மழை - 7
மார்கழி மாத குளிர் ஊசியென உடலைத் துளைக்க. தலையில் இப்பொழுதுதான் குளித்ததற்கு சான்றாய் துண்டை சுற்றிக்கொண்டு கோலமிட்டுக் கொண்டிருந்தாள் செந்நிலா.
அருகில் இருக்கும் கோவிலில் இருந்து பக்தி பாடலின் இசை இவளின் செவிகளைத் தீண்டியது.
ஏனோ, மார்கழி மாதம் என்றால் அவளுக்கு அத்தனை பிடித்தம். இன்று நேற்று அல்ல, அவள் சிறு வயதாய் இருக்கும் பொழுதிலிருந்தே..
அந்த குளிர், கோவிலில் ஒலிக்கும் பக்தி பாடல்கள், வீதியில் அனைவரும் பல வண்ணங்களைக் கொண்டுத் தீட்டும் கோலங்கள் என அந்த மாதம் முழுவதுமே அவளுக்கு அத்தனை மன நிறைவாக இருக்கும்.
இப்பொழுதும் அதே மனநிறைவுடன் தான் தங்கள் வீட்டின் வாயிலில் கோலமிட்டுக் கொண்டிருக்கிறாள். இதழில் நிலைத்த மெல்லிய புன்னகையோடு.
"கண்ணு இப்படி பனியில நிக்காதன்னு உன்னட்ட எத்தன தடவ சொல்றது. உடம்புக்கு முடியாம போவும் முதல்ல உள்ள வா".
"இரு பாட்டி, இதோ கோலம் முடிஞ்சிடுச்சு" என்று அழகாக வர்ணங்கள் தீட்டிய அந்த ரங்கோலி கோலத்தைக் கண் குளிர தன் கண்களுக்குள் நிரப்பிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள்.
வழக்கம்போல் அவளுக்கான காபியை தயாராக வைத்திருந்தார் பாட்டி.
காபியை அருந்திக் கொண்டே அவள் அமர்ந்திருந்த வேளை, "கண்ணு.." என்று இழுத்தார் பாட்டி.
"என்ன பாட்டி?".
"மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலாமே கண்ணு, வயசாகிட்டே போகுதுல்ல. நான் கண்ண மூடுறதுக்குள்ள உன் கண்ணாலத்த பாக்கணும்"
அவரை முறைத்துப் பார்த்தவள், "எத்தன தடவ சொல்லி இருக்கேன் இப்படி சொல்லாதன்னு.. எனக்கு இருக்கிறது நீ மட்டும் தான். நீயும் என்னை விட்டுட்டு போகலாம்னு காத்துகிட்டு இருக்கியா?" என்று சிடுசிடுத்தாள்.
"அதுக்கு இல்ல கண்ணு, வயசு என்ன அப்படியே வா கெடக்குது. படிக்கணும்னு ஆசைப்பட்ட, கஷ்டப்பட்டு கடன உடன வாங்கி படிக்க வச்சுட்டேன். வேலைக்கு போகோணும்னு ஆசைப்பட்ட, இப்ப அதுவும் நடந்துடுச்சு. அடுத்து என்ன கண்ணு கண்ணாலம் தானே".
"விடமாட்டியா நீ" என்று சலிப்பாக கூறினாலும், பாட்டியின் மனநிலையும் அவளுக்கு நன்கு புரிந்தது.
"சரி, உன் விருப்பம். ஆனா, நீ எந்த மாப்பிள்ளை பார்த்தாலும் சரி, நீயும் என்னோடவே தான் இருக்கணும். அதுக்கு யாரு சம்மதம்னு சொல்றாங்களோ அவங்கள மாப்பிள்ளையா கூப்பிட்டு வந்து என் முன்னாடி நிறுத்து. நான் கண்ண மூடிட்டு என் கழுத்த நீட்டுறேன்".
அவள் கூறியதைக் கேட்டு தன் தாடையில் கையை வைத்த பாட்டி, "என்ன கண்ணு இப்படி சொல்லிட்ட, இதெல்லாம் எப்படி நடக்கும்?".
"ஏன் நடக்காது?".
"பின்ன என்ன கண்ணு, யாருமே இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க. அப்படியே அவங்க ஒத்துக்கிட்டாலும், நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்".
"ஏன், என்னோட வந்திருக்குறதுல உனக்கு என்ன பிரச்சனை. ஓ! இத்தன வருஷம் நான் உனக்கு பாரமா இருந்தது போதும்னு நினைக்கிறியா பாட்டி".
"ஆத்தீ.. என்ன நீ இப்படி எல்லாம் பேசுற.. உன்ன போய் நான் பாரமா நினைப்பேனா?".
"அப்புறம் என்னோட வந்திருக்க முடியாதுன்னா என்ன அர்த்தம்?".
அவளின் அருகில் அமர்ந்தவர். அவளின் தலையை வாகாக கோதிக்கொண்டே, "இங்க பாரு கண்ணு, இத்தன நாள் நாம ரெண்டு பேரும் ஒன்னா இருந்துட்டோம். ஆனா, கண்ணாலம் பண்ணா எல்லா பொண்ணுங்களும் அவங்க புருசன்மார் வீட்டுக்கு போறது தானே வழக்கம். நீ உம்புருசன் வீட்டுக்கு போகும்போது நானும் எம்பேத்தியோடதேன் வருவேன்னு வந்தா நல்லா இருக்குமா.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க என்ன நினைப்பாங்க?".
"யார் என்ன நினைச்சாலும் எனக்கு அதைப் பத்தி எல்லாம் கவலை இல்ல பாட்டி. என்னை சின்ன வயசுலருந்து கஷ்டப்பட்டு படிக்க வச்சது நீதான். ஒத்த ஆளா இருந்து இத்தன வருஷம் நீ தான் என்னை பத்திரமா பாத்துகிட்ட. வளத்து ஆளாக்கி இப்ப கட்டிக் கொடுத்ததும், நான் உன்ன விட்டுட்டு போயிடனுமா.. இதே நான் பேத்தியா இல்லாம பேரனா இருந்திருந்தா, கடைசி வரைக்கும் நீ என் கூடவே இருந்திருப்பல்ல. இப்ப அதனால என்ன, பேத்தியா இருந்தாலும் கூடவே இருக்கலாம். அதெல்லாம் யாரும் ஒன்னும் நினைக்க மாட்டாங்க. நான் வேலைக்கு போறேன், என்னுடைய சம்பாதியத்துல உன்ன வச்சு பார்த்துக்குறேன். என்னை கட்டிக்க போறவருடைய காசுலருந்து ஒத்த பைசா கூட உன்னுடைய செலவுக்கு எடுக்க மாட்டேன் போதுமா" என்று படபடவென பேசி விட்டாள்.
"ஐயோ கண்ணு! என்ன நீ இப்படி எல்லாம் பேசுற? உன் காசு உன்ன கட்டிக்க போறவரு காசுன்னு தனித்தனியா பிரிச்செல்லாம் பார்க்க கூடாது. கண்ணாலம் ஆகிட்டா நீங்க ரெண்டு பேருமே ஒன்னுதேன். இப்படி நீயா நானு பிரிச்சு பிரிச்சு பார்த்தா எப்படி குடும்பம் நல்லா இருக்கும் சொல்லு".
"இதெல்லாம் அப்புறமா பேசிக்கலாம். முதல்ல நான் கல்யாணம் பண்ணி போனா நீ என்னோட வருவியா மாட்டியா அத மட்டும் சொல்லு".
இவளுக்கு எப்படியாவது திருமணத்தை செய்து வைத்தால் போதும் என்று எண்ணிய பாட்டி, இப்போதைக்கு சரி என்று கூறி சமாளித்து விட்டார்.
"சரி, அப்போ மாப்பிள்ளை பாரு. ஆனா, என் கண்டிஷனுக்கு ஒத்துக்கிட்டா தான் நான் கட்டிப்பேன். மத்தபடி, நீ யாரை மாப்பிள்ளையா கொண்டு வந்து நிறுத்தினாலும் எனக்கு சம்மதம் தான்".
"அடடே! வாடா, நல்ல நேரத்துல தான் நாம வந்திருக்கோம்" என்று தன் மகனைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே வீட்டிற்குள் அவர்கள் அழையாமலே நுழைந்த லலிதா, "என்னத்த எப்படி இருக்கீங்க? என்னம்மா நல்லா இருக்கியா?".
இருவரும் அவர் எதற்காக வந்திருக்கிறார் என்பதை புரியாமல் பார்க்க.
"என்ன ரெண்டு பேரும் இப்படி முழிக்கிறீங்க. ஒரு நல்ல விஷயம் பேசலாம்னு வந்தேன். நல்ல வேளை, நான் வீட்டுக்குள்ள நுழையும்போது நம்ம செந்நிலா வாயிலிருந்தே அந்த நல்ல விஷயம் வந்துடுச்சு" என்றவரை புருவம் சுருக்கிப் பார்த்த செந்நிலாவிற்கு அவர் எதைப் பற்றி கூறுகிறார் என்பது நெற்றிப்பொட்டில் அடித்தார் போல் புரிந்தது.
"என்னத்த வந்தவங்கள உட்காரக்கூட சொல்லாம இப்படி வாயடைச்சு போய் நிக்கிறீங்களே.. வா அசோக், நம்ம வீடுதேன். இப்படி வந்து உட்காரு" என்று அங்கே போடப்பட்டிருந்த நாற்காலியில் சட்டமாக தன் மகனுடன் அமர்ந்தார்.
அசோக்கின் பார்வையோ இன்ச் இன்சாக செந்நிலாவை அளவெடுத்தது. அவனின் பார்வையே இவளுக்கு எரிச்சலை கொடுத்தது.
"கண்ணு நீ உள்ள போ" என்று அவனின் பார்வையை உணர்ந்த பாட்டி அவசரக் குரலில் கூறவும்.
"இருங்கத்த, செந்நிலா இங்கேயே இருக்கட்டும். அவங்கள பத்தின விஷயத்த தானே பேச வந்திருக்கேன். எதுக்கு சுத்தி வளச்சு பேசிக்கிட்டு, எதுவாயிருந்தாலும் வெளிப்படையா பேசுறது தானே நல்லது" என்று பிடிகை போட்டவர்.
எழுந்துச் சென்று செந்நிலாவின் கன்னத்தை தேய்த்து திருஷ்டி கழித்தவர். அவளின் தடையைப் பற்றிக் கொஞ்சியவாறு, "அட.. அட.. அட.. என் அண்ண மக எப்படி அம்சமா அழகா தேவத கணக்கா வளர்ந்திருக்கா. உன்ன எப்போ என் பையனுக்கு கட்டி எங்க வீட்டுக்கு மருமகளா அழைச்சிட்டு போகன்னு ஆசையா இருக்கு. இந்த தங்க சிலைய கட்டிக்க என் மகன் கொடுத்து வச்சிருக்கணும்".
ஏற்கனவே, அசோக்கின் பார்வையில் எரிச்சலோடு இருந்தவளிற்கு லலிதாவின் வார்த்தைகள் வேறு கடும் கோபத்தைக் கொடுத்தது.
உஷ்ண மூச்சுக்கள் வெளியேற முறைத்துப் பார்த்தாள் அவரை.
"படிப்பும் முடிஞ்சிடுச்சு, வேலைக்கும் சேர்ந்துட்ட, இனி எதுக்கு நாள தள்ளி போடணும். அடுத்து கல்யாணம் தானே.. அதான் என்னைக்கு வச்சுக்கலாம்னு உங்கள பார்த்து பேசிட்டு போகலாம்னு வந்தேன்".
சட்டென்று அவர்களை நோக்கி தன் கரம் கூப்பிய செந்நிலா, "என்னை மன்னிச்சிடுங்க. உங்க பையன கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பமில்ல" என்று முகத்தில் அடித்தார் போல் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக எந்த ஒரு பூசலுமின்றி வெளிப்படையாகவே கூறிவிட்டாள்.
"அம்மாடி நான் பேசுறேன்" என்ற பாட்டிக்கோ உள்ளுக்குள் பரிதவிப்பாக இருந்தது.
லலிதாவின் குணத்தைப் பற்றி அறிந்தவராயிற்றே.
"என்னது விருப்பம் இல்லயா.. சின்ன வயசுலருந்து என் அண்ண மக தான் உன் பொண்டாட்டின்னு சொல்லி என் பையன் மனசுல ஆசைய வளத்துட்டேன். இப்ப வந்து விருப்பம் இல்லனா என்ன அர்த்தம். கட்டிக்கிற முறை தானே, என் பையன கட்டிக்க உனக்கு கசக்குதா".
நொடியில் அவரின் பாவனை, பேச்சு, தன்மை என அனைத்தும் மாறியது.
"உங்க மகன் மனசுல நீங்க ஆசைய வளத்தா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது" என்று அவளும் காரமாக பதில் கொடுத்தாள்.
அவளுக்கு கோபமாக எதுவோ பதில் உரைக்க முற்பட்ட லலிதாவை தடுத்த அசோக், "அம்மா இரும்மா" என்றவாறு சாவகாசமாக இருக்கையில் இருந்து எழுந்து இவர்களை நோக்கி வந்தான்.
"இப்போ எதுக்கு அவ கிட்ட கோபப்படுற, இப்படி முரண்டு பிடிக்கிற குதிரையை அடக்கி ஆளுறது தான் இந்த அசோக்குக்கு ரொம்ப பிடிக்கும். எங்க போயிடப் போறா எம்மாம மக" என்று செந்நிலாவை பார்த்துக் கொண்டே அசடு வழிய கூறியவன்.
"இங்க பாரு இத்தன நாளு படிக்கிற, வேலைக்கு போறியேனு அமைதியா இருந்தேன். இனியும் நான் அப்படியே இருப்பேன்னு நினைக்காத. என்னைக்கா இருந்தாலும் நீ எனக்கு தான். அதை எதுக்காக தள்ளிப் போடணும்"
"அதை நீங்க மட்டும் முடிவு பண்ணா போதாது. நாங்க ஒத்துக்கணும். முறை இருக்கிறதுக்காக முறை தவறி நடக்கிறவனை எல்லாம் கட்டிக்க முடியாது" என்று தன் பற்களைக் கடித்துக்கொண்டு கோபமாக கூறினாள்.
"என்னடி, இப்போ என்ன எம்மவ மொற தவறி போய்ட்டான்னு சொல்ற".
"அதை வேற நான் என் வாயால சொல்லனுமா.. ஏன் வளர்த்த உங்களுக்கு தெரியாதா உங்க மகனுடைய நடத்தையை பத்தி. நானே பல தடவ பல பொண்ணுங்களோட உங்க பையன பார்த்திருக்கேன். அப்படிப்பட்ட ஒருத்தன நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நீங்க எப்படி நினைக்கிறீங்க?".
"வயசு பசங்கனா அப்படித்தேன் இருப்பாங்க. அதெல்லாம் கல்யாணம் பண்ணா தானா சரியா போயிடும். அவன சரி கட்டுறது உன்னுடைய திறமை. அதை விட்டுட்டு அவன் மேல குத்தம் சொல்ற".
அவரை எரிச்சலோடு பார்த்தவள், "எனக்கு வேற வேலை இல்ல பாருங்க, உங்க பையன் ஊரெல்லாம் போவான். அவன கல்யாணம் பண்ணி திருத்தி வாழனும்னு எனக்கு தலையெழுத்தா".
இருவருக்கும் இடையே வாக்குவாதம் காரசாரமாக சென்று கொண்டிருந்தது. இடையில் சிக்கிய பாட்டி தான் நடப்பதைப் பரிதாபமாக பார்த்துக் கொண்டே நின்றிருந்தார்.