மழை - 32
"சரியான செல்ஃபிஷ் டி நீ. புருஷன் எப்படி போனா என்னன்னு நீ பாட்டுக்கு துண்ட உதறி தோள்ல போட்டுக்கிட்டு உன் பாட்டி வீட்ல வந்து உட்கார்ந்துட்ட இல்ல. அங்க ஒத்தையில எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்குன்னு தெரியுமா. உன்ன எவ்வளவு மிஸ் பண்றேன்னு நானே இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன்" என்றவாறு அவளைப் பின்னிருந்து அணைத்தவன் கழுத்து வளைவில் குறுகுறுப்பூட்டிக் கொண்டே கேட்கவும்.
அவனின் செய்கையில் சிலிர்த்து அடங்கியவள், "அச்சோ! என்ன செய்றீங்க நீங்க" என்றவாறு கூசி சிலிர்க்கவும். மேலும், அதேபோல செய்து கொண்டே இருந்தவன்.
"பனிஷ்மென்ட் டி. என்னை அப்படியே அம்போன்னு விட்டுட்டு வந்தல்ல, அதுக்கு தான் இந்த பனிஷ்மென்ட்".
"அச்சோ முடியல ப்ளீஸ்" என்றவளின் கெஞ்சல் எல்லாம் காற்றில் தான் கரைந்து போனது.
அவளின் வார்த்தைகள் மொத்தத்தையும் தனக்குள் விழுங்கிக் கொண்டவன். அவளின் பக்க நியாயத்தை கேட்க கூட செவி சாய்க்கவில்லை.
பனிஷ்மென்ட் என்னும் பெயரில் அவளை வினோத முறையில் கையாண்டவன். அவளின் பேச்சுக்களையும் பேச விடாமல் தனக்குள் விழுங்கிக் கொண்டான். அதில், அவளுக்குத்தான் இரட்டிப்பு அவஸ்தையாகிக் போனது.
மூச்சு வாங்க நிமிர்ந்தவள், "போதும் ப்ளீஸ்" என்றாள் தன் கண்களை சுருக்கிக்கொண்டு கெஞ்சலாய்.
அவளை அப்படியே தன் புறம் திருப்பியவன், "போனா போகுதேனு இவ்வளவு தூரம் கெஞ்சுறதால இதோட விடுறேன். திரும்ப இப்படி ஒரு எண்ணமே உனக்கு வரக்கூடாது".
"நான் என்ன வேணும்னா செஞ்சேன். பாட்டிக்கு முடியல, அப்புறம் வேற என்ன செய்யுறது. சரி வாங்க, உங்ககிட்ட ஒன்னு காட்டுறேன்" என்று கண்கள் மின்ன கூறியவள்.
அவனை அழைத்துக்கொண்டு தன் அலமாரியை திறந்து காண்பித்தாள். அவனின் டீ-ஷர்ட் அவனைப் பார்த்து பல்லைக் காட்டியது.
"இது என்னுடையது தானே".
"ஆமா, நீங்க தான் திரும்ப தரலைன்னு கேட்டீங்களே எடுத்துக்கோங்க".
"அதான் என்னையே மொத்தமா எடுத்துக்கிட்டியே. இதை இனி திருப்பி கொடுத்தா என்ன கொடுக்கலைன்னா என்ன. உன்கிட்டயே இருக்கட்டும். அன்னைக்கு உன்ன இந்த டீ-ஷர்ட்ல பார்க்கும்போது செம காமெடியா இருந்த பெருசா லொடலொடனு போட்டுட்டு. ஆனா, அப்போவே நீ எனக்கானவன்னு ஏதோ பச்சி சொன்ன போலவே இருக்குல" என்று அவளின் தோளைச் சுற்றி கையை போட்டு தன்னை நோக்கி நெருக்கினான்.
"அதெல்லாம் எந்த பச்சியும் சொல்லல. ஆனா, அன்னைக்கு நீங்க மட்டும் வரலனா என் நிலைமை என்ன ஆகியிருக்கும்னு நினைச்சு எத்தன நாள் நான் படபடப்பாகி இருக்கேன்னு தெரியுமா".
"நான் இல்லன்னா வேற யாராவது வந்து ஹெல்ப் பண்ணி இருப்பாங்க அவ்வளவுதானே".
"யாரும் நான் சொல்லாமலே புரிஞ்சுகிட்டு ஹெல்ப் பண்ணி இருக்க மாட்டாங்க இல்ல".
"ம்ம் அதுவும் சரிதான். இப்போ உனக்கு அந்த டீ-ஷர்ட் எப்படி இருக்குன்னு போட்டு பாக்கலாமா?" என்றவன் அவள் மறுத்தும் வம்படியாய் அவளை அதனை அணிய வைத்திருந்தான்.
இப்பொழுது அவளுக்கு அத்தனை கச்சிதமாய் அது பொருந்தியிருக்க, "அழகா இருக்கு டி".
"இருக்கும் இருக்கும்.." என்றவளுக்கு அவனின் பார்வை போகும் திசையில் குப்பென்று முகம் சிவந்து விட வேகமாய் அந்த டீ-ஷர்டை கழட்டிவிட்டாள்.
"ம்ம்ச்ச.. ஏன் டி எதுக்கு அதுக்குள்ள கழட்டுன" என்று சலிப்பாக அவன் கேட்கவும்.
"உங்க பார்வையே சரியில்ல. பாட்டிக்கு உடம்பு சரியில்லனு தானே பார்க்க வந்தீங்க. ஆனா, நீங்க நடந்துக்குறத பார்த்தா அப்படி தெரியலையே" என்றாள் சந்தேக பார்வையோடு.
"யாரு சொன்னா பாட்டிய பார்க்க தான் வந்தேன். அப்படியே உன்னயும்.." என்று அவளின் கன்னத்தைப் பிடித்து கொஞ்சினான்.
"சரி சரி போதும் கிளம்புங்க நேரமாகுது".
அவளின் கையைப் பிடித்து சட்டென்று அவன் தன்னை நோக்கி இழுக்கவும். அவளோ நிலை தடுமாறி அவனிலேயே மோதி நின்றாள்.
அவளை தன்னோடு நிறுத்திக் கொண்டவன், "முடியல நிலா, ரொம்ப கஷ்டமா இருக்கு. பேசாம உன் பாட்டிய நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு போயிடலாமா? அவங்களுக்கும் இங்க தனியா இருக்க கஷ்டம் தானே".
"இல்ல வேண்டாம்" என்றாள் பட்டென்று.
"ம்ம்ச்ச்.. அப்பத்தா எதுவும் சொல்லாம நான் பாத்துக்குறேன் டி".
"அப்படியெல்லாம் உங்க அப்பத்தா வாய ஈசியா அடைக்க முடியாது. அவங்க ஒரு வார்த்தை பேசினாலும் அது என் பாட்டிக்கு எவ்வளவு அசிங்கம், சொன்னா புரிஞ்சுக்கோங்க".
சட்டென அவளிலிருந்து விலகி நின்றவன், "அப்போ உனக்கு என் கஷ்டம் புரியலையா.. தினமும் இப்படி வந்து வந்து கொஞ்ச நேரம் பேசிட்டு அப்படியே போக வேண்டியதா இருக்கு. ரொம்ப கஷ்டமா இருக்கு நிலா".
"கொஞ்ச நாள் தானே பாட்டிக்கு கொஞ்சம் உடம்பு சரியானதும்..".
"போடி" என்றவன் கோபமாய் அறையை விட்டு வெளியேறிவிட்டான்.
கூடத்தில் அமர்ந்திருந்த செங்கேணி பொற்செல்வனைக் கண்டதும், "வாங்க தம்பி ஏதாவது குடிக்கிறீங்களா?".
அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தவன், "குடுங்க".
வேகமாய் சென்று அவனுக்காக காபியை கலந்து கொண்டு அவர் எடுத்து வரவும். செந்நிலா ஒருபுறமும் பொற்செல்வன் ஒரு புறமும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி பார்த்து முறைத்துக் கொண்டே இருந்தனர்.
இருவருக்கும் இடையே ஏதோ பிரச்சனை என்பதை புரிந்து கொண்ட பாட்டி மௌனமாய் பொற்செல்வனிடம் தான் கலந்த காபியை கொடுக்கவும். அவனும் வாங்கி பருகி விட்டு கிளம்பிவிட்டான்.
"என்னாச்சு கண்ணு தம்பி முகமே சரியில்ல. நீ வேற தம்பிய பார்த்து முறைச்சுகிட்டு நிக்கிற ஏதாவது சண்டை போட்டியா".
"ஆமா, உன் தம்பிக்கு ஒண்ணுமே தெரியாது பாரு. நான் தான் அவர்கிட்ட சண்டை இழுக்கிறேன். பாட்டி நீ இதெல்லாம் யோசிச்சு உன் பிபிய ஏத்திக்காத சொல்லிட்டேன்".
அந்த வார இறுதியில் கீதாவும், வள்ளியும் செங்கேணியைப் பார்க்க வந்திருந்தனர்.
"நீயும், செல்வாவும் இப்படி அங்கிட்டும் இங்கிட்டும் தனித்தனியாக கிடைக்க பேசாம உன் பாட்டிய நம்ம வீட்டுக்கே அழைச்சிட்டு வந்து வச்சுக்கலாம்ல" என்று எதேர்ச்சையாய் பேச்சை துவங்கினார் கீதா.
"ஆமா நிலா, நான் கூட சொல்லனும்னு நினைச்சேன். கீழ ஒரு அறை சும்மா தானே இருக்கு. அதுல பாட்டிய தங்க வச்சுப்போம் என்ன சொல்ற?" என்றார் வள்ளியும் ஆசையாய்.
மருமகளின்றி அவருக்கு வீடே என்னவோ போல் இருக்க. அவராலும் அவளை விட்டு இருக்க முடியவில்லை.
"இல்லத்த அதெல்லாம் சரி வராது. எதுக்கு தேவையில்லாத சங்கடம். இன்னும் ரெண்டு நாள்ல நான் வீட்டுக்கு வந்துடுவேன்".
"நீ வீட்டுக்கு வந்துடுவ சரி, உன் பாட்டிய யார் பார்த்துப்பா? திரும்ப உடம்புக்கு இப்படி ஒன்னுனா யார் பாப்பா".
கீதாவிற்கு பதில் பேச முடியாமல் அமைதி காத்தாள்.
"உன் சங்கடம் எங்களுக்கும் புரியுது நிலா. என்ன செய்ய நம்ம வீட்டு ஆத்தா வாய் அப்படி" என்று கூறிய கீதா எதையோ சிந்தித்தவர்.
"ஏன் நிலா இப்படி பண்ணா என்ன? பெரிய வீட்ல இருந்தா தானே என் மாமியார் ஏதாவது எடக்கு மடக்கா பேசுவாங்க. இவங்க எங்க வீட்ல இருக்கட்டும். ஏதாவதுனா உதவிக்கு நாங்களும் இருப்போம். நீயும் பக்கத்து வீடு தான் நினைச்ச நேரம் வந்து பாத்துக்கலாம்ல".
"அச்சோ வேண்டாம் அத்த" என்று உடனே மறுத்தாள் அவரின் யோசனையை.
சரியாய் அந்நேரம் வீட்டிற்குள் நுழைந்த பொற்செல்வன் செந்நிலாவை முறைத்துக் கொண்டே வந்து அமரவும்.
அவனுக்கும் குடிக்க தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தார் செங்கேணி.
"வா செல்வா, நல்ல நேரத்துல தான் வந்திருக்க. செந்நிலா இன்னும் ரெண்டு நாள்ல நம்ம வீட்டுக்கு வந்துடுமாம். அதுக்கப்புறம் அவங்க பாட்டி எப்படி இங்க தனியா இருப்பாங்க. அதான் நம்மளுடைய வீட்டுக்கு கொண்டு போய் வச்சுக்கலாம்னு சொல்றேன் முடியாதுன்னு மறுக்குறா" என்றார் கீதா.
"மேடம் அவங்க என்ன முடிவு பண்றாங்களோ அதுலயே தான் சித்தி கடைசி வரைக்கும் நிப்பாங்க. நாம சொல்ற பேச்செல்லாம் கேட்க மாட்டாங்க. இதெல்லாம் நான் எப்பவோ சொல்லிட்டேன். கேட்டா தானே.. எத்தன நாள் இங்க இருக்க முடியும். எப்படி பார்த்தாலும் நம்ம வீட்டுக்கு இவ வந்து தானே ஆகணும். அதுக்கப்புறம் அவங்க என்ன பண்ணுவாங்க. இங்க ஒத்தையில வயசானவங்க இருக்குறதுக்கு கொண்டு போய் நம்மளோட வச்சுக்கலாம்னு சொன்னா ஒத்துக்க மாட்டேங்குறா".
"அதுக்கு இல்லங்க இதெல்லாம் எப்படி சரிவரும். தேவையில்லாம பெரிய பிரச்சனையாகிடும். அதோட எனக்கும் இதுல விருப்பமில்ல".
"செல்வா நான் சொல்றத கேளு, உங்க வீட்டுக்கு வேணாம். எங்க வீட்ல வந்து இருக்கலாம்ல. அங்க யாரு இருக்கா, உன் அப்பத்தா என் வீட்டு பக்கம் கூட வர மாட்டாங்க".
"சித்தி சொல்றதும் சரிதானே நிலா. இவங்கள இங்க விட்டுட்டு நாம அங்க பயந்து கிடக்குறதுக்கு, அங்க வந்து இருக்கட்டும். அவள விடுங்க நீங்க என்ன சொல்றீங்க உங்களுக்கு வந்து அங்க இருக்க விருப்பமா?" என்று நேராய் செங்கேணியிடமே கேட்டு விட்டான்.
அவருக்கு தன் மானத்தை பற்றியோ மரியாதையை பற்றியோ எந்த ஒரு கவலையும் கிடையாது. தன் பேத்தி சந்தோஷமாய் கணவருடன் வாழ வேண்டும்.
அவரும் இரண்டு நாட்களாக பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார். இருவரும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே சுற்றுவதை, அவருக்குமே மனம் தாளவில்லை.
மாமியார் வீட்டிற்கு சென்றுவிடு என எத்தனையோ முறை கூறியும் பார்த்துவிட்டார். அவள் செல்வதாகவும் இல்லை. தான் இங்கே தனித்து இருப்பது அவளுக்கு இதற்கு பிறகு எத்தனை பயத்தைக் கொடுக்கும் என்பதையும் உணர்ந்தவர்.
"எனக்கு சம்மதம்ங்க தம்பி".
"பாரு, அவங்களே சம்மதிக்கிறாங்க உனக்கு என்ன நிலா? அப்படி என்ன அவங்கள நாம மரியாதை குறைவா நடத்திடுவோம்னு யோசிக்கிற நீ. என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா. எங்க குடும்பத்து மேல உனக்கு நம்பிக்கை இல்லையா. அப்பத்தாவ தவிர்த்து நாங்க யாராவது இவங்கள மரியாதை குறைவா நடத்தி இருக்கோமா.. இனியும் அதுபோல எந்த ஒரு விஷயமும் நடக்காது. தயவு செஞ்சு ஒத்துக்கோ. உனக்காக மட்டும் இல்ல, எங்களுக்காகவும் தான் சொல்றேன். அவங்கள இங்க விட்டுட்டு எப்போ என்ன ஆகும்னு பயந்துகிட்டு கிடக்கிறது, உன்ன பாத்து எங்களுக்கும் கவலையா இருக்கு. சொன்னா புரிஞ்சுக்கோ" என்று ஏதேதோ பேசி அனைவரும் சேர்ந்து அவளை ஒப்புக்கொள்ள வைத்துவிட்டனர்.
ஒரு புறம் தான் எடுத்த முடிவு சரி என்று தோன்றினாலும், மற்றொருபுறம் எங்கே இதுவே அவருக்கு மரியாதை குறைவாய் போய் விடுமோ என்ற எண்ணமும் எழத்தான் செய்தது.
ஆனாலும், வேறு வழி இன்றி ஒப்புக்கொண்டாள். அதன்படி செங்கேணி காமராஜரின் வீட்டிற்கு அழைத்துவரப்பட்டார்.