுல கூட நினைச்சு பார்க்கல" என்று சொல்லி சொல்லி வாய் ஓய்ந்துப் போனார்.
"அதுலயும் பெரிய மாமா தோசை ஊத்திக் கொடுப்பாங்கன்னு எல்லாம் நாம நினைச்சும் பார்த்திருப்போமா.. எல்லாம் இந்த வீட்டுக்கு மருமக வந்த நேரம் குடும்பமே கலகலப்பா எத்தன சந்தோஷமா இருக்கு".
"ஆமா, இவிங்கதேன் மெச்சிக்கணும். வக்கத்து வந்தவளுக்கு இத்தன சீராட்டும் பாராட்டும் கேக்குது" என்று வெம்பிப் போய் அமர்ந்திருந்தவருக்கு அதற்கு மேல் அந்த வீட்டில் இருப்பதே அத்தனை எரிச்சலையும், கோபத்தையும் கொடுத்தது.
உடனே, தன் மகளின் வீட்டிற்கு சென்று இதைப் பற்றி அவரிடம் கூறினால் தான் தன் மனம் ஆறும் என்ற எண்ணத்தோடு புறப்பட்டு விட்டார்.
"என்ன எக்ஸ்பிரஸ் வேகமா இன்ஜின கெளப்பிக்கிட்டு கெளம்புது" என்று தன் மாமியாரை எட்டிப் பார்த்து கிசுகிசுத்தார் கீதா.
"உமா வீட்டுக்கு போறாங்க போல".
"அவளோட சகவாசத்த விட்டா தான் இவங்க திருந்துவாங்க".
*****
"என்னக்கா பேசுற நீ?".
"என்னடி இப்போ என்ன நான் சொல்லிட்டேன்" என்று எகிறினாள் இந்திரா.
"அக்கா இது உன்னோட குழந்தைக்கா".
"அதுக்கு பத்து மாசம் சுமந்து பெத்து சீராட்ட சொல்றியோ".
"வேண்டாம்னு நினைக்கிற நீ இப்படி ஒரு தப்பு பண்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும். ஒரு உயிரை அழிக்கிறது என்ன அவ்வளவு சாதாரணமான விஷயமா போச்சா உனக்கு. அப்பா யாரா இருந்தாலும் அம்மா நீ தானே.. அந்த துடிப்பு உனக்கு கொஞ்சம் கூடவா இல்ல. எப்படிக்கா மனசாட்சியே இல்லாம குழந்தைய கலைக்க போறேன்னு சொல்ற?" என்ற ரதிக்கு கண்கள் எல்லாம் கலங்கிப் போய்விட்டது.
இன்னும் இந்த பூமியைக் கூட பார்க்காத அந்த பிஞ்சை கருவிலேயே கருகச் செய்யப் போகிறேன் என்கிறாளே என்று ஆதங்கமாய் வேறு இருந்தது.
"எல்லாம் இந்த சனியனால தான் வந்தது. நான் பாட்டுக்கு ஒழுங்கா செல்வா மாமாவ கட்டிக்கிட்டு வசதியா வாழ்ந்திருப்பேன். இது என்னைக்கு எனக்குள்ள உருவாச்சோ என்னோட மரியாதை, கௌரவம், வாழ்க்கை மொத்தமும் நாசமா போச்சு. இன்னமும் இத எனக்குள்ளவே வச்சுக்கிட்டு என்னைக் கஷ்டப்பட சொல்றியா. எனக்கு இது தேவையில்ல. எனக்கு இது வேணுமா, வேணாமான்னு நான் தான் டி முடிவு பண்ணனும். உன்ன யாரும் கேட்கல" என்றவளோ விறுவிறுவென தன் ஹேண்ட் பேக்கை எடுத்து மாட்டிக்கொண்டு திரும்பினாள்.
அப்பொழுது தான் வீட்டிற்குள் நுழைந்த பாட்டி, "அவ வேண்டாம்னுட்டு முடிவு பண்ணா அவ கலைக்க போறா.. இதுல உனக்கு என்ன வந்தது?" என்றார் ரதியைப் பார்த்து.
"அம்மாச்சி" என்றவளை பேசவிடாமல் தடுத்தவர்.
"இந்தாரு உமா, அவளாவது வயித்த தள்ளிகிட்டு தான் வந்து நின்னா. இவள பார்த்துக்கிட்டே இரு, கலைக்க மனசு வரலேன்னுட்டு புள்ளய பெத்துட்டு புள்ளயோட நிக்க போறா".
எத்தனை பெரிய வார்த்தையை எவ்வளவு விலகுவில் பேசிவிட்டார். ஒரு நொடி உயிரே துடித்து போய்விட்டது ரதிக்கு. அதுவும் எத்தனைக் கீழ்தரமான வார்த்தை.
தன் அக்காவின் தவறு உண்மைதான். அதற்காக எந்த ஒரு தவறும் செய்யாத என் மேலும் அந்த பழி விழ வேண்டுமா என்று எண்ணும் பொழுதே அவளின் மனம் மரித்துப் போய்விட்டது.
"ஏம்மா இப்படி எல்லாம் பேசுற. ஏற்கனவே, நான் வேதனையில இருக்கேன். இதுல நீ வேற என்னை வேதனை படுத்தாத" என்று தன் தலையில் கையை வைத்துக்கொண்டு ஓரமாய் அமர்ந்திருந்தார் உமா.
"இப்போ அப்படி என்ன உனக்கு வேதனை?".
"இவ குழந்தைய கலைக்கணும்னு நிக்கிறா. அவ வேண்டாம்னு நிக்கிறா. என்ன பண்றதுன்னு எனக்கு ஒன்னும் புரியல".
"இந்திரா சொல்லுறதுதேன் சரி. தப்பு நடந்து போச்சு காதும் காதும் வச்ச மாதிரி கலைச்சிட்டு யாருக்காவது பார்த்து கட்டி கொடுத்து அனுப்பிடுவோம். அதோட இந்த சின்ன குட்டிய இனிமே படிக்க எல்லாம் அனுப்ப வேண்டாம்".
"ஏன்மா?".
"என்னடி ஏம்மானு கேக்குறவ, படிக்கப் போறேன்னு அவளும் நாளைக்கு வயித்த தள்ளிக்கிட்டு வந்து நிக்கவா" என்று நாக்கில் நரம்பே இல்லாமல் ரதியை சாடினார்.
தவறே செய்யாமல் கூனி குறுகிப்போய் நின்று விட்டாள் ரதி.
"அப்படி அவ போய் தான் தீரனும்னா தினமும் யாராவது ஒருத்தர் போய் அவள விட்டுட்டு வாங்க. தனியா எங்கேயும் இனி அவள அனுப்பக்கூடாது. ஏற்கனவே, ஒரு தப்பு நடந்துடுச்சு இன்னொரு தப்பு நடக்குறதுக்கு முன்னாடியாவது அத தடுத்து நிறுத்தணும்" என்றவரின் கூற்றில் மொத்தமாய் அவளின் மனமே நொறுங்கிப் போய்விட்டது.
அப்படி என்ன நம்பிக்கை இல்லாமல் நாம் செய்து விட்டோம். இது நாள் வரை ஒரு வார்த்தை தவறாக தன் மேல் யாரேனும் பேசி இருப்பார்களா..
அவள் இப்படி, அப்படி என யாராவது ஒரு வார்த்தை கூறியிருப்பார்களா..
தன்னைப் போய் இப்படி நம்பிக்கை இல்லாமல் பேசி விட்டார்களே என்று அவளின் மனம் புழுங்க, இப்படி நம்பிக்கை இல்லாமல் வீட்டை விட்டு எங்கேயும் யாரின் துணையோடும் வெளியே செல்ல வேண்டாம் என்ற முடிவோடு அறைக்கு சென்று விட்டாள்.
"அம்மா அதையெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம். நீ இப்ப என் கூட ஆஸ்பத்திரிக்கு வரியா இல்லையா?".
"நான் எங்கேயும் வரமாட்டேன். நீ ஆரம்பிச்சது தானே நீயே தலை முழுகிட்டு வா" என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டார் உமா.
"அப்படியா, சரி ரொம்ப சந்தோஷம். நானே என் கஷ்டத்தை பாத்துக்குறேன்" என்றவளும் வேகமாய் செருப்பை மாட்டிக் கொண்டு விறுவிறுவென நடக்க துவங்கி விட்டாள்.
"இந்த சூட்ட நீ ஆரம்பத்திலேயே கொடுத்திருந்தேனா, இன்னைக்கு உன் குடும்பம் ஒழுங்கா இருந்திருக்கும். அது அது தண்ணிதெளிச்சுவிட்ட மாதிரி ஒவ்வொரு திக்குல திரியுதுங்க. இப்பவாவது உனக்கு கூறு வந்துச்சே" என்றவரோ நேற்று இரவு வீட்டில் நடந்த விஷயத்தைக் கூறி வாயாறிப்போனார்.
****
"ஏம்மா நீ பாட்டுக்கு வந்து குழந்தைய கலைக்கணும்னு சொல்ற. குழந்தையோட அப்பா யாரு? எதுக்காக குழந்தைய கலைக்கிற? சும்மா எல்லாம் குழந்தைய கலைக்க முடியாது. தூக்கி எங்கள உள்ள வச்சிடுவாங்க. இது என்ன உனக்கு விளையாட்டு விஷயமா?" என்று இந்திராவைப் பிடித்து கிழித்து தொங்கவிட்டுவிட்டார் மருத்துவர்.
"டாக்டர் என் நிலைமைய கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. நான் ஒருத்தவன காதலிச்சேன், அவன் என்னை ஏமாத்தி இப்படி ஆக்கிட்டான். எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகல. இப்படி வயித்துல குழந்தையோட இருக்கிறது யாருக்காவது தெரிஞ்சா நாங்க குடும்பத்தோட சாகுறத தவிர எங்களுக்கு வேற வழியில்ல. தயவு செஞ்சு, எனக்கு ஹெல்ப் பண்ணுங்க" என்று தன் கரம் கூப்பி கெஞ்சவே துவங்கி விட்டாள்.
"இங்க பாருமா, நீ சொல்றது புரிஞ்சாலும் மனிதாபிமானம் இல்லாம செய்யுற விஷயம் இல்ல இது. நீ சொல்றது ரொம்ப பெரிய விஷயம். அதோட பெரிய தப்பும், பாவமும் கூட. உயிருள்ள ஒரு ஜீவன சாகடிக்க சொல்ற நீ. என்னால இதெல்லாம் செய்ய முடியாதுமா, இப்ப நீ வெளியில போறியா இல்ல, நானே போலீஸ்க்கு கூப்பிடவா" என்றவரின் மிரட்டலில் வேறு வழியின்றி மருத்துவமனையில் இருந்து ஆத்திரத்தோடும், கோபத்தோடும் வெளியே வந்தாள்.
வெளியே இவளுக்காகவே காத்திருப்பது போல் அசோக் தன் இரு சக்கர வாகனத்தில் கையை கட்டிக்கொண்டு சாய்ந்து நின்றிருந்தான்.
அவனைப் பார்த்தவள் ஒரு நொடி திகைத்துப் பிறகு எதுவும் தெரியாதது போல் தன் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு நடக்க துவங்கினாள்.
அவளின் பின்னோடு வந்தவன், "இந்திரா நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்".
"என்ன பேசணும், அதான் உங்களுக்கும் எனக்கும் ஒத்து வராதுன்னு பிரேக்கப் பண்ணிட்டேன்ல".
"என்ன பேசுற இந்திரா நீ, உனக்குள்ள இருக்கிறது நம்ம குழந்தை. அது மறந்து போச்சா உனக்கு. பிரேக்அப் பண்ணிட்டேன்னு இவ்வளவு சாதாரணமா சொல்ற. அப்போ நம்ம குழந்தையோட எதிர்காலம், நாளைக்கு அந்த குழந்தை அப்பான்னு கேட்டா நான் இருக்க வேண்டாமா.. நீதான் பிரேக்அப் பண்ணிக்கலாம்னு சொல்லியிருக்க, என் மனசுல இன்னமும் நீ தான் இருக்க இந்திரா. நீ, நான், நம்ம குழந்தைன்னு சந்தோஷமா ஒரு வாழ்க்கைய வாழனும்னு ஆசைப்படுறேன். ப்ளீஸ், இந்திரா புரிஞ்சுக்கோ" உண்மைப் போன்றே உருகி உருகி பேசினான்.
அவனின் வார்த்தையில் அப்படியே மயங்கிப் போனவள், "நீ என்னை எவ்வளவு லவ் பண்ற அசோக், இவ்வளவு லவ் பண்ற உன்ன எதுக்காக நான் பிரேக்அப் பண்ணிட்டு போனேன். எல்லாம் என் செல்வா மாமாக்காக தானே. வயித்துல இருக்குற குழந்தைய கூட பொருட்படுத்தாம கலைச்சிட்டு அவர கல்யாணம் பண்ணிக்கலாம்னு யோசிச்சேன். ஆனா, அவரு என்னை ஒரு பொருட்டாவே மதிக்கல தெரியுமா? அப்படியே தூக்கி எறிஞ்சிட்டாரு. எனக்கு ஒரு சான்ஸ் கூட கொடுக்கல. அந்த செந்நிலாவ போய் கல்யாணம் பண்ணி இருக்காரு. அவள விடவா நான் குறைஞ்சு போயிட்டேன். இதுக்கு நீ எவ்வளவோ பரவாயில்ல. இவ்வளவு நடந்த பிறகும் நான் தான் வேணும்னு இதோ இப்படி வந்து நிக்கிறியே.. நாம கல்யாணம் பண்ணிக்கலாம் அசோக். யார் தடுத்தாலும் சரி, எல்லாருடைய எதிர்ப்பையும் மீறி நான் உன்ன கட்டிக்கிறேன். என் மேல இத்தன காதல் வச்சிருக்க, உன்னுடைய காதல புரிஞ்சுக்காம நான் உன்ன நிறையவே கஷ்டப்படுத்திட்டேன் என்னை மன்னிச்சிடு. நிச்சயமா நம்ம குழந்தைக்காக நாம ஒன்னு சேருவோம்" என்றவள் மீண்டும் அவனின் மகுடிக்கு மயங்கி விட்டாள்.
அதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்தவள் குழந்தையைக் கலைக்க முடியாது என டாக்டர் கூறியதையும், தன்னைத் தன் காதலனுடனே சேர்த்து வைக்கும்படியும் தன் பாட்டியிடமும், தாயிடமும் கூறினாள்.
அவர்களுக்கும் வேறு வழி இல்லையே, வயிற்றில் பிள்ளையோடு ஒத்தையில் நிற்பவளை அப்படியே விடவா முடியும்.
"சரி, நான் உன் மாமன்கிட்ட பேசுறேன்" என்று விட்டு அங்கிருந்து புறப்பட்டார் காமாட்சி.
அடுத்தடுத்த நாட்களும் வேகமாய் நகர்ந்தன. பாட்டி இந்திராவைப் பற்றி தன் மகனிடம் பேச சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்.