பரிதியின் பவித்ரமே -03
மனதினுள் ஆழிப் பேரலை ஒன்று சுழன்றடித்தது பரிதிக்கு.
"அடுத்த கல்யாண சாப்பாடு நம்ம இளாவோடது தான்"என்று ஒவ்வொரு திருமணத்தின் போது பேசும் பேச்சுக்கள் தான் இன்று அவன் சென்று வந்த திருமணத்திலும் நிகழ்ந்தது.
"என்ன ண்ணே என் மகளே குத்த வச்சுட்டா எப்ப தான் எங்களுக்கு கல்யாண சாப்பாடு போடுவ நீ?"என்று வெந்த புண்ணில் வெந்நீர் வார்த்து விட்டு சென்றாள் அவனின் ஒன்று விட்ட சித்தப்பா மகள்.
"ஏல சும்மா போ மாட்டியோ அவனே வேசடையில (வேதனையில) கெடக்கான் நீ வேற...!"என்று ஒரு பெரியவர் அதட்டி விட்டுச் செல்ல, அதுவே அவனுக்கு தலையிறக்கமாக தான் இருந்தது. 'அவர்களே பேசி அவர்களே தன்னைப் பற்றி முடிவு எடுத்து செல்கிறார்களே?' என்ற எரிச்சல். உணவைக் கூட உண்ணாமல் மொய் மட்டும் செய்து விட்டு கிளம்பி வந்து விட்டான். பழைய ரணங்களை கிளறி விட்டது போல் ஒரு தோற்றம். சில மாதங்களுக்கு முன்பு நவ்யாவை வேறு பார்த்திருந்தான் ஒரு துணிக் கடையில். விற்பனை பணிப் பெண்ணாக நின்றிருந்தாள் யாரோ ஒரு பெண்ணுக்கு சேலைகளை எடுத்து காட்டிய வண்ணம். முகம் சற்று பொலிவிழந்து தலை முடி கூட லேசாய் நரைத்திருந்தது. அவள் இவனைப் பார்த்தாளா என்று அவனுக்கு தெரியவில்லை.
' ஏன் ஏதோ போல இருக்கிறாள்?' என்று நினைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டான் அவசரமாக.
திருமணத்தை நிறுத்திய ஓரிரு மாதங்களிலேயே அவளோடு படித்த பையனை திருமணம் செய்து கொண்டதாக தகவல் கிடைத்தது. அதன் பிறகு பெரிதாய் அவளைப் பற்றிய செய்திகள் இல்லை. இவனும் நுணுக்கி ஆராயவில்லை. அது அவனுக்கு தேவை இல்லாத ஒரு விஷயம் ஆகிற்றே!. அத்துடன் வந்த வரன் எல்லாம் தட்டிப் போக ,'கல்யாணமும் வேணாம் ஒண்ணும் வேணாம்' என்று தீர்மானித்து விட்டான்.
அதன் பிறகு திருமணம் பற்றி யார் பேசினாலும் எரிந்து விழ மற்றவர்கள் கேட்காது போனாலும் நெருங்கிய உறவுகள் யாரோ ஒருவர் அவன் மனதை காயப்படுத்த தான் செய்தனர்.
அந்த நேரம் எல்லாம் அவ்வளவு ஆத்திரம் வந்தாலும் அடக்கி கொண்டு சமாளிப்பாய் புன்னகை செய்து கடப்பதே பெரும் பாடாக இருந்தது.
இடைப்பட்ட காலத்தில் காதல் என்று கூட யார் மீதும் வரவில்லை பரிதிக்கு. வரிசையாக பெண் வீட்டார் அவனுக்கு என்ன குறையோ திருமணம் நின்று போனது. அந்த பெண் வீட்டாரிடம் கேட்டது போல நம்மிடமும் வரதட்சணை கேட்டால் என்ன செய்ய என்று ஒதுக்கினர். எத்தனை விளக்கம் கொடுத்தாலும் அழிக்க முடியாத சொற்களாய் அவன் மீது வரதட்சணை கேட்டான் என்ற பெயர் பதிந்து விட்டது. இப்படியே நாட்கள் தள்ள இப்போது வயது கூடி விட்டது என்று தட்டி கழிக்கின்றனர் அவனை. வெறுத்து போன மனம் இனி பெண்ணை நினையாதே தேடாதே என்று தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, விளைவு எங்கேயும் பெண் தேடுவதில்லை. காதுபட குறை பேசும் உறவுகளிடமும் நெருக்கம் காட்ட முயலவில்லை.
கடந்த கால நினைவுகளில் அமிழ்ந்தவனை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது அவனின் கைபேசி ஓசை.
அவனது சித்தப்பா தனபால் தான் அழைத்திருந்தார்.
"சொல்லுங்க சித்தப்பா எப்படி இருக்கீங்க?"என்று நிமிர்ந்து அமர்ந்தான்.
"எனக்கு என்னல நல்லாதான் இருக்கேன். எங்கப்பு இருக்க நீ?"என்று தனபால் கேட்க
"வீட்டுல தான் இருக்கேன். என்னமும் சேதியா?!"என்று வினவினான் அவன்.
"என்னத்த சேதி. நம்மூர் கொடை வருதல்லோ அதுக்கு மருமவளோட சொந்தம் எல்லாம் வருமாட்டுக்கு. தங்கலு போட செலாத்தலா வீடு இருந்தா கேட்டாவ, அதேன் நம்மூடு கொட்டாரமாட்டம் இருக்கையில வெளியே தேடுவானேன்னு வரச் சொல்லி தாக்கல் சொல்லிட்டேன். ஊட்ட நறுவிசா தொடைச்சு போடுறீயாய்யா?. மூணு நா தங்கலுதேன் ரொம்ப இல்ல"என்றார் படபடப்பாக.
இது போன்ற நிகழ்வுகள் புதிது இல்லை ஆதலால் "அதுக்கென்ன சித்தப்பா வரச் சொல்லுங்க. சமைக்க புடிக்க ஆளு நீங்க தான் பாத்துக்கணும்"என்றான்.
"அது நம்ம சமையற்காரன் சுப்பு கிட்ட தாக்கலு சொல்லிட்டேன், ரெண்டு நா செண்டு வந்திடுவியான் நீ அடுப்பு வைக்க எடம் பாத்து போடு. பொறகால தான் எடம் இருக்குதே. பெறவு சமைக்க புடிக்க மளியசாமானுக்கு கடை காமிச்சு குடுக்கணும் வேற ஒண்ணும் இல்லய்யா"என்று தனபால் கூற, சரியென்றவன் இணைப்பைத் துண்டித்து விட்டு படுக்கையில் விழுந்தான்.
ஒவ்வொரு திருவிழாவும் இவன் வீட்டில் சொந்தங்கள் நிரம்பி தான் வழிகிறது. ஆனால் இவனுக்கான சொந்தங்கள் தான் ஒருவரும் இல்லை.
ஊரில் ஏதாவது விசேஷம் என்றால் "அதான் இளா வீடு இருக்கே தங்கிக்கலாம்"என்று அவர்களாகவே முடிவெடுத்து வந்து விடுவார்கள்.
ஆயாசமாக இருந்தாலும் வேறு வழியின்றி சம்மதித்து விடுவான். வேண்டாம் என்று மறுத்தால் நன்றாக பேசுபவர்களே,' ஆள் அண்டாத பய அதேன் கலியாணம் கூட கூடி வரலை' என்று பேசத் துவங்கி விடுவார்கள். அதுவே பெரும் எரிச்சலை தரும்.
இது போன்ற பேச்சுக்களை தவிர்ப்பதற்காவே வீட்டிற்கு தானே வருகிறார்கள் என்று விட்டு விடுவான்.
படுக்கையில் விழுந்தவனுக்கு உறங்கப் பிடிக்கவில்லை. மீண்டும் ஒரு அழைப்பு வர "யார்றா இது சும்மா?"என்று சலித்தபடி எடுக்க அன்பழகன் என பெயர் தாங்கி வந்திருந்தது அழைப்பு.
"ஹலோ சொல்லுங்க அன்பழகன், என்ன இந்த நேரத்தில கூப்பிட்டு இருக்கீங்க"என்று சோம்பலாய் எழுந்தமர
"சார் கடைக்கு வர்றேன்னு சொல்லி இருந்தீங்க அதான் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்"என்றதும் தான் நினைவிற்கே வந்தது அங்கே வருகிறேன் என்று சொல்லி இருந்தோமே என்று
"சுத்தமா மறந்து போயிட்டேன் அன்பழகன். நாளைக்கு கண்டிப்பாக வர்றேன்"என்றவன் "இந்த வாரம் தர வேண்டிய பேமெண்ட் எல்லாம் முடிஞ்சது தானே எதுவும் பாக்கி இல்லையே?"என்று கேட்க
"அந்த நார்த் இந்தியன் பசங்களுக்கு மட்டும் சம்பள பாக்கி இருக்கு சார். அப்புறம் கார் மேட் ஆர்டர் போட்டோமே அதுக்கு மட்டும் செக் அனுப்பணும் சார்"என்றார் அவர்.
"போட்டுட வேண்டியது தானே அன்பழகன். அந்த பசங்க வீக் எண்ட் ல பணம் வீட்டுக்கு அனுப்பணும்னு சொல்வாங்களே?!"என்று கேட்க
"இல்லை சார் பணத்தை லேட்டா வாங்கிக்கிறேன்னு சொல்லி இருந்தாங்க வாரா வாரம் வாங்கினா இங்கேயே செலவு ஆகுதாம்"என்று சொல்ல
"சரி நாளைக்கு வர்றேன் பேசிக்கலாம். நம்ம ஸ்டாப்ஸை சீக்கிரம் வந்திட சொல்லுங்க"என்று ஃபோனை வைத்து விட்டான்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு மூன்று இடங்களில் இவனது காருக்கு தேவையான இதர பாகங்கள் விற்பனை செய்யும் கடை இருக்கிறது. மூன்றிற்கும் நம்பிக்கையான ஆள் போட்டு பார்த்துக் கொள்கிறான். அவ்வபோது கடைக்கு சென்று மேற்பார்வை இட்டு கணக்கு வழக்குகளை மட்டும் பார்த்துக் கொள்வான். அதுவும் மாதம் ஒரு முறை மட்டுமே செல்வது அவன். ஒவ்வொரு நாளைக்கு ஒரு கடை என்று பிரித்து பார்ப்பான்.
"நாளைக்கு கடைக்கு போவேனா இங்கே வேலையை பார்ப்பேனா?"என்று தனக்கு தானே பேசிக் கொண்டவன் தனபாலிற்கு அழைத்து எத்தனை மணிக்கு வருகிறார்கள் என்று கேட்க
"அந்திக்கு வந்துடுவாங்க. நீயி மூணு மணிக்கா இருந்தா போதும்"என்றார் அவர்.
"அப்போ சாவியை பக்கத்துல குடுத்துட்டு போறேன் சித்தப்பா. நான் வர ஆறு மணி ஆவும். கடைக்கு போய் சம்பளம் போடணும்."என்றான்.
"சரிதான் ப்பு. நம்ம அருளு கூட வாரியான் பாத்துக்கிடுவான்"என்றவர் "வாரவுகளை கொறையில்லாம கவனிச்சுக்கப்பு"என்று இணைப்பைத் துண்டிக்க "ஹ்ம்ம்"என்று சொல்லி விட்டு படுத்து விட்டான்.
மறுநாள் காலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்ய ஆள் வரவழைத்து கொஞ்ச நேரம் இருந்தவன், பிறகு சாவியை பக்கத்து வீட்டில் தந்து விட்டு கடைக்கு கிளம்பி விட்டான்.
********
"பவித்ரா சார் இன்னைக்கு கடைக்கு வர்றாங்க அவர் ரூமை க்ளீன் பண்ணி வைம்மா. அப்படியே மத்யான சாப்பாட்டுக்கு ஃபோன் பண்ணி சொல்லிடு ஒரு மணிக்கு எல்லாம் சாப்பாடு வந்திருக்கணும்"என்று அன்பழகன் சொல்லிக் கொண்டிருக்க "சரிங்க சார். "என்றவள் "இந்த தடவையாவது சம்பளத்தை ஏத்துறது பத்தி பேசுங்க சார்"என்றாள்.
"பேசுறேன் மா. அவர் இங்க வந்தே கிட்டத்தட்ட ஏழு மாசம் மேல ஆகுது அதான் சொல்ல முடியலை. நேர்ல பார்த்து பேச தான் வெய்டிங்"என்றவர் கணக்கு வழக்கு கோப்புகளை எல்லாம் வரிசையாக எடுத்து வைத்தார்.
"வேலைக்கு சேர்ந்த புதுசுல ரெண்டு மூணு தடவை அவரை பார்த்தது தான் சம்பளம் கூட முதல் மாச சம்பளம் தான் அவர் கையால வாங்கினேன். நல்லா வேலை பார்க்கணும் னு சொல்லி தந்துட்டு போன மனுசன். நானும் வேலைக்கு வந்து ஒரு வருஷம் ஆகப் போகுது"என்று சிரித்தாள் பவித்ரா.
"அது என்னவோ தெரியல பவி, அவருக்கும் உனக்கும் நேர்ல பார்க்க அமையவே மாட்டேங்குது. கரெக்டா அவர் வர்ற நாளில் நீ லீவ் எடுக்கற மாதிரி ஆகுது இல்லைனா வெளி வேலைக்கு போற மாதிரி வருது"என்று சீதாலட்சுமி கூற
"அப்படியும் இல்லாட்டா ரெண்டு பேரும் இருந்தாலும் பார்க்கிற சந்தர்ப்பம் அமையாம போகுது"என்று புன்னகைக்க
"நாளைக்கு தான் வர்றாரே பாரேன்"என்ற சீதாலட்சுமி "வெளியே வேலை இருந்தா நான் போறேன் நாளைக்கு"என்றார்.
இளம்பரிதி வருவதற்குள் அவன் அமரும் அறையை சுத்தம் செய்து விட்டு வந்து விட்டாள்.
"அண்ணே இன்னோவாக்கு சன் ஃபிலிம் ஒட்டணுமாம்.ஒரு மணி நேரத்தில் கேட்கிறாங்க"என்று வெளியே இருந்த பையன் வர
"உட்காருங்க சார் பவி நீ மாடல் காட்டு. சீதா நீங்க போய் அந்த பஞ்ச் காருக்கு வீல் கப் சரியா ஃபிட் ஆகலைனு கம்ப்ளைன்ட் பண்ணாங்க அதைப் போய் பாருங்க."என்றவர் "டேய்! பார்த்து செஞ்சு குடு நீ. அந்த பீகாரி பசங்களை சாப்பிட அனுப்பி வை"என்று வரிசையாக சொல்ல அனைவரும் அவரவர் மூழ்கிப் போயினர்.
"சார் நம்ம கடையில நாலு வெரைட்டி இருக்கு. இது பேசிக் மாடல்."என்று விலையோடு கூறிய பவித்ரா "இந்த ஃபிலிம் ஒட்டினா வெயில் உள்ள கொஞ்சம் கூட வராது சார். பெஸ்ட் குவாலிட்டி. இதுதான் அமவுன்ட் ஓகே சொன்னா ஒட்டிடுவாங்க பசங்க"என்றாள்.
"ரெண்டாவது காட்டினதை ஒட்டுங்க மேடம் அப்படியே கார் கவர் காட்டுங்க"என்று கேட்க அதையும் எடுத்து காட்டி விலை பட்டியலை கொடுத்தாள்.
"இது நல்லா இருக்கு மேடம் டிஸ்கவுண்ட் ஏதாவது செஞ்சீங்கன்னா இப்பவே வாங்கிக்கிறேன்"என்றார் வந்திருந்தவர்.
"கேட்டு பார்க்கிறேன் சார். இதுக்கு மேல கம்மி பண்ணா எங்களுக்கு லாஸ். இதுவே கம்மி ரேஞ்சில் தான் சொல்லி இருக்கேன் சார்"என்று பேசிப் பேசியே வந்திருந்தவரை வாங்க வைத்து விட்டாள்.
பணத்தை வாங்கி உள்ளே வைத்து விட்டு கையெழுத்து ஒன்றை வாங்கவும் இளம்பரிதி உள்ளே வரவும் சரியாக இருந்தது.
..... தொடரும்.