மழை - 29
"ஹலோ ரதி".
"ஆமா ரதி தான். நீங்க யாரு பேசுறது?".
"நான் செந்நிலா".
"ஆங்! மேம் சொல்லுங்க".
"என்னாச்சு ரதி, ஏன் ஒரு வாரமா காலேஜுக்கு வரல. அட்டெண்டன்ஸ் ரொம்ப கம்மியா இருக்கு. அதான் பிரின்சிபல் கால் பண்ணி கேட்க சொன்னாங்க".
அவளுக்கோ என்னவென்று கூறுவது என்று தெரியவில்லை.
"சாரி மேம், நான் படிப்பை டிஸ்கன்டின்யூ பண்ணலாம்னு இருக்கேன். இதுக்கப்புறம் காலேஜுக்கு வர முடியாது".
"ஏன் ரதி என்ன ஆச்சு?".
"அது வந்து மேம், கொஞ்சம் பர்சனல் இஷீ அதான்.." என்று அவள் தயங்கி இழுக்கவும்.
அவளின் குரலே அத்தனை பொலிவிழந்து வருத்தத்தோடும், தயக்கத்தோடும் வெளிவந்திருந்தது.
அதுவே அவளுக்கு ஏதோ பிரச்சனை என்று அவள் கூறாமல் எடுத்துரைக்க.
"ஓகே ரதி, ஸ்டுடென்ட் ப்ரொபசர் ரிலேஷன்ஷிப் எல்லாம் வேண்டாம். ஜஸ்ட் ஒரு ஃப்ரண்டா நெனச்சு என்கிட்ட நீ ஷேர் பண்ணலாம். மோர் ஓவர், நம்ம ரிலேட்டிவ்ஸ் தானே.. என்கிட்ட சொல்லணும்னு தோணுச்சுன்னா உன் மனசுல என்ன இருக்குன்னு ஓபனா சொல்லு. ஏன் நீ காலேஜ்க்கு வர மாட்டேங்குற. நல்லா படிக்கிற பொண்ணு, உன் படிப்ப இப்படி நிப்பாட்டுறதுல எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்ல. உன்ன பத்தி எனக்கு தெரியும். அதனால தான் இவ்வளவு தூரம் கேட்குறேன். சொல்ல விருப்பம் இருந்தா சொல்லு".
செந்நிலாவின் அருகில் நின்றிருந்த ரகுவும் அவள் என்ன கூறப்போகிறாளோ என்று தன் காதுகளை தீட்டிக்கொண்டு செல்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சற்று நேரம் ரதியிடம் எந்த ஒரு பேச்சுமே இல்லை, மெல்லிய விசும்பல் சத்தம். போன் ஸ்பீக்கரில் இருக்கவும், ரகுவிற்கு அவளின் விசும்பலில் இதயம் பதறியது.
"என்னாச்சு ரதி அழறியா.. வீட்ல ஏதாவது பிரச்சனையா?" என்றாள் செந்நிலா.
"அக்கானு கூப்பிடலாம்ல" என்றவளின் கூற்றில் மெல்லிய புன்னகை தோன்ற, "தாராளமா கூப்பிடலாம்".
"இந்திரா பண்ணதெல்லாம் உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்லக்கா, வீட்ல ரொம்ப பிரச்சனை. குழந்தைய அபார்ஷன் பண்ண போறேன்னு சொன்னா, எனக்கு மனசு கேட்கல. இவ பண்ண தப்புக்கு எதுக்காக ஒரு உயிரை அழிக்கணும்னு அவ காதலிச்சவனையே கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னேன். குழந்தைய கலைக்க வேண்டாம்னு சொன்னேன். அம்மாச்சி வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிட்டாங்க. அவளாவது குழந்தை உண்டானா கலைச்சிடுவா, இவ படிச்சு முடிக்கிறதுக்குள்ள கையில குழந்தையோட தான் வந்து நிக்க போறான்னு ரொம்ப அசிங்கமா பேசிட்டாங்க. அதோட காலேஜ் போகணும்னா எனக்கு யாராவது துணைக்கு கூட வரணுமாம். அப்படி நம்பிக்கை இல்லாம ஒவ்வொரு நாளும் பயந்து பயந்து அவங்க என்னை காலேஜுக்கு அனுப்பனும்னு என்ன அவசியம் வந்துச்சு. அதான் நானே காலேஜ் போக வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்" என்று அழுகையோடு கூறுபவளின் வார்த்தையில் செந்நிலாவிற்கு அத்தனை வருத்தமாய் இருந்தது.
தவறு செய்தவளை விட்டுவிட்டு தவறே செய்யாதவளுக்கு தண்டனையைக் கொடுப்பது போல் இருந்தது காமாட்சியின் வார்த்தைகள்.
"இங்க பாரு ரதி, எமோஷனலா நாம எடுக்குற எந்த ஒரு முடிவும் சரியா இருக்காது. உன் அக்கா பண்ணது ரொம்ப பெரிய தப்புதான். ஏன் பாவம்னு கூட சொல்லலாம். அதுவும் ஒரு உயிர அழிக்கணும்னு நினைக்கிறதெல்லாம் மிகப்பெரிய பாவம். அது எல்லாத்தையும் விடு, உன்ன பத்தி மட்டும் யோசி. இப்போ இருக்குற உன்னுடைய எமோஷனல் கண்டிஷனுக்கு நீ பீல் பண்ணி படிப்ப பாதியில நிறுத்திட்டேனா, இதனால பாதிக்கப்படப் போறது உன் அக்கா இந்திராவோ, உன் அம்மாச்சி காமாட்சியோ கிடையாது. நீதான்! என்னை பொறுத்த வரைக்கும் எல்லா பொண்ணுங்களுமே சுயமா படிச்சு அவங்க சொந்த கால்ல நிக்கணும். நாலு காசா இருந்தாலும் அது நம்ம உழைச்ச நம்ம சம்பாதிமா இருக்கணும். ஒவ்வொன்னுக்கும் ஒருத்தர் கிட்ட கையை நீட்டி நிக்காம நாம நினைச்சா நம்ம செலவு பண்ணுவோம்ன்ற அளவுக்கு நம்மளுடைய கையிலயும் இருப்பு இருக்கணும். அதுக்கு இந்த படிப்பு உனக்கு ரொம்பவே ஹெல்ப்ஃபுல்லா இருக்கும். அவங்க மேல இருக்குற கோவத்துல முட்டாள்தனமா முடிவெடுக்காத ரதி. நீ அப்படி எடுக்க மாட்டேன்னு நினைக்கிறேன். பிகாஸ், யூ ஆர் எ ப்ரில்லியன்ட் ஸ்டுடென்ட். நல்லா படிக்கிற ஒரு பெண்ணுடைய படிப்பு இப்படி பாதியிலேயே நிக்கிறத என்னால ஏத்துக்க முடியாது. யோசிச்சு பாரு, யாரோ செஞ்ச தப்புக்கு உனக்கு நீயே ஏன் தண்டனைய கொடுத்துக்கணும். அவங்க பேசுனது சரின்னு உனக்கு தோணுதா?".
"இல்லக்கா".
"இல்லல்ல, அப்போ நீ ஏன் அவங்க பேசுனது உண்மைன்ற மாதிரி வீட்டுக்குள்ளவே இருந்து உன்ன நீயே தண்டிச்சுக்கிற. இது எல்லாத்தையும் விட்டுட்டு வெளியில் வா ரதி. உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு. யாரையும் எதிர்பார்க்காம தன்னம்பிக்கையோட உன்னுடைய வாழ்க்கைய நீ வாழனும்னா அதுக்கு இந்த படிப்பு உனக்கு ரொம்பவே தேவை".
செந்நிலாவின் வார்த்தை எத்தனை உண்மை என்பது ரதிக்கும் நன்கு புரிய, "சரிக்கா, நாளையிலிருந்து காலேஜ்க்கு வரேன்".
"குட்! அதோட உனக்கு எப்பவாவது இப்படி மனசு விட்டு யார்கிட்டயாவது பேசணும்னா எந்த நேரமா இருந்தாலும் எனக்கு நீ கால் பண்ணலாம். வெளியில யார்கிட்டயும் நீ பேசுறதை நான் சொல்ல மாட்டேன். இது நமக்குள்ள மட்டுமே இருக்கும் சீக்ரெட் ஓகேவா" என்றதும்.
ரதியின் முகத்திலோ மெல்லிய புன்னகை இழைய, "சரிக்கா" என்றாள் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு.
இந்திராவின் பிரச்சனைக்கு பிறகு அனிதாவை ரதியுடன் அதிகமாய் பேசக்கூடாது என கூறிவிட்டார் கீதா.
அவளுக்குமே அனிதாவிடமோ, மற்றவர்களிடமோ இதைப் பற்றி எல்லாம் பேச சற்று சங்கடமாய் இருக்க. அனைத்தையும் தனக்குள்ளேயே வைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டாள்.
செந்நிலாவின் வார்த்தை தற்பொழுதைய சூழ்நிலைக்கு அவளுக்குள் நிம்மதி உணர்வை விதைத்திருந்தது.
"ஓகே, காலேஜ்ல பார்க்கலாம் குட் நைட் டேக் கேர்" என்று அழைப்பைத் துண்டித்தவள் ரகுவைப் பார்க்கவும்.
அவனோ அத்தனை கோபமாய் நின்றிருந்தான்.
"இந்த அப்பத்தாவுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கானு பாத்தீங்களா மதினி, ரதிய போய் என்ன பேச்சு பேசி இருக்காங்க. தப்பு பண்ணவள கேட்க முடியல. இவள பேசுவாங்களா" என்று கொந்தளித்து விட்டான்.
"அவங்கள பத்தி தெரிஞ்ச விஷயம் தானே ரகு. என்ன ரதிகிட்ட கொஞ்சம் அதிகப்படியாவே பேசி இருக்காங்க. அவளுக்குனு சப்போர்ட் பண்ண அங்க யாரும் இல்ல. அதான் இஷ்டத்துக்கு வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசி இருக்காங்க".
"எனக்கு வர கோபத்துக்கு எங்களுக்கு மட்டும் கல்யாணம் முடியட்டும் அப்புறம் இருக்கு அப்பத்தாவுக்கு" என்றான் தன் பற்களை நரநரவென கடித்துக்கொண்டு.
"ஏன் இப்பவே போய் சார் கேட்க வேண்டியதுதானே".
"கேட்டா தேவையில்லாம பிரச்சனை வரும். அப்புறம் இதனால ரதியோட பேரு அடிப்படும். அவளுக்கு எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாதுல. அவளுக்காக தான் யோசிக்கிறேன்".
"ஓ! இப்பவே சார் அவ்வளவு யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்களா.. இதெல்லாம் இருக்கட்டும் சித்திக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியுமா? அவங்க இதுக்கெல்லாம் ஒத்துக்கவே மாட்டாங்க" என்றான் பொற்செல்வன்.
"அதெல்லாம் அவங்க நிச்சயமா ஒத்துப்பாங்க".
"எப்படி சொல்ற?".
"அதுக்கு தான் நீங்க ரெண்டு பேரும் இருக்கீங்களே.. எங்க கல்யாணத்த நீங்க ரெண்டு பேரும் தான் பேசி எந்த பிரச்சனையும் இல்லாம நல்லபடியா நடத்தி கொடுக்கணும்".
"அடப்பாவி! நைசா மொத்தத்தையும் தூக்கி எங்க தல மேல வைக்கிற பாத்தியா நீ" என்றாள் செந்நிலா.
"எனக்காக இது கூட செய்ய மாட்டீங்களா மதினி".
"செய்வோம்.. செய்வோம்.. முதல்ல ரதி படிப்பு முடியட்டும் அப்புறமா பார்ப்போம். இதையெல்லாம் நீயே அவகிட்ட சொல்லி தைரியம் சொல்லி இருக்கலாம்ல".
"போச்சு போ, அவ சும்மாவே என்னை பார்த்தா பேசமாட்டா. ஏதோ சொந்தக்காரங்கன்ற முறைக்கு சிரிப்பா அவ்வளவுதான். வாய் திறந்து எதுவுமே பேச மாட்டா. இப்போ இவ்வளவு பிரச்சனை நடந்த பிறகு என்கிட்ட பேசுவான்னு நினைக்கிறியா.. சுத்தமா பேச மாட்டா. நானே போய் பேசினாலும் என்னை நிமிர்ந்து கூட பாக்காம ஓடிடுவா. இந்திராவ வச்சு இவளோட கேரக்டரை எல்லாரும் கணக்கு போடுவாங்களோன்னு பயப்படுறா. அதான் இது எல்லாத்துக்கும் காரணம், முதல்ல படிச்சு முடியட்டும்" என்றான் பெருமூச்சோடு.
*****
அன்று கோவில் திருவிழா விஷயமாக ஊரில் உள்ள பெரியவர்கள் எல்லாம் தேவராஜை பார்க்க அவர்களின் வீட்டிற்கு வந்திருந்தனர்.
அவர்கள் அனைவரிடமும் பேசிவிட்டு அனுப்பி வைத்து உள்ளே வந்தவரிடம், "ஐயா தேவா, உங்கிட்ட செத்த பேசணும்யா" என்று அத்தனை தன்மையாய் கூறினார் காமாட்சி.
"என்னம்மா என்ன விஷயம்?".
"எல்லாம் இந்திராவ பத்திதேன்" என்று அவர் இழுக்கவும்.
"என்னம்மா எதுவா இருந்தாலும் சொல்லுங்க" என்னும் பொழுதே அவருக்கு தண்ணீரை எடுத்துக் கொண்டு அவ்விடம் வந்திருந்தார் வள்ளி.
செந்நிலாவும், பொற்செல்வனும் எங்கோ வெளியே சென்று விட்டு கையில் கவர்களுடன் வீட்டிற்குள் நுழைய.
அனைவரும் ஒன்றாய் ஹாலில் இருப்பதைக் கண்ட பாட்டிக்கு தான் இந்த பேச்சை எப்படி ஆரம்பிப்பது என விழிப் பிதுங்கியது.
"என்னம்மா ஏதோ பேசணும்னு சொன்னீங்க?".
"அது.. இந்திராவுக்கு அவ காதலிக்கிற பையனையே கல்யாணம் கட்டி வச்சிடலாம்னுட்டு..".
"கட்ட சொல்லுங்க. இதுல என்கிட்ட கேட்க என்ன இருக்கு".
"நம்ம குடும்பத்துக்கு பெரியவன் நீதானப்பா. நீதேன் முன்னருந்து இந்திரா கல்யாணத்த நடத்திக் கொடுக்கணும்".
சற்று நேரம் எதையோ சிந்தித்த தேவராஜ், "சரிமா, நாளைக்கு அந்த பையன அவங்க குடும்பத்தோட வர சொல்லுங்க. இத அப்படியே காதும் காதும் வச்ச மாதிரி பேச முடியாது. நம்ம சொந்தத்துல முக்கியமான ஆளுங்கள எல்லாம் வச்சு தான் பேசி கட்ட முடியும்".
"எல்லாருக்கும் தெரிஞ்சா மானம் மருவாதி எல்லாம் என்னாவுறது தேவா".
"ஆமா, இப்ப ரொம்ப மானம் மருவாதி வாழுது. இதுல எல்லாருக்கும் தெரிஞ்சாதான் மானம் போக போகுதா. அந்த பொண்ணு பண்ண காரியத்துக்கு எப்பயோ மானம் காத்துல பறந்து போயிடுச்சு. இவ்வளவு தூரம் கல்யாணத்துக்கு முன்னாடியே அந்த பையன் வேலை பார்த்து விட்டிருக்கான். நாளை பின்ன இந்திராவ கட்டிக்கிட்டு வேற ஏதாவது ஒரு பொண்ணு பின்னாடி போயிட்டான்னா என்ன செய்வீங்க? நாலு பேர வச்சு பேசி கல்யாணம் பண்ணி கொடுக்குறது தான் சரியா வரும். நாளைக்கு வர சொல்லுங்க" என்று விட்டு தங்கள் அறைக்கு சென்று விட்டார்.
தேவராஜ் கூறிய செய்தியை கேள்விப்பட்ட இந்திரா தாம் தூம் என வானத்திற்கும் பூமிக்கும் குதிக்க துவங்கி விட்டாள்.
"என்ன அம்மாச்சி இதெல்லாம், எல்லார் முன்னாடியும் கொண்டுபோய் நிக்க வச்சு என்னை அசிங்கப்படுத்த போறீங்களா. வேணும்னு தான் மாமா இப்படி எல்லாம் செய்யுறாங்க. எங்க குடும்பத்த அசிங்கப்படுத்த தான் இப்படி எல்லாம் செய்யுறாங்க".