பாவை 20

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 94

Active member
Staff member
May 5, 2026
42
141
33
chennai
நிருஷிகா காலையில் கண்விழித்ததும் குளியலறைக்கு சென்றாள். வெளியே வந்தபோது உறங்கி கொண்டிருந்த புவனும் புவனிகாவும் இல்லை. வெளியே விளையாட சென்றிருப்பார்கள் என்று நினைத்தவள் உடைமாற்றி தயாரானதும் ரிஷிக்கு அழைக்கலாம் என்று கைப்பேசியை தேடினாள். அதுவும் அங்கே இல்லை. வெளியே சென்று பார்க்கலாம் என்று அறைக்கதவை திறந்தால் அதுவும் வெளிப்பக்கம் பூட்டியிருந்தது.

“ஹலோ, யாரது கதவை சாத்தினது? கதவ திறங்க” என்று தட்டினாள்.

வெளியே ஒருபதிலும் இல்லை. பலமுறை சத்தம் போட்டு ஓய்ந்து போய் கட்டிலில் தொய்ந்து அமர்ந்தாள். அவளை யாராவது பூட்டி வைத்து விட்டார்களா? ஏன்? மாலினியின் வேலையாக இருக்குமா? ரிஷி சொன்னதை கேட்டு இங்கே வந்திருக்க கூடாதோ? பல கேள்விகள் மனதை குடைய, மீண்டும் கதவை வேகமாக தட்டினாள். கதவு திறக்கப்படாமல் இருக்கவே வயிற்றுக்குள் பயப்பந்து உருள ஆரம்பிக்கவும் பதட்டமடைந்தவள் ஆவேசத்துடன் கையில் கிடைத்ததை எடுத்து அடிக்க தொடங்கினாள். அப்போது திடீரென்று கதவு பட்டென்று திறந்து கொண்டது.

அவள் வீசிய கண்ணாடி டம்ளரை நொடியில் பிடித்திருந்தான் ரிஷிவர்மன்.

அவனை கண்டதும் “ரிஷி” என்றவள் பாய்ந்து சென்று அவனை கட்டிகொள்ள முயல அவன் அவளை பிடித்து தள்ளி நிறுத்தினான்.

“என்னாச்சு மேடம்?” என்றான்

உடனே சுதாரித்தவள் பார்வையை சுழற்றினாள். அவன் பின்னால் மாலினி புருவ முடிச்சுடன் நின்றிருந்தார்.

“நிருஷிகா, யார் இவரு? உன்னோட பி.ஏனு சொல்றாரு? உண்மையா?”

“ஆமா, என்னோட ஆபிஸ் வேலை, கேஸ் எல்லாத்தையும் தனியா கவனிச்சுக்க முடியாதுனு நான் தான் இவரை அப்பாயின்ட்மென்ட் பண்ணேன்”

“இதுக்கு எதுக்கும்மா பி.ஏ? அஸ்வின்கிட்ட சொல்லியிருந்தா அவன் பண்ண மாட்டானா? இரு நான் அவனை கூப்பிடறேன்”

“நான் ஆபிஸ் தான் போக போறேன், அஸ்வின்கிட்ட நேர்லயே பேசிக்கிறேன் ஆன்ட்டி” என்றாள் மாலினியை கூர்ந்து பார்த்தபடி

“சூப்பர்மா. இப்படி தான் பொறுப்பா நடந்துக்கணும்”

“என்னோட போன் எங்கே? யார் என்னை ரூம்ல வச்சு பூட்டினது?”

“எனக்கெப்படி தெரியும், நான் உன் பி.ஏ வரும்போது தான் இங்கே வந்தேன். இரு வேலைக்காரிய கேக்கலாம்” என்ற மாலினி பணிப்பெண்ணை அழைக்க, “நிருஷிகாவ ரூம்ல வச்சு பூட்டினது யாரு”

“தெரியலம்மா, பசங்க ரெண்டு பேரும் சின்னம்மாவோட போனை வச்சு விளையாடிட்டு இருந்தத பார்த்தேன். அவங்க வந்தா திட்ட போறாங்க போனை வச்சிடுங்கனு சொல்லிட்டு சமையல்கட்டுக்கு போனேன். ஒருவேளை அவங்க தான் ரூமை விளையாட்டா பூட்டியிருக்கணும்”

“அவங்க ரெண்டு பேரையும் கூப்பிடு” என்று மாலினி சொல்லும் போதே இருவரும் வந்தார்கள். புவனிகா கையில் நிருஷிகாவின் கைப்பேசி இருந்தது. “அக்கா இவன் தான் உன் ரூமை பூட்டினான்” என்று புவனிகா சொல்ல, ‘இல்ல நானில்ல, இவ தான் ரூமை பூட்டினா”’ என்று புவன் மாற்றி பேச இருவரும் சண்டையிட்டு கொண்டார்கள்.

நிருஷிகாவுக்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது. அவர்களிடம் போனை வாங்கி கொண்டு இருவரையும் சாப்பிட வைத்தாள். “அப்பா அம்மா எப்போ ஊர்ல இருந்து வருவாங்க?” என்று இருவரும் கேட்க, “சீக்கிரம் வந்துடுவாங்க” என்று அவர்களுக்கு சமாதானம் செய்தபடி அவர்களை தயார்படுத்தியவள் ரிஷியுடன் கிளம்பினாள். இருவரையும் ஏற்கனவே சேர்த்திருந்த பள்ளியில் மீண்டும் சேர்த்து விட்டனர்.

பின்பு ரிஷியும் நிருஷியும் தேவ்ராஜ் இன்டஸ்ட்ரீஸ் அலுவலகம் செல்லும் வழியில், “நிரு, இந்த மாலினி அவங்க மகன் அஸ்வின் மேல எனக்கு சந்தேகமா இருக்கு”

“சேச்சே, அவங்க அப்பா மேல ரொம்ப பாசமா இருக்காங்க, அவர் கடைசியா ஆசைப்பட்டத நிறைவேத்தணும்னு என்னை மறுபடியும் அஸ்வினுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கறாங்க. அஸ்வினுக்கும் இந்த கல்யாணத்துல பெரிசா விருப்பமில்லன்னாலும் அப்பாவுக்கு எதுவும் ஆகக்கூடாதுனு தான் கல்யாணத்தை ஒத்துக்கிட்டாரு. எனக்கு அவங்க ரெண்டு பேர் மேல எந்த டவுட்டும் இல்ல. வேலைக்காரி மேல தான் டவுட்டா இருக்கு”

“வேலைக்காரிக்கு என்ன மோடிவ் இருக்க போகுது?”

“அப்பாவோட எதிரிங்களோட கைகூலியா அவ இருக்கலாம்”

“மாலினியோட கைகூலியாவும் இருக்கலாமில்ல?”

“வாய்ப்பிருக்கு, நான் வீட்டுக்கு போன கொஞ்ச நேரத்துல அவங்க வந்தாங்க. வேலைக்காரி இன்பர்மேஷன் கொடுத்திருக்கலாம்”

“நிரு எனக்கு இன்னொரு டவுட், உங்கப்பாவுக்கு மூணு முறை ஸ்ட்ரோக் வந்திருக்கு சரியா?”

“ஆமா”

“மூணாவது முறை ஆஸ்பிட்டலுக்கு போகும் போது தான் அவருக்கு ஸ்லோ பாய்ஸன் கொடுக்கப்பட்டது தெரிஞ்சிருக்கு. முதல் ரெண்டுதடவையில ஏன் இது தெரியல?”

நிருஷிகா யோசனையுடன் ரிஷியை பார்த்தாள்.

“முதல் ரெண்டு தடவை ஸ்ட்ரோக் வந்தப்போ, யார் அவரை ஆஸ்பிட்டல்ல சேர்த்தது? எந்த ஆஸ்பிட்டல்?”

“முதல்முறை அஸ்வின் தான் ஆஸ்பிட்டல்ல சேர்த்துட்டு தகவல் சொன்னாரு. ரெண்டாவது முறை நானும் அப்பா கூட தான் இருந்தேன், அப்போவும் அஸ்வினோட உதவியோட தான் ஆஸ்பிட்டல் கொண்டு போனோம்”

“ரெண்டு தடவையும் ஒரே ஆஸ்பிட்டலுக்கு தான் போயிருக்கீங்க, சரியா?”

“ஆமா, நியூசிட்டி ஆஸ்பிட்டலுக்கு போனாம், ஆனா அங்க டிரிட்மென்ட் கொடுத்ததுல அப்பா குணமாயிட்டாரே ரிஷி. அவங்க பாய்ஸன கவனிக்க தவறியிருக்கலாமில்ல”

“மூணாவது முறை ஏன் அதே ஆஸ்பிட்டலுக்கு போகல”

“அங்கே தான் அப்பாவுக்கு குணமாச்சுனு அதே ஆஸ்பிட்டலுக்கு போகலாம்னு இருந்தோம். ஆனா கல்யாணத்துக்கு வந்திருந்த அப்பாவோட பிரெண்ட் ஒருத்தவங்க ஸ்ட்ரோக் வந்தா எதுக்கு ஜெனரல் ஆஸ்பிட்டலுக்கு கொண்டு போறீங்க? நியுராலிஜிஸ்ட்கிட்ட பாக்கலாம்னு சொன்னாரு. ஆனா அந்த ஆஸ்பிட்டல்ல தான் தொடர்ந்து டிரிட்மென்ட் பாக்கறதால அவரோட மெடிக்கல் ஹிஸ்டரி அவங்களுக்கு தான் நல்லா தெரியும், ரெண்டு தடவை குணமாக்கி அனுப்பினாங்கனு மாலினி அத்தையும் அஸ்வினும் சொன்னாங்க. நானும் அம்மாவும் தான் இந்த முறை நியுராலிஜிஸ்ட்ட பாக்கலாம்னு அழுத்தமா சொல்லி வேற ஆஸ்பிட்டலுக்கு கொண்டு போனோம்”

“இதுல இருந்து என்ன தெரியுது? மாலினியும் அவங்க மகன் அஸ்வினும் தான் இதை செஞ்சிருக்கணும். வேலைக்காரி உதவியோட ஸ்லோ பாய்ஸன கொடுத்திருக்காங்க”

“அவங்க எதுக்கு இத பண்ணனும் ரிஷி?”

“உனக்கு புரியலயா நிரு? அவங்க உங்கப்பா சொத்துக்கு ஆசைப்பட்டிருக்கலாமில்ல? உங்கப்பாவ பத்தி அவங்களுக்கு தான் முழுசா தெரிஞ்சிருக்கு. அவரை கொன்னு சொத்தை அடைய நினைச்சிருக்கலாம். மொத்தமா மாட்டிக்க கூடாதுனு ஸ்லோ பாய்ஸன் கொடுத்திக்கலாம்”

வாயில் கைவைத்து கொண்டாள். “ஒருவேளை அப்பா என்பேர்ல சொத்து எழுதி வச்சதால தான் என்னை அஸ்வினுக்கு பொண்ணு கேட்டாங்களா?”
என்று யோசித்தவள் ஒவ்வொன்றாக நினைவு படுத்தினாள்

முதல்முறை ஸ்ட்ரோக் வந்தபோதே ராஜ் திருமணம் செய்ய சொல்லி கேட்டது, ரெண்டாவது முறை மறுக்கமுடியாத அளவுக்கு திருமணத்தை இருதரப்பிலும் அழுத்தியது என்று மாலினி அஸ்வின் இருவர் மேலும் சந்தேகம் வலுத்தது.

“ரிஷி, நாம நேரத்தை வீணடிக்காம இப்போவே ரெண்டு பேர் மேலயும் கம்ளெய்ன்ட் கொடுத்துடலாம். வேலைக்காரிய விசாரிச்சா எல்லா உண்மையும் வந்துட போகுது, என்ன சொல்றீங்க?”

“சரியான ஆதாரம் இல்லாம அவங்க மேல கம்ளெய்ண்ட் கொடுக்க முடியாது நிருஷி, முதல்ல உன் அம்மாவ மீட் பண்ணி பேசுவோம், அப்புறம் வேலைக்காரம்மா வீட்டுக்கு பாேய் விசாரிக்கலாம்” என்றான் ரிஷி

பின்பு நிருஷிகாவை அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்றான். இருவரும் காவல்துறையினரிடம் அனுமதி வாங்கி கொண்டு மைதிலியை சந்திக்க சென்றனர்.

நிருஷிகாவை கண்டதும் மைதிலி அழுதுக்கொண்டே, “நிருஷி, ராஜ் எப்படியிருக்காரு? அவரை போய் பாத்தியா?” என்று விசாரிக்க, “இன்னும் இல்லம்மா” என்றாள் மகள்

“யாரோ அவர கொல்ல பாத்திருக்காங்க. ஆஸ்பிட்டல்லயும் எதாவது முயற்சி பண்ணா என்ன பண்றது? போலீஸ்ல சொல்லி அவருக்கு பாதுகாப்பு போட சொல்லு”

“சரிம்மா”

“புவன்புவனிகா எங்கே? நீ எப்போ கோவையிலிருந்து சென்னை வந்தே?” என்றவர் அப்போது தான் நிருஷிகாவின் பக்கத்திலிருந்த ரிஷியை கவனித்தார்

“நீங்க?”

“நான் ரிஷிவர்மன். நீங்களும் ராஜ் சாரும் ஆர்ஜே ரிஷிய தேடி ஒரு அபார்ட்மென்ட்க்கு வந்து என்கூட பேசனீங்களே நினைவிருக்கா”

“ஆமா, அப்போ கூலிங்கிளாஸ் போட்டிருந்தீங்க, அதான் அடையாளம் தெரியல, நீங்க எப்படி நிருஷி கூட?”

“அம்மா இவர் தான் நான் லவ் பண்ண ஆர்ஜே ரிஷிவர்மன்” என்றாள் நிருஷிகா

“நீங்களா ரிஷி? அப்போ ஏன் அன்னைக்கு எங்ககிட்ட யாரோ மாதிரி பேசனீங்க?” என்று கேட்ட மைதிலியிடம் ரிஷி தன் கதையை சுருக்கமாக விளக்கினான்.

“ரொம்ப வருத்தமாயிருக்கு ரிஷி. அன்னைக்கு நீங்க ஒரு பேச்சுக்காகனு கேட்டத கூட என்னால ஜீரணிக்க முடியல. என் பொண்ணை ஏன் பார்வையில்லாதவருக்கு கட்டி கொடுக்கணும்னு தான் நினைச்சேன். உங்களோட நிலையில இருந்து யோசிக்கல. எங்க பேச்சை கேட்டு நீங்க ஊரைவிட்டு போய் நண்பனையும் இழந்திருக்கீங்க. உங்களுக்கு செஞ்ச பாவம் தான், என் பொண்ணு கல்யாணம் நின்னு, என் புருஷன் கோமாவுக்கு போய், நான் ஜெயில்ல கிடக்கறேன் போலருக்கு” என்றார் விரக்தியுடன்

“வருத்தப்படாதீங்கம்மா, உலகத்துல எல்லா பெத்தவங்களும் அவங்க பொண்ணு குறையில்லாம நல்லா வாழணும்னு தான் நினைப்பாங்க. உங்க இடத்துல நாளைக்கு நிரு இருந்தாலும் அதை தான் பேசுவா. காதல் வேற தாய்பாசம் வேற. என்னால உங்க உணர்வுகளை புரிஞ்சுக்க முடியும். நாங்க வந்தது சில விவரங்களை உங்க கிட்ட கேக்கறதுக்காக தான்”

“சொல்லுங்க ரிஷி”

ரிஷி நிருஷிகாவுடன் சற்றுமுன் பேசிய விஷயங்களை விளக்கினான். “எங்களுக்கு மாலினி அவங்க பையன் அஸ்வின் மேல தான் முழுக்க சந்தேகம் இருக்கு. ஒரு விஷயம் மட்டும் சொல்லுங்க, முதல் ரெண்டு முறை ராஜ்க்கு ஸ்ட்ரோக் வந்தப்போ யார் சமைச்சது? அவர் அந்த ரெண்டு நாளும் வீட்ல தான் சாப்பிட்டாரா?”

“நான் தான் சமைச்சேன், ஆனா அந்த ரெண்டு நாளும் சாப்பாட்டை ஆபிஸ்க்கு கொடுத்து அனுப்பினேன்”

“சாப்பாட்டை கேரியர்ல போட்டது யாரு”

“வேலைக்கார பொண்ணு”

“அப்போ அவ தான் ஸ்லோ பாய்ஸன சாப்பாட்டுல கலந்திருப்பா. முதல்ல அவ மேல கம்ளெய்ண்ட் கொடுப்போம், அவள விசாரிச்சா எல்லா உண்மையும் வெளியே வந்துடும்”

“அவ இப்படி செய்வாளானு எனக்கு தெரியல. ஆனா ஸ்லோ பாய்ஸன கொடுக்க சொன்னது மட்டும் நிச்சயமா மாலினியோ அஸ்வினோ இருக்க மாட்டாங்க”

“ஏன் அப்படி சொல்றீங்க?”

“மாலினி ராஜ்ஜை கொல்லணும்னு நினைச்சிருந்தா எப்பவோ கொன்னிருக்கலாம். ஆனா அவங்க செய்யல. அதுமட்டுமில்ல அவங்கள எனக்கு நல்லா தெரியும். மாலினி அந்த மாதிரி ஆளில்ல”

“அப்போ அஸ்வின் செஞ்சிருக்காலமில்ல”

“நிருஷிக்காக அஸ்வினை செலக்ட் பண்ணது ராஜ். அவரோட செலக்ஷன் எப்பவுமே தப்பா இருக்காது”

“அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?”

“தெரியல, ஆனா எனக்கு அப்படி தான் தோணுது”

“வேற யார் மேலயாச்சும் உங்களுக்கு டவுட் இருக்கா?”

“இல்ல”

நிருஷியும் ரிஷியும் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

(தொடரும்)
 
Last edited:

Author: STN - 94
Article Title: பாவை 20
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
370
83
Chennai
இல்ல இதில் வேற யாரோ இருக்காங்க.....இல்லைனா...இத்தனை நாள் ராஜ் தனியா தான் இருக்காங்க.....
சோ சொத்து கை விட்டு போகாதுனு நினைச்சி இருப்பாங்க.....

ஆன நிரு பெயரில் சொத்து மாறினதும், அவங்க வேலையை காட்டிட்டாங்க
 
  • Love
Reactions: STN - 94

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.