• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

புது மங்கள சௌபாக்யம் - 12

STN - 50

New member
Staff member
தன் நெஞ்சில் சாயிந்து பிரியா விடை கேட்டு முட்டி நிற்கும் தன் மாமன் மகளை பூவாக அணைத்து விடுவித்தான்.. அதில் துளியும் காதல் இல்லை.. நேசம் மட்டுமே இருக்க, தன் மாமன் அணைப்பு புரியாமல் இருக்குமா??

சாரு நிமிர்ந்து நித்திக் முகம் பார்க்க, அவன் கைகள் சாருவை அணைத்திருந்தாலும், கண்கள் படியில் அழுதுக்கொண்டே ஓடும் வெண்ணிலா மேல் தான் இருந்தது.. அதற்கு மேல் அவளுக்கும் அங்கு இருக்க விருப்பமில்லை அன்னை காலை சொன்னது நினைவு வந்தது..

"காலமும், பிரிவும் சிலவற்றை உணர்த்தும் பப்பூ!!"

பெருமூச்சு விட்டவள் நித்திக்கை ஏக்கம் நிறைந்த கண்களுடன் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே இறங்கி சென்றாள்..

இங்கு சாரு கிளம்பியவுடன் ஓட்டமும் நடையுமாக வந்த நித்திக் தன் அறைக்குள் நுழைந்தான்..

"வெண்ணி.."

கட்டிலின் ஓரத்தில் கால் முட்டியில் முகம் புதைத்து விசும்பும் வெண்ணிலா அருகில் சென்று அழைத்தான் மெலிதாக..

நிமிர்ந்து பார்த்தவள் நித்திக்கை கண்டு, "ஹே வாங்க வாங்க.. ஒரே ரொமான்ஸ் போல.." இயல்பாக சிரித்துக்கொண்டு கேட்டாலும் கண்கள் நீர் விடுவதை அவளால் தடுக்க முடியவில்லை..

"ப்ச்.. அதெல்லாம் ஒன்னுல.."

"அடேயப்பா என்ன சலிப்பு?? ஓ!! நான் வந்து தொல்லை பண்ணிட்டேன்னா??"

"ஆமா நீ வந்தது தொல்ல தான்.." என்றவன் அவனின் மனதுக்குள் வந்ததை பற்றி சொல்ல, இவளோ வேறு மாதிரி புரிந்துகொண்டு மீண்டும் கண்கள் நீரை சொரிய அமைதியாக படுத்துக்கொண்டாள் வெண்ணிலா.. அவள் இருந்த மன சோர்வில் அவனின், "வெண்ணி" என்ற அழைப்பை கவனிக்கவும் இல்லை.. அவனும் ஏன் அவ்வாறு அழைத்தோம் என்று உணரவும் இல்லை..

இருவரும் என்னனவோ யோசனையில் இருந்தவர்கள் எப்போது உறங்கினார்களோ இருவருக்கும் தெரியவில்லை..

காலை வழக்கம் போல் எழுந்த நித்திக் இன்றும் தனக்கு காபி கொண்டு வந்து குடுக்கும் அன்னையை அமைதியாக பார்த்தான்..

"அம்மா!!"

"சொல்லுடா."

"போன வாரம் நீ ஹாஸ்பிடல்ல இருந்த இன்னைக்கு இப்புடி ஓடி ஆடி வேல செய்யுற??"

"மனசு நல்லாருக்கு அதான் உடம்பு நோவு பெருசா தெரியல.."

"அதுக்குன்னு எல்லா வேலையும் நீயே செய்யணும்மா?? "

"நம்ம வீடு வேல வேற யார் செய்வா??"

"அதான் வெண்ணி இருக்காளே.."

"என்னப்பா சொன்ன??"

"அது வெண்ணிலாகிட்ட.."

"அவ உன்கூட தானே வேலைக்கு வரா.."

"அதுனால என்ன?? சாயிந்தரம் பிரீ தானே??"

"ஏன் நீ கூட ஈவினிங் பிரீ தான்.."

"ஹாஹா!! உன் மருமகளை வீட்டுக்குடுக்க மாட்டியே!!"

"பின்ன!! அவ தேவதைடா.. மனசுல உள்ளத உள்ளபடி சொல்லுவா.. முக்கியமா முகஸ்துதி பண்ண மாட்டா."

" இந்த ஒரு வாரத்துக்குள்ள உன் மருமகள பத்தி இவ்வளவு தெரிஞ்சுக்கிட்டியா?? "

"ஒரு நாளே போதும் என் மருமக முகம் கண்ணாடி மாதிரி நம்ம என்ன காட்டுறோமோ அது தான் பிரதிபலிக்கும்."

"ஸ்ஸ்ஸ்ஸ் புல்லரிக்குது மா??"

"போ போயி மருமககிட்ட சொல்லு அந்த நைல்பொலிஷ் போட்ட புலி நகத்துல நல்லா கீறி விடுவா."

"ஹ்க்கும்!! கீறிட்டாலும்.." என்றவன் எண்ணம் எங்கெங்கோ போக தலையை உளுக்கினான்..

" போடா காலங்காத்தால கனா காணாம எப்படியோ அவ எந்திரிச்சு வர இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு போய் அவ கூட ரெஸ்ட் எடு. "

" ஐயோ மம்மி இவ்வளவு நல்ல மாமியாரா இருந்தா நீங்க மாமியார் மருமகள் சண்டை எப்ப போடுறது நான் அதை எப்ப ரசித்து பார்க்கிறது??"

"நல்ல எண்ணம் டா.. த்து.. நாலாம் தெளிவாயிருக்கேன்பா.. கல்யாணம் ஆன புதுசுல என் பொண்டாட்டி அது பண்றா இது பண்றான்னு வந்து பக்கம் பக்கமா குற்றப் பத்திரிக்கை வாசிப்பானுங்க இந்த பசங்க.. அப்புறம் ஒரு புள்ள பெத்ததுக்கும் ஏதோ அவ பொண்டாட்டி மட்டும்தான் அதிசயமா இந்த உலகத்துல புள்ள பெத்து போட்ட மாதிரி தாங்குவானுங்க நம்ம சின்னதா ஏதாவது சொன்னாலும் வந்து வக்காலத்து வாங்குவானுங்க நம்மள கொடுமைக்கார மாமியாரா உலகத்துக்கு காட்டுவானுங்க இந்த பஞ்சாயத்துக்கு நான் வரவே மாட்டேன் பா.. இப்பையும் அவ எனக்கு மருமக தான் ஒரு புள்ள பெத்தாலும் அவ என் மருமக தான்."

"அய்யோ இவ்ளோ தெளிவா இருந்தா எங்க பிளான் என்ன ஆகுறது??"

"என்னடா பிளான்??"

" அது குழந்தை பெத்துக்கறது பத்திம்மா.. "

" டேய் டேய் இந்த படத்துல எல்லாம் காட்டுற மாதிரி ஒரு வருஷம் கழிச்சு, ரெண்டு வருஷம் கழிச்சு பெத்துக்கணும்னு கிடைக்கும்போது தள்ளி போடாதீங்கடா.. உங்களுக்கு புள்ளையால எந்த இடையூறும் இல்லாத படி நான் பார்த்துக்கிறேன் அம்மா இருக்கேன் அதனால தயவு செஞ்சு சீக்கிரமா பிள்ளை பெத்துருங்க. "

என்று கூறிய யசோதா முகத்தை பார்த்தவன் முகத்தில் விரக்தியான சிரிப்பு.. நேற்று வெண்ணிலா சொன்னது நினைவு வந்தது எப்படியும் மூன்று மாதம் பிள்ளை உண்டாகவில்லை என்றால் அது வெறுப்பாக மாறும் குடும்பத்தில் சண்டை சச்சரவு வரும் என்று கூறிய அனைத்தும் ஞாபகம் வர ஒரு பக்கம் இதற்குத்தானே ஆசைப்பட்டோம் என்று தோன்றினாலும் இன்னொரு பக்கம் மனம் ஏனோ பாகற்காயாய் கசந்தது..

"என்ன மேடம் வாய வாடகைக்கு விட்ருக்கீங்களோ??"

"ஏன்??"

"பின்ன நம்ம பிளான் பத்தி நேத்து நிறையா பேசுனீங்க.. இன்னைக்கு ஒன்னுமே பேச மாட்டேங்குறீங்க??"

ஒரு வார காலமாக தோளை பிடித்த அமர்ந்தே பழக்கப்பட்டு போனவனுக்கு இன்று வண்டி கம்பியை பிடித்து அமர்ந்து வரும் வெண்ணிலாவை பார்க்க மனது குடைய இவன் அவள் காது குடையும் அளவு வள வளத்து கொண்டே வந்தான்..

நித்திக் கேட்ட எந்த கேள்விக்கும் அவளிடம் இருந்து வாய் வார்த்தையாக பதில் வரவே இல்லை சொல்லிக் கொண்டிருந்தான் இத்தனைக்கும் காலையில் தானும் அம்மாவும் பேசிய உரையாடல் முதற்கொண்டு அனைத்தும் ஒப்பித்து விட்டான்.. ஆனாலும் அவள் அமைதியாகவே வந்தாள்.. இவன் பேசி பேசியே வங்கியும் வந்தது.. வண்டியிலிருந்து இறங்கியவள் வேகமாக நித்திகை பார்த்து திரும்பி,

"இப்போ என்ன சார் உங்க பிரச்சனை நீங்க சொன்ன மாதிரி இன்னும் கொஞ்சம் நாளுல உங்க அம்மாவை என்ன வெறுக்க அடிச்சுட்டு நான் போய்டுறேன் போதுமா பிளான் பிளான்னு சும்மா உயிரை வாங்காதீங்க." என்றவள் முறைப்பாக பேசிவிட்டு உள்ளே செல்ல இவன் தான் பே என்று பார்த்து வைத்தான்..

"என்ன ஐக்யூ ஒரே குஜால்ஸ் போல."

நேரம் காலம் தெரியாமல் கேலி பண்ணும் தோழி சரண்யாவை திரும்பி முறைத்தாள்..

"சிடுவன் சாரும் நீயும் ஒரே கலர் டிரஸ் போட்ருக்கீங்க??"

"ப்ச்!! அவர சிடுவனு சொல்லாத டி.."

கையில் வைத்திருக்கும் பேனாவை வைத்து அழகாய் மிரட்டினாள் வெண்ணிலா..

" ஆமா ஆமா அவர சிடுவன் சார் என்று சொல்ல முடியுமா?? அவரு தான் ரொமான்டிக் ஹீரோவா மாறி ரொம்ப நாளாச்சே!!"

வெண்ணிலாவின் புரியாத பார்வையில், சரண்யா வெண்ணிலா தாடை பிடித்து மேனேஜர் ரூம் பக்கம் திருப்ப நித்திக் இவளை ஒரு பார்வையும், கையிலிருக்கும் கோப்பை ஒரு பார்வையும் பார்த்துக்கொண்டு இருந்தான்..

இருவர் பார்வையும் ஒரே நேர்கோட்டில் இணைய கண்கள் காதல் பாடம் படித்தது..

"எனக்கெனமோ நம்ம நித்திக் சார் சொன்ன அந்த லவ் ஸ்டோரி எல்லாம் பொய் கதைனு தான் தோணுது உன்ன கரெக்ட் பண்ண தெரியாம தான் இதெல்லாம் சொல்லிருப்பாரோ?? "

இப்போது வெண்ணிலா திரும்பி சரண்யாவை முறைக்க,

" அட எதுக்கெடுத்தாலும் முறைக்காதடி சொல்றதை கேளு அது எப்படி இத்தனை பேர் இருக்காங்கள்ள திடீர்னு உன்னை கூட்டிட்டு போயி தாலி காட்டுவாரு?? கேட்டா காதல் நாடகம் சொல்லுவாரம்.. சரி அத விடு அம்மா பேர வச்சு இப்போ ஒரே வீட்ல இருக்குறது இதோ இப்போ ஒரே வண்டில வரது.. எல்லாத்தையும் கோத்து பாரு எனக்கென்னமோ உன் அவரு ரொம்ப வில்லங்கம் புடிச்சவருன்னு தோணுது உன்னை கரெக்ட் பண்ண தெரியாம தான் ஏதேதோ காரணம் சொல்லி உன்ன அவரு விலையில விழுக வச்சிருப்பாரோ. "

"என் சிடுவன் கேட்டா உயிரே தருவேன்.. என்ன தர மாட்டேனா.. அவருக்கு பொய் பேச தெரியாது டி.." என்றவள் கண்கள் அவனில் நிலைத்து நிற்க, அவள் எண்ணுக்கு அழைப்பு வந்தது..

"ஹலோ!!"

"வெண்ணி!! கொஞ்சம் ரூம் வாயேன்.."

இவளும் எழுந்து நித்திக் அறைக்கு செல்ல கதவு சாற்றிய அடுத்த நொடி திரைசீலையும் மூடப்பட்டது..

"என்ன??"

"இல்ல நேத்து மாதிரியே இன்னைக்கும் கால் வலிக்குது.."

என்றவன் ஷூவை கழட்டி வைத்திருந்தான்..

"சோ???"

"கொஞ்சம் நீவி விட்டாஆஆஆஆ.."

"அதுக்கு வேற ஆள பாருங்க.. நான் என்ன உங்க பொண்டாட்டியா சார் இந்த வேலைலாம் வாங்குறதுக்கு??"

"ஆமா?!"

"எதே?"

"பின்ன உன் கழுத்துல தான நான் கட்டுன தாலி தொங்குது."

என்றவன் பார்வை துப்பட்டா விலகிய அவள் தாலி தொங்குமிடம் பார்க்க,

"அப்புடியே கண்ண நோண்டிடுவேன்.. என்ன சார் சும்மா சும்மா திங்குற மாதிரி பாக்குறீங்க?? அதான் நேத்து உங்க ஆள கட்டிப்பிடிச்சு செண்டாஃப் பண்ணீங்களே??" என்றவள் காளியாக கண்ணை உருட்டி கையில் பேனா கொண்டு அவனிடம் நீட்டி பேச அவ்வளவு நேரம் இறுக்கமாக இருந்தவன் இதழ் சிரிப்பில் துடித்தது..

'ஓஹோ! மேடம்க்கு பொச பொச நோய் இருக்கா?'

என்றவன் உடனேயே முகத்தை மாற்றிக்கொண்டு,

"இதுவே என் பப்பூவா இருந்தா என் காலத் தொட்டு என்ன மாமா பண்ணுது?? எங்க மாமா வலிக்குதுன்னு அவ உதட்ட வச்சே....."

அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை நம்ம தொல்லை அவனின் குரவலையை அழுத்தி பிடித்திருந்தாள்..

"ஹான் சொல்லு சிடுவா.. இப்போ சொல்லு பாப்போம்.. உன் பப்பூவா?? இப்ப சொல்லுடா?? அவ என்ன சொல்லுவா ஹான் என்ன சொல்லுவா மாமாவா?? ஹான் அப்புறம் உதட்டை வைத்து காலுக்கு ஒத்தடம் கொடுப்பாளா?? நேத்தி என் முன்னாடி அவ வந்து உன்ன கட்டிப்பிடிக்கிறா எரும மாடு மாதிரி அப்படியே நிக்கிற பொண்டாட்டி முன்னாடி அப்படித்தான் நிப்பாங்களாடா??"

என்றவள் அவன் முடியை பிடித்து உளுக்க,

"ஆஆஆஆ!! ராட்சசி, வலிக்குது டி.."

என்று போலியாக அலறியவன் அவள் கையில் பொம்மையாக இருந்தான்.. ஒரு கட்டத்தில் மூச்சு வாங்கி விலகியவள் எதிர் நாற்காளியில் அமர்ந்து அவன் பருக இருந்த நீரை பருகினாள்..

வெண்ணிலா மீண்டும் முறைத்துக்கொண்டே கிளம்ப, "ஹெலோ மிஸ்ஸஸ் அர்ஜன்ட் பொண்டாட்டி!! அவள கட்டிப்பிடிச்சது கோவமா?? இல்ல உன்ன கட்டிப்பிடிக்கலையேன்னு கோவமா??"

என்றவன் குறும்பு பேச்சில் உக்கிரமாக முறைத்துக்கொண்டே வெளியே சென்றாள்..

"அடிப்பாவி!! குட்டியா குடும்பமே நடத்திங்களா ரூம்குள்ள??"

சரண்யாவின் கேள்விக்கு மீண்டும் இவள் முறைக்க,

"பின்ன உன் முகத்த பாருடி!!"

என்றதும் மொபைலில் பிரண்ட் கேமரா ஆன் செய்து பார்க்க தலைமுடி எல்லாம் சற்று கலைந்து நெற்றி பொட்டு இடம் மாறி கண்கள் சிவந்து படபடப்பாக குடித்த நீரினால் கழுத்திற்கு கீழே ஆடை ஈரத்தில் இருந்தது.. அப்போதுதான் இதெல்லாம் எதனால் நடந்தது என்று நினைத்தவளுக்கு வெட்கமே.. அங்கு மேஜையில் ஏறிய அமர்ந்து நித்திக் தலை முடியை மாவாட்டியது நினைவு வர அவன் சிகை தீண்டிய கரத்தை ஆழ்ந்து சுவாசித்தாள்..


தொடரும்...
 
Top Bottom