மறுநாள் காலை மடிக்கணிணியில் வேலைக்கு விண்ணப்பித்து கொண்டிருந்தாள்.
“நிருஷி, சாப்பிட வா” என்றபடி மைதிலி உள்ளே வந்தவர், மகள் ஏதோ வேலையாக இருப்பதை கண்டு மடிக்கணிணியில் பார்வையை பதித்தார்.
“நிரு என்ன பண்ணிட்டு இருக்க?”
“வேலைக்கு அப்ளை பண்ணிட்டு இருக்கேன்”
“உனக்கென்ன பைத்தியமா? எதுக்கு வேற இடத்துல வேலைக்கு அப்ளை பண்ணிட்டு இருக்க? அப்பாவோட கம்பெனிக்கு போய் அவருக்கு உதவியா இருக்கலாமில்ல?”
“எந்த அப்பா?” என்றாள் ஏளனமாக
“நிரு” அழுத்தமாக அழைத்த மைதிலியின் கண்கள் கலங்கிட உடனே சமாளித்து “ராஜ் தனியா அல்லாடறாரு நிரு. நீயும் அவர்கூட ஆபிஸ் வந்தா உதவியா இருக்கும்னு நினைக்கிறாரு”
“நான் ஏன் அவருக்கு உதவியா இருக்கணும்? அவர் ஆபிச பார்த்துக்க நான் என்ன அவர் வாரிசா?”
“பின்ன இல்லையா?”
“இல்ல, உன் ரெண்டு பசங்க தான் அவரோட வாரிசுங்க. நானில்ல” என்றவள் அங்கிருந்து வெளியேறினாள்.
புசுபுசுவென்ற கோபத்துடன் செல்பவளை ஹாலில் அமர்ந்தபடி செய்திதாளை வாசித்துக் கொண்டிருந்த ராஜ் கவனிக்க தவறவில்லை. உடனே வாசலில் நின்றிருந்த டிரைவருக்கு கண் ஜாடை காட்ட, டிரைவர் அவளுக்கு முன்னே ஓடி காரை எடுத்து வந்து வாசலில் நிறுத்தி கார் கதவை திறந்து விட்டார்.
அதில் ஏற மனமில்லாமல், “டிரைவர் ஆட்டோவ கூப்பிடுங்க” என்றாள் மிடுக்குடன். ஆட்டோவிற்கு பணம் கொடுக்க ராஜ் தான் வரவேண்டும் என்று மனம் இடித்துரைத்தது.
“சின்னம்மா, காலம் கெட்டு கிடக்குது. தங்க சிலையாட்டம் இருக்கீங்க. தனியா ஆட்டோவுல போவக்கூடாது தாயி. எங்கே போவணும்னு சொல்லுங்க, நான் கொண்டு போய் விடறேன். ஆட்டோவுக்கு கொடுக்கற பணத்த எனக்கு கொடுத்துடுங்க” அவள் கோபமாக வெளியே செல்லும் போதெல்லாம் அவர் கூறும் அதே வார்த்தைகள்.
“என்கிட்ட காசு இல்லியே?” என்றவளின் உதடு பிதுங்கியது. கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.
“அதுக்கென்ன கண்ணு, வேலைக்கு போன பொறவு கொடுங்க, வாங்கிக்கிறேன்” என்றார் வழக்கம் போல
அதில் சமாதானம் ஆனவள், “கண்டிப்பா வேலைக்கு போனதும் கொடுத்துடுவேன், நீங்க வாங்கிக்கணும்” என்றபடி காரில் ஏறினாள். பால்கனியிலிருந்து நிருஷிகா மற்றும் டிரைவரின் உரையாடலை கேட்டு புன்னகைத்தார் ராஜ்.
அன்றைய தினம் எங்கெல்லாம் வாக் இன் இன்டர்வியூ இருந்ததோ அங்கெல்லாம் சென்று நேர்முக தேர்வில் பங்கேற்றாள். அவளின் சுயவிவரத்தை கேட்டபோது தேவ்ராஜ்ஜை தந்தை என்றோ பாதுகாவலர் என்றோ சொல்ல முடியாமல் சில இடங்களில் தவிக்க, அவர்கள் பார்த்த பார்வையில் கூனி குறுகி போய் மேற்கொண்டு பதிலளிக்க முடியாமல் எழுந்து விட்டாள்.
இன்னும் சில இடங்களில் தேவ்ராஜ் தன் கார்டியன் என்று சொல்ல, “அவரே பெரிய பிசினஸ்மேன் ஆச்சே, நீங்க எங்ககிட்ட வேலைக்கு வர காரணம் என்ன? இதுல எதாவது வில்லங்கம் இருக்கும்னு தோணுது. இருபதாயிர ரூபாய் சம்பளத்துக்கு வேலை கேக்கறதுக்கு பிஎம்டபள்யூ கார்ல வந்திருக்கீங்க?” என்று பலர் பலவிதமான கேள்விகள் கேட்க ஓய்ந்து போய் வெளியேறினாள்.
அவளிம் முகவாட்டத்தை கவனித்த டிரைவர் “என்னாச்சும்மா வேலை கிடைக்கலயா?”
அவர் கேள்விக்கு பதில் சொல்லாமல், இருக்கையில் சாய்ந்து கண்களை மூடியவள், எப்எம்ஐ ஆன் பண்ணுங்க என்றாள்.
“நண்பர்களே…
‘நீங்க என்ன பண்ணாலும் ஒன்னும் நடக்க மாட்டேங்குதுன்னு நினைக்குறீங்களா? எத்தனை முயற்சி பண்ணாலும் தோல்வி தான் கிடைக்குதுனு வருத்தத்துல இருக்கீங்களா?
என்னை நம்புங்க, ஏதாவது பெரிய விஷயம் உங்கள தேடி வரப்போகுது அதுக்கான sign தான் இதெல்லாம். வாழ்க்கையில சாதிச்சவங்க நிறைய பேரு, பல தோல்விகளை சந்திச்சிருக்காங்கங்கறத மறந்துடாதீங்க. இப்போ தான் நீங்க முதல் தோல்வி சந்திச்சு இருக்கறதா நினைச்சுக்கோங்க. இன்னும் நேரம் இருக்கு, வேகம் வேண்டாம். விவேகம் போதும். உங்க எல்லையை அடையற வரைக்கும் முயற்சிய நிறுத்தாதீங்க.
அதே சமயம் நம்ம அடைய நினைக்கிற எல்லையும் எப்போதும் ஒன்னா இருக்கறதில்ல. சைக்கிள்ள போகும் போது வண்டி வாங்கணும்னு நினைக்கிறோம், வண்டியில போகும் போது கார் வாங்கணும்னு நினைக்கிறோம். கார்ல போகும் போது, உடல்உழைப்பு இல்லாததால வாக்கிங் போகணும்னு நினைக்கிறோம். இப்படி நம்மளோட எதிர்பார்ப்பு மாறிட்டே தான் இருக்கு. அதனால வாழ்க்கையில சுயதிருப்தி அவசியம் மக்களே. ரொம்ப போரடிக்கிறேனு நீங்க திட்றது நல்லாவே கேக்குது. இப்போ பாட்ட கேட்டுட்டு வாங்க” ரிஷியின் பேச்சை கேட்டுக் கொண்டே பக்கவாட்டில் இருந்த இருசக்கர வாகனத்திற்கான ஷோரூமை பார்த்தவள்
“வண்டிய நிறுத்துங்க” கத்தினாள்.
“ஏன் பாப்பா?”
“உங்க கிட்ட ஐடி கார்டு இருக்கா?”
“இருக்கு”
“உங்க பேர்ல எனக்கு இஎம்ஐல ஒரு ஸ்கூட்டி வாங்கி தாங்க. இப்போதைக்கு எனக்கு வேலை இல்லாததால கடன்ல வண்டி தரமாட்டாங்க. தேவையில்லாம கார்டியன் பேரை சொல்லி தொலையணும். உங்க பேர்ல வண்டிய எடுத்து கொடுங்க. மாசாமாசம் பணத்தை நான் கட்டிட்றேன்”
“எதுக்கு சின்னம்மா, ஐயாகிட்ட சொன்னா கலர்கலரா வாங்கி வீட்டு முன்னாடி நிறுத்திடுவாரே”
“உங்க பேர்ல கடன் வாங்கி தரமுடியாதுனு சொல்லுங்க, எதுக்கு தேவையில்லாம பேசிட்டு இருக்கீங்க?” என்றாள் எரிச்சலுடன்
டிரைவர் ஓரமாக காரை நிறுத்திவிட்டு, போன் பேசிவிட்டு வந்தார். “கீழே இறங்குங்கம்மா”
“எதுக்கு?”
“நீங்க தானே ஸ்கூட்டி வேணும்னு கேட்டீங்க. என்னோட ஏடிஎம் கார்ட்ட கொடுத்தா கடனா வண்டி கொடுப்பாங்களா?”
“வாவ், உங்களுக்கு ஓகேயா? நீங்க பயப்படாதீங்க, மாச மாசம் சம்பளம் வந்ததும் உங்க அக்கெளண்ட்ல போட்டுடுவேன். வேலையே இல்ல சம்பளம் எங்கேயிருந்து வரப்போவுது பாக்காதீங்க. சீக்கிரம் வேலைக்கு போயிடுவேன்” என்றாள் படபடப்புடன்.
“சரிம்மா” என்றார் டிரைவர் புன்னகையுடன்.
அதன்பின் அனைத்து சம்பிரதாயங்களும் முடித்து தனக்கு பிடித்த லாவண்டர் நிறத்தில் ஸ்கூட்டியை வாங்கி அதை ஓட்டிக் கொண்டே அவள் வீடு நோக்கி செல்ல டிரைவர் அவளை பின் தொடர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போது தோழிகளிடம் கடனாக வாங்கி வண்டி ஓட்ட பழகியிருந்தாள். இப்போது தன்னந்தனியாக சுதந்திரக்காற்றை சுவாசித்தபடி அவளுடைய வாகனத்தில் பறக்கலாம். இனி காருக்குள் மூச்சு திணற உட்கார்ந்து வர தேவையில்லை. உள்ளுக்குள் குதூகலமாக இருந்தது. இந்த யோசனை வரக் காரணமாக இருந்தது ரிஷி.
ஆம் அவன் தான் அவள் வாழ்க்கையை உயிர்ப்போடு வைத்திருக்கிறான். அவள் துன்பமாக இருக்கும் நேரங்களில் எல்லாம் ஆறுதல் சொல்வது போல அவனுடைய பேச்சு இருக்கும். பலநேரங்களில் அவனுக்கு தெரியாமலே அவளை வழிநடத்திக் கொண்டிருக்கிறான். அவளுடைய தனிமையில் இதுவரையில் சேர்ந்து பயணித்தது அவன் குரல் மட்டும் தான். குரலுக்கு சொந்தகாரனுடன் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து பயணித்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்? எவ்வளவு கரடுமுரடானதாக இருந்தாலும் அவன் தோள் சாய்ந்து கடந்து விட மாட்டாளா என்ன? வாகனத்தை விட அவள் மனதின் எண்ணங்கள் வேகமாக ஓடியது.
புவனும் புவனிகாவும் வீட்டின் வாராண்டாவில் விளையாடி கொண்டிருந்தவர்கள், நிருஷிகா புதிதாக அழகான ஸ்கூட்டியில் வரவும் அவளை நோக்கி ஓடினார்கள். உற்சாகமான மனதுடன் இருந்தவள், அவர்களையும் தன் வண்டியில் ஏற்றிக் கொண்டு வாரண்டாவை சுற்றி வலம் வந்தாள்.
பால்கனியில் நின்றிருந்த கணவரிடன் காபி கப்பை நீட்டியபடி “ராஜ், நிருஷிக்கு நீங்க ரொம்ப செல்லம் கொடுக்கறீங்க. உங்க கிட்ட கேக்காம டிரைவர் கிட்ட கேட்டு தனியா ஸ்கூட்டி வாங்கியிருக்கா. ஸ்கூட்டி இருக்கறதால அவ இஷ்டத்துக்கு எங்காச்சு கிளம்பி போய் அடிபட்டா என்ன பண்றது?” என்றார் மைதிலி கவலையுடன்
“நிருஷிக்கு நான் செல்லம் கொடுக்கறேனா? உனக்கு அப்படியா தெரியுது? என்ன அவகிட்ட நெருங்க விடலனா கூட பரவால்ல. நான் பேசறத கேக்க கூட அவ தயாரா இல்ல. இதுல நான் செல்லம் கொடுக்கறேன்னு என் மேல பழிபோடறே” என்றார் ராஜ் கிண்டலாக. அதில் இருக்கும் வருத்தம் மைதிலிக்கு புரியாமல் இல்லை.
அவரின் தோள்களை அழுத்தியவர், “கண்டிப்பா உங்கள ஒருநாள் புரிஞ்சுப்பா ராஜ்”
“அந்த நாளுக்காக காத்துட்டு இருக்கேன்மா” என்றவரின் குரல் கரகரப்புடன் வந்தது. பெருமூச்சுடன் மைதிலி கணவரின் தோள்மீது சாய்ந்து கொள்ள, வண்டியை நிறுத்திய நிருஷிகா கண்ணில் இருவரும் பட்டுவிட, இதுவரை இருந்த மனநிலை உடனே மாறியது.
இறுகிய முகத்துடன் வீட்டிற்குள் சென்று தன் அறைக்குள் முடங்கினாள். மனநிலையை சமன் செய்ய முடியாமல் எப்எம்ஐ ஆன் செய்தாள்.
ரிஷி பேசினான், “இந்த நிமிஷம் நீங்க கவலையா இருந்தீங்கன்னா, உங்களுக்காக தோள் கொடுக்க நானிருக்கேன். நீங்க எனக்கு போன் பண்ணி பேசலாம்” என்று அவன் டயல் செய்ய வேண்டிய எண்ணை சொல்ல, முதன்முறையாக அவனுக்கு போன் செய்து பேசலாமா என்ற எண்ணம் எழுந்தது.
கடந்த மூன்றுவருடங்களாக அவன் குரலோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஆனாலும் அவனுடன் பேச முயற்சித்ததில்லை. இன்று ஏனோ அவனிடம் பேசினால் என்ன? என்று எண்ணம் தோன்றி பேசியே ஆகவேண்டும் என்ற பிடிவாதம் எழுந்தது.
தொடர்ந்து ரிஷி சொன்ன எண்ணிற்கு அழைத்தாள். “ஹாய் நான் ரிஷி, நீங்க யாருனு தெரிஞ்சுக்கலாமா?” என்று தன் கைப்பேசியில் ஒலித்த குரலை நம்பமுடியாமல் பார்த்தாள். இணைப்பு கிடைத்து விட்டதா? அவளுக்காக பேசிக் கொண்டிருந்த ரிஷி இப்போது அவளுடன் பேசுகிறானா?
“ஹலோ மிஸ் ஆர் மிஸ்டர்? லைன்ல இருக்கீங்களா?”
“ம், இருக்கேன்” என்றாள் அவசரமாக
“யாரோ சின்ன குழந்தை பேசறாங்க”
“நான் சின்ன குழந்தை இல்ல, எனக்கு இருபத்தி மூணு வயசு” என்றாள் ரோஷத்துடன்
“நான் மூணுவயசு குழந்தைனு நினைச்சேன், நீங்க இருபத்தி மூணு வயசு குழந்தையா” என்றான் சிரித்துக் கொண்டே
“நான் ஒன்னும் குழந்தையில்ல” என்றாள் மீண்டும்
“சரி இப்படி வச்சுக்கலாமா? குயிலோசை எப்எம்ல ஒரு குயிலின் குரல்” என்று அவன் அவள் காதிற்குள் சிரிக்க, அவளின் உடல் சிலிர்த்து காற்றில் மிதந்தது.
“உங்க பேர சொல்றீங்களா?”
“நிருஷிகா”
“ருஷிகாவா?”
“இல்ல, நிருஷிகா”
“என்னவோ இருந்துட்டு போகட்டும், உங்க குரல் தேன் போல ருசியா இருக்கு, பேருக்குள்ளயும் ருஷினு இருக்கு. தெரிஞ்சு தான் பேர் வச்சிருப்பாங்க போல. நான் உங்கள ருஷினு கூப்பிடறேன்”
‘ரிஷி, ருஷி’ மனதிற்குள் சொல்லி பார்த்துக் கொண்டாள். முதல் உரையாடலிலேயே அவன் தன்னை பிரத்யேகமாக யாரும் கூப்பிடாத வகையில் அழைத்ததை எண்ணி சிறகில்லாமல் மனவானில் பறந்தாள்.
“சொல்லுங்க ருஷி, உங்களுக்கு என்னென்ன பிடிக்கும்”
“எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும், உங்கள மட்டும் தான் பிடிக்கும். ஐ லவ் யூ ரிஷி” என்றவளின் பதிலில் அந்த பக்கம் பலத்த அமைதி
“ரிஷி, நான் உங்கள பாக்கணும்” என்றதும் உடனே இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பிடிவாதத்துடன் மீண்டும் மீண்டும் தொடர்ந்து போன் செய்தாள். இணைப்பு கிடைக்காததால் குயிலோசை எப்எம் அலுவலக எண்ணை இணையத்திலிருந்து எடுத்து போன் செய்தாள். ரிசப்ஷினில் இருந்தவர்கள் போனை எடுக்க, “ரிஷிகிட்ட பர்சனலா பேசணும், அவரை கூப்பிடுங்க”
“நீங்க யாரு?”
“நான் அவரோட உட்பி”
“நிஜமாவா?”
“உங்க ஆராய்ச்சிய அப்பறமா வச்சிக்கோங்க, அவரை கூப்பிடுங்க” என்றாள் அமர்த்தலாக
அடுத்த ஐந்து நிமிடத்தில் ரிஷி லைனிற்கு வர, “ஹலோ” என்றான் அழுத்தமாக
“நான் கொஞ்ச முன்னாடி உங்ககிட்ட பேசின நிருஷிகா, ஐமீன் ருஷி. பேசிட்டு இருக்கும் போது ஏன் போனை கட் பண்ணீங்க? இனி இந்த மாதிரி செய்யக்கூடாது”
“நீங்க பேசறது எல்லாம் ரெக்கார்ட் ஆயிட்டு இருக்கு, உங்க வீட்ல கேட்டா என்ன நினைப்பாங்க? ரசிகையா உங்களோட அன்பை நான் மதிக்கிறேன். அத தாண்டி பேசுற அளவுக்கு நான் தகுதியானவன்னு உங்களுக்கு எப்படி தெரியும்? நான் யாரு, எப்படிப்பட்டவன்னு தெரியாம எல்லோருக்கும் கேக்குற மாதிரி நீங்க பேசினது சரியில்ல மேடம்”
“நீங்க யாரு, எப்படிப்பட்டவர்னு நேர்ல பாத்து தான் தெரிஞ்சுக்கணும்னு அவசியமில்ல. கடந்த மூணு வருஷமா உங்களோட குரலோட தான் டிராவல் பண்ணிட்டு இருக்கேன். உங்களோட மோடிவேஷனல் ஸ்பீச் எல்லாம் எனக்காகவே என்னோட சூழ்நிலையை பாத்து ஆறுதல் சொல்ற மாதிரியே இருக்கும். நீங்க பேசும் போதே உங்களோட குணம் என்னனு என்னால புரிஞ்சுக்க முடியும்”
“ரொம்ப சந்தோசமா இருக்குங்க மேடம். உங்க வாழ்க்கையில ஒரு சின்ன சந்தோசமோ, அமைதியோ என்னால கிடைச்சதுனா அதுதான் என் வேலையோட வெற்றியா பாக்கறேன்”
“என்ன நீங்க வார்த்தைக்கு வார்த்தை மேடம்னு சொல்றீங்க? கால் மீ ருஷி, அது தானே உங்களுக்கு பிடிக்கும்?”
“இதுல என் விருப்பம் எதுவுமில்ல. ரெக்கார்டிங்ல வைப்புக்காக உரிமை எடுத்து சில சமயம் பேசறது தான். அத தயவு செஞ்சு பர்சனலா எடுத்துக்காதீங்க. போனை வச்சிடறேன்”
“நான் இன்னும் பேசி முடிக்கல ரிஷி”
“சீக்கிரம் சொல்லுங்க, எனக்கு வேற வேலை இருக்கு”
“மூணு வருஷமா உங்க குரலோடவே டிராவல் பண்ண நான் உங்களோட காலம் பூரா டிராவல் பண்ண ஆசப்படறேன். ஐ அம் இன் லவ் வித் யூ ரிஷி”
அந்த பக்கம் மெளனம்.
“எனக்கு பதில் சொல்லுங்க ரிஷி”
“சின்ன புள்ள மாதிரி உளறிட்டு இருக்காம போய் படிக்கிற வேலை இருந்தா போய் படி” என்று அதட்டலாக சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்திருந்தான்.
மீண்டும் தொடர்ந்து போன் செய்தாள். அழைப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் ரிஷியிடம் தன் மனதை சொல்லிவிட்டதால் மகிழ்ச்ச்சியாக உணர்ந்தவள், அப்படியே உறங்கி போனாள்.
“ருஷி, உன் பேரும், குரலும் மட்டுமில்ல. உன்னோட இதழ் கூட ருசியா இருக்கு” என்று வன்மையாக தன் இதழ்களை கொய்தவனின் முகம் தெரியாவிட்டாலும் அவன் குரல் மிகவும் பரிச்சயமான ரிஷியினுடையது என்பதால் அவனை கட்டிக்கொள்ள முயன்று காற்றில் கைகளை அலைய விட்டிருந்தாள். பின்பு அது கனவென்று உணர்ந்தவளுக்கு இப்போது ரிஷியை நேரில் கண்டுவிட வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.
காலையில் எழுந்து குளித்து தயாரானவள் தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வேலை தேட கிளம்பினாள். இந்த முறை நேர்முகத்தேர்வில் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்ற முடிவுடன் சென்று தெளிவாக பேசி, ஐடி நிறுவனத்தில் வேலை வாங்கி விட்டாள். மறுநாளிலிருந்து அவளை அவர்கள் வேலையில் சேர்ந்துக் கொள்ள சொல்ல, இப்போது தன் வாகனத்தில் குயிலோசை எப்எம் அலுவலகத்தை கூகுள் மேப்பில் தேடியபடி சென்றாள்.
காதில் ஹெட்போன், கையில்லாத பிங்க் நிற காலர் வைத்த இறுக்கமான சட்டை, நீல நிற தளர்வான கால்சட்டை அணிந்து, நீலநிற கூலிங்கிளாஸ் உடன் வந்து நின்றவளை மாடலிங் செய்யும் பெண் என்று தான் அனைவரும் நினைத்திருந்தார்கள். ஆண்களின் கண்கள் அவளை ஈயென மொய்க்க, ஒருவன் எழுந்து வந்து, “நீங்க யார பாக்க வந்திருக்கீங்க?” என்று கேட்டான்.
“நான் மிஸ்டர் ரிஷிய பாக்கணும்”
“அவர் உங்கள பாக்கறதுக்கு அப்பாயிண்ட்மென்ட் கொடுத்திருக்காரா?”
“இல்ல”
“அப்போ பாக்க முடியாது”
“சரி, அப்பாயிண்ட்மென்ட் எப்படி வாங்கறதுனு சொல்லுங்க”
“அவர் இதுவரைக்கும் யாருக்கும் அப்பாயிண்ட்மென்ட் கொடுத்ததுமில்ல, இனி கொடுக்க போறதுமில்ல”
“நான் அப்பாயிண்ட்மென்ட் வாங்காம இங்க இருந்து கிளம்ப போறதுமில்ல” என்று அவன் தொணியிலேயே சொல்லிவிட்டு அங்கிருந்த நாற்காலியை சுவரோரம் வைத்து நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டாள். அவளின் செய்கையில் அனைவரும் அவளை அதிர்ந்து நோக்க, அவளுக்கே அவளின் செயல் விநோகமாக தான் தெரிந்தது. ஆனால் ரிஷியை சந்திக்க வேண்டும் என்ற வெறி அவளை எந்த எல்லைக்கும் நகர்த்திச் சென்றது.
அழகான படித்த பெண்ணாகவும் பெரிய இடத்து பெண்போலவும் தெரிபவளை இழுத்து வெளியே தள்ளவோ, திட்டவோ அங்கே யாருக்கும் மனம் வரவில்லை. அங்கிருந்த ஆர்ஜேக்களில் பலர் தங்களுக்குள் புலம்பி கொண்டனர்.
“நாமளும் தான் மாங்கு மாங்குனு பேசறோம். நமக்கு இந்த மாதிரி கிளி எதுவும் சிக்க மாட்டேங்குது. ரிஷினு பேர் வச்சிருக்கறதாலயோ என்னவோ முனிவர் மாதிரி யார்கிட்டயும் பேசாம பழகாம மைக்ல மட்டும் பேசிட்டு போறவனுக்கு அடிச்ச ஜாக்பாட் பாத்தியா? சும்மா கும்முனு இருக்கா” என்று ஆண்கள் கூட்டம் நிருஷிகாவை பார்த்து பெருமூச்சு விட, அவளிடம் கேள்வி கேட்டவன் அவள் எதிரே சென்றான்.
“நான் ரிஷியோ பெஸ்ட் பிரெண்ட், என்பேரு கதிர்மாறன். ரிஷி கிட்ட போன் பண்ணி நீங்க அவனுக்காக காத்திட்டு இருக்கற விஷயத்தை சொன்னேன். அவனால நேர்ல வரமுடியாதாம், வெளியே இருக்கானாம். இன்னொரு முறை உங்கள சந்திக்கிறதா சொல்லியிருக்கான்”
“எப்போ சந்திக்கறதா சொன்னாரு” என்று அவள் கேள்வி கேட்க, கதிர்மாறன் தடுமாறினான். ஆண்கள் கூட்டம் அவளை தரக்குறைவாக நண்பனுடன் சேர்த்து பேசுவதை பொறுக்க முடியாமல் தான் அவளை அனுப்ப அவ்வாறு பேசினான்.
“அவரே எப்போ சந்திக்கலாம்னு என்கிட்ட போன்ல பேசினா தான் நான் கிளம்புவேன்” என்றாள் பிடிவாத குரலில்
கதிர்மாறன் சற்று தள்ளி போனில் பேசிவிட்டு அவளிடம் வந்து தன் போனை நீட்டினான். அதில் ரிஷியின் தனிப்பட்ட எண் என்று சேமித்து வைத்திருப்பதை கவனித்தபடி அதை வாங்கியவள், அந்த இணைப்பை துண்டித்து, அதிலிருக்கும் எண்ணை தன் கைப்பேசியில் சேமித்துக் கொண்டாள். கதிர்மாறன் அவளின் செயலில் விதிர்விதிர்த்து போனான்.
இப்போது அவளின் கைப்பேசியிலிருந்தே ரிஷிக்கு போன் செய்தாள்.
“ரிஷி?”
“யெஸ், நீங்க?”
“நான் நிருஷிகா, நீங்க கூட ருஷினு கூப்பிடபோறேன்னு சொன்னீங்களே”
“அப்படி சொல்லியிருக்க கூடாதுனு இப்போ பீல் பண்றேன்”
“ஏன் ரிஷி அப்படி சொல்றீங்க?”
“எப்எம்க்காக போன் கால்ல பேசினது அப்பவே முடிஞ்சு போச்சு. சின்ன புள்ள மாதிரி அத பெரிசா எடுத்துக்கிட்டு ஆபிஸ் வரைக்கும் வந்தா எப்படிங்க? இதெல்லாம் நல்லாவா இருக்கு? என்னய பத்தி எல்லாரும் என்ன நினைப்பாங்க? இதுவரைக்கும் நான் ஆபிஸ்ல கதிர்மாறன் தவிர யார்கிட்டயும் பேசினதில்ல. நான் வர்றதும் போறதும் யாருக்கும் தெரியாது. இப்போ அவனவன் எனக்கு போன் பண்ணி, உனக்காக ஒரு பிகர் காத்திட்டு இருக்கு, எங்கே இருக்கனு கேட்டுட்டு இருக்கானுங்க. என்ன பத்தி விடுங்க, உங்கள எல்லாரும் என்ன நினைப்பாங்கனு கொஞ்சமாச்சும் யோசிச்சீங்களா?” என்றான் அதிருப்தியுடன்
“உங்க குரல மட்டும் கேட்டுட்டு இருந்த நான், உங்கள சந்திக்கணும்னு நினைச்சது தப்பா?”
“மிஸ்.ருஷி, நான் பொதுவா யாரையும் சந்திக்க மாட்டேன். என் உலகம் தனி. உங்களுக்கு சொன்னா புரியாது” என்றான் பொறுமையை இழுத்து பிடித்தபடி
“என் உலகமும் தனி தான் ரிஷி. ஆனா அதுல நீங்களும் என் கூடவே இருக்கீங்க. நான் என் உலகத்துல உங்களுக்கு இடம் கொடுத்த மாதிரி, உங்க உலகத்துல எனக்கு இடம் கொடுக்க கூடாதா?”
அவளின் வெகுளியான பேச்சைக் கேட்டு சிரிப்பதா, திட்டுவதா என்று புரியாமல் விழித்தான்
“என்னய பத்தி என்ன தெரியும்னு தேடி வந்திருக்கீங்க? நான் அயோக்கியனா இருந்தா என்ன பண்ணுவீங்க? கலைத்துறையில இருக்கறவங்க திறமைய ரசிக்கலாம் பாராட்டலாம், அவங்களயே ரசிக்கறதும், அவங்கள தேடி ஓடறதும் முட்டாள்தனம். என் இடத்துல வேற யாராச்சும் இருந்தா உங்கள தப்பா மிஸ் யூஸ் பண்ண வாய்ப்பிருக்கு. இப்போ கூட என்னோட ஆபிஸ்ல இருக்கற ஆம்பளைங்க பாதி பேரு உங்கள வக்கிரத்தோட பாத்துட்டு இருப்பாங்க” என்று அவன் சொன்னதும் பார்வையை சுழல விட்டாள். அவன் சொன்னது போல பல ஆண்களின் கண்கள் அவளை ஈயென மொய்ப்பதை உணர்ந்தவள், “எப்படி ரிஷி, இவ்வளவு கரெக்ட்டா கெஸ் பண்ணி சொல்றீங்க? உண்மைய சொல்லுங்க, இங்கே தானே இருக்கீங்க?”
தலையில் அடித்து கொள்ளலாம் போலிருந்தது அவனுக்கு, “ஆம்பளைங்க புத்திய சொல்றதுக்கு நேர்ல தான் இருக்கணும்னு அவசியமில்ல. ஏன்னா நானும் ஆம்பிளை தான். இப்பவாவது நிலைமைய புரிஞ்சுக்கிட்டு கிளம்புங்க ப்ளீஸ்” என்றான்.
“கிளம்பு ருஷினு ஒருமையில சொல்லுங்க, அப்போ தான் கிளம்புவேன்”
“கிளம்பு ருஷி”
“இப்போ கிளம்பறேன். இனிமே நான் அடிக்கடி போன் பண்ணுவேன், நீங்க என்கிட்ட பேசணும், இல்லனா நான் ஆபிசுக்கு வந்துடுவேன்” மிரட்டினாள்.
அவள் கிளம்பினால் போதும் என்று நினைத்தவன், அவள் சொன்னதற்கு சம்மதம் சொன்னான். கதிர்மாறன் கைகளை கட்டிக் கொண்டு நிருஷிகா உரிமையுடன் ரிஷியிடம் பேசுவதை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்
(தொடரும்)