ரிஷிக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது, கால்கள் தடுமாற அப்படியே தொய்ந்து அமர்ந்தவன் இருகைகளின் முஷ்டியை தரையில் ஓங்கி குத்தி “ஆ” என்று அந்த வீடே அதிரும் அளவுக்கு கத்தினான்.
புவன்புவனிகா அவன் அலறலை கண்டு பயத்தில் பீறிட்டு அழ ஆரம்பிக்க, வேலைக்கார பெண் என்னவென்று தெரியாமல் உடனடியாக மாலினிக்கு போன் செய்தாள்.
“you are my life niru, I can’t handle another loss. நான் உன்னை பார்க்கற வரைக்கும் பத்திரமா இருப்பேன்னு எனக்கு கொடுத்த வாக்க நீ காப்பாத்தணும் நிரு. ஐ கான்ட் லீவ் யு எனிமோர் (I cant leave you anymore)” என்று அவன் கத்த, வேலைக்கார பெண் தயங்கியபடி அவனருகே வந்தாள்.
“சார், சின்னம்மாவுக்கு என்னாச்சு?”
“டிரைவர் எங்கே போயிருக்கான்னு தெரியுமா?”
“தெரியாது சார், நேத்து சின்னம்மா வந்த கொஞ்சநேரத்துல வேலை இருக்கறதா மாலினி அம்மாகிட்ட லீவு கேட்டுட்டு இருந்தாரு”
“அவன் நம்பர் இருந்தா கொடு” அந்த பெண் கொடுத்ததும், அந்த எண்ணிற்கு போன் செய்தான். அது அணைத்து வைக்கப்பட்டிருக்கவே கோபத்தில் போனை விசிறி எறிய முயல்கையில் அஸ்வினிடமிருந்து போன் வந்தது.
“ரிஷி, என்னாச்சு? வீட்டுமுன்னாடி நீ வந்து கத்திட்டு இருக்கியாமே, அம்மா சொன்னாங்க”
“தெரியாத மாதிரி நடிக்காதீங்கடா. சொத்துக்காக சொந்த மாமனுக்கு விஷத்தை கொடுத்துட்டு, அதே சொத்துக்காக என் நிருஷிகாவ கடத்திட்டீங்க இல்ல. அவளுக்கு எதாச்சும் பிரச்சனைனா ஒருத்தனையும் உயிரோட விட மாட்டேன். அவ மேல சின்ன கீறல் பட்டா கூட நான் மனுஷனா இருக்க மாட்டேன்”
“ரிஷி, நிருஷிகாவ காணலங்கிறதுக்காக எங்க மேல அபாண்டமா பழி போடறது கொஞ்சமும் சரியில்ல. என்ன பொல்லாத சொத்து? எங்க கிட்ட இல்லாததா?” அஸ்வின் காட்டமாக கேட்க
“உங்கள தவிர இத யார் செஞ்சிருக்க முடியும் சொல்லு? தொழில்முறையில யாருடோயும் ராஜ்ஜூக்கு எந்த எதிரியும் இல்ல. அப்போ நீங்க தானே இதை செஞ்சிருக்கணும். உங்களுக்கு கைகூலி அந்த செக்ரட்டரியும் டிரைவரும் தானே. அந்த டிரைவர் என் நிருவ எங்கே கொண்டு போயிருக்கான்னு மரியாதையா சொல்லிடு”
“ஸ்டாப் இட் ரிஷி. அந்த டிரைவருக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது”
“அதை போலீஸ் வந்து விசாரிப்பாங்க” என்று போனை வைத்தவன் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்தான்.
“சார், நான் சந்தேகப்பட்ட மாதிரி அந்த டிரைவர் என் நிருவ கடத்திட்டான். டிரைவர், நிரு இவங்க ரெண்டு பேரோட போன் கடைசியா எங்கே ஸ்விட்ச் ஆப் ஆகியிருக்குனு மட்டும் எனக்கு பார்த்து சொல்ல முடியுமா? இதுக்கு பின்னாடி மாலினியும் அஸ்வினும் தான் இருக்காங்க, நீங்க உடனடியா அவங்கள அரெஸ்ட் பண்ணுங்க சார், ப்ளீஸ்”
“ஒகே” என்ற இன்ஸ்பெக்டர் நிருஷிகா மற்றும் டிரைவரின் எண் கடைசியாக எங்கே அணைக்கப்பட்டது என்ற விவரத்தை சொல்லிவிட்டு அவரும் பின்னால் வருவதாக கூறினார்.
ரிஷி அடுத்த கணம் தன் காரை எடுத்துக் கொண்டு சீறலுடன் கிளப்பியிருந்தான். வழியெங்கும் நிருஷிகாவுக்கும் டிரைவருக்கும் போன் செய்தான். இரண்டுமே அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பதட்டத்தோடு காரை ஓட்டியவனின் கண்ணெதிரே லாரி மோதுவது போல வரவும், பெற்றோரை இழந்த நாளன்றது ஏற்பட்ட விபத்து அவன் கண்முன்னால் விரிந்தது. விநாடியில் காரை 360 டிகிரியில் வளைத்து எதிர்திசையில் செலுத்தினான். மீண்டும் அந்த கார் அவனை தொடரவும் அதிவேகமாக வேறு பாதையில் காரை செலுத்தி தன்னை மறைத்துக் கொண்டான்.
அப்போது அவனுக்கு போன் வந்தது, “உன்னோட நிருஷிகா உயிரோட வேணும்னா போலீஸ்கிட்ட அவ கிடைச்சுட்டா, பிரெண்ட் வீட்டுக்கு போயிருந்தானு சொல்லு”
“யார்டா நீ? எங்கேடா இருக்கே?” உச்சபட்ச கோபத்தில் கத்தினான்.
“அதெல்லாம் அப்புறம் சொல்றேன். போலீஸ்க்கு போன் பண்ணி அவகிடைச்சுட்டான்னு சொல்லிட்டு இதே நம்பருக்கு போன் பண்ணு”
ரிஷியும் வேறுவழியில்லாமல் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து, “சார் நிரு கிடைச்சுட்டா, அவ பிரெண்ட் வீட்டுக்கு போயிருக்கா”
“ரிஷி, விளையாடறீங்களா? நீங்க சொல்லிதான் மாலினியையும் அஸ்வினையும் அரெஸ்ட் பண்ணியிருக்கேன். அவங்க சமூகத்துல எவ்வளவு பெரிய புள்ளி தெரியுமா? இப்போ கடத்தப்பட்டதா சொன்ன பொண்ணு கடத்தப்படலனு சொல்றீங்க, என் மேல அவங்க கேஸ் கொடுத்தா என்ன பண்றது?”
“சாரி சார், நான் அப்பறமா பேசறேன்” என்று போனை வைத்தவன் முன்னால் வந்த எண்ணிற்கு முயற்சிக்க அது அணைக்கப்பட்டிருந்தது.
ரிஷிக்கு என்ன செய்வது எங்கே செல்வது என்றே தெரியவில்லை. மீண்டும் அழைப்பு வரும்வரை காத்திருப்பதா இல்லை வேறு எங்காவது சென்று தேடுவதா? அதற்குள் நிருவுக்கு எதாவது ஆகிவிட்டால்?
இதெல்லாம் நடக்கும், நான் நிருவ தேடி போகணும் அவளை காப்பத்தணும்னு தான் உன் உயிர விட்டியாடா கதிர்? எப்பவும் எனக்கு வழிகாட்டுவியே, இப்போ நிரு எங்கே இருக்கானு எனக்கு வழி சொல்லுடா மனதிற்குள் நண்பனிடம் வேண்டினான்.
“ரிஷி மேனேஜர்கிட்ட பேசும்போது கோயில்ல இருக்கீங்க போலருக்கே, அப்புறமா பேசறேன்னு சொல்லி போனை வச்சியே எப்படிடா?”
“அது சிம்பிள்டா நான் யார்கூட பேசினாலும் அவங்களோட குரல் பின்னாடி என்னென்ன சத்தம் கேக்குதுனு கவனிப்பேன். கோயில் மணி அடிச்ச சத்தத்த வச்சு புரிஞ்சுகிட்டு அப்புறம் பேசறேன்னு போனை வச்சுட்டேன்” என்று கதிருடன் நடந்த உரையாடல் அப்போது நினைவிற்கு வர, சற்றுமுன் கடத்தல்காரன் போன் செய்யும் போது பின்னால் கேட்ட ஒலிகளை கண்களை மூடி மீண்டும் நினைவு கூர்ந்தான்.
“ரிஷி நாம எங்கே வந்திருக்கோம் சொல்லு?”
“காத்து பலமா அடிக்குது, ஷ்னு சத்தம் வேற. அலையோட சத்தம் போல இருக்கு. பீச்சுக்கு வந்திருக்கோமா? அதென்ன ஹார்ன் சத்தம் வேற கேட்குது”
“ஹார்பருக்கு, வந்திருக்கோம்டா. நாமளே தனியா எப்எம் வைக்கணும்னு எனக்கு ஆசைடா. சவுண்ட் சிஸ்டம் எல்லாம் வெளிநாட்டுல இருந்து இறக்குமதி பண்ணா குறைஞ்ச விலையில நல்லா இருக்கும்னு கேள்விபட்டேன். சும்மா விசாரிச்சுட்டு போகலாம்னு உன்னை கூட்டிட்டு வந்தேன்”
போனில் பேசும் போது காற்றுடன் தூரத்தில் ஹார்ன் சத்தமும் கேட்டது நினைவிற்கு வர பட்டென கண்களை திறந்தான். ஹார்பருக்கு செல்ல வேண்டும், ஆனால் எந்த ஹார்பருக்கு செல்வது என்ற யோசிக்கும் போதே பேசியவனின் பாஷையை வைத்து ராயபுரம் நோக்கி காரை செலுத்தினான்.
*******
மயக்கத்திலிருந்த நிருஷிகாவை யாரோ தூக்குவது போல தெரிந்ததும் “ரிஷி” என்று முனகினாள்.
அவளுடைய கைகால்களை அசைக்க கூட முடியவில்லை. ஆனால் உடல் மட்டும் ஊஞ்சலாடுவது போல இருந்தது. அவள் முகத்தில் யாரோ தண்ணீரை பீச்சியடிக்க, கண்களை திறந்தாள். உதட்டோரம் உவர்ப்பாக இருந்தது. சுற்றும் முற்றும் கும்மிருட்டாக இருக்கவே எதுவும் புலனாகவில்லை.
அவள் கண்ணுக்கு முன்னே டார்ச் அடிக்கப்பட்டது, அதில் கண்கள் கூசியது. மெல்ல டார்ச் பிடித்திருந்தவனை பார்த்தாள்.
“டிரைவர் அண்ணா வந்துட்டீங்களா? என்னை காப்பாத்துங்க, ரிஷி என்னை தேடிட்டு இருப்பாரு”
“இந்த பத்திரத்துல கையெழுத்து போட்டு கொடுத்துடுங்க, உங்கள காப்பாத்துறேன்”
“என்ன பத்திரம் அது?”
“உங்கப்பா எனக்கு எழுதி கொடுத்த சொத்து பத்திரம்”
“அவர்தான் எழுதி கொடுத்திட்டாரே, நான் ஏன் கையெழுத்து போடணும்”
“உங்கப்பா சம்பாரிக்கற காசை எல்லாம் பினாமினு என்பேர்ல எழுதி வச்சாரு, ஆனா பவரை உன் பேர்ல மாத்திட்டாரே”
“ஏன்? சொத்தை கவர்மென்ட்க்கு கணக்கு காட்டாம இருந்தாரா?”
“நீயும் உன் தம்பி தங்கச்சியும் தேவ்ராஜ் சாருக்கு பொறக்கலனு மாலினி அம்மாவுக்கு நல்லா தெரியும். உங்கப்பா அம்மா கல்யாணத்துக்கு பொறவு ஒரு நாள் ரெண்டு பேருக்கும் பெரிய சண்டை.
‘உனக்கு குழந்தை பொறக்காதுனு டாக்டர் சொன்னாங்க, எப்படி ரெட்டை குழந்தை பொறந்துச்சு? ஊர்ல இருக்கறவங்களுக்கெல்லாம் சொத்தை எழுதி கொடுக்க நான் விடமாட்டேன். உனக்கு துணை வேணும்னா இருக்கட்டும் அஞ்சோ பத்தோ கொடு. ஆனா பரம்பரை சொத்தையோ அதனால வந்த லாபத்தையோ அவங்களுக்கு கொடுத்தா நான் சும்மா இருக்கமாட்டேன்னு’ கத்தினாங்க. அப்போ தான் எனக்கு விஷயமே தெரிஞ்சது. பெரிய இடத்து விவகாரம் நமக்கெதுக்குனு கண்டுக்காம இருந்தேன்.
ராஜ் சாரோட பரம்பரை சொத்து முழுசும் அவருக்கு பிறகு தனக்கு தான் சேரணும்னு சொல்லியிருக்காங்க. அதனால தான் சம்பாதிக்கற லாபத்தை யாருக்கும் தெரியாம சொத்தா வாங்க ஆரம்பிச்சாரு. ஆனா வாங்கற சொத்தை என்பேர்ல வாங்கினாரு. நான்கூட மைதிலி அம்மா பேர்ல வாங்கலாமேனு கேட்டேன். மைதிலி பேர்லயோ பசங்க பேர்லயோ சொத்து வாங்கினா மாலினிக்கு தெரியவரும் அவ சொத்துக்காக கேஸ் போட்டுட்டா என்னை பத்தியும் மைதிலி பத்தின உண்மையும் வெளிய வரும்.
அதுமட்டுமில்லாம மைதிலி தன் பேர்லயோ குழந்தைங்க பேர்லயோ எந்த சொத்தும் வாங்க கூடாது. நான் பணம் காசுக்காக உங்க கிட்ட வரலனு சொல்றா. அதான் வாங்கற சொத்தை அவளுக்கு கூட தெரியாம உன் பேர்ல வாங்கறேன். ஆனா பவர் என்கிட்ட இருக்கும், எப்போ தேவையோ அதை மைதிலிக்கோ பசங்களுக்கோ மாத்திடுவேன். உன் மேல இருக்கற நம்பிக்கையினால இதை சொல்றேன். இது நமக்குள்ள மட்டும் தான் இருக்கணும்னு சொன்னாரு
நானும் ஆரம்பத்துல அந்த சொத்த பத்தி பெரிசா யோசிக்கல. நீ காலேஜ் முடிச்சு வந்ததும் அந்த சொத்தை உன் பேருக்கு மாத்திடணும்னு பேச ஆரம்பிச்சாரு. நீ அவரை மதிக்காம வேற இடத்துக்கு வேலைக்கு போயிட்ட. ஏனோ எனக்கு சந்தோசமாயிருந்துச்சு. சொத்தை என்கிட்டவே தக்கவச்சுக்கணும்னா நம்பிக்கையான ஆளு வழிகாட்டியா கிடைக்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன். அப்போ தான் ராஜ் கெமிக்கல் கம்பெனியில வேலை செஞ்சிட்டு இருந்த செக்ரட்டரி சேகர் எனக்கு அறிமுகம் ஆனான்.
“மைதிலி எப்படியிருக்கா, செம பிகரு, நம்மகிட்டயெல்லாம் பத்தினி வேஷம் போட்டுட்டு, டைவர்ஸ் ஆனவரா இருந்தாலும் நல்லா பணக்காரனா இருந்த ராஜ் சாரை பிடிச்சிக்கிட்டா, ஆனா அவ பொண்ணுக்கு விவரம் பத்தலனு” சொன்னான்
ராஜ் சார்க்கு கல்யாணம் ஆகலனு பதினைஞ்சு இருபது வருஷத்துக்கு முன்னாடியிருந்த நெருங்கிய ஆட்களுக்கு தான் தெரியும், சிலவருஷங்கள்ல புதுஆட்கள் வேலைக்கு சேரவும் அவர் தன் இமேஜூக்காக டைவர்ஸ் ஆனவரா காட்டிக்கிட்டாரு. செக்கரட்டரியும் ராஜ் சார் டைவர்ஸ் ஆனவருனு நினைச்சிட்டு இருந்தான் போல, அவன் பேச்சிலேயே பொறாமை தெரிஞ்சது. அவரோட இமேஜ் பாதிக்க வேணாம்னு நானும் எதுவும் காட்டிக்காம இருந்தேன்.
அப்புறம் நீ யாரையோ காதலிக்கிறனு சொன்னான். உனக்கெப்படி தெரியும்னு கேட்டதுக்கு நான் செக்கரட்டரியா இருக்கற அபார்ட்மென்ட்ல தான் ஆர்ஜே ரிஷி இருக்கான். அவனை தான் அடிக்கடி பாக்கறதுக்கு வர்றா. ஆனா அவனுக்கு பார்வை தெரியாதுனு சொன்னான்.
கொஞ்ச நாள்ல உன் அப்பா கார்ல போகும் போது பேசிட்டு இருந்தாரு, நிருஷியோட நடவடிக்கைய பார்த்தா அவ யாரையோ காதலிக்கிற மாதிரி தெரியுது. அவன் யார் என்னனு விசாரிக்கணும். அவங்களுக்கு கல்யாணம் பண்ணி சொத்து முழுசையும் அவங்க பேருக்கு மாத்திடணும்னு சொன்னாரு. அப்போ தான் எனக்கு ஜெர்க் ஆச்சு. சொத்து மதிப்பை விசாரிக்க போனேன், லட்சங்கள்ல வாங்கினது கோடியா மாறியிருந்துச்சு. என் பேர்ல இருக்கற சொத்தை நான் கையெழுத்து போட்டா தானே மாத்த முடியும்? அதை நானே வச்சுக்கிட்டா என்னனு தோணுச்சு.
கூட்டாளிங்ககிட்ட விசாரிச்சப்போ தான் தெரிஞ்சது, முதலாளி தன் கிட்ட இருக்கற பணத்த கொடுத்து சொத்து வாங்கினதுக்கான ஆதாரம், அவர்கிட்ட இருக்கற சொத்துக்கான பவர், வருமானவரி, சொத்தை வித்தவங்க இவங்கள வச்சு கேஸ் போட்டு சொத்தை கேட்டு வாங்க முடியும், மோசடி பண்ணேன்னு என்னை ஜெயில்ல வைக்கவும் முடியும்னு சொன்னாங்க. இன்னா பண்றதுனு யோசிச்சேன். முதல்ல உங்க ரெண்டு பேரு காதலை பிரிக்கணும்னு செக்கரட்டரி சேகருக்கு போன் பண்ணி விசயத்தை சொன்னேன்.
அவனும் இதுல உதவி செய்யறதாவும் ஆனா ஷேர் கொடுக்கணும்னு சொன்னான். நானும் ஒத்துக்கிட்டேன். உன் அப்பாகிட்ட உன் காதல நேரடியா சொல்றத விட, அடிக்கடி ஆர்ஜே ரிஷிய பாக்க அபார்ட்மென்ட்க்கு வர்றதா பொதுவா சொல்லுவோம், தானாவே இந்த கல்யாணம் நடக்காதுனு சொன்னான். அவன் சொன்னமாதிரியே தான் நடந்துச்சு. சரி இப்போதைக்கு உன் அப்பா சொத்து பிரச்சனைய எடுக்க மாட்டாரு. அதுக்குள்ள அவரை போட்டு தள்ளணும் அதே சமயம் என்மேல எந்த சந்தேகமும் வரக்கூடாதுனு யோசிச்சேன்.
அப்போ தான் செக்கரட்டரி ஒரு யோசனை சொன்னான். தேவ்ராஜ் இன்டஸ்ட்ரீஸ்ல தயாராகற மெட்டலுக்கு தேவையான ஒரு கெமிக்கல் இருக்கு. அது கொஞ்சம் கொஞ்சமா நரம்புங்கள செயலிலக்க வைக்கற ஸ்லோ பாய்ஸன், அதிகமா கொடுத்தா நிறைய சைட் எபக்ட் கொடுக்கும், கொஞ்சமா கொடுத்தா ஸ்லோ பாய்சனா இருக்கும். யாருக்கும் தெரியாம சாப்பாட்டுல கலந்து கொடுத்திட்டே வா. அந்த கெமிக்கல சாப்பாட்டுல கலந்தா டேஸ்ட் கலர்னு எதுவும் மாறாது, யாருக்கும் சந்தேகம் வராதுனு ஐடியா சொன்னான்.
நானும் அவன் சொன்ன மாதிரி உங்கம்மா தினம் மதியம் கொடுத்தணுப்பின சாப்பாட்டுல அந்த மருந்தை கொடுக்க ஆரம்பிச்சேன். இதுக்கிடையில உங்கப்பாவும் மாலினி அம்மாவும் ராசியாயிட்டாங்க.
‘நடந்ததெல்லாம் மறந்துடலாம், நிருஷிகாவ என் மகன் அஸ்வினுக்கு கட்டி வச்சுடலாம். நான் என் மகனுக்கு சொத்தை சேர்க்க நினைக்கிறேன், நீ உன் மகளுக்கு சொத்து சேர்க்கறே, ரெண்டு பேரும் எவ்ளோ நாள் இருக்க போறோம். பசங்களுக்கு கல்யாணம் பண்ணி வைப்போம். ரெண்டு பேரோட சொத்தையும் அவங்க அனுபவிக்கட்டும்னு கேட்டாங்க’, ராஜ் சாரும் யோசிச்சு சொல்றேன்னு சொன்னாரு. இதுக்கிடையில நீ காதல் தோல்வியில தேவதாஸ் கணக்கா சுத்திட்டு இருக்கவும் உன் மனச மாத்தி அஸ்வினுக்கு கல்யாணம் பண்ணி வைக்கறத பத்தி யோசிக்க ஆரம்பிச்சிட்டாரு.
அஸ்வின்கிட்டயும் என் கண்ணுமுன்னாடி பேசினாரு. உன்ன பத்தின எல்லா உண்மையையும் சொன்னாரு, உன் அம்மாவோட அவர் உறவ பத்தியும் உன்னோட காதலை பத்தியும், அது ஏதோ ஒருதலை காதலா இருக்கும்னு சொன்னாரு. அஸ்வின் மாலினி அம்மாவவிட பெருந்தன்மையா பேசினாரு.
‘மாமா உங்களுக்கும் அம்மாவுக்கும் எது சரினு படுதோ அதை செய்யுங்க. நிருஷிகா என் மனைவியான பிறகு நான் கண்டிப்பா அவங்கள நல்லா பாத்துப்பேன், சொத்து எல்லாம் அவங்க பேர்லயே இருக்கட்டும்னு சொல்லிட்டாரு. உடனே உன் அப்பா அஸ்வின உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவே பண்ணிட்டாரு. திரும்பவும் சொத்து பிரச்சனை ஆரம்பிக்கவும் அன்னைக்கே கெமிக்கலை அதிகமா கலந்து கொடுத்தேன். கொஞ்ச நேரத்துல அவருக்கு ஸ்ட்ரோக் வந்துடுச்சு.
அஸ்வின் உடனே ஆஸ்பிட்டல்ல சேர்க்கவும், அவர் பிழைச்சிட்டாரு. ஆனா யாராலயும் விஷம் கலந்ததை கண்டுபிடிக்க முடியல. நீயும் கல்யாணத்துக்கு ஒத்துக்கலனு தெரிஞ்சதும் நிம்மதியா இருந்தாலும் தொடர்ந்து அவர் ஆபிஸ் வரப்போ எல்லாம் சாப்பாட்டுல கெமிக்கல கலந்துட்டே இருந்தேன். அதுல மறுபடியும் ஸ்ட்ரோக், மைல்ட் அட்டாக் வந்துச்சே தவிர பிழைச்சிட்டாரு.
அதுக்கப்புறம் பாத்தா மளமளனு கல்யாண வேலைங்க ஆரம்பிச்சிருச்சு, ஆபிஸ்க்கும் வரதில்ல. மதிய சாப்பாட்டை என்கிட்ட கொடுத்தணுப்பினா தானே நான் மருந்த கலக்க முடியும்? என்ன பண்றதுனு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன். நீயும் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதால வாங்கி வச்ச சொத்தை உன் பேருக்கு மாத்தணும், அதுக்கும் முன்னாடி பவரை உன் பேர்ல மாத்தணும்னு பேச ஆரம்பிச்சிட்டாரு. கடைசியில கல்யாணத்துக்கு முதல்நாள் ராத்திரி என்னை கூப்பிட்டு பத்திரத்துல கையெழுத்து போடு, நான் கல்யாண பரிசா காலைல என் மகளுக்கு கொடுக்கணும்னு கேட்டுட்டாரு. இதுல இந்த விஷயம் யாருக்கும் தெரியாது சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சொல்லவே, இத விட்டா வேற சந்தர்ப்பம் கிடைக்காதுனு சேகர் சொன்ன அளவ விட அதிகமா போட்டு ஜூஸ்ல கலந்து கொடுத்துட்டேன்.
அதிகமான அளவு மருந்த கலந்ததால டாக்டர்ஸ்ங்க ஸ்லோ பாய்ஸன் உடம்புல கலந்திருக்கறதயும் அதனால நரம்புகள் பாதிக்கப்பட்டு ஸ்ட்ரோக் வந்திருக்கறதாவும் கண்டுபிடிச்சிட்டாங்க. நல்லவேளையா மூளைல அடைப்பு ஏற்பட்டு அவர் கோமா ஸ்டேஜூக்கு போயிட்டாரு. அந்த பழி உன் அம்மா மேல விழுந்துடுச்சு, நீயும் காணாம போயிட்டே. உடனே வேலைய விட்டு நின்னா சந்தேகம் வரும்னு நானும் வேலைய விடாம இருந்தேன்.
காணாம போனவ திரும்பி வரமாட்டேனு நினைச்சா, ஓடிப்போன காதலனோட வந்திருக்கே, அதுவும் அவனுக்கு பார்வை நல்லா தெரியுதுனு செக்கரட்டரி சொன்னான். நான் பயந்த மாதிரி முதல்ல நீ வீட்டுக்கு வந்தே, அப்புறம் உன் காதலன் வந்தான், ரெண்டு பேரும் சேர்ந்து டிடெக்டிவ் வேலை செய்ய ஆரம்பிச்சிட்டீங்கனு தெரிஞ்சு போச்சு. உன் அப்பா வேற பவரை உன் மேல எழுதி வச்சிருக்காருனு ஆடிட்டர் மூலமா தெரிஞ்சுக்கிட்டேன். நீ வந்து சொத்தை கேட்டா கொடுத்து தானே ஆகணும் இல்லனு சொன்னா நான் மாட்டிக்குவேனே, என்ன பண்றதுனு யோசிச்சிட்டு இருந்தப்போ தான் நீயா போன் பண்ணி வரசொல்லி தொக்கா என்கிட்ட மாட்டிக்கிட்டே. போதுமா விளக்கம்? கையெழுத்து போட்டு கொடுத்துடு, எனக்காக கப்பல் வெயிட்டிங்”
“இது என் சொத்து இல்ல, அப்பா கஷ்டப்பட்டு உழைச்சது. நான் எந்த உரிமையில உங்களுக்கு எழுதி கொடுக்க முடியும்?”
“நீ இந்த பதில சொல்றதுக்காக தான் இம்புட்டு விளக்கம் கொடுத்தேனா? ஒழுங்கா கையெழுத்து போடு, இல்லனா நடுகடல்ல மீனுக்கு இரையாக்கிட்டு போயிட்டே இருப்பேன்”
“அண்ணா, உங்களுக்கும் என் அப்பா வயசு தானே இருக்கும். உங்க மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தார்னா அவர் தன்னோட அந்தரங்கத்தை கூட உங்க கிட்ட சொல்லியிருப்பாரு. நீங்க அவருக்கு துரோகம் செய்யலாமா?”
“என்னை நம்பி அவர் சொன்ன அந்தரங்கத்தை நான் இதுவரைக்கும் யார்கிட்டயும் சொல்லலயே. என்கூட்டாளி செக்கரட்டரிக்கு கூட அவரை பத்தின உண்மைய இதுவரைக்கும் சொல்லல. அவன் இன்னமும் புவன்புவனிகா ராஜ் சார்க்கு பொறந்தவங்க தான்னு நினைச்சிட்டு இருக்கான். எனக்கு எழுதி கொடுத்த சொத்தை நானே அனுபவிக்கனும்னு நினைச்சேன், தப்பா?”
“அதுக்காக அவர் உயிர எடுக்கறவரைக்கும் போவீயா?”
“அதெல்லாம் பாத்தா வாழ முடியுமா கண்ணு? இம்புட்டு சொத்தை நானும் என் வம்சமும் எப்போ சம்பாரிக்க முடியும் சொல்லு. சீக்கிரம் கையெழுத்து போடு, அந்தா இருக்கே பெரிய கப்பல், அது எனக்காக வெயிட்டிங்”
நிருஷிகா பதில் பேசாமல் அமைதியாக இருக்கவும் அவளின் தலைமுடியை பிடித்து இரும்புபடகின் நுனியில் இடித்தான். நெற்றியில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் கொட்டியதையும் பொருட்படுத்தாமல் அவள் கன்னத்தில் அறைந்தான், அடுத்த விநாடி அவன் நெஞ்சை பிடித்துக் கொண்டு தள்ளாடி படகின் ஓரம் சாயவும் அவனுடன் இருந்தவர்கள் எல்லாம் அவனை பிடிக்கும் முயற்சியில் அந்த சிறிய மோட்டார் படகு மொத்தமாக சாய்ந்தது. “நிரு” என்ற சத்தமான அழைப்பு வரும் திசையை நோக்கி எழுந்து நின்றவளுக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வர கடல் நீரில் விழுந்தாள்.
(தொடரும்)