• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

புது மங்கல சௌபாக்கியம் - 6

நிதனிபிரபு

Administrator
Staff member



அத்தியாயம் 6


அந்த பார்க்கில் கதை சொல்லி கொண்டிருந்த நித்திக் சரண் சுற்றி பார்க்க,

"ஏன் என்னாச்சு??"

"இல்ல ரொம்ப நேரமா உகந்ததுனால கால் வலி எடுக்குது.."

"ஒ!! அப்போ வாங்க ஒரு வாக் போவோம்.. என்ன வேணுனா பிடிச்சுக்கோங்க நோ ப்ரோப்லம்.."

"இட்ஸ் ஓகே ஐ கேன் மேனேஜ்!."

என்றவன் மெல்ல எழுந்து நடக்க ஆரம்பித்தான்.. குழந்தை போல தான் இருந்தது அந்த நடை சிறிது நேரத்தில் இயல்பாகவும் நடந்தான்..

கதைகளில் வரும் ஹீரோவை போல ஆறடி இல்லை.. வெண்ணிலாவை விட ஒரு இன்ஜ் தான் உயரம் அதிகம் இருப்பான் ஆனாலும் அவனை ரசிக்க வைத்தான்.. அவன் காலின் வலி அவனால் பேச முடியவில்லை பல்லை கடித்து பொறுத்துக்கொண்டே நடக்கிறான் என புரிந்தது.. 'என் கைய பிடிச்சுகிட்டா தான் என்னவாம், ஓவரா பண்றான் சிடுவன்..' வாயிக்குள் புளுபுளுத்துக் கொண்டே கூடவே நடந்தாள் வெண்ணிலா..

இருவர் தோள்களும் உரசிக்கொள்ளும் தூரம், இருவரின் கைகள் கூட அவ்வப்போது அறியாமல் தீண்டி சென்றது..

"அப்புறம் என்னாச்சு??" பொறுத்து பொறுத்து பார்த்தவள் கேட்டே விட்டாள் அவனின் அமைதியை கலைக்க..

"வீட்டுக்கு போலாம்!!"

"ஏன்??"

"என்ன ஏன்?? இருட்ட ஆரம்பிச்சுருச்சு.. வீட்ல தேட மாட்டாங்களா??"

"இல்ல நான் ரூம் எடுத்து தானே தங்கிருக்கேன்.."

"சோ!! அதுக்காக மிட் நைட் போக முடியுமா??"

"இல்ல பாதில..."

"அதான் காரணம் என்னன்னு தெரிஞ்சிருச்சுல இதனால தான் எங்க அம்மா ஒத்துக்கல மீதி அதுக்கப்புறம் என்ன நடந்தது எப்படி வீட்ல மாட்டுனோம் என்ன பிரச்சனை எல்லாமே ஒவ்வொன்னா சொல்றேன் இப்ப எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு."

என்றவன் கிளம்ப, இவளும் அவனோட கிளம்பினாள்.. தன்னை யாரோ தொடர்வது போல் ஒரு உந்துதல் தோன்ற சைடு மிரரில் பார்க்க பின்னாடி இவளை பின் தொடர்ந்துக்கொண்டு இருந்தான் நித்திக்..

அதை பார்த்தவளுக்கோ உல்லாச மனநிலை தன் பாதுகாப்பு வேண்டி தான் வருகிறான் என்று சந்தோசமாக வண்டியை தேர் போல உருட்டிக்கொண்டு அவள் தங்கிருக்கும் வீடு வந்து சேர்ந்தாள்..

இவனோ அவளை கடந்து போக பார்க்க, "என்ன சார் இந்த பக்கம் வந்துருக்கீங்க??" இப்போது தான் கவனிப்பது போலவும், உனக்காக தான் என்று சொல்வான்னு எதிர்பார்த்து அவன் முகத்தை பார்க்க,

"அம்மா ஹாஸ்பிடல் இந்த பக்கம் தான்... ஹாஸ்பிடல் போயி அம்மாவ பாத்துட்டு பப்பூவ கூட்டிட்டு வீட்டுக்கு போகணும்.. முடிஞ்சா வெளியில வெயிட் பண்றீங்களா நான் அவளை உங்களுக்கு இண்ட்ரடியூஸ் பண்ணி வைக்கிறேன்??"

"இல்ல சார் நான் சாப்பிட்டு படுக்கணும்.. தூக்கமா வருது.. "

என்று சிலுப்பிக்கொண்டு உள்ளே சென்றாள் வெண்ணிலா.. 'அட என்னாச்சு இந்த பொண்ணுக்கு!' என்று நினைத்தவன் தலையை ஆட்டிக்கொண்டு கிளம்பிவிட்டான்..

"போடா சிடுவா!! பொண்டாட்டிகிட்ட பழைய காதலிய இன்றோ வேற குடுப்பியா??" ஜன்னல் வழியே அவன் செல்வதை பார்த்துக்கொண்டே பேசியவள் நெஞ்சுக்குழியில் அவன் கட்டிய தாலி சுகமாக உரசியது..

"ஹே ஐக்யூ! சாப்புட வரலையா??"

"ஓய்ய்ய்... ஏய்ய்ய்.. அடியேய்..."

"ஹான்!! என்னடி??" சலிப்பாக பார்த்தாள் தன் தோழி சரண்யாவை.

"அய்யே என்ன சலிப்பு சாப்புட கூப்பிட்டேன் டி என் ஐக்யூ.."

"எரும அதென்ன ஐக்யூ??"

"அதுவா!! உன் பேரென்ன??"

"முறைக்காத டி சொல்லு??"

"வெண்ணிலா!!"

"வெண்ணிலாவுக்கு இன்னோரு பேர் இருக்கு தெரியுமா??"

"தெரியாது.. நீயே சொல்லு.."

"மதி!!"

"சோ.."

"மதிக்கு இங்கிலிஷ்ல ஐக்யூ(IQ) தானே டி அதான்.."

என்ற சரண்யா, வெண்ணிலா தாடையை பிடித்து கொஞ்ச, "பைத்தியம் டோய்!! என்பது போல பார்த்து வைத்தாள்..

"சரி சரி முறைக்காத ஏன் உம்முனு இருக்க சொல்லு.."

"ஒன்னுல நம்ம சார் பற்றி தான் யோசிச்சிட்ருக்கேன்.."

"எந்த சார்??"

"அதான் டி நித்திக் சார்.."

"உன் கணவான்னு சொல்லு.."

என்றதும் மறுபடி வெண்ணிலா முறைக்க ஆனால் கன்னம் என்னவோ சிவந்து போனது வெட்கத்தில்..

"ஹே ஆர் யூ ஃபீலிங் ப்ளிஸ் (bliss)??"

"ச்சி போடி எரும!!" என்றவள் ஓடி சென்று மீண்டும் அதே ஜன்னல் அருகே நிற்க இப்போது சரியாக நித்திக் வண்டி ஹாரனுடன் இவர்கள் வீட்டை தாண்டி சென்றது..

நித்திக் வண்டி ஓட்ட அவன் தோளில் சாரு கை இருக்க வெகு சுவரசியமாக எதுவோ பேசிக்கொண்டே சென்றார்கள்.. பார்ப்பதற்கு இயல்பான காட்சி தான் ஆனால் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் அல்லவா இவளுக்கு காதலர்கள் நெருக்கமாக செல்வது போல இருக்க முதல் முதலில் கண்ணில் நீர் கட்டிவிட்டது பின்னாடியே வந்த சரண்யா இவளை அணைத்து கதை பேச இவளும் ஒழுகிய கண்ணை தோழிக்கு தெரியாமல் துடைத்துக்கொண்டு கதை பேச ஆரம்பித்துவிட்டாள்..

அடுத்த நாள் வங்கி ஆரம்பிக்க எப்போதும் சரியான நேரத்திற்கு வரும் நித்திக் அன்று இன்னும் காணவில்லை.. இவளுக்கு வாசலை பார்த்து பார்த்து கண்கள் பூத்தது தான் மிச்சம்..

"ஏண்டி சரண்!! இவ ஏன் பொண்ணு மாதிரி புதுசு புதுசா பண்றா??"

"டேய்ய் அவ பொண்ணு தானே டா.. சரி என்ன பண்றா அப்புடி??"

"உனக்கு கண்ணு தெரிலையா எரும.. வாசல்ல எட்டி எட்டி பாக்குறா, நகத்த கடிச்சு துப்புறா, ரொம்ப டென்சனா வேற இருக்கா??"

"ஓஓஓஓ அதுவா! உனக்கு விசயமே தெரியாதா.. நம்ம மேடம் ஃபாலன் இன் லவ்??"

"எதே!!" அப்பட்டமான அதிர்ச்சி அபிஷேகிற்கு..

"எஸ் எஸ்!!"

"லூசு!! ஏதாச்சும் உளறாத.. நமக்கு தெரியாமலா??"

"உனக்கு தெரியாதுன்னு சொல்லு மேன்.. எனக்கு தெரியும்.."

"யாரு??"

"அக்கட சூடு!! என்றவள் அபிஷேக் கன்னம் பற்றி வாசலை காட்ட ப்ளூ கலர் சட்டை பிளாக் பாண்டில் தலையை கோத்திக்கொண்டே உள்ளே வந்த நித்திக் சரணை, வெண்ணிலா கண்கள் இமை தட்டாமல் பார்க்க அவனோ இவளிடம் புருவத்தை உயர்த்தி, "என்ன!!" என்று கேட்டான்..

இங்கிருந்தே வெண்ணிலா தன் மூன்று விரல்களை நீட்டி சூப்பர் என்று சொல்ல அவனோ இவளை முறைத்துக்கொண்டே உள்ளே சென்றான்..

"பாத்தியா இப்போ, அபி தேக்கோ! அவர் ரூம் போக மேடம் காரணம் தேடி போவாங்க அதுவும் பத்து நிமிசத்துக்குள்!" என்றதும் வெண்ணிலாவும் சரியாக ஏதோ கோப்பை தூக்கிக்கொண்டு, "சரண்! இந்த அமௌன்ட் டீடெயில்ஸ் பத்தி நான் சார்கிட்ட கேட்டுட்டு வரேன்.." என்று நிமிர்ந்தும் பார்க்காமல் ஓடிவிட்டாள்..

"சார்.. மே ஐ கம் இன்??"

"எஸ்!!"

வந்தவள் எதுவும் பேசாமல் அவனை பார்த்துக்கொண்டே இருக்க, கணினியில் வேலையாக இருந்தவன் இவளை பாராமலே, "ஏன் உன் இடத்துல உக்காந்து பார்த்தா சரியா தெரிய மாட்டேன்குரேன்னா??"

"ம்ம்ம்ம்!!"

"வேணுனா என் மடில உக்காந்து வேல பாக்குறியா??"

"ம்ம்ம்ம்!!"

"வாட்?!"

அவனை பார்த்துக்கொண்டே கேட்ட கேள்விக்கு பதிலளித்தவள் அவனின் கத்தலில் தன்னிலை வந்தாள்..

"சாரி.. சார்..!!"

"ம்ம்ம்ம்.. சரி சொல்லுங்க.."

"அது.. அத்த?? அவனின் முறைப்பில் அம்மா எப்புடி இருக்காங்க சார்..

"யா பைன்!!"

"சா..சாப்டீங்களா??"

"ம்ம்ம்ம்!!"

"நைட் தூங்குனீங்களா??" சிவந்திருக்கும் அவன் கண்ணை ஆராச்சியாக பார்த்துக்கொண்டே கேட்க,

"என்ன வேணும் உனக்கு இப்போ?? தூங்குனேன், பல்லு விளக்கினேன், குளிச்சேன், டிரஸ் போட்டேன், சாப்பிட்டு, அம்மாவ போயி ஹாஸ்பிடல்ல பாத்துட்டு வரேன் அதான் லேட்.. ஒன் ஹவர் பெர்மிஸ்ஸின் மெயில் அனுப்பிருந்தேன் ஹெடுக்கு.. போதுமா.. இல்ல.."

"இல்ல.. இல்ல... சார் போதும்!" என்றவள் வெளியே ஓடி வந்து தன் சீட்டில் அமர்ந்து நீரை பருக அப்போது தான் மூச்சே வந்தது.. சிங்கத்தின் குகைக்குளிருந்து எந்த சேதாரமும் இல்லாமல் தப்பி வந்த உணர்வு..

வெண்ணிலாவிற்கு யாரிடமும் வசவு வாங்கி பழக்கமில்லை ஆனால் இவளை முதலில் திட்டியது நித்திக் தான் கணக்கை சரியாக பதியவில்லை என்று அப்போதெல்லாம் உக்காந்து அழுத ஞாபகங்கள்.. வங்கியே ஒன்று கூடி அவளை சமாதானம் செய்து இவளுக்கு பிடித்த டைரிமில்க் சில்க் வாங்கி குடுத்த ஞாபகங்கள் ஆனால் இன்று அதே திட்டு கோப சொற்கள் அதுவும் அவன் வாயில் சுப்பிரபாதமாக ஒலித்தது..

வெண்ணிலாவிற்கு எப்போது எப்படி இவன் பால் காதல் மலர்ந்தது என்று தெரியவில்லை.. முதன் முதலில் இவனை பார்த்த போது, "பிகர் நல்லருந்தா சைட் அடிக்கலாம் போலையே!!" என்று ஏனோ தானோவென்று பார்க்க ஆரம்பித்தாள்..

வங்கியில் குமரி முதல் பல்லு போன ஆயா வரை அவரிடம் வழிந்து இளித்து பேச இவனோ சிடு சிடு மூஞ்சியில் அனைவரையும் தள்ளி நிறுத்தி வைத்தான் அது பிடித்தது..

என்றோ ஒரு நாள் அன்றாட வீட்டு வேலை செய்யும் பெண்மணியின் நகைக்கடன் ஏறி ஏலத்திற்கு வர அந்த பெண்ணோ அழுது இவன் காலிலேயே விழ, வங்கி விதியை மீறி ஒன்னும் செய்ய முடியாமல் இவன் கை காசு போட்டு கட்டிவிட்டு இன்னும் ஒரு வாரம் அவகாசம் வாங்கிருப்பதாக கூறி அனுப்ப அந்த பெண்ணும் சரியாக ஒரு வாரத்தில் இவனிடம் பணத்தை கட்டியது..

"நவீன கர்ணன் போல டி.. காசு போயிருந்தா தெரிஞ்சிருக்கும்.." என்று கேலி பேசிய யார் பேச்சும் தன் காதில் போட்டுகொள்ளாமல் இருந்த குணம் பிடித்தது..

தான் உண்டு தன் வேலை உண்டு என்ற குணம் பிடித்தது.. அவனின் ஈகோ, திமிர் கூட வெண்ணிலாவின் வாய் திட்டினாலும் கண்ணும் மனதும் அவனை வெகுவாக ரசித்தது..

இதெல்லாம் சேர்ந்து தான் அவன் கூப்பிட இடத்திற்கு, கூப்பிட்டவுடன் பலி ஆடாக போயி கழுத்தில் தாலி வாங்கியது.. அந்த நொடி கூட அவள் அதிர்ச்சியில் தான் இருந்தாள்..

அப்போ எப்போ தான் காதல் பிறந்தது.. ஓ!! அவனின் கால் குறை அறிந்த போதா? சர்வ நிச்சியமாக இல்லை.. எப்போது அவன் வேறு பெண்ணை விரும்பிகிறேன் என்று சொன்னானோ அந்த நொடி அவள் இதயத்தில் ஏற்பட்ட வலி கூறியது, "அடி பைத்தியக்காரி இது தான் காதல்!!" என்று..

ஒரு அவசரத்துக்கு கூட யாரையும் தன் வண்டியில் எற்றாமல் ஆட்டோவிற்கு காசு குடுத்து அனுப்புபவன் சாருலாதாவுடன் வண்டியில் ஜோடியாக சென்றபோது இவளை கேட்காமலே இவள் கண் இதயத்தில் உணர்ந்த வலிக்காக நீர் சொரிந்ததே அப்போது முழுதாக உணர்ந்தாள் காதலின் வலியை..

இப்போதும் கணினியில் ஒரு கண் தன்னை திட்டி அனுப்பிய சிடுவன் மீது ஒரு கண்ணை வைத்து பார்க்கும் இல்லை இல்லை பச்சையாக சைட் அடிக்கும் வெண்ணிலாவை பார்த்து இரு வேறு கண்கள் கோவத்தில் சிவந்தது..

"காதலிக்குறியா டி காதோல்.. காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கூட்டிட்டு போன கதையா இருக்கு என் கத.. உனக்காக பாக்குற எல்லா பொண்ணையும் நட்பா, அக்கா தங்கச்சியா பார்த்து உனக்காக இலவு காத்த கிளியாக காத்திருந்தா எவனோ கொத்திட்டு போக விடுவேனா நான் பருந்து டி இந்த கிளி எனக்கு மட்டும் தான்!!"

என்று வங்கி கழிவறையில் கண்ணாடி முன்னாடி நின்று ஆக்ரோசமாக அபிஷேக் பேச இங்கு காலமும், நேரமோ, "நீ பருந்துன்னா அவன் கழுகு போடா பிக்காளி பயலே!" என்றது..
 
Last edited:
Top Bottom