புது மங்கள சௌபாக்யம் - 15

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 50

New member
Staff member
May 13, 2026
21
40
3
"குட் மார்னிங் சார்."

"மார்னிங் சரண்யா.. சார்லாம் வேணாம்.. இங்க நான் உங்க பிரண்ட் ஹஸ்பண்ட்.." என்று புன்னகை முகமாக பார்க்கும் நித்திகை, ஆச்சரியமாக சரண்யா பார்த்தாள் என்றால், வாயை பிளந்து கொண்டு வெண்ணிலா பார்த்தாள்..

"ஏண்டி அவன் பொண்ணுங்கங்கிட்ட மட்டும் தான் பேசுவானா??"

நித்திக் முன்னே நடக்க பின்னே நடந்த அபிஷேக் தான் தன் இரு தோழிகளிடமும் கேட்க, சட்டென்று நித்திக் நின்று விட சரியாக நித்திக் பின்னே நடந்த அபிஷேக் நித்திக் முதுகில் முட்டி சாய போக திரும்பிய நித்திக் அபிஷேகின் இடை பிடித்து நிறுத்த ஆண்களின் நான்கு கண்களும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்ள, எந்நேரமும் கேமரா ஆனில் வைத்திருக்கும் சரண்யா இதை கிளிக் செய்தாள்..

பிளாஷ் வெளிச்சத்தில் சுதாரித்து பிரிந்த அபிஷேக், "அய்யயே ச்சி!!" என்பது போல நகர்ந்தான்..

"ஹே அபிஷேக்!! உங்கள நான் பாக்கவே இல்ல.. வெல்கம்.." என்று மரியாதையாக கையை நீட்ட இவனும் வேண்டா வெறுப்பாக கையை நீட்டினான்..

"ஓகே!! இப்போ என்ன பிளான்??"

"அதையும் நீங்களே சொல்லுங்க.." இவர ஏண்டி கூட்டிட்டு வந்த என்ற பார்வை வெண்ணிலா நோக்கி வீசிய அபி தான் கூறினான்..

"நோ நோ!! என் வெண்ணி தான் ஆசையா கிளம்புனா சோ அவ விருப்பம் தான்.." என்ற நித்திக் வெண்ணிலா தோளில் கையை போட நண்பர்களின் கண்களுக்கு உறுத்தாமல் சிரித்துக்கொண்டே அவனின் கையை தட்டி விட்டவள் நகர்ந்து நின்றாள்..

"இல்ல மாம்ஸ் நீங்களே சொல்லுங்க.." என்ற சரண்யாவை மூவரும் அதிர்ச்சியாக திரும்பி பார்க்க,

"என்னது மாம்ஸா??"

"ஆமா மாம்ஸ்!! எனக்கும், வெண்ணிலாவுக்கும் கூட பொறந்தவங்க யாருமே இல்லையா?? அதுனால நான் அவள அக்காவா ஏத்துகிட்டு அவ ஹஸ்பண்ட்டை மாம்ஸ் ன்னு கூப்பிடனும் அப்புடின்னு நாங்க சின்ன வயசுல ஒரு நாள் சாப்புடும்போது எங்களுக்கு பிடிச்ச எக் பப்ஸ் மேல சத்தியம் பண்ணிட்டோம்.. அந்த சத்தியத்தை மீறுனா நாங்க சாப்புட எக் பப்ஸ் கிடைக்காம போயிடும்."

முகத்தை படு சீரியஸாக வைத்துக்கொண்டு சரண்யா பேச, நித்திக் உதடு சிரிப்பில் துடித்தது.. வெண்ணிலாவோ இதெல்லாம் நான் எப்போடா சொன்னேன் என்பதுபோல முழிக்க அபிஷேக் மூஞ்சியை தூக்கி வைத்திருந்தான் அவளின் மாம்ஸ் அழைப்பில், நித்திகிற்கு எதுவோ புரிவது போல் இருக்க,

"கூப்புடு கூப்புடு மச்சினிச்சி.. இது போல அழகான மச்சினிச்சி யாருக்கு கிடைக்கும்.."

என்று அவனும் இவள் நாடகத்தில் நடிக்க, வெண்ணிலா தான் இதெல்லாம் இதுங்க எதுக்கு பண்ணுதுங்க என்று புரியாமல் பார்த்தாள்..

"சரி வாங்க முதல்ல படத்துக்கு போவோம் அப்புறம் லஞ்ச் அப்புறம் ஷாப்பிங் அப்புறம் டின்னெர் அப்புறம் வீடு.."

"சூப்பர் மாம்ஸ்!! இவ்ளோ அழகா பிளான் போடுறானால தான் பேங்கல அவ்ளோ பெரிய மேனேஜிங் ஜாப் குடுத்துருக்காங்க போல.."

நித்திக் வெண்ணிலா கை பிடித்து முன்னால் நடக்க, இவர்கள் பின்னால் வந்த இரண்டு ஜோடிகளோ,

"ஏண்டி அவன் என்ன சட்டமன்றதுக்கு பட்ஜெட் தாக்கலா பண்ணிட்டான்.. ஓவரா புகழுற??"

" நம்ம எத்தனை முறை பிரண்ட்ஸா வெளியில வந்திருக்கோம்.. ஒரு நாள்ல இப்படி எல்லாத்தையும் நம்ம என்னைக்காவது செஞ்சிருக்குறோமா சாப்பிட வருவோம் பேசுவோம் அங்கங்க உக்காந்து போற வர்றவங்கள வம்பு இழுத்து சிரிச்சிட்டு இருப்போம் அவ்வளவு தானே??"

"அடியேய் நம்ப பிரண்ட்ஸ் டி.. இவ்ளோதான் பண்ண முடியும்.. அவன் நிலா கூட சினிமா பார்க்க நம்மள ஊறுகாவா யூஸ் பண்றான்.."

"அய்யே!! மாம்ஸ் பார்த்தா அப்புடி தெரிலடா.."

"வாய்லயே மிதிப்பேன்.. என்னடி ஓவரா மாம்ஸ் மாம்ஸ் ன்னு ஓடுற, அவன் உன் கைய பிடிச்சு அந்த குலுக்கு குலுக்குறான்.."

"அடேய்ய்!! கூட வேல பாக்குறவங்கள பார்த்தா ஒரு ஃபார்மலிட்டிக்கு கை குலுக்க தானே செய்வாங்க ஏன் அவர் உன்கிட்டயும் கை நீட்டினார் தானே?? என்கிட்ட வெறும் கையை மட்டும்தான் நீட்டுனாரு, அங்க பாரு விட்டா நிலாவ கட்டிப்புடிச்சு கூட்டிட்டு போவாரு போல.. "

"அது அவன் பொண்டாட்டி டி.. கைய பிடிக்கட்டும் கட்டி வேணுனா பிடிக்கட்டும்.."

"ஓ!! பொண்டாட்டின்னா தான் கைய பிடிக்கணுமா மிஸ்டர்.." என்றவள் பார்வை அவள் கையை இறுக்கி பிடித்துக்கொண்டு இருந்த அபிஷேக் கையின் மேல் விழ அவனோ திடுகிட்டு தன் கையை எடுத்துக்கொண்டான்..

"என்ன படம் டி பாக்கலாம்??"

வெண்ணிலாவிடம் நித்திக் கேட்க,

"உங்களுக்கு பிடிச்ச படத்துக்கு போங்க.."

"எனக்கு பிடிச்ச படமெல்லாம் இந்த தியேட்டர்ல ஓட்டமாட்டாங்க டி.."

என்றவன் கிசுகிசு குரலில் அவள் காதுக்குள் பேச,

"அப்புடி என்ன படம்.."

"சாமி படம்.."

"அய்யே இவ்ளோ பெரிய போஸ்ட்ல உக்காந்துகிட்டு இன்னும் சாமி படம்லாம் பாக்குறீங்களா என்ன??"

"உப்பஸ்ஸ்ஸ்!! கஷ்டம் டி.."

என்றவன், "வா கருப்பு படம் போவோம்.. அது தான் புதுசா வந்ததுல பாக்குற மாதிரி இருக்குற படம்.. "

டிக்கெட் வாங்கி உள்ளே செல்ல நால்வர் சீட்டும் பக்கம் பக்கம்.. முதலில் நித்திக் கார்னர் சீட்டில் அமர, அவனுக்கு அடுத்து வெண்ணிலா, அடுத்து சரண்யா, அடுத்து அபிஷேக் என்று அமர்ந்தார்கள்..

படம் ஆரம்பிக்க தியேட்டர் முழுவதும் இருட்டு அவர்கள் சீட்டிற்கு மேலே ஏசி காற்று நேராக வந்தது.. அதில் வெண்ணிலா கை ஜில்லிட ஆரம்பித்தது.. அவள் அங்குமிங்கும் உருள,

"என்னாச்சு??"

"ப்ச் ஏசில ஜில்லுன்னு காத்து வருது.."

"ஏண்டி!! ஏசில ஜில்லுன்னு காத்து வராம சூடவா வரும்.."

"எனக்கு ஓவர் கூலிங் ஒத்துக்காதுப்பா.."

என்றவள் கையை சூடு பறக்க தேய்க்க, சத்தமே இல்லாமல் அவள் கையை தன் உள்ளங்கைக்குள் பொத்தி வைத்துக்கொண்டான்.. அவனின் இந்த செயலில் அதிர்ந்து கையை விடுவிக்க பார்க்க அவனின் மென்மையான, "வெண்ணி!!" என்ற அழைப்பில் அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.. 'இருக்கட்டுமே!' என்பது போன்ற பதில் பார்வை பார்க்க அவளும் அவனை ஒட்டி அமர்ந்துக்கொண்டாள்..

இருவர் தோளும் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ள கைகளோ அவன் கைக்குள் கதகதப்பாக இருந்தது அதற்கு மேல் எங்கே படம் பார்க்க தன் காதலன் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள் வெண்ணிலா.. அந்த கும் இருட்டில் இவளை யார் கவனிப்பது ஆனால் தன் மேல் விழும் வேல்விழியால் பார்வை அம்பு தாங்காதவன் திரும்பி அவளிடம், "படம் அங்க ஓடுது!!" என்க.. அவளும் சட்டென தன் பார்வையை மாற்றிக்கொண்டாள்..

நாக்கை கன்னத்தில் அடக்கி சிரித்துக்கொண்ட நித்திக், அவள் கையை தன் நெஞ்சோடு வைத்து அழுத்தி மெல்ல இழுத்து இதழ் அருகே கொண்டுபோக அவனின் கற்றை மீசை இதழுக்கு முன்னே வந்து அவள் கையில் வணக்கம் வைக்க அந்த கூச்சத்தில் கையை உடனே இழுத்துக்கொண்டாள் கூடவே சட சடவென விளக்குகள் ஒளிர்ந்தது..

படத்தில் இண்டெர்வெல் விட்டுருக்க இவர்கள் பேந்த பேந்த முழித்தார்கள் அதை கண்டுகொண்ட சரண்யா,

"நிலா! நீங்க இருங்க நாங்க போயி உங்களுக்கு ஏதாச்சும் சாப்பிட வாங்கிட்டு வரோம்.."

என்றவள் வரமாட்டேன் என்ற அபி கையை இழுத்துக்கொண்டு சென்றாள்..

"ஏய்ய்!! ஏன் டி இழுத்துகிட்டு வர.. பாக்குறவங்க தப்பா நினைக்க போறாங்க.." என்று கூறியது மட்டுமில்லாமல் அவளிடமிருந்து கையை உருவிகொண்டான்..

"லூசா நீ!! அவங்களே இப்போ தான் முதல் முதலா வெளில வந்துருக்காங்க.. இடைஞ்சல் பண்ணலாமா??" என்றவள், "அண்ணா!! ரெண்டு சீஸ் பாப்கார்ன், ரெண்டு கோக், ரெண்டு கார்னட்டோ ஐஸ்கிரீம் பட்டர்ஸ்கோட்ச் ப்ளேவர்.."

"தின்னி மாடு!! எல்லாமே ரெண்டு மட்டும் ஆர்டர் பண்ணா?? நானும், அவனும் திங்குற உங்க வாய பார்த்துட்டு இருக்கணுமா??"

"அடேயப்பா!! என்ன சார் மேல கரிசனோமோ??"

"ப்ச்!! ஜஸ்ட் கேட்டேன்.."

"ஹே கேஜி பையா.. அக்கட தேக்கோ.." என்றவர்கள் பார்வை அங்கு எதிர் எதிர் நாற்காலியில் அமர்ந்து சிரித்து சிரித்து பேசிக்கொண்டே ஒரே கோக்கில் இரண்டு ஸ்ட்ரா போட்டு ஆட்களை மறந்து கொஞ்சி பேசும் காதலர்கள் மேல் இவர்கள் கவனம் இருந்தது.. அவர்களை சரண்யா முகம் முழுதும் புன்னகையுடன் பார்த்துக்கொண்டே அபிஷேகை பார்க்க அவனோ அசிங்கத்தை மிதித்தது போல முகத்தை திருப்பினான்..

"உன்கிட்ட போய் சொன்னேன் பாரு.." என்றவள் அத்தனையும் ஒரே ட்ரேவில் அடக்கி செல்ல,

"மிஸ்டர் மேடம்!! நீங்க பாக்குற வேலைக்கு பேர் என்ன தெரியுமா??"

என்றவன் இங்கிருந்து கத்தி கேட்க,

"பரவால்ல போடா.."

என்று உள்ளே சென்றாள்..

"ஹே உனக்கு எதுக்கு ஸ்ட்ரைன்.. என்ன கூப்பிட்ருக்கலாம்ல.."

"அட விடுங்க மாம்ஸ்.. என்ஜோய் பண்ணுங்க.."

"அது இருக்கட்டும் சரணு!! என்ன எல்லாமே ரெண்டு தான் வாங்கிருக்க அப்போ உங்களுக்கு??"

"அடிப்பாவி முதலுக்கே மோசம் பண்ணிடுவ போல.. ஒன்னு உங்களுக்கு ஒன்னு எனக்கு டி.."

"ஏண்டி எங்களுக்கு ரெண்டா வாங்கிட்டு வரலாம்ல.. நான் வேணுனா ஜிப்பே பண்ணுறேன் டி.."

"கஷ்டம்!!" என்றவள் தலையில் அடித்துக்கொண்டு, "மாம்ஸ்! எஸ்பிளைன் பண்ணிடுங்க.. எனக்கு பசிக்குது.."

சரண்யா கூறி முடிக்க இண்டெர்வெல் முடிந்து விளக்குகள் அணைக்கப்பட்டது.. ஒன்னுமே புரியவில்லை என்றாலும் மிகவும் பிடித்த ஐஸ்கிரீம் கையில் உருக, எடுத்து சுவைக்க ஆரம்பித்தாள்..

"எனக்கு??"

"அதான் கோக் இருக்குல்ல குடிச்சுக்கோங்க.. ஐஸ்கிரீம் நோ ஷரிங்.."

என்றவள் உருகி வழியும் பனிக்கூழை சொட்டு விடாமல் பறுகியவள் கடைசியாக வேஃபரில் இருந்த சாக்லேட் சுவைக்க போக அவள் கையிலிருந்ததை வெண்ணிலா விரலுடன் சேர்த்து வாயில் போட்டுகொண்டான் நித்திக்.. அவனின் இந்த அதிரடியில் வாயை பிளந்துகொண்டு வெண்ணிலா பார்க்க துளி சாக்லேட் அவள் பால் நிற தாடையில் வழிய அப்படியே இரு விரல் கொண்டு அழுத்தி எடுத்து நாக்கில் வைத்து சுவைத்தான்..

"எக்ஸ்ட்ரா இனிப்பா இருக்கு.."

என்று நித்திக் கண்ணடிக்க, வெண்ணிலா முறைத்துக்கொண்டு படத்தை பார்க்க ஆரம்பித்தாள்.. சிறிது நேரத்தில் பாப்கார்ன் எடுக்க இருவர் விரலும் அடிப்பிடி பண்ணிக்கொள்ள அதையும் உண்டவர்கள் கோக்கை பார்க்க,

"இந்தாங்க குடிங்க.. எனக்கு வேண்டாம்.."

"அப்போ ஒரு ஸ்டாரா வேஸ்ட்டா போகும் தொல்ல.."

"எதே நான் தொல்லையா உங்களுக்கு??"

"மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு சத்தமா சொல்லிட்டேன் டி."

"மைண்ட் வாய்ஸ்ல இப்புடிலாம் பேசுவீங்க??"

"ஓஹோ!! நீங்க மட்டும் மனசுக்குள்ள என்ன சிடுவன்னு நினைக்கல??" நித்திக் வெண்ணிலா முகம் அருகே வந்து ஒற்றை புருவம் தூக்கி கேட்க,

"அது.. வந்து.. சரி இப்போ என்ன வேணும்??"

"வா கோக் குடிப்போம்.."

"இல்ல எனக்கு வேணாம்.."

"ரொம்ப நல்லது.. என் மச்சினிச்சி எனக்காக ஆசையா வாங்கி குடுத்தா.. நானே.."

அடுத்த வார்த்தை பேச முடியவில்லை நித்திக் கையிலிருந்த கோகில் வெண்ணிலா ஸ்ட்ரா போட்டு உரிய அவனும் சிரித்துக்கொண்டே மற்றொரு ஸ்ட்ரா போட்டு குடித்தான்..

"ஒரு கர்ட்டஸிக்கு கூட வேணுமான்னு கேக்க மாட்டியா டி??"

"வேணுமான்னு கேட்டா ஒன்னு சாப்பிடணும் இல்ல வேணாம்னு சொல்லணும் அதை விட்டு அய்யே நீ சாப்ட மீதி நானானு சீன் போடுவ போடா."

சரண்யா அபிஷேக்கிடம் மல்லுக்கு நிற்க அபிஷேக் சரண்யா கையிலிருக்கும் கோக்கை வாங்கி அவள் இதழ் பட்ட அதே இடத்தில் இவனும் இதழ் வைத்து குடித்துவிட்டு அவளிடம் நீட்ட, இதழை கடித்து குனிந்து கொண்டே வாங்கி பருகினாள்.. அபிஷேக்கும் புதிதாக முளைத்த வெட்கத்தில் தலையை கோதி திரும்பி கொண்டான்..

படம் முடித்து ஆண்கள் இருவரும் ஏகாந்த மனநிலை இருக்க, பெண்கள் இருவரும் அவர்களை வினோதமாக பார்த்துக்கொண்டே வந்தார்கள்.. நித்திக் கூறியது போல ஷாப்பிங் என்ற பெயரில் கடை கடையாக பெண்கள் இருவரும் ஏறி கைக்குட்டையுடன் திரும்பினார்கள்.. வெறுத்து போன காளைகள் அடுத்து புட் கோர்ட்டில் இறங்க ஒன்றையும் உருப்படியாக சாப்பிட விடாமல் பேஜார் பண்ண, ஆனால் அது கூட நிஜார் மனநிலையில் எடுத்துக்கொண்டு ஆண்கள் சிக்ஸர் அடிக்க சொல்லாத காதல் கூட அழகியலே..

"ஹாப்பாடா மூச்சு முட்டுது இதுங்களோட.." என்று அபிஷேக் வாய் விட்டு பெருமூச்சுடன் கிளம்ப, வந்தது போலே நித்திக் வெண்ணிலா அவர்கள் வண்டியில் அபிஷேக், சரண் அவர்கள் வண்டியில் கிளம்பினார்கள்..

இரவு இருட்டிய பொழுது வானில் நட்சத்திர கூட்டம் நிலவுக்கு காவல் காக்க, சரண்யா விடுதியில் வந்து வண்டியை நிறுத்தியிருந்தான் அபிஷேக்.. ஆம் வெண்ணிலா நித்திக் வீட்டிற்கு சென்றதுமே சரண்யாவை பெண்கள் தங்கும் விடுதியில் சேர்த்துவிட்டார்கள் நண்பர்கள் இருவரும்..

"இன்னைக்கு டே மறக்கவே முடியாதுடா என் லைப்ல.. சூப்பரா போச்சு.."

"ஆமா!! எனக்கும் தான்.."

"ம்ம்ம்ம்!! ஓகே டா நாளைக்கு பேங்கல பாப்போம்.. குட் நைட்.."

"ம்ம்ம்ம் குட் நைட்.."

என்றதும் சரண்யா கேட் திறந்து உள்ளே நுழைய போக,

"சரண்!!"

"ஹான்.."

"ஐ திங்க் அம் இன் லவ் வித் யூ.."

"என்னது??" திராட்சை கருவிழியை விரித்து சரண்யா பார்க்க,

"ம்ம்ம்ம்!! வெண்ணிலாவ லவ் பண்றதா தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்.. ஆனா அவள நித்திக் கேர்ள் பிரண்டா ஏன் பொண்டாட்டியா கூட பாக்க முடிஞ்ச என்னால, நீ அவன மாம்ஸ் ன்னு கூப்டு விளையாடுறப்போ அவன் உன்ன மச்சினிச்சின்னு பேசுறப்போ சாதாரணமா ஏத்துக்க முடியல.. ஆரம்பத்துல இருந்து யோசிச்சு பார்த்தா என் காதல் நீ தனோன்னு தோணுது.."

பேசும் அபிஷேக் வாயையே அதிர்ந்து பார்த்துக்கொண்டிருந்த சரண்யாவை,

"ஓஓஓய்ய்ய்!! என்ன இவ்வளவு சர்ப்ரைஸ் ஆகுற ஆக்சுவலி இது உனக்கு மட்டும் இல்ல எனக்கே ரொம்ப பெரிய சர்ப்ரைஸ்.. என் காதல் நீதான்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்.. சோ உனக்கு டைம் தேவைப்படலாம் யோசிச்சு சொல்லு.."

"ஐ அம் நாட் சர்ப்ரைஸ் அபி.. நீ தான் டூ லேட்.. "

என்றவள் சிரித்துக்கொண்டே உள்ளே ஓட,

"ஏய்ய்.. ஏய்.. என்ன சொன்ன??"

என்றவன் வேகமாக பைகை விட்டு இறங்கி அவளை பிடிப்பதற்குள் சிட்டாக உள்ளே ஓடியிருந்தாள் சரண்யா.. இவன் பூனையாக அங்கேயே சுற்ற தன் அறை ஜன்னலை திறந்தவள்,

"கிளம்பு டா.." என்று வாயசைக்க இவனோ மேலே நின்று எட்டி பார்க்கும் தன் மாடபுறாவை ஏக்கம் நிறைந்த விழிகளோடு பார்த்தவன், தன் ஹீரோ ஹோண்டா வண்டி சைடு மிரரில் தன் முகத்தை பார்த்து, 'அய்யோ! இவ்ளோ தத்தியா இருந்திருக்கியே டா..' என்று கன்னத்தில் அறைந்து கொண்டான்..


தொடரும்...
 

Author: STN - 50
Article Title: புது மங்கள சௌபாக்யம் - 15
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
என்னடா திரிஷா இல்லைனா தீவியானு இப்படி மாறிட்டான் அபின்னு பார்த்தா.....

அபி சொன்ன லவ் நல்லா தான் இருக்கு.....அதுக்கு சரண் ஓட ரியாக்ஷன் சோ cute
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online