• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

புது மங்கள சௌபாக்யம் - 18

STN - 50

New member
Staff member
வங்கியில் சரண்யாவும், அபியும் அருகருக்கே கை கட்டி நிற்க எதிர் நாற்காலியில் வெண்ணிலா மூக்கை விடைத்து இருவரையும் முறைத்துக்கொண்டு இருந்தாள்..

"சொல்லுங்க எவ்ளோ நாளா நடக்குது இந்த திருட்டு தனம்??"

"அடி! நான் சொல்லலாம் தான் டி சொன்னேன்.. இவன் தான்.."

"ஓஹோ! உனக்கு என்ன முன்னாடி தெரியுமா?? இல்ல அவனையா??"

"அவளை ஏண்டி திட்டுற.. நான் தான்ன்ன்ன்.."

"அடேடே யாரது ஓஹோ மிஸ்டர் நீங்களா வாங்க சார்.."

"நிலா குட்டி ப்ளீஸ்.."

"பேசாத டா.. நீயெல்லாம் பேசிடவே பேசிடாத.. படிக்குறப்போ என்ன சொன்னடா.. நான் லவ் பண்ணா உன்கிட்ட தான் முதல்ல சொல்லுவேன்.. நீ ஓகே சொன்னா தான் அந்த லவ்வயே அந்த பொண்ணுகிட்ட சொல்லுவேன்னு சொல்லிட்டு இப்புடி எனக்கு தெரியாம தனியா லவ் ட்ராக் ஓட்டிருக்க அதும் என் பிரண்ட்டோட.."

"ஹாஹாஹா!!" சம்மந்தமே இல்லாமல் சரண்யா விழுந்து விழுந்து சிரிக்க அபி அவளின் வாயை பொத்தி சிரிப்பை அடக்க நினைக்க வெண்ணிலா ஏகத்துக்கும் முறைத்தாள்..

"என்ன இளிப்புங்குறேன்.."

"அட ஐக்யூ!! உனக்கு விசியமே தெரியாதா.. நம்ம பேக்கு உன்ன லவ் பண்றதா நினைச்சுட்டு தான் அந்த டயலாக்லாம் சொல்லிருக்கும்.."

என்று சரண்யா கூறவும், "எதே!! அலறியேவிட்டாள் வெண்ணிலா..

"ஆமாம் டி.. இவனுக்கு உன்ன ரொம்பவே பிடிக்கும்.. ப்ரோடெக் பண்ணுவான்.. பொஸ்ஸசிவ் வேற இதெல்லாம் இவ்ளோ நாள் லவ் ன்னு நினைச்சு தான், நீ நித்திக் சார் கூட போனாலே இவன் கத்துறது, உங்க வீட்ல மேம்போக்கா போட்டு விட்டது, நித்திக் சார் கால் விசயத்தை எல்லாருக்கும் சொல்லி அசிங்க படுத்தியது.." என்றவள் அபியை முறைக்க அபி தலையை குனிந்துக் கொண்டான்..

"அன்னைக்கு நம்ம அவுட்டிங் போனோம்ல நிலா.." என்ற சரண்யா அன்றைய நாள் இறுதியில் அபி அவளுக்கு ப்ரொபோஸ் பண்ணியது அதை அவள் ஏற்றுக்கொண்டது வரை கூறினாள்..

இப்போது அபியிடம் இருந்த வெண்ணிலா பார்வை ஸ்லோ மோஷனில் சரண்யா பக்கம் திரும்பி நிலை கொண்டு நின்றது. அப்பொழுது தான் உணர்ச்சி வேகத்தில் அனைத்தையும் கூறியவள் தான் வெகு நாட்களாக அபியை காதலித்ததையும் உளறி கொட்டியதை நினைத்து நாக்கை கடித்துக் கொண்டாள்.. அபி ஊமையாக சிரிக்க,

"அது இல்லடி நிலா.. நான் சொல்றத கேளு டி.. "

"போதும் டி நிப்பாட்டுங்க.. நான் நினச்ச மாதிரி எதுவுமே எனக்கு அமையல இல்லடி நான் உங்ககிட்ட பிரண்டா இதுவரைக்கும் உண்மையா தான் இருந்திருந்தேன்.. ஏன் நான் நித்திக் சார பார்க்கிறது சைட் அடிக்கிறது வரைக்கும் உங்களுக்கு தெரியும் என்ன இந்த கல்யாண விஷயம் மட்டும் தான் உங்ககிட்ட சொல்லல அதுவும் இது என்ன மட்டும் சம்பந்தப்பட்டது இல்ல அவரையும் சேர்ந்தது.. அவரை கேட்காமல் எப்படி சொல்றது தான் முழிச்சேன் கடைசியில் இரண்டு நாள்ல உங்கிட்ட மாட்டிக்கிட்டப்போ கூட எனக்கு பயமா இல்லடி ரொம்ப ரிலீஃப்பா இருந்தது. எப்படியோ இவ்வளவு நாள் பிரண்டு கிட்ட தெரியாம வச்சிருந்த ஒரு விஷயத்தை இப்போது மனசு விட்டு பேச போறேன்னு உன்கிட்ட சொன்னேன்.. யாருகிட்டயும் சொல்லாதன்னு நான் சொல்லியும் அடுத்த நாளே அபிக்கு இந்த விஷயம் போகவும் சரி நம்மள மாதிரி தான் இவளும் பிரண்ட் கிட்ட உண்மையை சொல்ல முடியாம சொல்லிட்டா போல அப்படின்னு நினைச்சு இருக்கேன் இப்பதானே தெரியுது உனக்கு பிரண்டை விட நீ லவ் பண்ண பையன் தான் முக்கியம்னு.."

"நிலா!! என்னைய எவ்ளோ வேணுனா திட்டிக்கோ டி.. ஆனா நான் உன்மேல வச்சுருக்க நட்ப மட்டும் கொச்சப்படுத்தாத டி ப்ளீஸ்.."

"நீங்க தான் டி என்னோட நட்ப அசிங்கப்படுத்திடீங்க.. இல்லேன்னா யாரோ ஒருத்தர் கேட்டு இந்த விசியம் என் காதுக்கு வருமா??"

" நிலா சத்தியமா நாங்க யார்கிட்டயும் சொல்லல அவங்களுக்கு எப்படி எங்க மேல சந்தேகம் வந்துச்சுன்னு கூட தெரியல.. சரணி அடுத்த நாளே உன்கிட்ட சொல்லலாம்னு தான் சொன்னா நான் தான் எனக்கு தயக்கமா இருக்கு நீ ஓட்டுவ எனக்கு கூச்சமா இருக்குன்னு தடுத்து வச்சேன் டி.. "

அபி பாவமாக நிலா கையை பிடித்துக்கொண்டு கெஞ்ச,

"ஓ!! நீ சொன்னனு மேடம் கேட்டுட்டாங்களா.. அப்போ நான் யாரு அவங்களுக்கு??"

சரண்யாவிற்கு அழுகையே வந்துவிட்டது.. எத்தனை வருட நட்பு.. ஏன் ஒரு முறை வெண்ணிலாவிடம் விளையாட்டாக சரண்யா, " ஏண்டி இந்த அபி உனக்கு எத்தனை வருஷமா தெரியும் அவன் உன்ன பாக்குற பார்வையே சரியில்லாத மாதிரி தானே இருக்கு.."

"ஹாஹா!! அவன் டோரி கண்ணன் டி.. அதான் உனக்கு அப்புடி தெரிஞ்சிருக்கும்.. அவன் குணத்துக்கும் என் குணத்துக்கும் நட்ப தாண்டி எதுக்கும் ஒத்து வராது, உனக்கு தான் அவன் செட் ஆகுவான்.. நீ ட்ரை பண்ணு.." என்று நிலா விளையாட்டாக கூறிவிட,

"எதே அவனையா?! அவன் நைட்டு நேரம் டிபன் வாங்கிட்டு வந்து கொடுக்கும்போது நைட் டிரஸ் மேல ஏன் ஷால் போடலான்னு வாசல்லயே கத்துனுவன்டி அவன் கூட லைஃப் லாங்கா ஓ மை காட். "

என்று பேசி சிரித்த ஞாபகம்.. சரண்யா மாதா மாதம் வயிறு வலியில் சுருண்டு விடுவாள் அன்றைக்கு பேருக்கு வேலைக்கு வந்தாலும் அவள் வேலையை முழுக்க முழுக்க செய்வது வெண்ணிலா மட்டும்தான் அது மட்டும் இல்லாமல் வீட்டில் கூட அவள் தட்டை கூட எடுக்க விடாத அளவிற்கு அப்படி பார்த்துக் கொள்வாள் நிலா..

ஒரு நாள் மாத வலியில் சரண்யா அவதிப்படும் நேரம் நிலா அன்னைக்கு உடம்பு சரியில்லை என்று போன் வரவும் இவளையும் விட்டுவிட்டு செல்ல முடியாமல் அங்கும் செல்ல முடியாமல் முழித்தபோது சட்டென்று அபி நியாபகம் வந்து அபியிடம் இவளை விட்டுவிட்டு அன்னையைத் தேடி ஓடியது. அன்று அபி சரண்யாவை பார்த்துக் கொண்ட விதத்தில் தானே சரண்யாவிற்கு அபியின் பால் காதல் தொடங்க ஆரம்பித்தது..

அது என்னவோ இந்த பெண்களுக்கு மட்டும் தனக்கு சுபவீனம் இல்லாத நாட்களில் ஒரு பெண் தன்னை நன்றாக பார்த்துக் கொண்டால் அவளின் மீது நட்பின் நெருக்கம் அதிகமாக ஆகிறது ஆனால் அதையே ஆண் செய்தால் மட்டும் காதலாக மலர்கிறது இது என்ன விதமான தியரி என்பது புரிவதில்லை..

சரண்யாவிற்கு இப்பொழுது தான் செய்தது தவறு என்பது வரை புரிந்திருந்தது. அபி மேல் தனக்கு ஒரு இன்ட்ரஸ்ட் இருக்கு என்பதை வெண்ணிலாவிடம் கூறி இருக்க வேண்டும் ஆனால் அபியோ வெண்ணிலாவின் மீது அல்லவா காதல் இருக்கிறதாக சொல்லிக்கொண்டு திரிந்தான். எப்படி இருவருக்கும் நடுவில் செல்வது என்று தான் அவள் மறைத்து வைத்தது.. இப்போது ஆசைப்பட்ட காதல் கைக்கு கிடைக்க அதுவும் காதலன் அபி இப்போது கூற வேண்டாம் என்று தன்னிடம் மன்றாடி கேட்டிருக்க எப்படி மறுப்பாள் அதனாலேயே வெண்ணிலாவிற்கு சொல்லாமல் விட்டு விட்டாள்.. இப்படி யாரோ ஒருத்தர் மூலம் அவளுக்கு தெரிய வரும் என்று அவள் கணவா கண்டிருப்பாள் இருந்தாலும் வெண்ணிலாவின் மனநிலையை அவர்கள் நன்றாக புரிந்துகொண்டு தான் இப்படி கெஞ்சி கொண்டு இருக்கிறார்கள்..

ரொம்ப நேரமாக இவர்கள் மூவரும் வேலையை பார்க்காமல் ஏதோ பேசிக்கொண்டு இருப்பதையும் சரண்யா அழுதுகொண்டே வெண்ணிலாவின் கையைப் பிடித்து இருப்பதும் அபி கூட அவளிடம் ஏதோ கெஞ்சிக் கொண்டிருப்பதையும் கடைசியாக நிலா அழுகை அடக்கிக்கொண்டு ஆங்காரமாக சிவந்த முகத்தோடு எங்கோ வெறித்து பார்த்துக் கொண்டிருப்பதையும் பார்த்து எழுந்து இவர்கள் கேபின் நோக்கி வந்தான் நித்திக்..

"வாட்ஸ் ஹாப்பனிங் ஹியர்.." எப்போதும் ஆஃபீஸில் இருக்கும் அதே எஃகு வார்த்த குரல்..

"மாம்ஸ்.." என்று ஆரம்பித்தவள் நித்திக்கின் கண்டன பார்வையில், "இல்ல சார் கொஞ்சம் ப்ரோப்லம் அதான் பேசிகிட்ருக்கோம்.."

" உங்க டிராமாவ லஞ்ச் ஹவர்ல இல்ல பேங்க் முடிஞ்ச அப்புறம் வச்சுக்கோங்க இது ஆபீஸ் நேரம் ஒர்க் பாத்தீங்கன்னா நல்லா இருக்கும்.. "

என்றவன் நிலாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறைக்கு சென்றுவிட்டான்.. பின்னே தன்னவள் முகம் சுணங்கி இருப்பதை பார்க்க முடியவில்லையே இதுவே வேலையை ஏவி விட்டோமானாள் வெண்ணிலாவிற்கு வேறு எங்கும் சிந்தனை போகாது அதனால் தான் அவனே இடையிட்டு இதெல்லாம் கூறியது.. நித்திக் சரண் சென்றதும்,

"நிலா.."

"நிலா குட்டி.."

"ப்ளீஸ் லீவ் மீ அலோன்.." என்றவள் வேலையில் மூழ்கிவிட்டாள்.. சற்று நேரம் அவளையே ஏக்கமான விழிகளுடன் பார்த்துக் கொண்ட நட்புகள் இருவரும் பின்பு அவரவர் இடத்தில் அமர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தார்கள்..

"வெண்ணிலா!!"

"ஹான் சொல்லுங்க கா.."

"உங்கள மேனேஜர் சார்.. புதுசா வந்துருக்க நககடன் டீடெயில்ஸ் எடுத்துக்கிட்டு வர சொன்னாரு.." என்றதும் இவளும் தண்ணீரை குடித்து தன் மன குமுறலை அடக்கி கோப்பை தூக்கிக்கொண்டு நித்திக் அறை நோக்கி சென்றாள்..

"எக்ஸ்கியூஸ் மீ சார். "

"எஸ் கம் இன்.."

"சார் நீங்க கேட்ட டீடெயில்ஸ் இதுல இன்ட்ரஸ்ட் எல்லாமே ஃபில் பண்ணி இருக்கேன் சார்.."

"எஸ்பிளையின் பண்ணுங்க.."

"ஹான்!!"

அவள் முழித்து நித்திகை பார்க்க அதற்குள் எழுந்தவன் அறையின் கண்ணாடி திரையை அடைத்துவிட்டு நொடியும் தாமதிக்காமல் நிலா கையை பிடித்து இழுத்து சுவரோடு சாயித்து நிறுத்தினான்..

"என்னடி முட்ட கண்ண உருட்டுனா பயந்துடுவோமா??"

ஹஸ்கி குரலில் கேட்க, நித்திக் சரணின் ஆண்மையும், அவன் போட்டிருந்த ஃபர்ஸ்ட் லவ் பெர்ஃப்யூம் மனமும் வெண்ணிலா நாசியில் புயலாக நுழைந்து மூளை வரை சென்று அவளின் தற்போதைய நிலையை மறக்க வைத்திருந்தது.. அதை மட்டுமா மறந்தால் உலகம் முற்றும் மறந்து அந்த இடமே பிங்க் நிற பூக்கலால் அடங்கிய தோட்டமாகவும் அதில் இவர்கள் இருவர் மட்டுமாகவும் நினைவில் கூடவே இதயத்தில் நிரம்பி வழியும் காதலும் வந்து அவன் கையில் அவளை பொம்மையாகியது..

"வெண்ணி.."

"ம்ம்ம்ம்.."

"வெண்ணி டார்லிங்.."

"ம்ம்ம்ம்.."

"நீ என்ன பண்ணாலும் க்யூட்டா இருக்குடி."

கண்ணை திறந்து அவன் கண்ணோடு கலக்க, துடிக்கும் உதடு பிளந்து அவனையே பார்க்க அவனுக்கு அவளின் பிளந்த உதட்டில் தன்னையே குடுக்க தோன்றியது..

"ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆ ராட்சசி கொல்றடி உன் அழகால, அன்பால எல்லாத்துலயும் என்னை கட்டிப்போட்டு உன் பின்னாடியே சுத்த வைக்கிற டி.. ஏன் டி இப்புடி பண்ற??"

குவிந்த அவள் கீழ் உதட்டை அவன் அழுத்தி வைத்து பேச இவளும் அவன் விரலுக்குள் சிக்கிய உதட்டின் வழியே பேசினாள்..

"நான் என்ன பண்ணேன்??"

"என்ன பண்ணியா?? நைட் நேரம் லூசா நைட் டிரஸ் போட்டுக்கிட்டு ஒரு ஆம்பள கூட ஒரே கட்டில்ல படுக்குறோமேன்னு பயம் இருக்கா டி??"

"அது.. நீங்க தன்னேன்னு.."

"நானா ஆம்பள இல்லையாடி அதும் உன்மேல எக்க சக்க ஆச வச்சுருக்க ஆம்பள டி.. அன்னைக்கு கேட்டியே அந்தக் குட்டி பாப்பா போட்டோவ பாத்து யாருமே அது நானு கண்டுபிடிக்கவேயில்ல உங்களுக்கு எப்படி தெரிஞ்சுச்சுன்னு.. சொல்லவாடி??"

என்றவன் அவள் இதழில் தன் இதழை பட்டும் படாமல் உரச,

"என்ன??" அவளின் அப்பாவி பார்வையில் செத்து மடிக்கிறான் காதலன்..

"உன்னோட கழுத்து எழும்பு கூடுற இடத்துல உன் மார்புக்கு மேல அழுத்தமா குட்டி கருப்பு பொட்டு அளவு மச்சம் இருக்கும் தானே?"

என்றதும் இவள் அவசரமாக ஆடையை இழுத்து பார்த்துவிட்டு மீண்டும் துப்பட்டாவை கழுத்தோடு பொத்தி கொண்டாள்..

"இப்போ பொத்தி??! அதெல்லாம் எல்லாமே பார்த்தாச்சு.. தகதகன்னு மின்னுற பொண்ணு அதுவும் உரிமையா நான் கழுத்துல கட்டுன தாலியோட என் பக்கத்துல படுத்திருக்கிறா அவள ஒன்னுமே பண்ணாம ரசிக்குறது எவ்ளோ கொடும தெரியுமா?? ஆம்பளையா இருந்தா தான் டி அதெல்லாம் புரியும்.. விடிய விடிய ஐஸ் தண்ணீ குடிச்சே தூங்காம இருந்துருக்கேன் டி.."

பேசிக்கொண்டே இன்னுமின்னும் நெருங்கி நின்றான்.. இருவருகிடையே காற்று மட்டுமே செல்லும் அளவு இடைவெளி,

"சொல்றி! நீ பண்ணது தப்பு தானே??"

"ஆஆஆஆஆமா!!" பாவமாக தலையை ஆட்டினாள்..

"அந்த தப்புக்கு தண்டனைய இந்த குட்டி உதடு வாங்க போது.."

என்றவன் சிறிதும் தாமதிக்காமல் அவள் பிளந்த உதட்டில் இவன் தடித்த உதட்டை நுழைக்க அவள் ஒன்றும் புரியாமல் மண்ணாக அதை சப்பி சுவைக்க இவனோ இழுத்து இழுத்து பெண் இதழில் கவி எழுதினான்..

அவள் மூச்சுக்கு சிரமப்பட இவன் விலக பார்க்க சட்டென்று கையிலிருந்த கோப்பை கீழே நழுவ விட்டவள் அவன் பிடரிக்குள் கையை விட்டு ஆசைப்பட்ட மிட்டாயாக நித்திக் இதழை சுவைக்க ஆரம்பித்தாள்... முதலில் நகர பார்த்தவன் அவளின் இந்த ஆசை அதிரடியில் அவள் இடையை பற்றி தன் உடலோடு அழுத்தி நிறுத்தி இவன் மூச்சை அவளுக்கு வாய் வழியாக கடத்த, அவளும் ஏங்கிய காற்றை அவனிடம் சுவாசித்தவள் சுவீங்கம்மாக இருவரும் இதழை கடித்து சுவைத்தார்கள்..

நித்திக் அறையின் போன் அடிக்க அந்த சத்தத்தில் சுய நினைவு பெற்ற வெண்ணிலா அவனை பிடித்து தள்ள அவன் தள்ளாடி விலகினான்.. ஷூ போடாத அவன் கால்கள் வலியெடுக்க முகம் சுணங்கி நாற்காலியில் அமர வெண்ணிலா நிற்க கூட திராணியில்லாமல் கலைந்த தன் உடையை சரி செய்துகொண்டு, கலங்கிய கண்களை துடைத்து வேகமாக வெளியே ஓடினாள்..

நட்புக்குள் நடந்த சண்டையில் அவள் முகம் வலியில் துடித்ததை தாங்க முடியாமல் தான் அவளை திசைமாற்றும் பொருட்டு வேறு கவனம் கொடுக்கத்தான் இங்கு அழைத்தது.. ஆனால் நாளாக நாளாக அவளிடம் நெருங்கும் தன் மனதை கட்டுப்படுத்த முடியாமல் அதுவும் இன்று தன்னையே பார்த்துக் கொண்டு மெய் மறந்து நின்ற அவளிடம் அத்துமீற ஆசை வழியுறுத்த இப்போது அதை செய்தும் விட்டான்.. தன்னவளுக்கு அப்போது வராத கண்ணீர் இப்போது தன்னாலே வந்துவிட்டத்தை நினைத்து மனம் கலங்கினான் நித்திக் சரண்..


தொடரும்...
 
Top Bottom